ப.சிதம்பரம் – கார்த்தி சிதம்பரம் – ரகசியம்

ஏப்ரல் 30, 2012

காவிரி மைந்தன் அவர்களின் பிளாக்கில் சில கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. அப்படியே மும்பையில் சில பல சிக் மில்கள், தமிழ் நாட்டில் பல ஏற்றுமதி நிறுவனங்கள், சினிமாவில் சொகுசு கேரவேன்கள், ஹோட்டல்கள் என்று பல லிஸ்ட்டுகள் விடு பட்டு இருக்கின்றன என்று சிலர் பேசிக் கொள்கின்றார்கள். விரைவில் பசியின் அகோர பணப் பசியின் முழு விபரமும் வெளிவரும் என்று நம்புவோம். உண்மை சூரியன் மாதிரி. மெதுவாகத்தான் வெளிவரும்.

http://vimarisanam.wordpress.com/2012/04/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5/

மேலே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்து விட்டு, மனதோரமாய் மூலையில் புக்மார்க் போட்டு வையுங்கள். பின்னால் தேவைப்படும்.

– பஞ்சு


200 கோடி ஆட்டை

ஏப்ரல் 26, 2012

ஒரு பிசினஸ் அரசியல் முகத்தோடு வந்தால் அசுர வளர்ச்சி கிடைக்கும். ஆனால் முடிவில் இருந்த இடம் காணாமல் போய் விடும் என்பதற்கு சன் குரூப்பில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சினையை காரணமாக்கலாம்.

கேபிள் டிவியில் இருந்து தாத்தாவின் அசுர பலத்தினாலே சாட்டிலைட் டிவிக்குச் சென்று அதன் பிறகு பிற போட்டியாளரை அரசியலை வைத்து ஒழித்துக் கட்டி, மத்திய அமைச்சர் பதவி பெற்று அதன் பலத்தாலே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இன்றைக்கு மாபெரும் ஊழலில் மாட்டி சிக்கி சின்னா பின்னமாகி நிம்மதியின்றிக் கிடக்கும் சன் க்ரூப் விளையாடிய சித்து என்று சினி இண்டஸ்ட்ரீயில் ஒரு டாக் வளைய வந்து கொண்டிருக்கிறது. அது எந்த அளவு உண்மை என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இவர்கள் எல்லாம் வேலைகளையும் செய்யக்கூடியவர்கள் தான் என்று முன் வரலாறு சொல்வதால் நம்பாமல் இருக்க முடியவில்லை.

12 கோடி வியாபாரம் ஆகக் கூடிய தனுஷ் படத்தினை 13 கோடிக்கு வாங்கி அட்வான்ஸ் போட்டு படத்தினை விளம்பரம் செய்து வெளியிட்ட சன் பிக்சர்ஸ்ஸின் பல படங்கள் தோல்வியைத் தரவே, கொடுக்க வேண்டிய 13 கோடிக்கு நஷ்ட கணக்குக் காட்டித் தயாரிப்பாளர்களிடம் மிளகாய் அரைத்து தப்பித்துக் கொண்டதாகவும், அது பற்றிய கம்ப்ளைண்ட் ப்ரட்யூசர் கவுன்சிலுக்குச் சென்றதாகவும் அதன் வகையிலே 200 கோடி ரூபாயை செட்டில் செய்தாக வேண்டிய நிலைமைக்கு வந்ததாகவும், அதன் காரணமாய் ப்ரட்யூசர் கவுன்சில் இன்று இரண்டாய் பிரிந்து கிடப்பதாகவும், 200 கோடி ரூபாய் வசூலிக்க முயற்சித்த எஸ்.ஏ.சி இப்போது தலைவர் பதவியில் இல்லாது போய் விட்டதாகவும் சில கோடம்பாக்கத்துக் குருவிகள் கீச்சிடுகின்றன. சிவாஜி படத்தில் மட்டுமே லாபம் கிடைத்ததாகவும், பிற படங்களை வாங்கி வெளியிட்ட வகையிலே ப்ரட்யூசர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை 200 கோடி என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்.

ஆக தமிழ் சினிமா இண்டஸ்ட்ரீயில் இருப்போர் அரசியல் கலப்பு வைத்திருந்த காரணத்தால் இன்று சினிமா உலகம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது. தொழிலில் அரசியல் கலந்தால் அது அழிந்து போகும் என்பதற்கு தமிழ் சினிமா ஒரு உதாரணம். தமிழ் சினிமாவில் படமெடுக்க ஆயிரமாயிரம் பேர் ஆவலுடன் இருக்கின்றார்கள். வருடம் 200 படங்கள் தயாராக வேண்டிய சூழ் நிலையில் 90 படங்களுடன் முக்கி முனகி, முதலுக்கும் மோசமாகிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். இதில் ஃபெஃப்சியின் அடாவடித்தன, முற்றிலும் தீவிரவாதத்தனமான, ஜன நாயக விரோத, சட்ட விரோத நடவடிக்கை சினிமாவில் இருப்போரை கொன்று கொண்டிருக்கிறது. சுய நலமற்ற தலைமைப் பொறுப்பு தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள். என்னதான் நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலின் முன் கணிப்பு – உங்களை அசர அடிக்கப் போகும் அதாவது இதயத் துடிப்பினை ஒரு நிமிடம் நிறுத்திப் பார்க்கும் கணிப்பு ஒன்றினை எழுதிக் கொண்டிருக்கிறேன். முடித்ததும் வெளியிடுகிறேன்.

– அனாதி.


ஏன் வேண்டாம் ஃபெஃப்சி – வெள்ளை அறிக்கை

ஏப்ரல் 24, 2012

சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, “ஏன் வேண்டாம் ஃபெப்சி?” என்ற வெள்ளை அறிக்கையின் புத்தக நகல் ஒன்றினை விரைவில் வெளியிடப் போகிறோம். இணையத்தில் முதன் முதலாய் ஒரு அதிரடி சமாச்சாரமாய் வர விருக்கிறது. ஏகப்பட்ட பக்கங்கள் இருப்பதால் அதை ஃபிலிப் புக்காய் மாற்றி அப்லோட் செய்ய முயற்சிக்கின்றோம். மறுப்பு கடிதங்களும் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– அனாதி


பத்திரிக்கை அதிபர் எழுதிய செக்ஸ் கதை

ஏப்ரல் 22, 2012

இந்தக் கதையைப் படித்து விட்டு, குஞ்சாமணி என்னிடம் அடித்த கமெண்ட். ஆடு நனையுதுன்னு ஓனான் அழுவுற கதை தெரியுமா? அது தான் இந்தக் கதை. சொசைட்டியில் பெரிய மனிதராய் இருப்பவர் எவராவது குட்டி மேட்டர் சமாச்சாரத்தை எவரிடமாவது பகிர்ந்து கொள்வார்களா? சோ, இது இவரின் சொந்தக் கதை என்கிறான். சார், அந்து மணி சார், கொஞ்சம் அடக்கி வையுங்க. எல்லாம் அவுந்திறபோவுது – பஞ்சு

இனி அவரின் கதை

அன்று, வழக்கமாக நண்பர்கள் கூடும் இடத்திற்கு, முன் கூட்டியே சென்று விட்டோம் நானும், லென்ஸ் மாமாவும். குறிப்பிட்ட நேரமாகாததால் நண்பர்களின் கார், பைக் எதையுமே காணோம். ஆனால், எங்களது பகுதியைத் தாண்டி, தூரத்தில் ஒரு, 118 என்.இ., கார் நின்றிருந்தது.

கார் முழுவதும் அடிப்பட்ட தடங்களும், கோடுகளும் இருக்கவே, அது அறிமுகம் உள்ள ஒரு அன்பரின் கார் தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த அன்பர், அரசு துறைகளில் ரொம்ப இன்புளுயன்ஸ் உள்ள நபர்; எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், அவரது வேலை சுலபமாக நடக்கும்.

அரசின் டெண்டர்கள், 20 கோடி ரூபாயில் ஆரம்பித்து, 200 கோடி ரூபாய் வரை பெரிய, பெரிய கம்பெனிகளுக்காக பிடித்துக் கொடுக்கும் ஆற்றல் படைத்தவர். டெண்டரின் மதிப்புக்கு ஏற்ப, அதன் சிரமத்திற்கு ஏற்ப, ஒன்று முதல் மூன்று சதவீத கமிஷன் வாங்கிக் கொள்வார்.

வருடத்திற்கு இதுபோல மூன்று, நான்கு வேலைகள் முடித்துக் கொடுத்து, நான்கு, ஐந்து கோடி ரூபாய் சம்பாதித்து விடுவார். சம்பாத்தியத்தை எல்லாம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து விடுவார். தனக்கென, ஆடம்பரக் கார்கள் ஏதும் வைத்துக் கொள்ள மாட்டார்.

செகண்ட் ஹாண்ட், தேர்ட் ஹாண்ட் கார்களை வாங்கி பயன்படுத்துவார். அப்படி வாங்கப்பட்ட கார்களில் ஒன்று தான் அந்த, 118 என்.இ., “இந்தக் காரை, ஏ.சி.யுடன், 33 ஆயிரம் ரூபாய்க்குத் தான் வாங்கினேன்… கேஸ் கனெக்ஷனுக்கு, 12 ஆயிரம் செலவு செய்தேன். இப்போ இரண்டு லட்ச ரூபாய் அளவுக்கு ஓட்டி விட்டேன்.

“இதுவே, 12-15 லட்சம் போட்டு புதுக் கார் வாங்கினால், எவனாவது சைடுல வந்து உரசி விடுவானோ, ஆட்டோ வந்து இடித்து விடுமோ என, டென்ஷனிலேயே கார் ஓட்ட வேண்டும்… குறுகிய தெருக்களில் தைரியமாக செலுத்த முடியாது…

“பழைய, விலை குறைந்த கார் என்றால், இந்த பயம் எல்லாம் தேவை இல்லை… உரசுறியா, உரசிக்கோ… இடிக்கிறியா, இடிச்சிக்கோ… மேடு, பள்ளமான ரோடா… நோ ஒர்ரி…’ இப்படி ஒரு லாஜிக் சொல்வார்!

இந்த அன்பர், கொஞ்சம் ஷோக்கு பேர்வழி… ஆள் அழகாக, டிரிம்மாக இருப்பார். பார்க்க, 43 வயது ஆசாமி போல இல்லாமல், 35 வயதுக்குள் தோற்றமளிப்பார். அதற்கு, அவர் எப்போதும் அணியும் டி – ஷர்ட்டும் ஒரு காரணம்.

கம்மிங் பேக் டு த பாயின்ட்…

அந்த கார் மேற்படி அன்பரின் கார் தானா என்பதை உறுதி செய்து கொள்ள, அருகே சென்ற போது, செல்போன் அழைத்தது. பேசியவர் மேற்படி அன்பரே தான்…

“மணி… நான் தான் பேசுறேன்… இங்கே, காருக்குள் ஒரு தோழியுடன் இருக்கிறேன். இன்னும் கொஞ்சம் நேரத்தில் நானே அங்கு வருகிறேன்…’ என்றார்.

மிகக் கருப்பான கார் கண்ணாடிக்குள் இருந்து, நான் அவர் காரை அணுகுவதைப் பார்த்து போன் செய்திருக்கிறார்.

“ஓ.கே.,’ என்று என் இடத்திற்கு நான் திரும்பவும், நண்பர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். பேச்சு சுவாரஸ்யத்தில் அந்த அன்பரை மறந்தே போனேன்.

அரை மணி நேரம் சென்று இருக்கும்… பத்து நண்பர்களுக்கும் மேல் வந்து விட்ட நிலையில், மேற்படி அன்பர், கும்பலில் கலந்து, என் புறங்கையை வெளியே தெரியாமல் சுரண்டி, தன்னுடன் தனியே வரும்படி சைகை செய்தார்.

நண்பர்களுக்கு சந்தேகம் வராத வகையில் நைசாகக் கழன்று, அந்த அன்பருடன் அவர் கார் நோக்கிச் சென்றேன். காரின் முன்பக்க இடது டோர் கண்ணாடி இறக்கப்பட்டு இருந்தது… காரினுள்ளே அழகான, 22-23 வயதுப் பெண் அமர்ந்திருப்பது தெரிந்தது!

அப்பெண்ணிடம், “ஹி இஸ் மணி… மை பிரெண்ட்…’ என, அன்பர் அறிமுகம் செய்யவுமே, அப்பெண், தன் வலது கரத்தை காரின் வெளியே நீட்டி, “ஷேக் ஹேண்ட்’ கொடுக்கும் விதமாக, “அயம் ரேஷ்மா…’ என்றாள்… நான் கை கூப்பி வணக்கம் சொன்னேன்.

ஒரே வினாடியில் அவளை அவதானித்தேன். கழுத்து வரை சுருள், சுருளான கேசம்… கண்ணில் பவர் கிளாஸ், மீடியமான தேகம்… களையான முகம்!

பின்னர், “பீ சீட்டட்… ஐ வில் கம்…’ என, அப்பெண்ணிடம் கூறிவிட்டு, என்னை தனியே அழைத்துச் சென்றார்.

“மணி… நம்பவே முடியாத சம்பவம்ப்பா… சாயங்காலம், 7:00 மணி அளவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள இன்டர்நெட் பிரவுசிங் சென்டர் போய், என் தம்பி, அமெரிக்காவில் இருந்து, “ஈ-மெயில்’ ஏதும் அனுப்பி இருக்கிறானா எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்…

“அதன் பின், “சேட்’ செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்போ திடு, திப்புன்னு யாரோ என்னை முறைச்சு பார்ப்பது போல ஒரு பீலிங் வரவே, மானிட்டரில் இருந்து கண்ணை எடுத்து திரும்பிப் பாத்தேன்…

“இந்தப் பெண்… ரேஷ்மா… வைத்த கண் எடுக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்! நான் திரும்பிப் பார்த்ததும், தன் பார்வையை மாற்ற, என் அருகே காலியாக இருந்த கம்ப்யூட்டரில் உட்கார்ந்தாள்.

“அது சரியாக வேலை செய்யவில்லை என்றதும், அந்த சென்டரின் அதிபர், எனக்கு நாலு சீட் தள்ளி அவளை அமர வைத்தார். இத்தனையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இரண்டு நிமிடக் கரைசலில் அப்பெண் என்னிடம் வந்து, என் ஈ-மெயில் முகவரி கேட்டாள்… ஏன், எதற்கு என்று கேட்காமலேயே, என் மெயில் முகவரியைக் கொடுத்தேன்.

“அவள் கம்ப்யூட்டரில் இருந்து எனக்குத் தகவல் அனுப்பியுள்ளாள்… அது என்னை வந்து அடையவில்லை என்பதை, தன் கம்ப்யூட்டர் மூலமே அறிந்தவள், என்னிடம் திரும்ப வந்து, “யாகூ ஐடி ஏதும் இருக்கா… அதைக் கொடுங்கள்…’ என்றாள்… கொடுத்தேன்.

“பர்சனல் சாட்டுக்கு வரும்படி என்னை அழைத்தாள்… பர்சனல் சாட்டில் நுழைந்ததும், “நீ ரொம்ப அழகாய் இருக்கே… உன்னுடன் நேரில், தனியா பேசணும் போல விருப்பம் இருக்கு… வெளியே போகலாமா… உன்னிடம் கார் இருக்கிறதா…?’ எனக் கேட்டாள்.

“இவ்வளவு அழகான இளம்பெண், “தனியே பேசணும், “வா’ன்னு கூப்பிட்டா. எந்த ஆண் மறுத்தாலும், நான் மறுக்க மாட்டேன். இருந்தாலும் அவள், “புரொபஷனலா?’ நல்ல பெண்ணான்னு தெரிஞ்சுக்க விரும்பி, “நீ யார்… என்ன செய்யுற? படிக்கிறியா? வேலை பார்க்கிறியா? சொந்த ஊர் எது?’ன்னு கேட்டு, கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினேன்.

“உடனே அவளிடமிருந்து பதில் வந்தது. தன் பெயர் ரேஷ்மா என்றும், வயது 23, எம்.பி.ஏ., பட்டதாரி, இன்பர்மேஷன் டெக்னாலஜி நிறுவனம் ஒன்றில் பணி, சம்பளம் விபரம், சொந்த ஊர் திருவனந்தபுரம், ஹாஸ்டலில் தங்கி இருப்பதாகவும் தகவல் அனுப்பினாள்.

“சரி… இவள் தொழில் முறை பெண் அல்ல என்பதை உறுதி செய்து, “இந்த இன்டர்நெட் சென்டரின் அதிபர் எனக்கு நன்கு அறிமுகமானவர்… அதனால், சென்டரின் வாசலில் நின்று காரில் ஏற வேண்டாம்… அருகே உள்ள தெருவில் இருக்கும் பஸ் ஸ்டாப்பில் வெயிட் பண்ணு… என் கார் நம்பர் இது தான்…’ எனத் தகவல் அனுப்பினேன்!

“அடுத்த, 15வது நிமிடத்தில் அப்பெண்ணை, பஸ் ஸ்டாப்பில் இருந்து, “பிக்-அப்’ செய்தேன். காரில் ஏறியது தான் தாமதம்… அப்படியே என் தோளில் சாய்ந்து, கட்டி அணைத்து விட்டாள்.

“பின்னர், பீச்சுக்குப் போகச் சொன்னாள்… இங்கே வந்து பழக்கமான இடத்தில் நிறுத்திக் கொண்டேன். “மேஜர்’ விஷயம் தவிர, மற்றவை அனைத்தும் முடிந்ததும்… “அதற்கு’ அனுமதி மறுக்கிறாள்…’ என்று அவர் முடித்ததும், எனக்கு பயங்கர கல்சுரல் ஷாக் — பண்பாட்டு சீரழிவை நினைத்து, அந்தப் பெண்ணின் முகம் கண்ணில் வந்து போனது… இந்தப் பெண்ணா? இந்தப் பெண்ணா என நினைத்து மனம் குமைந்தது… நெஞ்சு பாரமானது…

அடுத்த அரைமணி நேரமும் இதையே நினைத்து மனபாரமாகி தலை சுற்றுவது போன்ற ஒரு உணர்வுடனேயே இருந்தேன்.

கும்பலில் பெரியசாமி அண்ணாச்சி, “ஜிஞ்சர்’ சிக்கனை, “டிஞ்சர்’ சிக்கன் என்று சொல்ல, எல்லாரும் விழுந்து சிரித்து, அண்ணாச்சியைக் கிண்டலடிக்க, வலுக்கட்டாயமாக அதில் கலந்து, இதை அப்போதைக்கு மறந்தேன்!

இருந்தாலும், சமுதாயத்தின் பண்பாட்டுச் சீரழிவை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை! இதைப் படித்த உங்களுக்கு?

*** அந்துமணி பா.கே.பவில் படித்தது.

நன்றி : தினமலர் & அந்து மணி


இதுவும் அதுவும் ஹாட் மச்சீ

ஏப்ரல் 21, 2012

 

இந்தப் பாப்பா ஸ்ருதியா இல்லே வேறு யாரான்னு குஞ்சு சந்தேகம் கேட்கின்றான். எனக்கு தெரியாத காரணத்தால் வாசகர்களிடம் கேட்டு விடலாம் என்று இப்பதிவு. இந்தப் போட்டோவில் இருப்பது ஸ்ருதி ஹாசனா இல்லை வேறு யாராவதா? – அனாதி


நாமம் போட்ட மூணு

ஏப்ரல் 21, 2012

”3” திரைப்படத்தைப் பற்றி ஒரு வரி கமெண்ட் செய்திருந்தோம்.  எவரும் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள் என்று. ஏமாறவே பிறப்பெடுத்த எழவெடுத்த தமிழினம், சினிமாக்காரன் என்ன சொன்னாலும் இனிமேலும் ஏமாந்து கொண்டே தான் இருக்கும். 3 திரைப்படத்தில் கிடைத்த காசில் தன் தாய் தந்தையருக்கு சமீபத்தில் தனுஷ் 5 கோடி ரூபாயில் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்று ஒரு பத்திரிக்கையில் சினிமா செய்தி வந்திருந்தது. ரஜினி எனக்கும் 3 படத்திற்கும் சம்பந்தம் இல்லை என்கிறார். பின்னே ஐஸ்வர்யா என்பவர் யார் என்றுச் சொல்லுவாரா ரஜினி? ரஜினியின் மகள் என்ற கோதாவில் படமெடுத்த போது, இதே அறிக்கையை விட வேண்டியதுதானே. ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி என்கிற விஷயத்தை அனாதி வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி ஒருவரை தமிழக அரசியலில் முதலமைச்சராய் வர வேண்டுமென்று அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். என்னே ஒரு மடத்தனம் என்று பாருங்கள். இனி ஜூவியில் வந்திருக்கும் கட்டுரை உங்களுக்காக.

– அனாதி

( நன்றி : ஜூனியர் விகடன்)

தலைமறைவு’ தனுஷ்… சிக்கிய ரஜினி

ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக் கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி, வந்த வேகத்திலேயே திரும்பியும் விட்டது. அதனால், விநியோகஸ்தர்களுக்கு பெருத்த நஷ்டம். படத்தை வாங்கி நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா மீது ‘கொலவெறி’யில் இருக்கிறார்கள்.

‘ரஜினியிடம் சென்று முறை யிட்டால், ‘பாபா’, ‘குசேலன்’ மாதிரி நஷ்டஈடு கிடைக்கலாம்’ என்று பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று திரளத் தொடங்கினார்கள். இந்தத் தகவல் எப்படியோ ரஜினி காதுக்கும் போனது. உடனே விழித்துக்கொண்டவர், ‘எனக்கும் ‘3’ படத்துக்கும் வியாபாரரீதியாக எந்தத் தொடர்பும் இல்லை’ என்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிட்டார்.

முன்னதாக, படம் பணால் என்று ரிசல்ட் தெரிந்ததுமே தனுஷ், ஹாங்காங் செல்வ தாகச் சொல்லிவிட்டு பாங்காக் பறந்துவிட்டாராம். எங்கே இருக்கிறார் என்ற தகவலே சொல்லாமல் இதுவரை தலைமறைவாக இருந்தவர், ‘கோச்சடையான்’ படப் பிடிப்புக்காக ரஜினி கேரளா சென்ற தகவல் கிடைத்த பிறகே சென்னைக்குத் திரும்பி இருக் கிறார். ஆனாலும் யாரையும் சந்திக்கக் கூடாது என்று தனுஷின் செல்போன் ஸ்விட்ச்-ஆஃப் நிலையில் தான் இருக்கிறதாம்.

ஆந்திராவில் நாலரைக் கோடி ரூபாய்க்கு ‘3’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர் நட்டிக்குமாருக்கு நஷ்டம் மட்டுமே மூன்றரைக் கோடி என்கிறார்கள். ”சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் டைரக்ஷன் செய்கிறார். தனுஷ் சூப்பராகப் பாட்டு பாடியிருக்கார் என்று என்னை ஏமாற்றி ‘3’ படத்தை என்னிடம் அதிக விலைக்கு விற்றுவிட்டார்கள்…” என்று நட்டிக்குமார் பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகிறாராம்.

”தனுஷ் நடித்த, ‘மயக்கம் என்ன’ படத்தின் கர்நாடக உரிமையை 50 லட்ச ரூபாய்க்கு வாங்கினேன். அதில் 20 லட்ச ரூபாய் நஷ்டமாச்சு. இப்போது ‘3’ படத்தைப் பற்றி ஏகத்துக்கும் பில்டப் கொடுத்து 2.5 கோடி ரூபாய்க்குத் தள்ளினார்கள். இப்போது இரண்டு கோடி ரூபாய் நஷ்டத்தில் தவிக்கிறேன்” என்று கன்னட விநியோகஸ்தரும் கதிகலங்கி நிற்கிறாராம்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத் திரைப் பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் பேசினோம்.

”கோவை ஏரியாவுக்கு ‘3’ படத்துக்கு இரண்டரை கோடி ரூபாய் விலை சொன்னார் கஸ்தூரிராஜா. நான் ஒரு கோடிக்கு கேட்டேன், தரவில்லை. அதன்பிறகு, காஸ்மாஸ் வில்லேஜ் பிக்சர்ஸ் சிவக்குமார் ‘3’ படத்தை வாங்கினார். அவருக்கு இப்போது 50 லட்சம் நஷ்டம். படத்தை வெளியிட்ட 12 தியேட்டர் உரிமையாளர்களுக்கும் சேர்த்து 50 லட்சம் நஷ்டம். நான் 32 வருஷமா இந்தத் தொழிலில் இருக்கிறேன். இது வரை, ஒரு படத்துக்குகூட நஷ்டஈடு கேட்டது இல்லை. ‘பாபா’வுக்குகூட ரஜினிதான் கூப்பிட்டுக் கொடுத்தார், வாங்கிக்கொண்டேன். அது மட்டும் அல்ல, தமிழ்நாட்டில் நஷ்டம் அடைந்த அத்தனை பேருக்கும் நயா பைசா பாக்கி வைக்காமல் நஷ்டத் தொகையை என்னை வைத்துத்தான் செட்டில் செய்தார் ரஜினி. அப்போது திருப்பிக் கொடுத்த பணம் மட்டும் சுமார் 15 கோடிக்கு ரூபாய்க்கு மேல் இருக்கும். அதன்பிறகு, ‘குசேலன்’ பட நஷ்டத்தை ரஜினியிடம் மிரட்டி வாங்கினார்கள். ‘என் சொந்தத் தயாரிப்பு ‘பாபா’. அந்தப் படத்துக்கான நஷ்டத்தை அப்படியே திருப்பிக் கொடுத்தேன். ‘குசேலன்’ படத்தில் நான் நடிக்க மட்டும்தான் செய்தேன். அந்தப் படத்தின் தயாரிப்புக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னிடம் பணம் கேட்டு நிற்கிறார்களே…’ என்று ரஜினி என்னிடம் கண் கலங்கினார்.

நஷ்டத்தை ரஜினியிடம் திருப்பிக் கேட்டவர்கள், அவர் படத்தை திரையிட்டு லட்சம் லட்சமாய் லாபம் சம்பாதித்தார்களே. அப்போது பங்கு கொடுத்தார்களா? இப்போது, ரஜினியிடம் பணம் வாங்க வேண்டும் என்று பேசியவர் ஆந்திர விநியோகஸ்தர்தான். அவர் எப்போதும் இப்படித்தான் ஏடாகூடமாகப் பேசுவார். ரஜினிக்கும் ‘3’ படத்துக்கும் என்ன சம்பந்தம்? எதுக்குத் தேவை இல்லாம அவரை வம்புக்கு இழுக்கணும்? ‘3’ படத்தை வாங்கச் சொல்லி விநி யோகஸ்தர்களிடம் வேண்டுகோள் விடுத்தாரா ரஜினி? அந்தப் படம் பெரிய வெற்றி பெறும் என்று நீங்களாகத்தானே விரும்பிப் போய் வாங்கினீர்கள்? எல்லாத் தொழிலிலும் லாபம், நஷ்டம் இரண்டும் உண்டு. அதற்கு சினிமா மட்டும் விதிவிலக்கல்ல…” என்று விளக்கம் கொடுத்தார்.

ரஜினிக்கு சிக்கலாக மாறி இருக்கிறது ‘3’. இதில் இருந்து அவர் எப்படி வெளியில் வருவாரோ தெரியவில்லை!

– எம். குணா


பவர் ஸ்டார்

ஏப்ரல் 17, 2012

பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அவர்களின் படம் ஓடிய சென்னை தியேட்டரில் ஆட்டோக்காரர்கள் சாலையில் சென்று கொண்டிருந்தவர்களை வலிய அழைத்து படம் பார்க்கச் செய்யும் அளவுக்கு பணக்காரர். காது வழியாக கேட்ட செய்தி இவருக்கு நம்ம செக்ஸ் சாமியார், கொலைகார சாமியார் மாட்டிக் கொண்டு விழிக்கும் சமாச்சாரம் மூலம் பெரும் பணம் கிடைத்ததாய் சொன்னார்கள். ஆனால் உண்மையில் அவர் லீகலாக ஃபோரெக்ஸ் டிரேடிங் மூலமாய் ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்து இருக்கிறார் என்று நம்பக்கூடிய வட்டாரங்கள் சொல்லியது. எந்த ஒரு இயக்குனரையும் கதை சொல்ல அனுமதித்து கடைசியில் “சார் இந்தப் படத்துல ஹீரோ நான் தானே?” என்று கூசாமல் கேட்பார். ஒரு இயக்குனர் கல்லூரிக் கதையொன்றினைச் சொல்லி, அதற்கு நான் தானே ஹீரோ என்று டாக்டர் கேட்க, கதை சொல்லிய இயக்குனருக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக்கே வந்து விட்டது.

காசு ஒன்றே போதும் எனும் இயக்குனர்களுக்கு டாக்டர் சீனிவாசன் ஒரு அட்சய பாத்திரம்.

ஆனால் உங்களுக்கு உண்மையில் நான் இன்னொறு சமாச்சாரத்தைச் சொல்லித்தான் ஆக வேண்டும். டாக்டர் சீனிவாசன் உண்மையான பவர் ஸ்டார் கிடையாது. உண்மையான பவர் ஸ்டார் யாரு தெரியுமா? இதோ இவர் தான் அவர் !

– அனாதி


%d bloggers like this: