தெ டுக் ஆல் ஃப்ரம் மீ !

 அனாதி,

எப்படி இருக்கின்றீர்கள்? உங்கள் ஹோட்டல் தொழில் எப்படி இருக்கிறது? அடிக்கடி அல்ல எப்போதெல்லாம் நெட்டுக்கு வருவேனோ அப்போதெல்லாம் அனாதியை திறந்து பார்த்து விடுவேன். அப்படி ஒரு க்ரேஸ் !

பெண்களைப் பற்றிய உங்களின் பல பதிவுகள் என்னை வருத்தமடையச் செய்தாலும், திரு குஞ்சாமணியின் பதிவுகள் என்னை மேலும் மேலும் புண்படுத்தும். இவரைப் போன்றோரால் தான் என்னைப் போன்றவர்கள் படுகுழியில் விழுகிறோம். குஞ்சாமணிக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்கள்.

நான் ஒரு முன்னாள் ஹீரோயின். தற்போது என் குடும்பத்தாருடன் அமைதியாய் வேலை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறேன். எனக்கு மாப்பிள்ளை பார்த்துப் பார்த்து பெற்றோர் மனவேதனை அடைந்து கொண்டு வருகின்றனர். நானும் எத்தனையோ முறை எனக்கு திருமணமே வேண்டாமென்று சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இத்தனைக்கும் நான் நடித்தது கொஞ்சமான படங்கள் தான். ஒவ்வொரு படத்திலும் நான் பெற்ற சம்பளத்தை விட, இழந்தது கொஞ்சமல்ல. அதற்கு நான் மட்டுமே காரணமாய் இருக்கிறேனே ஒழிய வேறு எவரையும் குறை சொல்ல முடியாது. ஆணாதிக்க உலகில் பெண்கள் என்றும் அடிமைப்பட்டுத்தான் கிடக்க வேண்டும். ஒவ்வொரு படத்தின் ஹீரோவிடம் சில நாட்கள், இயக்குனர்களுடன் சில நாட்கள் என்று என் நாட்கள் கழிந்தன அதன் பின் விளைவுகள் பற்றித் தெரியாமலே. தான் பெற்ற இன்பம் பிறரும் பெற வேண்டுமென்ற ஆசை இருப்பவர்கள் சினிமாக்காரர்கள். இப்படியே ஒவ்வொரு நடிகனின் நண்பர்களிடமும் சில நாட்கள், சில படங்கள், சில பல லட்சங்கள் என்று நாட்கள் சென்று கொண்டே இருந்தன. இத்தனைக்கும் ஒரு நடிகன் என்னைத் திருமணம் செய்து கொள்ள உறுதி அளித்து “காதல்” என்ற பெயரில் மாயவலை விரித்து, அவ்வப்போது கிடைத்து வந்த பட வாய்ப்புகளையும் கெடுத்தான். அவனின் எதிரி நடிகன் என் மீது கண் வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சினிமாக்காதலன், அவனுக்கு என்னைக் கிடைக்க விடாமல் செய்த தந்திரம் தான் “காதல்” என்று அவன் வாயாலே சொல்லக் கேட்டேன். அதன் பின் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். காதல் என்ற பெயராலே என் வாழ்க்கையின் பிரதிபலிப்பாய் கிடைத்து வந்த பொருளைக்கூட தடுத்து விட்டான். அவன் இப்போது பெரிய நடிகன், கோடிகளில் சம்பளம் வாங்குகின்றான்.

இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், சினிமாவில் பிழைக்க வரும் பெண்களை “ருசித்துக்” கொண்டிருக்கிறான்.  நடிகன் என்று மட்டுமல்ல இயக்குனர்கள் என்ற நச்சுக்கிருமிகள் இருக்கின்றார்களே, அவர்கள் செய்யும் செயல்தான் கொடுமையிலும் கொடுமை. நீங்கள் அது பற்றி பல பதிவுகளை எழுதி இருக்கின்றீர்கள். அதற்கும் மேல் அவர்களால் ஒன்றும் செய்து விட முடியாது. முடிந்தவரைக்கும் பெண்களின் இளமையின் அனுபவிப்பார்கள். அதன்பிறகு அவர்களின் நண்பர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். எல்லாம் முடிந்த பிறகு தெருவோரம் கிடக்கும் காய்ந்து போன மனிதனின் கழிவு போலக் கிடப்போம். சினிமாவில் பெண்களின் சதையைத் தின்கின்றார்கள். காசு இருப்போர் காசைக் கொட்டி தின்கின்றார்கள். காசில்லாத ரசிகர்கள் கண்களாலே தின்கின்றார்கள்.

இன்றைக்கு என்னிடம் கொடுக்க ஒன்றுமில்லை. எதுவுமே இல்லை. எதைக் கொடுப்பது? யாருக்குக் கொடுப்பது? எதுவும் புரியவில்லை. கண் கெட்டுப் போய், மூளையும் சிந்திக்கவும் மறுக்கிறது. அடிக்கடி தற்கொலைக்கான எண்ணம் தலை தூக்குகின்றது. அப்படிச் செய்தால் அதையும் செய்தியாக்கி “பணம்” செய்து விடுவார்கள் பத்திரிக்கை ஜாம்பவான்கள். எனக்கு மனதில் உறைக்கும் ஒரே ஒரு வரி சொல்லுங்கள். நான் எப்படி இந்த எண்ணத்திலிருந்து வெளி வருவது ? உங்களின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

– அனு

மேற்படி கடிதம் வந்தவுடன் அவரின் ரிட்டர்ன் சம்மதத்துடன் அவரின் கடிதம் எடிட்டிங் செய்து வெளியிடப்படுகிறது.

பதில் :

இந்த உலகில் எவரும் யோக்கியமில்லை. யோக்கியமற்றவர்களால் மனதும், உடலும் பாதிக்கப்படும் போது அதன் காரணம் நீயாக இருக்க முடியாது. நேர்மையற்றவர்கள் இருக்கும் உலகிலே உன்னைப் போல மனவருத்தப்படுவோர் ஏன் சாக வேண்டும்? உலகிற்கு நல்லவன் தேவையே இல்லை. தீயவர்கள் தான் தேவை. நல்லவர்களால் நிரம்பிய உலகத்தில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்? உலகம் எப்படித்தான் இயங்க முடியும்? தீயவர்களால் தான் உலகம் இயங்கும். நீ ஒரு தவறும் செய்யவில்லை. பின் ஏன் மன சஞ்சலப்படுகின்றாய்? பிறருடன் படுப்பது தவறென்றால் ஆண், பெண் இனமே இருக்கக்கூடாது அனு. இது நாள் வரை அனுபவம் பெற்றாய் என்று வைத்துக்கொள். இனி எப்படி வாழ வேண்டுமென்று “ சாமியார்களோ, போதனையாளர்களோ” உனக்குச் சொல்ல வேண்டியதில்லை. உனக்குத் தெரியும் உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டுமென்று. அதன்படி வாழ். வாழ்த்துக்கள் ! டேக் கேர் !

– அனாதி

2 Responses to தெ டுக் ஆல் ஃப்ரம் மீ !

  1. Samareshkumar சொல்கிறார்:

    The letter and the reply resembles ‘dinamalar andhumani’ style approach!!!! Anaadhijee, are you andhumani or not.

  2. முரட்டு பக்தன் சொல்கிறார்:

    அனாதி உங்கள் பதில் ஏற்றுகொள்ளகூடியாதே. யார் நம்ம ச******யா வா? அப்போ எதிரி நடிகன்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: