அனாதி நீங்கள் யார் ?

மார்ச் 31, 2012

தல,

29ம் தேதி முதல்வர் அவர்கள் சசிகலாவிற்கு பூ கொடுப்பது போன்ற படத்தினை வெளியிட்டு, நட்புக்கு என்றுமே பிரிவே இல்லை என்று விளக்கம் கொடுத்திருந்தீர்கள். 31ம் தேதி சசிகலா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்துச் செய்கிறார் முதல்வர். பல பத்திரிக்கைகளில் ஹேஸ்யமாக வெளியான செய்திதான் என்றாலும் நீங்கள் சொன்ன விதம் நச்சென்று இருந்தது. அதுவே உண்மையானது.

நீங்கள் யார்? என்பது தொடர்ந்து படித்து வரும் உங்கள் வாசகனாகிய எனக்குத் தெரியப்படுத்துவீர்களா?

– பரந்தாமன், சென்னை

அன்புப் பரந்தாமன் அவர்களுக்கு,

இது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை. செய்திகளை உற்றுப் படித்துக் கொண்டு, அதை நினைவில் வைத்துக் கொண்டே வந்தால் எளிதில் விளங்கி விடும். ஆகவே நீங்களாகவே ஏதேதோ நினைத்துக் கொள்ளாதீர்கள். நான் ஒரு சாதாரண ஹோட்டல் நடத்தும் வெகு சாதாரணமானவன்.

– அனாதி


3 – திரைப்பட விமர்சனம்

மார்ச் 30, 2012

என்னடா இது திரைப்பட விமர்சனம் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டானே என்று நினைத்திருப்பீர்கள்.  பிரபலம் ஒருவரின் நச்சரிப்புத் தாங்காமல் இப்படத்தைப் பார்க்க நேரிட்டது.

படம் பற்றிச் சொல்ல ஒரே ஒரு வார்த்தை “ சாக்கடையிலும் கீழான குப்பை”

நேரத்தை வீணாக்கி விடாதீர்கள். உங்கள் உழைப்பின் பலன் வேறு எவற்றுக்காவது பயன்படட்டுமே.

– பஞ்சு


சசிகலா ஜெயலலிதா பிரச்சினையின் விடை

மார்ச் 29, 2012

 

நட்புக்கு என்றென்றும் பிரிவு என்பதே இல்லை – அனாதி


பெப்சி – தயாரிப்பாளர்கள் பிரச்சினை உண்மை என்ன?

மார்ச் 27, 2012

மேற்கண்ட தலைப்பினைப் பற்றிய பதிவுகளை எத்தனையோ பிளாக்குகளில்,பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். இருந்தாலும் மறைக்கப்பட்ட உண்மை என்னவென்று தெரிய வேண்டுமல்லவா அதற்காகத்தான் இப்பதிவு.

22,000 சினிமா தொழிலாளர்களில் தொடர் வேலை வாய்ப்புப் பெறுவோர் வெறும் மூவாயிரம் பேர் மட்டுமே. மீதி 19,000 பேருக்கு தொடர் வேலை கிடைப்பது குதிரைக்கொம்பு. தானும் படுக்க மாட்டேன், தள்ளியும் படுக்க மாட்டேன் என்பார்கள் அல்லவா அதைத்தான் இந்த பெப்சியினர் செய்து வருகின்றனர்.

பெரிய ஆலமரம் நல்ல நிழல் கொடுக்கும். ஆனால் சிறிய செடி ( நெற் செடி என்று வைத்துக் கொள்ளுங்களேன்) உயிர் கொடுக்கும். அதே போலத்தான் சினிமாவும். ஏவிஎம்மை எடுத்துக் கொண்டால் ஏவி மெய்யப்பச் செட்டியார் இறக்கும் முன்பு வரை 110 படங்கள் எடுத்தனர். அதில் பெரிய நடிகர்களின் படம் சுமார் பத்தோ பனிரெண்டோ இருக்கலாம். அவர்கள் பெரும்பாலும் சிறிய பட்ஜெட் படத்தைத்தான் எடுத்து வெளியிட்டு நல்ல லாபம் பார்த்து, பெரிய பேனராய் வளர்ந்தார்கள். அப்படியான சிறிய பட்ஜெட் படங்களை வர விடாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றனர் பெப்சி அமைப்பினர்.

பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் இண்டஸ்ட்ரிக்கு பெரிதாய் ஒன்றும் செய்து விடப்போவதில்லை. சிறிய பட்ஜெட் படங்கள்தான் சினிமா தொழிலை வாழ வைத்து வளர்த்து வந்திருக்கிறது. ஒரு லைட் பாய் ஒரு படத்தில் 10,000 ரூபாய் கூட கிடைக்காது என்று குற்றம் சொல்கிறான். அவன் ஏன் நல்ல வருமானம் தராத லைட் மேன் தொழிலைச் செய்ய வேண்டும்?வேறு வேலைக்குச் செல்ல வேண்டியதுதானே?  அவனுக்கு நல்ல வருமானம் கிடைக்க வேண்டுமென்பதற்காக தயாரிப்பாளர் அதிக சம்பளம் கொடுக்க வேண்டுமாம். இதுதான் பெப்சியின் அடாவடித்தனம். இதை விட அயோக்கியத்தனம் டிரைவருக்கு ஒரு நாள் சம்பளம் ரூபாய் 2000 கேட்பது. இது எந்த வகையில் நியாயம்? ஒரு இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரோ அல்லது தயாரிப்பாளரின் உறவினரோ காரை ஓட்டிச் செல்லலாம். இதற்கு எதற்கு தனியாய் ஒரு டிரைவர். அவனுக்கு ஏன் இரண்டாயிரம் கொடுக்க வேண்டும் என்று கேட்டால் அது தவறாம். இப்படிக் கேட்க பெப்சிக்கு எந்த வித உரிமையும் இல்லை. இந்தியாவில் சினிமா தொழில் என்று மட்டுமல்ல எந்தத் தொழிலையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். அதை பெப்சியினர் தடுப்பது சுதந்திர நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. பெப்சி அமைப்பின் அடாவடிச் செயல்கள் தடை செய்யப்பட வேண்டியது என்பதில் யாருக்கும் எந்த வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. பெப்சி சட்டவிரோதமாய் நடந்து கொள்கிறது.

இன்றைக்கு நன்கு படித்தவர்கள் சினிமா தயாரிப்பாளர்களாக வருகின்றார்கள். அவர்கள் நான் ஏன் பெப்சிக்கு கட்டுப்பட வேண்டும்? என்று கேட்கின்றார்கள். பெப்சி என்ன சினிமாவிற்கு கடவுளா? அவர்களுக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? என் பணம், எனக்குப் பிடித்தவரை இயக்குனராக்குகிறேன், எனக்குப் பிடித்தவரை வேலைக்கு அழைக்கிறேன், இதில் பெப்சி ஏன் தலையிடுகிறது என்கிறார்கள்.

தொழிலாளர்கள் முதலாளிகளை மிரட்டுகின்றார்கள். இதைத்தான் பெப்சி செய்து வருகிறது. செய்த வேலைக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்றால் அதில் பெப்சி தலையிடலாம். தயாரிப்பாளர்கள் பெப்சிக்கு அடிபணிய வேண்டும் என்பது சினிமா உலகை அழிக்க முனையும் பெப்சியின் அயோக்கியத்தனம் என்கிறேன். வேலை கிடைக்காத வெட்டிப்பயல்கள் சிலர் ஒன்று சேர்ந்து கொண்டு பணம் போட்டு தொழில் செய்ய வருபவர்களை மிரட்டுவதும், சினிமா தொழிலாளர்களுக்கு நல்லது செய்கிறேன் பேர்வழி என்று மூளைச் சலவை செய்து அவர்களை பட்டினி போட்டு வருவதும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

தயாரிப்பாளர்கள் சங்கம் தனிப்பட்ட தொழிலாளர் அமைப்பை ஏற்படுத்தி, பெப்சி என்ற மாஃபியா கும்பலை தமிழ் சினிமா உலகில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டிய மிக நல்ல தருணம் வாய்த்திருக்கிறது. எந்தக் கொம்பனின் மிரட்டலுக்கும் அடிபணியாமல், மிக உறுதியுடன் இருந்து தனிப்பட்ட தொழிலாளர் அமைப்பினை உருவாக்கி தமிழ் சினிமா உலகை தழைத்தோங்கச் செய்ய வேண்டும்.

சினிமா ரசிகர்களாகிய நாம் தயாரிப்பாளர்களுக்கு இந்தச் சமயத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டியது அவசியம்.

– அனாதி


ஹாட் பெட்டைக்கோழி

மார்ச் 23, 2012

சினிமா உலகில் தற்போது அதிக வாண்டட்டாக இருக்கும் நடிகை யார் தெரியுமா?

ஏன் என்று கேட்காதீர்கள். வெட்கமாய் இருக்கிறது. நடிக்கத்தான் கூப்பிடுகின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகின்றீர்கள்? குஞ்சாமணி மீது நீங்கள் எப்போது தான் நம்பிக்கை வைத்திருக்கின்றீர்கள்? ஒரு போதும் இல்லை. என் பெயர் ராசி அப்படி. அதற்கு நான் என்ன செய்ய?

இவர் நல்ல நடிகை என்று பெயர் வாங்கி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ப்ரட்யூசர் ஃப்ரண்ட்லியாகவும் இருக்கிறார். விரைவில் இவரின் பல படங்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

– குஷியுடன் குஷாலுடன் கும்மாளத்துடன்

குஞ்சாமணி


10.67 லட்சம் கோடி ஊழல்

மார்ச் 22, 2012

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான ஒரு செய்தி. நிலக்கரி சுரங்கத்தில் ஏலம் விடப்படாமையினால் தனியார் கம்பெனிகள் அடித்த கொள்ளையுடன், இந்திய மக்களிடம் தனியார் முதலாளிகள் சுரண்டிய பணம் ரூபாய் பத்து லட்சம் கோடி என்கிறது செய்தி. இதில் பிரபலமானவர்கள் டாடா, பிர்லா குடும்பத்தினர். இந்தச் செய்தியை இந்திய தணிக்கைத் துறையினர் ஆடிட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.

இதே போல இரும்புத்தாது ஏற்றுமதியில் அள்ளிய பணம் இதை விட அதிகம் என்கிறார்கள்.

இந்தியாவை ஆளத்தெரியாதவர்கள் ஆண்டு கொண்டிருக்கின்றார்களா இல்லை ஊழலே கொள்கை என்பவர்கள் ஆண்டு கொண்டிருக்கின்றார்களா என்பதை வாசகர்கள் முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

இனிமேல் டாட்டா, பிர்லா மாதிரி வரணும் என்று எவராவது சொன்னால் அவனைத் திருடன் என்றுச் சொல்லித்தர பழகுங்கள். வெறும் 22 ரூபாய் பணம் கூட சம்பாதிக்க முடியாமல் மக்கள் பட்டினியில் கிடந்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். பணக்கார கொள்ளைக்காரர்கள் அடிக்கும் கொள்ளைக்கு மத்திய அரசு எப்படியெல்லாம் உதவுகின்றார்கள் என்று பாருங்கள்.

இது தான் ஜன நாயகமா? இது தான் மக்கள் ஆட்சியா?

மக்களின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்குப் பெயர்தான் ஜன நாயகமா?

– பஞ்சு


5000 பேர் கூடங்குளத்தில் போராட்டம்

மார்ச் 21, 2012

அனாதி பிளாக்கில் பல முறை கூடங்குளம் அணு உலை திறக்கப்படும் என்ன விலை கொடுத்தேனும் கோடீஸ்வரர்களுக்கான அரசாங்கத்தால் என்று எழுதி இருந்தோம்.

தமிழக மக்களை மூன்றே மாதத்தில் மின்வெட்டிலிருந்து தமிழகத்தினை மீட்பேன் என்றுச் சொல்லிய மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அடுத்த கட்ட புரட்சிதான் கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்று சொல்லியது.

மக்கள் கேட்பது எங்களது பயத்தை நீக்குங்கள் என்பதுதான். அதைச் செய்ய மாநில அரசோ, மத்திய அரசோ தயாரில்லை.

கூடங்குளம் போராட்டத்தினைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாய் இருட்டடிக்கப்படுகின்றன. 5000 பேர் போராட்டக்களத்தில் இருக்கின்றார்கள் என்கிறது தெகல்கா பத்திரிக்கை.

கூடங்குளம் மக்கள் பலி கொடுக்கப்படப் போகின்றார்கள். பார்த்துக் கொன்டே இருங்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். இனி தமிழகத்தில் தமிழர்கள் கொல்லப்படப் போகின்றார்கள். அப்போதும் நாம் பார்த்துக் கொன்டேதான் இருப்போம்.

– பஞ்சு


%d bloggers like this: