naked lies (6) – கற்பு – பணம் – குடும்பம்

அவர் ஒரு பிரபல நடிகை. ஆரம்பகால படங்கள் எதுவும் அவருக்கு பெரிய வெற்றியைத் தரவில்லை. சோர்வுற்ற அவரின் எண்ணங்கள் காசை நோக்கித் திரும்பியது. டிவியிலோ அல்லது பேப்பரிலோ ஒரே ஒரு படம் வந்தால் கூட போதும், அதை வைத்து பிரபல்யம் என்றுச் சொல்லி காசு செய்யும் கூட்டத்தினரைச் சேர்ந்த ஒருவருடன் நெருக்கம் ஏற்பட, காசுக்கான ஆற்றுப் பாதை அவரின் வீட்டினை நோக்கி திருப்பி விடப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மையான பணக்காரர்களின் பார்வையில் பதிந்த அந்த நடிகையை அப்ரோச் செய்ய அனைவரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அந்த ஒருவன் தான் தான் அவருக்கு எல்லாம் என்று தினசரி ஒன்றில் செய்தி வரும்படிச் செய்தான். தினமும் அழைப்புகள் என்று நடிகை பிசியாக மாற ஆரம்பித்தார்.

நடிகையிடம் ஒரு விஷேசம் என்னவென்றால், அதை நடிகையிடம் நட்பு கொண்டவர் சொல்வதையே இங்குச் சொல்கிறேன்.

”அவர் என்ன செய்யச் சொன்னாலும் தயங்காமல் செய்து, வாடிக்கையாளரை திருப்திப் படுத்தும் கலையைக் கற்று வைத்திருக்கிறார். மனைவியிடம் கூட கேட்கத் தயங்கும் சிலவற்றை அவரிடம் கேட்டால் உடனே செய்வார். அதன் காரணமாய் அவருடன் நெருங்கிய நட்புக் கொண்டவர்கள் ‘காசால் அவரைக் குளிப்பாட்டினார்கள்’. சிலர் ஒரு படி மேலே சென்று பங்களாக்கள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் என்று வாங்கிக் கொடுத்தார்கள். ஏதோ ஒன்றினை வாங்க வேண்டுமெனில் போன் செய்தால் போதும், மறு நிமிடம் அந்த விஷயம் வீட்டு வாசலில் வந்து நிற்கும் அளவிற்கு அவரின் நண்பர்களுக்கு படுக்கையில் சேவகம் செய்வார்”. அவர் மனைவியை விட ஒரு படி மேலானவர்” என்றார் எனது நண்பர்.

கேட்ட எனக்கே அவருடன் ஒரு நாளைச் செலவழிக்கலாமா என்று தோன்றியது. நண்பர் அவருக்கு காரொன்றினைப் பரிசாக வழங்கி இருக்கிறார். இத்தனைக்கும் அவர் சமூகத்தில் ஆன்மீக சிம்பலாக காட்டப்படுபவர்.

அவரிடமிருந்து நடிகையின் தனி போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டேன். நண்பர் நான் அவரின் நம்பரை வாங்கியதை நடிகையிடம் போட்டுக் கொடுத்து விட்டார் போல.

ஓய்வான ஒரு நேரத்தில் அவரை அழைத்தேன். “அனாதி, நீங்களா? “ என்று கத்திய கத்து என் காதின் செவிப்பறையைக் கிழித்தது.

”நேரில் வருகின்றீர்களா?” என்றழைத்தார். அதன்படி சந்தித்தேன்.

கற்பு பற்றி அவர் ஒரு வித்தியாசமான விளக்கம் சொன்னார். கற்பு வாழ்க்கை என்பதெல்லாம் காசைப் பற்றி ஆசைப்படாத கணவனுக்கும், சுற்றதாருக்கும் ப்ரியமாய் இருக்கும் பெண்ணுக்கு வேண்டுமானால் ஒத்து வரும். வாழ்க்கையின் அத்தனை இன்பங்களையும் அனுபவிக்கத் துடிக்கும் என்னைப் போன்ற பெண்களுக்கு கற்பு என்பது காசு சம்பாதிக்கும் பொருள் என்றார்.

”இந்த வாழ்க்கையின் முடிவுதான் என்ன ?” என்றேன்.

காசுக்கு மட்டுமே ஆசைப்படும் ஆண்களில் எவராவது ஒருவன் எனக்கு தன் இயலாமையை வெளிப்படுத்த முடியாமல் “காதலிக்கிறேன்” என்றுச் சொல்லி என்னிடம் நிச்சயம் வருவான். அவனிடம் நான் தாலி கட்டிக் கொண்டு பிள்ளை பெற்றுக் கொண்டு சந்தோஷமாய் வாழ்வேன் என்றார் நடிகை.

உலகத்தில் இப்படியும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. எத்தனையோ விளங்கிக் கொள்ள முடியவே முடியாத மனித மனங்களின் ரகசியத்தில் இதுவும் ஒரு வகையான வாழ்க்கை போலும் என்று நினைத்துக் கொண்டு அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டேன்.

– அனாதி.

6 Responses to naked lies (6) – கற்பு – பணம் – குடும்பம்

  1. aravindh சொல்கிறார்:

    who is that actress..phone no.pls..

  2. aravindh சொல்கிறார்:

    who is that actress…tell me…pls..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: