naked lies (4) – குண்டியாட்டிகள்

 

சினிமாவின் வெற்றிக்குப் பெரும் பங்கு வகிப்பது பாடல்கள். அதுமட்டுமல்லாமல் ஹீரோயினுக்கு வேலை இருப்பதே பாடல்களில் தான். கிராமப்புறங்களில் மாவு அரைக்கும் போது, நாற்று நடும் போது, குழந்தையைத் தாலாட்டும் போது, உறவினர்கள் இறந்த போது, கோவில் திருவிழாவின் போது, கடவுள்களின் முன்னால் இப்படி பல சூழ் நிலைகளில் பாடல்கள் பாடப்பெறும். அப்பாடல்களில் தொனிக்கும் அர்த்தமும், இசையும் கேட்பவர் மனதைக்கொள்ளை கொள்ளும்.

இப்படியான பாடல்கள் சினிமாவில் ஹீரோயின் குண்டியை ஆட்டுவதற்கும்,இடுப்பை வெட்டி வெட்டி இழுப்பதற்கும், ஹீரோ தன் “அது” இருக்கும் இடத்தை வெட்டி வெட்டி முன்னாலும் பின்னாலும் ஆட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஹீரோயின் கழுத்தில் முகம் புதைக்கவும், அவ்வாறு ஹீரோ முகம் புதைக்க, ஹீரோயின் காமத்தில் வானம் பார்ப்பதும் என்று சினிமாவில் செய்யும் லொள்ளுக்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.

இதற்கெல்லாம் காரணம் யாரென்று பார்த்தால் “குண்டியாட்டிகள்” என்றுச் சொல்லக்கூடிய டான்ஸ்மாஸ்டர்கள் தான். இவர்களுக்கு விருதுகள் வேறு வழங்கி எவர் நல்லா குண்டியாட்ட பயிற்சி கொடுக்கின்றார்கள் என்று ஆராய்ச்சி வேறு செய்கின்றது இந்திய அரசு. என்னே ஒரு கலைச்சேவை தெரியுமா?

எனது நண்பரின் மகள் டான்ஸ் கற்றுக் கொள்ளப் பிரபல டான்ஸ் மாஸ்டரிம் சென்றார். டான்ஸ் மாஸ்டரும் மகளுக்கு நன்றாகவே டான்ஸ் கற்றுக் கொடுத்தார். கூடவே தினம் ஒரு மணி நேரம், இரண்டு லட்சம் என்ற டேட்டிங்கையும் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, கலைச்சேவை என்கிற போர்வையில் வெளி நாடுகளில் நடக்கும் “ரெக்கார்டு டான்ஸ்” ப்ரோகிராமில் ப்ளூ சேவைக்கு என்று தனி ஸ்பெஷல் கட்டணமும் பெற்றுக் கொண்டிருக்கிறார். மகள் கையில் பணப்புழக்கம் அதிகமாக, நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. என்னிடம் சொல்லி என்ன ஏது என்று பார்த்துச் சொல் என்று கேட்டுக் கொள்ள, நான் ஹோட்டலில் வேலைப்பார்க்கும் நம்பிக்கையான ஒருவரை விட்டு ஆராயச் சொல்லி இருந்தேன். மேற்படிச் சமாச்சாரங்கள் வெளி வந்தன. இதை எப்படி நண்பரிடம் சொல்வது? தர்ம சங்கட நிலையில் இருந்த போது, ஆபத்பாந்தவனாக “குஞ்சாமணி” வந்து சேர்ந்தான்.

இந்த டான்ஸ் மாஸ்டரின் அடுத்த ஒரு மாபெரும் திருட்டு வேலை என்ன தெரியுமா? சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தருகிறேன் என்றுச் சொல்லி, பிரபல நடிகர்களுக்கு கூட்டிக் குடுப்பது. அதற்குப் பதிலாக ஒரு சீன் அல்லது இரண்டு சீன் கிடைக்குமாம். இப்படி தமிழ் சினிமா என்று மட்டுமல்ல எல்லா சினிமாக்களிலும் இந்தக் குண்டியாட்டிகளின் விபச்சார பிசினஸ் கொடிகட்டிப்பறக்கிறது. குரபுதேவா என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியும். குலா மாஸ்டர் என்ன செய்தார் என்பதை பல பத்திரிக்கைகளில் படித்தோம்.

சரி, இனி குஞ்சு எப்படி அந்த மேட்டரைச் சரி செய்தான் என்று பார்ப்போம். குஞ்சு தன் ஸ்பெஷல் அப்ரோச்சில் மாஸ்டரிடம் நெருங்கி, டேட்டிங்கிற்கு நண்பரின் மகளைப் பேசி அத்துடன் ஸ்பெஷல் விருந்துக்கு மாஸ்டரையும் அழைத்திருக்கிறான். மகாபலிபுரம் ஹெஸ்ட் ஹவுசில் இருவரும் வந்திருக்கும் போது, டான்ஸ் மாஸ்டரை தன் போலீஸ் நண்பர்கள் குழாமுடன் சேர்ந்து கொண்டு ஸ்பெஷல் விசாரணை செய்து, அதை வீடியோ எடுத்துக் கொண்டு அடித்து விரட்டி இருக்கிறான். அந்த வீடியோவை என் நண்பரின் மகளிடம் போட்டுக் காட்ட, நண்பரின் மகள் அழுது புரண்டிருக்கிறாள். டேட்டிங்கிற்கு இரண்டு லட்சம் அல்லவாம், ஐந்து லட்சமாம். அதுமட்டுமல்ல அவரிடம் டான்ஸ் கற்றுக் கொள்ள வரும் பெரும்பாலான பெண்களை செலிபிரட்டியிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறேன் பேர்வழி என்று கூட்டிக் கொடுக்கும் வேலையைத் தனி பிசினஸ்ஸாகச் செய்திருக்கிறார் அந்த மாஸ்டர். தன் மீது எவரும் கை வைத்து விடக்கூடாது என்று அவ்வப்போது ஆட்சிக்கு வரும் தலைமையிடம் நெருக்கமாய் இருப்பது போல காட்டிக் கொள்வாராம்.

நண்பரின் மகள் இப்போது டெல்லியில் சாஃப்ட்வேர் துறையில் மேலாளராக பணிபுரிகிறார். நண்பர் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். அவரிடம் இதுவரையும் எந்த ஒரு விஷயத்தையும் சொல்லவில்லை.

இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் குஞ்சுவுடன் இப்போது பலப் பல ஆட்கள் சுற்றுவதாக பஞ்சு சொல்லிக் கொண்டிருந்தான்.

டிவிக்களில் டான்ஸ் புரோகிராம் என்கிற பெயரில் அக்மார்க் பாலியல் பிசினஸ்ஸும், ஏமாற்றுதலும் நடந்து வருகின்றனவாம். சினிமா டான்ஸ் மாஸ்டர்களிடம் எக்காரணம் கொண்டும் எவருன் தன் பிள்ளைகளை டான்ஸ்  கற்றுக் கொள்ள அனுப்பி வைக்க வேண்டாம். அது ஆண் மாஸ்டராக இருந்தாலும் சரி, பெண் மாஸ்டராக இருந்தாலும் சரி.  டிவிக்களில் நடக்கும் எந்த ஒரு ஷோவிற்கு எக்காரணம் கொண்டும் கலந்து கொள்ளவே கொள்ளாதீர்கள். அது உங்கள் குடும்பத்தை சீரழித்து விடும். இப்படி சீரழிந்த ஒரு பெண்ணின் கதையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

டிவிக்களும், சினிமாக்களும் பெண்களைக் கற்பழிக்கின்றன. சமூகத்தைக் கற்பழிக்கின்றன.

– அனாதி.

3 Responses to naked lies (4) – குண்டியாட்டிகள்

 1. eleventh sense சொல்கிறார்:

  KOLAIVERI SONG HAS NOTHING IN IT………….. BUT IT HAS BEEN POPULARISED BY ALL THEESE ( AS U SAY) குண்டியாட்டிகள்.

  …………..முல்லைப்பெரியாருக்காக ஒரு துரும்பை கூட எடுக்காத, மங்காத்தா, வேலாயுதம், 7ம் அறிவை எல்லாம் தலையில வச்சி ஆட்டு ஆட்டுன்னு ஆட்டுறோம்…!!!

 2. வேல் சொல்கிறார்:

  நன்றி

 3. arun சொல்கிறார்:

  ofcourse…………..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: