ஏமாற்றும் பத்திரிக்கைகள்

வாசகர்களுக்கு பல விஷயங்களை மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லிக் கொடுத்து வருகிறோம். இன்றைக்கு பத்திரிக்கைகள் மக்களை எப்படி ஏமாற்றிக் காசு பறிக்கின்றன என்பதையும், தேவையற்ற, வீணான பரபரப்பினை உருவாக்கி அதன் மூலம் பத்திரிக்கா மாஃபியா கும்பல்கள் நம்மையும் பரபரப்புக்கு உள்ளாக்கி பாக்கெட்டை காலி பண்ணுவதையும் பார்க்கலாம்.

பிரபலமான வாரப்பத்திரிக்கை ஜூனியர் விகடனை எடுத்துக் கொள்வோம்.

1) மகாராணிக்கு அடுத்த இளவரசி யார்?

2) அந்தப் பெயரை இங்குச் சொல்ல மாட்டேன்

3) பறிபோகும் மிடாஸ் சசி குடும்பம் ஷாக்

4) வீட்டுச் சிறையில் சசிகலா

5) அரெஸ்ட் அலெர்ட்

6) 30 எம் எல் ஏக்கள் என் பாக்கெட்டில்

7 ) ராவண வதம்

8) பணயக் கைதியா எம். நடராஜன்?

9) ஜெ கஸ்டடியில் சசி

10) முதல்வர் யோகம் யாருக்கு?

மேற்படி நம்பர்களில் உள்ள தலைப்புகளில் ஜூனியர் விகடனில் கட்டுரைகள் வெளி வந்தன. பத்து வாரம் ஒரு புத்தகம் 10 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் 100 ரூபாய் ஆகி விட்டது. இது வரை சசிகலா பற்றிய கட்டுரைகளை அதுவும் பரபரப்புக் கட்டுரைகளை எழுதியவர்களுக்கும், அதை வெளியிட்டவர்களுக்கும் காசு கொட்டிக் கொண்டே இருக்கும். ஆனால் படித்த நமக்கு என்ன கிடைத்தது? ஒன்றும் இல்லை. காசு நஷ்டம். இதுபற்றி நாங்கள் முன்பே எழுதி இருந்தோம். சசி, ஜெ பிரச்சினை அவர்களது தனிப்பட்ட பிரச்சினை என்று. ஆனால் அவ்விருவரின் தனிப்பட்ட பிரச்சினையை பரபரப்பேற்றி காசு பார்த்த பத்திரிக்கைகள் மக்களை ஏமாற்றுகிறது என்று தானே சொல்ல வேண்டும்?

இன்றைக்கு சசிகலா போயஸ் கார்டனுக்குள் சென்று விட்டார். இனி அது பற்றியும் செய்திகளை பரபரப்பாய் கழுகார் வெளியிடுவார். அட்டையில் ஜெ சசி இணைந்தது எப்படி? யார் செய்த மாயம்? என்றெல்லாம் தலைப்புகளிட்டு பரபரப்பாய் போஸ்டர் அடித்து வாரப்பத்திரிக்கைகளை விற்பார்கள். அதையும் காசு கொடுத்து வாங்கிப் படிப்போம். இப்படிச் செய்திகளை அது எதுவானாலும் வெளியிட்டு காசு பார்ப்பது தான் உலக ஜன நாயகத்தின் மூன்றாவது தூணான பத்திரிக்கை தர்மம்.

செய்தி, செய்தி, செய்தி – இது ஒன்று மட்டுமே வேண்டும். எதற்கு என்று கேட்கின்றீர்களா? விற்பனைக்கு? மக்களை பரபரப்புக்கு உள்ளாக்கி செய்திகளை விற்க வேண்டும். இது மட்டுமே “ பிரபல பத்திரிக்கைகளின் தாரக மந்திரம்”.

இனி இது போன்ற செய்திகளைப் படிக்கும் போது “இதைப் படிப்பதால் நமக்கு என்ன பலன்? “ என்று யோசித்துப் பாருங்கள். பத்திரிக்கைகளை வாங்குவதில் இருக்கும் அர்த்தம் புரியும்.

10 ரூபாய்க்கு அரை முழம் மல்லிகைப்பூ மூலம் கிடைக்கும் இன்பத்தை விட வேறொன்றும் பெரிதல்ல என்பது எனது முடிவு (கல்யாணமானவர்களைச் சொல்கிறேன்). கல்யாணமாகாதவர்கள் ஆகும் போது அதைப் பற்றிச் சிந்தித்தால் போதும். ஓகே !

– அனாதி

3 Responses to ஏமாற்றும் பத்திரிக்கைகள்

  1. perambaiprabhu சொல்கிறார்:

    எல்லா பத்திரிக்கை கம்பனிகுள்ள ஒப்பந்தம் இருக்குமோ!!! எல்லாரும் ஒரே மாதிரி caption oda publish பண்றாங்க!!!

  2. nanban சொல்கிறார்:

    nachchunu irukunga unga pathivu…….hats off to anaathi!!!

  3. கி.பிரபா சொல்கிறார்:

    வார இதழ்கள், மாத இதழ்கள், நாள் இதழ்கள் மாதம் இருமுறை வரும் இதழ்கள் இவையெல்லாமே பொய்யான பரப்புரைகளைப் பரப்புவதில் ஒன்றுக்கு ஒன்று சளைத்தவை அல்ல என்பது தெரியாதா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: