பெப்சி – தயாரிப்பாளர்கள் பிரச்சினை உண்மை என்ன?

மேற்கண்ட தலைப்பினைப் பற்றிய பதிவுகளை எத்தனையோ பிளாக்குகளில்,பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மறைக்கப்பட்ட உண்மை என்னவென்று தெரிய வேண்டுமல்லவா அதற்காகத்தான் இப்பதிவு.

22,000 சினிமா தொழிலாளர்களில் தொடர் வேலை வாய்ப்புப் பெறுவோர் வெறும் மூவாயிரம் பேர் மட்டுமே. மீதி 19,000 பேருக்கு தொடர் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன் என்பார்கள் அல்லவா அதைத்தான் இந்த பெப்சியினர் செய்து வருகின்றனர்.

பெரிய ஆலமரம் நல்ல நிழல் கொடுக்கும். ஆனால் சிறிய செடி ( நெற் செடி என்று வைத்துக் கொள்ளுங்களேன்) உயிர் கொடுக்கும். அதே போலத்தான் சினிமாவும். ஏவிஎம்மை எடுத்துக் கொண்டால் ஏவி மெய்யப்பச் செட்டியார் இறக்கும் முன்பு வரை 110 படங்கள் எடுத்தனர். அதில் பெரிய நடிகர்களின் படம் சுமார் பத்தோ பனிரெண்டோ இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படத்தைத்தான் எடுத்து வெளியிட்டு நல்ல லாபம் பார்த்து, பெரிய பேனராய் வளர்ந்தார்கள். அப்படியான சிறிய பட்ஜெட் படங்களை வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர் பெப்சி அமைப்பினர்.

பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இண்டஸ்ட்ரிக்கு பெரிதாய் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. சிறிய பட்ஜெட் படங்கள்தான் சினிமா தொழிலை வாழ வைத்து வளர்த்து வந்திருக்கிறது. ஒரு லைட் பாய் ஒரு படத்தில் 10,000 ரூபாய் கூட கிடைக்காது என்று குற்றம் சொல்கிறான். அவன் ஏன் நல்ல வருமானம் தராத லைட் மேன் தொழிலைச் செய்ய வேண்டும்?வேறு வேலைக்குச் செல்ல வேண்டியதுதானே?  அவனுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டுமென்பதற்காக தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்க வேண்டுமாம். இதுதான் பெப்சியின் அடாவடித்தனம். இதை விட அயோக்கியத்தனம் டிரைவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூபாய் 2000 கேட்பது. இது எந்த வகையில் நியாயம்? ஒரு இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரின் உறவினரோ காரை ஓட்டிச் செல்லலாம். இதற்கு எதற்கு தனியாய் ஒரு டிரைவர். அவனுக்கு ஏன் இரண்டாயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் அது தவறாம். இப்படிக் கேட்க பெப்சிக்கு எந்த வித உரிமையும் இல்லை. இந்தியாவில் சினிமா தொழில் என்று மட்டுமல்ல எந்தத் தொழிலையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். அதை பெப்சியினர் தடுப்பது சுதந்திர நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. பெப்சி அமைப்பின் அடாவடிச் செயல்கள் தடை செய்யப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெப்சி சட்டவிரோதமாய் நடந்து கொள்கிறது.

இன்றைக்கு நன்கு படித்தவர்கள் சினிமா தயாரிப்பாளர்களாக வருகின்றார்கள். அவர்கள் நான் ஏன் பெப்சிக்கு கட்டுப்பட வேண்டும்? என்று கேட்கின்றார்கள். பெப்சி என்ன சினிமாவிற்கு கடவுளா? அவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? என் பணம், எனக்குப் பிடித்தவரை இயக்குனராக்குகிறேன், எனக்குப் பிடித்தவரை வேலைக்கு அழைக்கிறேன், இதில் பெப்சி ஏன் தலையிடுகிறது என்கிறார்கள்.

தொழிலாளர்கள் முதலாளிகளை மிரட்டுகின்றார்கள். இதைத்தான் பெப்சி செய்து வருகிறது. செய்த வேலைக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றால் அதில் பெப்சி தலையிடலாம். தயாரிப்பாளர்கள் பெப்சிக்கு அடிபணிய வேண்டும் என்பது சினிமா உலகை அழிக்க முனையும் பெப்சியின் அயோக்கியத்தனம் என்கிறேன். வேலை கிடைக்காத வெட்டிப்பயல்கள் சிலர் ஒன்று சேர்ந்து கொண்டு பணம் போட்டு தொழில் செய்ய வருபவர்களை மிரட்டுவதும், சினிமா தொழிலாளர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று மூளைச் சலவை செய்து அவர்களை பட்டினி போட்டு வருவதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தயாரிப்பாளர்கள் சங்கம் தனிப்பட்ட தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தி, பெப்சி என்ற மாஃபியா கும்பலை தமிழ் சினிமா உலகில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய மிக நல்ல தருணம் வாய்த்திருக்கிறது. எந்தக் கொம்பனின் மிரட்டலுக்கும் அடிபணியாமல், மிக உறுதியுடன் இருந்து தனிப்பட்ட தொழிலாளர் அமைப்பினை உருவாக்கி தமிழ் சினிமா உலகை தழைத்தோங்கச் செய்ய வேண்டும்.

சினிமா ரசிகர்களாகிய நாம் தயாரிப்பாளர்களுக்கு இந்தச் சமயத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

– அனாதி

2 Responses to பெப்சி – தயாரிப்பாளர்கள் பிரச்சினை உண்மை என்ன?

  1. Eleventh Sense சொல்கிறார்:

    இதைத்தான் மலையாளத்தான் செய்து இன்று எந்த தொழிலையும் வளர விடாமல் வேறு வேறு ஊருக்கு பொய் அரபி ஷேக்கு ஒட்டகத்தையும், அவன் காரையும், கழுவிக்கொண்டிருக்கிறான். பெப்ஸி சீக்கிரம் செயலிழந்து விடும். செய்யாத வேலைக்கு சம்பளம் கேட்பவன் எவனும் உருப்பட்டது இல்லை…………

  2. CDR சொல்கிறார்:

    சூப்பர் தல, என் மனதில் இருந்ததை நீங்க சொல்லிட்டிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: