இன்பரசத்தில் முதல் இன்பம் அறிமுகம்

என்னை ப்ராடு என்று குறிப்பிட்ட பிரச்சனா என்ற வாசகருக்கு நன்றியோ நன்றி. கருணாநிதியை திட்டாதவர்கள் பாவம் செய்தவர்கள், இத்தனை பேர் திட்டி அவர் என்ன கெட்டா போய் விட்டார். பாராட்டத்தான் முடியவில்லை, திட்டவாவது செய்தால் தான் நான் மகிழ்வேன் (அவர் பெயர் எழுதினாலே இப்படியெல்லாம் வார்த்தை வருகிறது).

அதுமட்டுமல்ல நானென்ன சாரு மாதிரி விமர்சனத்தை ஏற்காமல் எதிர்த்துப் பேசுவேன் என்றா நினைக்கின்றீர்கள்? மேலும் பிறருக்கு கிடைக்கும் அங்கீகாரத்தைப் பற்றி வயிறெரிந்து பேசுவேன் என்றா நினைத்தீர்கள். நிச்சயம் இல்லவே இல்லை.

நானே ஒத்துக் கொள்ளுகிறேன், “ நானொரு அக்மார்க் நல்லவன்”. என்னைப் போல நல்லவனை இந்த உலகத்தில் நீங்கள் பார்க்கவே முடியாது. நான் நடந்து செல்லும் பாதையின் மண்ணை எடுத்து நெற்றியில் பூசினீர்கள் என்றால் பூலோக சொர்க்கமே உங்களுக்கு கிடைக்கும். அந்தளவுக்கு நான் நல்லவன் (டேய் குஞ்சு… என்னடா என்னடா இது? : மனச்சாட்சியின் குரல்) அய்யய்யோ தவறாக எழுதி விட்டேன் நல்லவன் என்றச் சொல்லை அக்மார்க் அயோக்கியன் என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சோ இனிமேல் (இது ஆகையால் என்பதைக் குறிக்கும் சோ) நீங்கள் என்னவேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள். அதனால் எனக்கொன்றும் பிரச்சினை இல்லை. மேலும் ஒன்று நீங்கள் கொடுப்பதை நான் வாங்கிக் கொள்ளவில்லை என்றால் கொடுக்க விரும்பிய பொருள் உங்களிடம் தானே இருக்கும்? ஆகவே… வேண்டாம் எனக்குள் அழுது விடுவேன் இப்படித் தொடர்ந்து எழுதினால்.

இனி இன்பரசம் பற்றிப் பார்ப்போம்.

அவன் ஒரு மாபெரும் போர் வீரன். அவன் வாளில் பட்டு உருண்டோடிய தலைகள் கோடானு கோடி. அவன் வந்தானென்றால் மன்னரும் எழுந்து நின்று தலை குனியும் அளவுக்கு வீரன். உலகையே புரட்டி வரும் காற்றுக் கூட அவன் அருகில் நெருங்கப் பயப்பட்டு அந்தப்பக்கமாய் ஓடி ஒளிந்து விடும். அப்பேர்ப்பட்ட மாவீரனுக்கு போர், சண்டைகளில் வெறுப்பு வந்து விட அவன் மனது சொர்க்கம், நரகம் என்பது பற்றி உள் விசாரணை செய்து கொண்டிருந்தது.

குதிரையின் கால் போன போக்கில் சென்று கொண்டிருந்தவன் கண்களில் ஒரு பிக்கு தென்பட்டார். ஏனோ அவரைப் பார்த்ததும் பேச வேண்டுமென தோன்றியதால் குதிரையிலிருந்து இறங்கினான்.

”சொர்க்கம், நரகம் போக வாசல் எங்கிருக்கிறது என்பது பற்றி எனக்குச் சொல்லுங்கள்?” என்றான் மாவீரன்.

“உன்னைப் பார்த்தால் வீரனாக தெரியவில்லையே, பிச்சைக்காரன் போலிருக்கிறாய்?” “ என்றார் பிக்கு.

கோபம் கொண்டவன் அவரை வெட்ட வாளை உருவ, “அட அட்டைக்கத்தியை வைத்தா என்னைக் கொல்லப்போகின்றாய்?” என்று பிக்கு நக்கல் செய்ய, கோபத்தின் உச்சிக்கே சென்றான் மாவீரன். வாளால் அவரைக் கொல்ல நெருங்கும் போது,

”இப்போது பார்த்தாயா நரகத்தின் கதவு உனக்கு திறக்கப் போவதை” என்றார் பிக்கு.

சட்டென்று உள் மனது உடைய வாளைக் கீழே போட்டான் மாவீரன். அப்போதும்  பிக்கு அவனைப் பார்த்துச் சொன்னார் “ இப்போது உனக்குச் சொர்க்கத்தின் கதவு திறக்கப்பட்டு விட்டது”.

அன்பு நண்பர்களே,இக்கதையை நீங்கள் படித்து முடித்த போது நிச்சயம் உங்களுக்குள் ஒன்று அது ஏதோ ஒன்று தோன்றியிருக்கும். அது தான் நான் தலைப்பிட்ட “இன்பரசம்”. அடுத்த அடுத்த இன்ப ரசங்கள் நம் தளத்தில் பெருக வேண்டும் என ஆவல்.

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

குஞ்சாமணி

3 Responses to இன்பரசத்தில் முதல் இன்பம் அறிமுகம்

 1. prthaban சொல்கிறார்:

  small feedback:
  site needs to be updated regularly and also should have relevant info.. if you track your updates you can not justify what you want to tell us!!! (regular visitors)

  i can see always you are telling that ” soon we will write about it”!!?? but never saw your continuity..

  Please keep it up your good work…

  Thanks!

  • அனாதி சொல்கிறார்:

   ப்ரதாபன், அனைவரும் வேறு வேறு வேலைகளில் இருப்பதால் இவ்வாறு நடந்து விடுகிறது. எழுத நினைக்கிறோம், ஆனால் நேரம் கிடைப்பதில்லை. அதற்குள் வேறு புதிய விஷயங்கள் வந்து விடுவதால், பழையன மறந்து போய் விடுகிறது. என்ன இனிமேல் தொடர் என்று எழுதாமல் விட்டு விட்டால் போகிறது. தொடர் என்று போட்டால் தானே பிரச்சினை. இனி மேல் நண்பர்களிடன் தொடர் என்று எதையும் எழுதாதீர்கள். படிப்பவர்களுக்கு சிரமமாய் இருக்கிறது என்கிறார்கள் என்றுச் சொல்லி விடுகிறோம். இப்போது பிரச்சினை சால்வ்ட் ஓகே… !

 2. arun சொல்கிறார்:

  very nicely said…. 🙂 keep writing Mr. Kunju……… more fans are here for u… cheers to u and ur team…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: