சுடப்படும் மனிதப் பறவைகள்

அனாதியில் முன்பே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு அரசால் நீக்கப்பட்டு, அணு உலை செயல்படுத்தப்படும் என்று எழுதி இருந்தோம். தேடிப்பிடித்து படித்துக் கொள்ளுங்கள்.

எத்தனை போராட்டம் நடந்தாலும், எத்தனை எத்தனையோ தற்கொலைகள் நடந்தாலும், லட்சக்கணக்கில் மக்கள் இறந்தாலும் அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா? இல்லாத மக்களுக்கா அரசாங்கங்கள் இயங்குகின்றன? ஓட்டுப் போட ஏழைகளுக்கு அனுமதியில்லை என்று ஒரு சட்டம் வந்தால் தெரியும், மொத்தமாய் ஏழைகளைக் கொன்று குவித்து விடுவார்கள் அரசாங்கங்கள்.

ஓட்டுப் போடுவதற்காக ஜன நாயகம் இருக்கிறது. ஓட்டுப் போடுகின்றார்கள் என்பதற்காக ஏழைகள் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். பணத்தின் முன்னே கடவுள் கூட சல்யூட் அடிக்கும். திருப்பதிகளில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஏழைகளுக்கு இந்தியாவில் வாழ அனுமதிக்க காரணம்ஐந்தாண்டுகளுக்கு ஓட்டுப் போடுவது”. அதைத் தவிர அவர்கள் வேறு எதையும் சிந்தித்துப் பார்ப்பது தவறு என்று அவர்களுக்கு புரியவே மாட்டேன் என்கிறது. எத்தனைதான் சொன்னாலும் புரியாத மக்களுக்கு என்னதான் சொல்லிக் கொண்டிருப்பது.

தமிழகத்தின் பிற பகுதி மக்கள் மின்சார வெட்டினால் பாதிக்கப்பட்டு, கூடங்குளம் அணு உலையை இயங்க வை என்று போராட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றார்கள். இதைத்தான் அடுத்து நடக்கப் போகும் நிகழ்வாக நாங்கள் அறிந்தோம். விரைவில் அணு உலை இயங்கப்போகின்றது. எத்தனை போராட்டம் வந்தாலும் பணத்தின் முன்னே தோற்றுப் போய் விடும். பார்த்துக் கொண்டே இருங்கள். நாங்கள் சொல்வதுதான் நடக்கப்போகின்றது.

அரசியல் என்றால் என்ன என்று நினைக்கின்றீர்கள்? அரசியல் என்றால் அழிப்பது. அழித்துக் கொண்டே இருப்பது அரசியல். யாரை அழிப்பது என்கின்றீர்களா? காசுக்காக, பதவிக்காக மக்களை மட்டுமல்ல தன் மக்களையும், நண்பர்களையும் கூட அழிக்கலாம். அதுதான் அரசியல்.

தாய் நாடும், தாய் மண்ணும், பிறந்த மண்ணும் எந்த ஒரு மனிதப் பிறவிக்கும் வாழ் நாள் முழுதும் மறக்க முடியாத சுவடுகள். பெற்ற தாயை அவமதிப்பவனாக இருந்தாலும் சரி, பிறந்த மண்ணை அழிக்க நினைப்பவனாக இருந்தாலும் அவனை எதிரியாகத்தான் நினைப்பார்கள். ஆனால் கூடங்குளம் பகுதி மக்கள் தங்கள் தாய் மண்ணை இழந்து விட்டு, பிறருக்கு மின்சாரம் கொடுக்க வேண்டுமாம். எவனாவது நடு வீட்டிற்குள் அணு குண்டினை வைத்துக் கொண்டு வாழ விரும்புவானா?

கூடங்குளத்தை அழிக்க முனையும் அணு உலை மின்சாரம் தேவை என்று போராடுபவர்கள், பேசாமல் தங்கள் இல்லங்களையும், பிசினஸ்ஸுகளையும் கூடங்குளத்திற்கு மாற்றி விடலாம். முடிந்தால் தன் மனைவி மக்களோடு கூடங்குளத்தின் அணு உலை ரியாக்டருக்குள்ளே குடியே இருக்கலாம். கூடங்குளத்தினை பிறந்த மண்ணாக கொண்டவர்களுடன் அணு உலை வேண்டும் என போராடுபவர்கள் தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளலாம். மின்சாரம் தேவைப்படுபவர்கள் மின்சாரம் தயாரிக்கும் இடத்திற்குள்ளேயே சென்று குடியிருக்கலாம். அரசு அணு உலையை நடத்தியே தீரும். மக்கள் வெந்து வெதும்பி அணுக்கதிருக்குள் சுருண்டு சாக வேண்டியதுதான் விதி. லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்த டவ் கெமிக்கல் ஒலிம்பிக்கில் ஸ்பான்சர். தன்னால் கொலை செய்யப்பட்ட மக்களுக்கு காசு கொடுக்க மறுக்கும் டவ், விளையாட்டு வீரர்களுக்கு செலவு செய்கிறது.  அதை ஏற்றுக் கொள்ளும் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு.

கூடங்குளம் பகுதி மக்களுக்கு இது ஒன்றுதான் தீர்வு.

– அனாதி

One Response to சுடப்படும் மனிதப் பறவைகள்

  1. Samareshkumar சொல்கிறார்:

    Those who are favour to nuclear reactor has to be exposed with radiation. If they are volunteerly come forward to expose themselves to radiation and those exposers are 50% of tamilnadu population then the reactor can be allowed!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: