முட்டாள் கிரிக்கெட் ரசிகர்கள் – சூதாட்டம்

கிரிக்கெட் பார்ப்பவர்களை மீண்டும் மீண்டும் முட்டாள்கள் என்று ஏன் சொல்லுகிறோம் என்பதற்கு தி சன்டே டைம்ஸ் நடத்திய ஸ்டிங் ஆபரேசன் மீண்டும் ஒரு உதாரணம்.

நமது பிளாக்கில் பல தடவை கிரிக்கெட்டிற்கு எதிரான பல உண்மை ஆதாரங்களுடன் எழுதி, கிரிக்கெட்டைப் பார்க்க வேண்டாம் என்று எழுதி இருந்தது பலருக்கு நினைவுக்கு வரலாம்.

உலகில் பெரும்பான்மையான பணக்காரர்களின் விளையாட்டே கிரிக்கெட் சூதாட்டம் தான். தமிழ் நாட்டின் ஒரு பத்திரிக்கையாளரின் தண்ணி அடிக்கும் செலவுக்கு கிரிக்கெட்டை வைத்து சூதாட்டம் நடத்திப் பெறும் பணம் தான் பயன்படுத்தப்படுகின்றது. சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தான் அந்த சூதாட்டமே நடக்கிறது என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

இந்தியா ஜெயிக்கும் என்று வாய் பிளந்து, உதடு ஒட்டாமல், ஈ போவது கூட தெரியாமல் இளித்துக் கொண்டு, பெண்டாட்டியைக் கூட கவனிக்காமல், பிள்ளையைக் கவனிக்காமல் விளையாட்டைப் பார்த்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு ஒன்றே ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்கிறோம்.

கிரிக்கெட் வீரர்கள் அடிக்கும் அல்லது அடிக்காத ஒவ்வொரு பந்துக்கும் அவர்களுக்கு காசு போகின்றது. பிடிக்கும் ஒவ்வொரு கேட்சுக்கும், பிடிக்காத ஒவ்வொரு கேட்சுக்கும், ஜெயிக்கும் ஒவ்வொரு ஆட்டத்திற்கும், ஜெயிக்காத ஒவ்வொரு ஆட்டத்திற்கும் பிரபல பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் கோடி கோடியாய் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவித்தனத்தனமான ரசிகர்களை ஏமாற்றி நவீனக் கொள்ளை அடிக்கும் கிரிக்கெட் விளையாட்டினை தொடர்ந்து பார்த்துப் பார்த்து மீண்டும் மீண்டும் முட்டாள் ஆகிக் கொண்டிருக்காதீர்கள்.

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: