சாருவைப் பின்னிய கிருதயா – நேர்படபேசு

புதிய தலைமுறையில் நேர்பட பேசு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இசை விமர்சகர் ஜாஷி, கவிஞர் கிருதயா, சாரு மற்றும் தியோடர் பாஸ்கர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

எதைப் பற்றித் தெரியுமா? புனிதங்களை, கலாச்சாரங்களை, விழுமியங்களை, மனச்சாட்சியை, நிதர்சனத்தை உடைத்தெரியும் சினிமாக்காரர்களின் கொலைவெறி பாடலைப் பற்றி.

புதிய தலைமுறை டிவிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் ஏகத்துக்கும் ரகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். போகட்டும் அது அவர்கள் பாடு.

இப்பாடல் ஏன் இவ்வளவு பிரபல்யம் ஆனது என்ற கேள்விக்கு, சாருவின் பதில் “இளைய தலைமுறை புனிதங்களை உடைக்க முயல்கிறது” என்றார். அதற்கு கவிஞர் கிருதயா சொன்ன பதில் என்ன தெரியுமா?

”எட்டு வயதில் அம்மா என்றழைத்தவன் பதினாறு வயதில் அத்தை என்றா அழைப்பான்”

அம்மாவை பெண்டாள நினைப்பதுதான் பின் நவீனத்துவம், புனிதம் உடைத்தல் என்கிறாரா சாரு? கிருதயாவின் பதிலுக்கு எந்த ஒரு பதிலும் அவர் தரவில்லை. பொதுவில் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. அல்லது கருத்தைச் சரியாகச் சொல்லல் வேண்டும்.

கவிஞர் கிருதயா தனுஷ்ஷுக்கு சோப்பு போடுவதில் முனைவதை முன்னிறுத்தி வருகிறார். இன்னும் சொரிந்து விடுங்கள் கவிஞரே. அறச்சீற்றம் இல்லாத நீங்கள் காணாமலே போய் விடுவீர்கள் என்பதை மறவாதீர்கள்.

கொலைவெறிப்பாடல் பற்றிய பதிவை நீங்கள் படித்துப் பாருங்கள். ஒவ்வொரு முறையும் இணையத்தில் இணைந்தால் கிடைக்கும் அய்ப்பி அட்டரஸ் மூலம் ஹிட்ஸ்ஸை ஏகத்துக்கும் ஏற்றலாம். இது மிகச் சரியான மக்களை ஏமாற்றிய செயல். இணையதளத்தில் ஹிட்ஸ் என்பதெல்லாம் ஏமாற்று வேலை.

தட்ஸ் ஆல் டொ டெல் எபெட் திஸ் சாங்.

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: