சென்னையில் அதிமுக கவுன்சிலர்கள் அட்டகாசம்!

அதிமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்றார் முதலமைச்சர். திமுக கவுன்சிலர்கள் சென்னையில் அடித்த கொள்ளையோ கொள்ளை கொஞ்சம் நஞ்சமல்ல. அதே வேலையில் அதற்கும் மேலாக கொள்ளை அடிக்கும் அதிமுக கவுன்சிலர்களின் அட்டகாசங்களை இதோ ஜூனியர் விகடனில் வந்திருக்கும் கட்டுரையில் படியுங்கள். அதிமுகவினர் சட்டம் ஒழுங்கிற்கு அப்பாற்பட்டவர்களா? என்பதை காலம் பதில் சொல்லும். உபியில் தனக்குத்தானே சிலை வைத்து, சிகை அலங்காரப் பொருள் வாங்க தனி பிளைட் வைத்த மாயாவதி மண்ணைக் கவ்வினார். அதிமுக கவுன்சிலர்கள் செய்யும் அட்டகாசத்தால் அடுத்து வரக்கூடிய திமுக ஆட்சியில் அதிமுகவினருக்கு என்றுத் தனிச் சிறை தயார்ப்படுத்துவார்கள் போல.

– பஞ்சு

தள்ளுவண்டியில் டாஸ்மார்க் – நன்றி ஜூனியர் விகடன்

தி.மு.க-வின் கோட்டை என்று அழைக்கப்பட்ட சென்னையை, கடந்த சட்டசபைத் தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கோட்டை விட்டது. தி.மு.க. இதற்கு முக்கியக் காரணம், கடந்த ஆட்சியில் தி.மு.க. கவுன்சிலர்கள் நடத்திய திருவிளையாடல்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதோ, ‘தி.மு.க. கவுன்சிலர்களே பரவாயில்லை. அ.தி.மு.க. கவுன்சிலர்களின் அடாவடி எல்லை மீறிப் போகிறது’ என்று ஏராளமான வாசகர்கள் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்குத் (044-66808002) தகவல் அனுப்பி வருகிறார்கள்.

நகர் முழுவதும் வலம் வந்து பொதுமக்கள், வியா பாரிகள் மற்றும் கட்சிப் பிரமுகர்களிடம் திரட்டிய தகவல்கள் இனி.

போயஸ் கார்டன் பகுதியில் கோலோச்சும் கவுன் சிலர்  ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்காக இரு மாதங்கள் முன்பே, கதீட்ரல் சாலையில் உள்ள முக்கிய வர்த்தக நிறுவனங்களை மறைக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதாவின் படம் போட்ட பேனர்களை வைத் தார். இன்னும் சில கடைகளில் பேனர்களை விலக்கினால்தான் கடைகளுக்கு உள்ளே செல்லமுடியும் என்ற அளவுக்கு வைத்திருந்தார். அதனால் வேறுவழியின்றி வியாபாரிகள் பேச்சுவார்த் தைக்கு வந்தார்கள். பெரிய நிறுவனங்கள் தலா 25 ஆயிரம் ரூபாயும் சிறுகடைகள் தலா 10 ஆயிரமும் கொடுத்த பிறகுதான் பேனர்கள் அகற்றப்பட்டன.

சைதாப்பேட்டை பகுதியில் அடைமொழி யுடன் வலம் வரும் இலைப் பிரமுகர்  அவர். மாநகராட்சி சுகாதாரக்குழுப் பிரமுகருடன் சேர்ந்துகொண்டு, சைதாப்பேட்டை பஸ் நிலையத் தில் அதிரடி வசூல் நடத்துகிறாராம். இதைக் கண்டு அரண்டு போயிருக்கும் வியாபாரிகள், ”திடீர்னு எங்க கடை போர்டை எல்லாம் மறைச்சு பேனர் கட்டுறாங்க. வியாபாரிகள் சிலர் தட்டிக் கேட்டதுக்கு, முன்னாள் அமைச்சர் செந்தமிழனோட ஆளுங்க நாங்க… பணம் கொடுத்தா பேனரைக் கழட்டுறோம்னு அடாவடி வசூல் செய்றாங்க…” என்கிறார் கொதிப்புடன். இதே பாணியைப் பயன்படுத்தி பீச் ஏரியாவிலும் வசூல் செய்திருக்கிறார், மாநகராட்சியின் பணிகள் நிலைக் குழுப் பிரமுகர்  ஒருவர்.

பாண்டி பஜார், பசுல்லா சாலை ஆகிய பகுதி களில் வர்த்தக நிறுவனங்கள் அதிகம். இந்தப் பகுதியில் உள்ளூர் பஸ் நிறுத்தங்கள் மொத்தம் 52 இருக்கின்றன. மாநகராட்சியில் கட்டணம் செலுத்தி, ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும், வர்த்தக நிறுவனங்கள் விளம்பர பேனர் வைத்துக் கொள் ளலாம். ஆனால், கவுன்சிலர் அகராதிப்படி மாந கராட்சியில் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதாது. ஒவ்வொரு பஸ் நிறுத்தத்திலும் விளம்பர அறிவிப்புகள் வைக்க மாதம் 3,000 ரூபாய் கவுன்சிலருக்குத் தரவேண்டும். அடை மொழியுடன் வலம் வருபவர் காட்டில்,  இந்த வகையில் மட்டும் தினமும் அடைமழைதான். ”சார், நாங்க பல வருஷங்களா பிளாட்பாரத்துல மெஹந்தி வரைஞ்சு சம்பாதிக்கிறோம். இப்ப வட மாநிலத்துக்காரங்க எல்லோரையுமே சந்தேகமாப் பார்க்கிறாங்க. அதனால எங்களுக்கு வருமானம் ரொம்பவும் குறைஞ்சுபோச்சு. ஆனா, தினமும் 400 ரூபா கவுன்சிலருக்குக் கொடுத்தாத்தான் இங்கே தொழில் பண்ண முடியும்னு மிரட்டிப் பிடுங் கிட்டுப் போறாங்க…” என்று வேதனைப்பட்டார் மெஹந்தி வரையும் தொழிலாளி ஒருவர்.

தி.நகர் பகுதியில் பல்வேறு வர்த்தக நிறுவனங் களுக்கு சீல் வைக்கப்பட்ட நேரம் அது. அப்போது சம்பந்தமே இல்லாமல் பிரபல ஃபேன் நிறுவனத்தின் பெயரை கொண்ட ஒரு  நிறுவனத்தின் கட்டடத்துக்கும் சீல் வைத்தார்கள். அதன் உரிமையாளர் என்ன ஏது என்று கேட்க, வளர்ந்த பெண் அமைச்சரின்  பெயரைச் சொல்லி, ‘கவனிச்சிட்டு வா’ என்று அனுப்பி இருக்கிறார்கள். அங்கு 10 லட்சம் கேட்டார்கள். கடைக்காரர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால் இன்றுவரை சீல் அகற்றப்படவில்லை!

சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ரோட்டோரக் கடையை கூட விட்டு வைக்காமல் கடை ஒன்றுக்கு தினசரி 100 முதல் ஆயிரம் வரை கப்பம் வசூலிக் கிறார்கள். ”என் கடையில என்னப்பா யாவரம் ஆகும்? தினமும் 100 ரூபா வாங்கினு போறாங்க… வயசான காலத்துல நானே உழைச்சுத்தானே சம்பாதிக்கிறேன். இவனுங்க நல்லா இருப்பா னுங்களா..?” என்று கண் கலங்குகிறார் ரோட்டோரம் சாப்பாட்டுக் கடை நடத்தும் மூதாட்டி!

இப்பகுதியில் இருக்கும் சுங்குவார் அக்ரஹாரம் தெருவில் ஒருவருக்கு பணக்கஷ்டம். விஷயம் அறிந்த அந்தப் பகுதியின் முக்கியப் பிரமுகர்  அவரை அன்பாக மிரட்டி, அவரது கட்டடத்தை குறைந்த விலைக்கு வாங்கிக்கொண்டார். இரண்டே வாரத்தில் அந்தக் கட்டடத்தை இரண்டு மடங்கு விலைக்கு கைமாற்றி விட்டார். இவரிடம் கட்டடம் இருந்த போது, அதில் ஒரு கடையில் தனது கைத்தடி ஒருவரை வாடகைக்கு அமர்த்தினார். இப்போது அவர் கடையைக் காலி செய்ய தனியாக 15 லட்சம் தர வேண்டும் என்று பஞ்சாயத்துப் பேசி வருகிறார். ”அனைத்து டாஸ்மாக் கடையிலும் அரசு அனுமதியுடன்தான் ‘பார்’ நடத்தப்படுகிறது. ஆனால், அருணாசலம் தெருவில் இருக்கும் டாஸ் மாக் கடைக்கு ‘பார்’ இருக்கு; ஆனா, இல்லை’ கதைதான். இலைக்கட்சிப் பிரமுகரே ஆஃப் தி ரிக்கார்டாக பார் நடத்துகிறார்; எங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை என்கிறார்கள்” டாஸ்மாக் அதிகாரிகள்!

புதுப்பேட்டை  ஹாரிஸ் சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான டெம்போக்கள் நிற்பதைப் பார்க்கலாம். இவற்றுக்கு மாத பார்க்கிங் கப்பம் 3,000 ரூபாய் செலுத்த வேண்டுமாம். சமீபத்தில் இப்பகுதி இலைப் பிரமுகருக்கு  சலாம் போட மறுத்த மின்வாரிய உதவிப் பொறியாளரைத் துவைத்து எடுத்தாராம் அந்தப் பிரமுகர். அடுத்த வாரம் அந்த பிரமுகரின் மகன், அரசு பஸ்ஸில் தொங்கியபடி வந்ததைக் கண்டித்தார் நடத்துனர். அதனால் பஸ் கண்ணாடியை உடைத்தார் மகன். இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. லாயிட்ஸ் காலனி பகுதியில் கவுன்சிலர் ஒருவர்  வசூல் வேலைக்காகவே சஃபாரி சீருடையில் நான்கு பேரை மாதச் சம்ப ளத்துக்கு நியமித்து இருக்கிறாராம்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பயன் பெறவேண்டும் என்பதற்காகவே, கடந்த ஆட்சியில் ஒவ்வொரு வார்டிலும் சமுதாயக் கூடங்களை அமைத்தார்கள். ஏரியாவுக்குத் தகுந்தபடி அதிகபட்சம் 4,000 ரூபாய் மட்டுமே மாநகராட்சிக்குச் செலுத்தி திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை நடத்தி வந்தார்கள். இப்போது சென்னை மாநகராட்சியில் இந்த சமுதாய நலக் கூடங்கள் மொத்தத்தையும் அந்தந்தப் பகுதி கவுன் சிலர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். குறைந்தது 15 ஆயிரம் கொடுக்காமல் ஹால் கிடைக்காது.

எழும்பூர் பகுதியில் நான்கு வார்டுகள் இருக் கின்றன. இதில் ஒரு வார்டு மட்டும் தி.மு.க. வசம் இருக்கிறது. மற்ற மூன்றும் அ.தி.மு.க. வசம் இருக்கிறது. ஆனால், கட்சி பேதம் இல்லாமல் தினமும் மாலை ‘மைலேடீஸ்’ பூங்காவில் சந்தித்துக் கொள்ளும் நான்கு கவுன்சிலர்களும் தினசரி வருவாயை சரி பங்காகப் பிரித்துக் கொள்கிறார்களாம்.

காசிமேடு வார்டில் கவுன்சிலர் ஆசியுடன்  போலீஸ் ஸ்டேஷனை ஒட்டியே 24 மணி நேரமும், தள்ளு வண்டிக் கடைகளில் டாஸ்மாக் சரக்கு விற்பனை ஜோராக நடக்கிறது. ஸ்பெஷலாக கட்டு மரச் சரக்குக் கடையும் கடலுக்குள் உண்டு. இந்தப் பகுதியில் இரவு எட்டு 8 மணிக்கே டாஸ்மாக் கடை யை மூடிவிட வேண்டும் என்பது கடந்த ஆட்சியில் இருந்து இப்போது வரை இருக்கும் நடைமுறை விதிகளில் ஒன்று.

இவற்றை எல்லாம் தாண்டி, வீடு கட்டுவதற்கு பூமி பூஜை போடும்போதே அதிகாரமாக வந்து இறங்கும் கவுன்சிலர்களின் அடிப்பொடிகள், ‘இத்தனை சதுர அடிக்கு இவ்வளவு ரூபா அண்ணனுக்கு கொடுங்க. ஒரு பிரச்னையும் இல்லாமப் பார்த்துக்கிறோம்’ என்று பொதுமக்களின் வயிற்றிலும் அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

கவுன்சிலர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மேயரிடம் தெரிவித்து விளக்கம் கேட்டோம். அவர் சார்பாகப் பேசிய அதிகாரி, ”கவுன் சிலர்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு கூட்டத்திலும் மேயர் கண்டிப்புடன் சொல்லத்தான் செய்கிறார். ‘உளவுத்துறை போலீஸார் கவுன்சிலர் களைக் கண்கொத்திப் பாம்பாக கவனிக்கிறார்கள், அதனால், பிரச்னை என்றால் என்னிடம் வராதீர்கள்’ என்று எச்சரிக்கையும் செய்கிறார். அவர் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சொந்தக்கார், சொந்த டிரைவரைத்தான் பயன்படுத்துகிறார்.  பெட்ரோல் கூட மாநகராட்சி செலவில் போடுவது இல்லை. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால்,  முதல்வர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்” என்று சொன்னார்.

எப்போ?

– டி.எல்.சஞ்சீவிகுமார்      

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: