வெள்ளரி, கேரட் – வாசகியின் கடிதம் (18+)

சார், நான் உங்களின் பிளாக்கின் நீண்ட நாள் வாசகி. டெக்ஸ்ஸாலில் வசிக்கிறேன். ஒரு மாலைப்பொழுதில் உங்களின் பிளாக்கினைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அன்றிலிருந்து விடாமல் படிக்கிறேன்.

சமீபத்தில் கேரட், வெள்ளரி போன்றவற்றைப் பெண்கள் கையில் கொடுக்காமல் , அதை நறுக்கித் தான் கொடுக்க வேண்டுமென்றும், அது ஆண் குறி போல இருக்கிறது என்றும் ஒருவர் சொன்னதாக செய்தியில் படித்தேன்.

பெண்களை அடிமை என்று தானே நினைத்து, அவர் அவ்வாறு சொல்லி இருக்கிறார். இன்னும் எத்தனை ஆண்டுகாலம் தான் பெண்களை வெறும் போகப் பொருளாகவே இந்தச் சமூகம் பயன்படுத்தப் போகிறது?

மயக்கம் என்ன திரைப்படத்தில் ஒரு காட்சியைக் கண்டேன். அதில் தனுஷ் தன் நண்பனிடம் சொல்வான் (இவனுக்கெல்லாம் ர் கேடா?). கேவலம் ஒரு பெண்ணுக்காகவா நான் இப்படி நடந்து கொண்டேன் என்பான். அண்ணனும், தம்பியும் பெண்களே இல்லாமல் படம் எடுக்க வேண்டியதுதானே? இவர்களைப் போன்றவர்களையாவது மன்னித்து விடலாம். வெளிச்சத்தில் என்ற பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் போட்டு வரும் படங்களை பார்க்கச் சகிக்கவில்லை. நீங்களுமா இப்படி என்பதால் இக்கடிதம் எழுதுகிறேன்.

– உமா , டெக்ஸாஸ்

உமா, இதென்ன பயங்கரமான வேர்ட் ஃபயரா இருக்கிறதே உங்கள் கடிதம். அவுத்துப் போட்டா அவளை செலிபிரட்டி என்கிறது நாம் வாழும் சமூகம். ஸ்ப்ரிட்னி பேண்டை அவிழ்த்தால் அகில உலகப் பிரபலம் ஆகின்றாள். நீச்சலுடை போட்டு ஒய்யார நடை நடந்தால் அவள் உலக அழகி ஆகின்றாள். கண்டவர்களிடம் படுத்து பிள்ளை பெற்றுக் கொண்டு, அரசியலில் சேர்ந்தால் அவள் தலைவி ஆகின்றாள். ஒழுக்கம் இன்றி கிடப்பதை இச்சமூகம் விரும்புகின்ற போது, வெள்ளரிக்காயை ஆண்குறி என்றுதான் சொல்வார்கள். குடி என்கிற கேட்டினை இன்று சமூகத்தின் வழக்கமாய் மாற்றிய சினிமாவையும், அரசியல்வாதிகளையும் நீங்கள் உயர்ந்தவர்கள் என்கின்ற போது, இதையும் நீங்கள் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும். உலகின் மதங்கள் அனைத்தும் “அன்பே கடவுள்” என்கின்றன. அன்பைப் போதித்த புத்தர் மதத்தை தழுவும் இலங்கையும், சீனாவும் மனிதர்கள் கேவலம் மிருகங்களை விட கேவலமாய் நடத்துகின்றன. இதையெல்லாம் ஒத்துக் கொண்டால் அவர் சொன்னதும் சரிதான்.

நாங்கள் படம் போடுவது ரசிக்க அல்ல, வெறுப்பை உருவாக்குவதற்கு. இது ஒரு உளவியல் பிரச்சினை. இன்று உலக மக்களின் பெரும்பான்மையோர் “அரசியல்வாதிகளை” வெறுக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதே போல நாளடைவில் “சினிமாவும்” வெறுக்கத்தக்கதாய் அல்லது மாற்றப்பட்ட ரசனை உடையதாய் மாற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்.

உமா, உங்களுக்குத்தெரியுமா? சினிமாவில் தான் பெண்கள் அடிமைகளை விட கேவலமாய் சீரழிக்கப்படுகின்றார்கள். சிதைக்கப்படுகின்றார்கள். பலராலும் அனுபவிக்கப்படுகின்றார்கள். சினிமா பெண்களை மேட்டுக்குடி விபச்சாரத்தில் தள்ளுகின்றது. பெண்கள் அழியக் காரணமாய் இருக்கிறது சினிமா. ஆனால் நீங்கள் சினிமாவை விரும்புவதை விடுவதில்லை. ஆகவே திருந்த வேண்டியது நீங்கள், நாங்கள் அல்ல.

யாருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று நீங்கள் முடிவு கட்டிக் கொள்ள வேண்டும். அமெரிக்க அதிபர் வந்தால் அவரைக் காண க்யூவில் நிற்கும் மனிதர்கள் மாற வேண்டும். அவர் ஒன்றும் சாதாரண தலைவர் அல்ல. போர் என்ற பெயரால் உலகில் அதிக மக்களை கொன்றொழித்த மகா பாதகன் அவர்.  ஆனால் அவரைத்தான் உலகம் பெரும் தலைவர் என்று கொண்டாடுகின்றது. கேவலமாய் இல்லை?????

இதை நீங்கள் மாற்றப் போராட வேண்டும். உங்கள் பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுங்கள். தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டுமென்பதை? யார் உயர்ந்தவர் என்பதை? அதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை? அனாதி அதைத்தான் செய்து வருகின்றது. நீங்களும் உங்கள் குடும்பத்தில் அதைச் செய்ய முயலுங்கள். வாழ்த்துக்கள்.

– குஞ்சாமணி குலசேகர பாண்டியன்

2 Responses to வெள்ளரி, கேரட் – வாசகியின் கடிதம் (18+)

  1. muneefmufee சொல்கிறார்:

    Well said

  2. Srikanth சொல்கிறார்:

    நெத்தியடி குஞ்சாமணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: