டாக்டரைக் கொன்றது சரியா?

அனாதி அவர்களுக்கு,

தூத்துக்குடியில் தன் மனைவி இறந்ததற்கு கோபப்பட்டு, சிகிச்சை அளித்த டாக்டரே காரணம் என்று நினைத்து, கொலை செய்திருக்கின்றாரே ஒருவர், அது சரியா? தவறா? நீங்கள் எப்போதுமே வித்தியாசமான பார்வையில் ஒரு விஷயத்தை அணுகுவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்.

வீணா, ஃப்ரான்ஸ்

வீணா,

டாக்டர்கள் தங்களைப் பிறர் கொல்லும் படி வைக்கின்றார்கள், ஆகவே இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன என்றுத்தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தனியாக பிராக்டீஸ் செய்து கொண்டு, அரசுப் பணத்தினையும் வாங்கிக் கொண்டு தில்லாலங்கடி வேலைகளைச் செய்கின்றார்கள். தமிழகத்தில் பெரும்பாலான ஆக்சிடெண்ட் நடப்பது யாரால் என்று பார்த்தோமென்றால் அரசுப் பஸ்களால் என்று உடனடியாகச் சொல்லலாம். அரசு டிரைவர்கள் நட்ட நடு ரோட்டில் பஸ்ஸினை பார்க் செய்து விட்டு டீக்குடிக்கச் செல்வார்கள். அது போல அரசு மருத்துவர்களும் “காசு” ஒன்றே பிரதானம் என்கிற வகையில் நடந்து கொள்வது சிகிச்சைக்குச் செல்லும் மக்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றது. சாதாரண காய்ச்சலுக்கு இன்றைக்கு 500 ரூபாய் இல்லாமல் மருத்துவம் பார்க்க முடியாது. அரசு இதுபற்றி எதுவும் செய்வதில்லை. அரசு மருத்துவமனையிலோ அவலம் நடக்கின்றது. நன்றாக இருக்கும் ஒருவர் அரசு மருத்துவமனைக்குள் சென்று திரும்பினால் உடனடியாக நோயாளி ஆகி விடுவான். போலி மருந்து, போலி மருத்துவம், மக்களை ஏமாற்றிக் காசு பறிக்கும் மருத்துவமனைகள், கிட்னி திருடிய மருத்துவமனைகள், இல்லாத நோயை இருப்பதாகச் சொல்லி காசு பறிக்கும் திருட்டு மருத்துவர்கள் இருக்கும் வரையிலும், அரசு இது பற்றி கண்டு கொள்ளாத நிலையிலும் இது மாதிரியான கொலைகள் நடக்கத்தான் செய்யும். யாரும் எதுவும் செய்யமுடியாது.

தமிழகத்தில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அநீதிக்கு எதிராய் அடிபோடும் பழக்கம் உருவாகி வருகிறது. அமைச்சரையே அடிக்கின்ற போது, டாக்டரெல்லாம் பச்சா. ஊதி விடுவார்கள் ஊதி.

ஒழுங்காய், சரியாய் அரசு அலுவலர்கள் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளும் அதனதன் வேலைகளைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அதீத கோபத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் நேரிடும். ஒரு காலத்தில் ஆசிரியரைத் தெய்வமாக மதித்தார்கள். அதற்குக் காரணம் அந்த ஆசிரியர்கள். ஆனால் இன்று ஆசிரியர்களை அடிமைகள் போல மதிக்கின்றார்கள். இதற்கும் காரணம் ஆசிரியர்களே. அது போல மருத்துவர்கள் மாபெரும் திருடர்களாய் மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.

இக்கொலை நடக்க காரணம் அம்மருத்துவரே ஆகின்றார். அதற்கு தமிழக மருத்துவர்கள் செய்கிற ஸ்ட்ரைக் அப்பட்டமான திமிர்! அகங்காரம். அரசை மட்டுமல்ல மக்களையும் மிரட்டும் செயல். மக்கள் சேவையில் இருப்போர் இப்படியான ஸ்ட்ரைக்கில் கலந்து கொள்வது என்பது ஆணவமும், அகங்காரம் இருப்பதால்.

 நான் அரசுக்கட்டிலில் இருந்திருந்தால் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்ட மருத்துவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, அவர்களின் மருத்துவ லைசென்ஸை பிடுங்கி, அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்திருப்பேன். இதற்கெல்லாம் சுய நலம் அற்ற தலைமை வேண்டும். அது இந்தியாவில் கிடையவே கிடையாது.

அவரவர் கடைமைய ஒழுங்காய் செய்தால் ஏன் பிரச்சினை வரப்போகிறது. படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்பார்கள். இந்தியா மட்டுமல்ல உலகெங்கிலும் படித்தவர்களால் தான் பெரும் பெரும் பிரச்சினைகளே வருகின்றன. படிக்காதவர்களுக்குச் செல்ல வேண்டிய வசதிகளைக் கூட படித்தவர்கள் திருடிக் கொள்கின்றார்கள். வேறு வழி இன்றி கொதித்துப் போன மக்கள் அடி போட கிளம்பி விடுவார்கள். அது தப்புக்கு உரிய தண்டனை தானே ஒழிய தவறில்லை என்பேன்.

– அனாதி

 

4 Responses to டாக்டரைக் கொன்றது சரியா?

 1. Saravanakumar சொல்கிறார்:

  Dear Sir,

  Now a days, the education become very constly. You know very well that one medical sheet cost about 25 Lakhs to 100 Lakhs depending on the colleges. We can expect doctor to do free service by investing huge amont in his education. Hence first we must ensure that all the medical sheets to filled based on merit only. But it will never happen in India. Because all the political party will get some seat from all the colleges which they will sell for their revenue. We can not do anything now.

 2. வேல் சொல்கிறார்:

  ஆம், இது அடிப்படை தவறு. நம் சமுகம் தவறான வழீயில் விரைவாக செல்கிறது.இங்கு சமூகநலன் சார்ந்த சிந்தனை இல்லை(அ)மிககுறைவு.

 3. D. Samaresh சொல்கிறார்:

  There are some ‘medical cases’ can not be cured after putting our whole efforts. Before giving the verdict it has to be better go through the professional history of that doctor. How many cased he/she attended in the past and how many goes out of control (failure). Now-a-days, doctors are not dedicated themselves to the society but the ‘greedy’ society creates them.

 4. eleventh sense சொல்கிறார்:

  All Doctors nowadays are greedy…………….. to the extent that they source out huge money, for the education of their loafing children. I know a doctor, who spent 60 lakhs for a medical seat for his son, with very low marks. they care the least about the lives of common man. Nayagan, and all similar cinemas show docs as they are naturally. Docs on strike shd know their responsibilities also. ithu arambam thaan………

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: