விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

மிஸ்டர் அனாதி,

உங்களின் “சான்ஸ் பிடிப்பது எப்படி?” என்ற பதிவை எனது தோழி இமெயில் செய்திருந்தாள். காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்களின் செய்தி,  முற்றிலும் தவறானது. நாங்கள் நடிக்கத்தான் வருகின்றோமே ஒழிய, படுக்க அல்ல என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  எங்களை அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளுவது ஆண்களாகிய நீங்கள். உங்களின் வக்கிர எண்ணம். நானொரு நடிகை, என்னை தொடர்பு கொண்ட ஒருவர், அவர் தலைவரிடம் படுக்க வரவில்லை என்றால் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும், வீட்டினை நெருப்பு வைத்துக் கொளுத்தி விடுவேன் என்று மிரட்டினார். போடா பு… என்றுச் சொன்னேன், மறு நாள் எனது கார், எரிக்கப்பட்டது. காரின் விலை 16 லட்சம். என்னால் என்ன செய்ய முடியும் ? யாரிடம் சென்று முறையிடுவது? வேறு வழி இல்லாமல் கிழட்டுக் கபோதியிடம் போக வேண்டியதாகப் போயிற்று. மக்களாகிய நீங்கள் இது போன்ற கழிசடைகளைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கின்றீர்கள்.  நாங்களும் இந்த பன்றிகளிடம் படாது பாடு படுகிறோம்.

இயக்குனரிடமோ, ஹீரோவிடமோ, தயாரிப்பாளரிடமோ அட்ஜஸ்ட் செய்யவில்லை என்றால் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் தெரியுமா? ஒரு நாள் முழுவதும் கொடுமையான மேக்கப் போட்டு ஷாட் எடுக்காமல் உட்கார வைத்து விடுவான் பரதேசி இயக்குனர். அதை நக்கலாய் பார்த்துச் சிரிப்பான் ஹீரோ. டார்ச்சர்களில் இது போல இன்னும் பல விதம் இருக்கிறது மிஸ்டர் அனாதி.

உங்கள் பிளாக்கைப் படித்த போது, முன்னணி பதிவாய் “பால் கொடுக்கும் சதா” என்ற தலைப்பு இருக்கிறது. இணைய தளத்தில் படிக்கும் வாசகர்களின் லட்சணம் என்ன என்பது பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். நாங்கள் விபச்சாரம் செய்வதில்லை. மக்களாகிய நீங்கள் விபச்சாரம் செய்கின்றீர்கள்?

அவன் பொண்டாட்டியை இவன் வைத்துக் கொள்வதும், முத்தமிடுவதும், கண்ட கண்ட இடங்களில் கூட்டாக செக்ஸ் வைத்துக் கொள்ளும் சினிமாக்காரர்களை நீங்கள் செலிபிரட்டி என்கின்றீர்கள். இவர்களை நடு ரோட்டில் வைத்துச் செருப்பால் அடித்தால் அல்லவா விபச்சாரம் தவறு என்கிற வாதம் எடுபடும்.  சினிமாவில் செக்ஸ் உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றார்கள். அதை அனுமதிக்கிறது சென்ஸார் போர்டு. செக்ஸ் உணர்ச்சி ஏற்படும் ஒருவன் சுவற்றிலா தேய்த்துக் கொள்வான். காசு கொடுத்து, எங்களை மாதிரி நடிகையிடம் தான் வருவான். நாங்கள் வரவில்லை என்றால் கூட விடமாட்டான்கள்.

குத்துப்பாட்டு போட்டால் குதித்து ரசிக்கும் மக்களாகிய நீங்களே எல்லாவற்றிற்கும் காரணம். நாங்கள் படுத்துச் சான்ஸ் பிடிக்க காரணமே நீங்கள் தான். நாங்கள் அல்ல. இது போன்று எழுதுவதை முதலில் நிறுத்துங்கள். ஏற்கனவே நொந்து நூடுல்ஸாகியிருக்கும் எங்களை மேலும் மேலும் துன்புறுத்தாதீர்கள். ப்ளீஸ்.

குறிப்பு : உங்களின் ஹோட்டலுக்கு உங்களைச் சந்திக்க விரும்பி வந்த போது, பார்க்க முடியவில்லை. பொங்கலும், சாம்பாரும் சூப்பராக இருந்தது. அடிக்கடி அங்கு வருவேன். என் போட்டோவை  அனுப்பி இருக்கிறேன். உங்களுக்கு விருப்பமிருந்தால் என்னைச் சந்திக்கலாம்.

– இந்திரா, சென்னை

அன்புத்தோழிக்கு,

உங்களை எனக்கு நன்கு தெரியும். நீங்கள் வரும் போது நான் அவசர வேலையாக வெளியூர் சென்றிருந்தேன். இன்று நீங்கள் வந்தால் அவசியம் சந்திப்பேன். எனது அப்பதிவு உங்களை மன வருத்தம் ஏற்படச் செய்திருந்தால், வருந்துகிறேன்.

– அனாதி.

2 Responses to விபச்சாரத்தை வளர்ப்பது மக்கள்

  1. anadhi rasigan சொல்கிறார்:

    katchi thalaivargalil “kizhatu kabothi” endru indha sagothari kuripiduvathai paarthal, rendu allathu muunu peru thaan gnabagam varukirathu… oru penn maanila mudhalvara irukum ikk kaala katathil, een endha sagothari, idhai patri oru complaint kuduka koodathu…. eppadi adhangi povaathal thaan arasiyal vathigal thimir adhiga maagirathu….. nila abagaripu vazhaku maathiri, penngal van kodumai sattam ullathe…anadhi advise panna koodatha?

    anadhi blog padkika dhil venum, padichutu pathil vera ezhudhiriruku, complaint kuduka dhil illaya?

  2. manasaatchi சொல்கிறார்:

    வெளிச்சத்திற்கு கொண்டு வராத எந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு இல்லைன்னு சொல்றது பச்சை அயோக்கியத்தனம் ……பணம் ….புகழ் …..போன்ற விஷயங்களுக்காக வரும் இது போன்ற தோழிகள் எல்லா தொழில்களிலும் இதே விதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள் ……ஆனால் அவர்கள் அதை தொடர்வதில்லை ……இதை தவிர்த்து பண்போடு வாழ்ந்து வரும் கோடான கோடி சகோதரிகள் இருக்கதானே செய்கிறார்கள்…..ஆகவே இந்த தோழியின் வாதத்தை நான் ஏற்று கொள்ள வில்லை அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: