காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

64 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து காங்கிரஸ் செய்த சாதனைகள் பட்டியல்போட ஆரம்பித்தால் தலை கிறுகிறுத்துப் போய் விடும்.  விவசாயிகள் தற்கொலை, உலகம் அதிரும் ஊழல், அமைச்சர்கள் எல்லோரும் ஊழல்வாதிகள், கண்டுகொள்ளாத பிரைம் மினிஸ்டர், போதாதற்கு என்று தண்ணீர் பிரச்சினை, சாதாரண வெளி நாட்டுக் கம்பெனியிடம் தோற்றுப் போன சட்டங்கள் என்று அனைத்து விஷயங்களிலும் தோல்வி கண்ட காங்கிரஸ் கட்சி இனி இந்தியாவை ஆள்வதற்கு தகுதி அற்றுப் போய் விட்டது. ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் இத்தனை ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் சாதனையாக கருத முடியும். அது ரைட் டு இன்ஃபர்மேஷன் ஆக்ட்.

உங்களுக்குத் தெரியுமா? சேர் மார்க்கெட் இருக்கிறதே ஷேர் மார்க்கெட், முக்கியமான மூவரின் கட்டுப்பாட்டில் தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இருக்கிறது என்கிறார்கள் மிக முக்கியமான பத்திரிக்கையாளர்கள். இவர்கள் மூவருக்காகத்தான் இந்தியாவின் ஷேர் மார்க்கெட்டே இயங்குகிறது என்கின்றார்கள். இந்தியாவின் பெரும்பான்மையான சொத்துக்கள் இவர்களின் பினாமி வசம் இருக்கிறதாம். மும்மையின் பெரும்பான்மையான முக்கிய விலை உயர்ந்த சொத்துக்களை இந்த மூவர் கூட்டணி கபளீகரம் செய்து விட்டதாம்.

வெளி நாட்டில் இருக்கும் இரு கம்பெனிகள் இணைகின்றன. இந்தியாவிலும் இணைந்தன. ஆனால் அதற்கான பரிவர்த்தனைக்கு வரி கட்ட வேண்டியதில்லையாம். எப்படி இருக்கிறது பாருங்கள் வெளி நாட்டு மூலதனம் பற்றிய சட்டங்கள். இந்த ஓட்டையைச் சரியாகக் கண்டு பிடித்து இந்திய மக்களுக்குச் சேர வேண்டிய பணத்தை தனியார் கம்பெனியார்கள் கொள்ளை அடித்து விட்டார்கள்.

இதுவரையிலும் அதிகார துஷ்பிரயோகம் செய்து டிவியை வளர்த்த இருவரை ஒன்றும் செய்யாத சிபிஐ பற்றியும், அதை தன்னிடம் வைத்திருக்கும் பிரதமர் பற்றியும் தொடர்ந்து எழுத என்ன இருக்கிறது? இப்படி ஒரு சட்டத்தின் ஆட்சி இந்தியாவில் நடக்கிறது.

ஒரு வழக்கு கோர்ட்டில் இருக்கும் போது, அதைப் பற்றி கேரள மினிஸ்டர் ஒருவர் தீர்ப்பு கேரளாவிற்கு பாதகமாய் இருந்தால் ஏற்க மாட்டோம் என்கிறார். அவர் இந்தியாவில் தான் இருக்கின்றாரா? அவர் மினிஸ்டர் தானா? கேரளா தனி நாடா என்றெல்லாம் கேள்வி கேட்டால் பதில் சொல்வார் யாரோ? சுப்ரீம் கோர்ட் இவரின் மீது என்ன வித நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப் போகின்றது ?

இந்த கேரள மினிஸ்டர், மினிஸ்டராக இருக்கவே தகுதியற்றவர் அல்லவா? இவர் மீது தமிழக அரசு ஏன் வழக்கு தொடருமா? இல்லை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்குமா? இவர் என்ன டெக்னாலஜியை வைத்து இப்படிச் சொல்கின்றார்? இதைப் பற்றி ஏதாவது தெரியுமா?

கூடங்குளம் அணு உலை பற்றியச் செய்திக்கு தினமலர் போராட்டக்காரர்களைப் பற்றிய தனிப்பட்ட செய்திகளை பெரிது படுத்தி, போராட்ட்டத்தை நீர்க்கச் செய்யும் அக்கிரமமான வேலையைச் செய்து வருகிறது.  முன்பே அனாதியில் அணு உலையை இயக்கச் செய்வார்கள் என்று எழுதி இருந்ததை நண்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அதிகாரமும், அயோக்கியத்தனமும், சுய நலமும் பொருந்திய ஆட்சியாளர்களிடம் எடுபடாது. போராட்ட மக்களை அழித்து விடுவார்கள் என்பதற்கு அணு உலை உதாரணம். மீடியா மாஃபியாக்களினால் ஜன நாயகத்தின் வேர்கள் தீக்கிறையாக்கப்பட்டு விட்டன. இத்தனை ஆண்டுகால ஜன நாயக ஆட்சியை காங்கிரஸ் கட்சி பெரும் கம்பெனிக்காரர்களின் ஆட்சியாய் மாற்றியதைத் தவிர இந்திய மக்களுக்கு தீங்கினையே செய்து வந்துள்ளது என்பது உண்மை.

சுய நலமற்ற தலைமையும், இந்தியாவின் மீது பற்றுமுள்ள, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய தலைவர்கள் தான் இந்தியாவிற்குத் தேவை. ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை.

– பஞ்சு

3 Responses to காங்கிரஸ் கட்சியும் இந்தியாவின் சீரழிவும்

 1. Sameresh kumar சொல்கிறார்:

  bjp is more dangerous than congress, be careful.

 2. முரட்டு பக்தன் சொல்கிறார்:

  சூடு, சொரணை, மானம் இல்லாத காங்கிரஸ்காரனுக்கு இதெல்லாம் கேட்குமா.? அவர்கள் இந்தியாவை அந்நிய தேசத்திடம் அடகு வைக்காமல் போகமாட்டார்கள்..இஸ்ரோ மாதவன் நாயர் மேலேயும் இன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அப்துல் கலாமும் இதில் மாட்டியிருப்பாரோ? .. காங்கிரசுக்கு பெரிய செம்பு தூக்குகிராரே? அவரை பற்றி ஒரு பதிவு போடவும்.

 3. thiru சொல்கிறார்:

  “சுய நலமற்ற தலைமையும், இந்தியாவின் மீது பற்றுமுள்ள, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய தலைவர்கள் தான் இந்தியாவிற்குத் தேவை. ஒருவர் கூட காங்கிரஸ் கட்சியில் இல்லை.”

  அப்பாடா “காங்கிரஸ் கட்சியில் இல்லை” என்று மட்டும் கூறினீர்கள்.
  எங்கே இந்தியாவிலேயே இல்லை என்று எழுதி விடுவீர்களோ என பயந்தேன்.
  அப்படிப்பட்ட நல்ல தலைவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டும் ஒரு கட்டுரையை சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: