அருண்நேரு என்ற அல்லக்கை

தினமணியில் அருண் நேரு என்பவரின் கட்டுரையை அடிக்கடி வாசிக்கும் வழக்கம் எனக்குண்டு. அவரின் சில்லறை வர்த்தகத்தில் 100% அரசியல் என்ற பத்தியைப் படித்ததும் எனக்கேற்பட்ட எண்ணம் தான் இப்பதிவு.

51க்கு பதில் 26 சதவீதம் அன்னிய முதலீட்டினை அனுமதிக்கலாம் என்றும், பிக் பஜார் போன்ற கடைகளூடே சிறிய வணிகர்களும் வியாபாரம் செய்வதால், அன்னிய முதலீட்டினை அனுமதிக்கலாம் என்றும் எழுதி இருக்கிறார். இந்த முதலீட்டுக் கொள்கைக்கு ஆதரவாய் சொல்வது “ விவசாயிகள்” பெரும் பணக்காரர்கள் ஆவார்கள் என்பதுதான். முதலீடு செய்பவன் பிச்சைக்காரனாக ஆவானா என்று எவரும் சொல்வதில்லை. பின்னே விவாசயிகளுக்குக் கொட்டிக் கொடுத்து விட்டு, முதலீட்டாளர்கள் சொரிந்து கொண்டா இருப்பார்கள். விவசாயி பணக்காரன் ஆவான் என்றால் முதலீட்டாளார்கள் என்ன ஆவார்கள் என்பது தெரிய வேண்டுமல்லவா? எவனும் சொல்லமாட்டான்.

அன்னிய முதலீடு இந்தியாவிற்குத் வரவேண்டும் என்றால், அதற்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற பட்டியலைப் பார்த்தீர்கள் என்றால் அந்த முதலீடு நிச்சயம் தேவையே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வரி விலக்கில் ஆரம்பித்து, இலவச கரண்ட் வரையும், வரி இல்லாமலே ஏற்றுமதி இறக்குமதி என்று ஏகப்பட்ட சலுகைகளைக் கொடுத்தால் தான் அன்னிய முதலீடு வரும். இதற்குப் பெயர் இந்தியாவைச் சுரண்டல் என்று பெயர். உள்ளூர்க்காரனுக்கு கிடைக்காத சலுகை, வெளி நாட்டுக்காரனுக்கு கிடைத்தால் அதன் பெயர் என்ன என்று நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள்.

விவசாயிடமிருந்து வாங்கப்படும் உருளை அன்னியர்களின் பிராண்ட் நேமில் பட்டி தொட்டி எங்கும் அதிக விலைக்கு ஒவ்வொரு பெட்டிக்கடைகளில் விற்க வைக்கப்பட்டு, உள்ளூர் உருளைச் சிப்ஸ் பாக்கெட்டினை ஒழிப்பதுதான் அன்னிய முதலீட்டுக் கொள்கை. அதுமட்டுமல்ல உள்ளூர் சிப்ஸ் பாக்கெட்டுக்கு வரி உண்டு. வெளி நாட்டுக் கம்பெனி சிப்ஸ் பாக்கெட்டுக்கு வரி இல்லை. எப்படி இருக்கிறது பாருங்கள் அன்னிய முதலீட்டுக் கொள்கை. இது ஒரு சாம்பிள். இது போல இன்னும் என்னென்னவோ சலுகைகள் இருக்கின்றன.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அன்னிய முதலீடு பெருக, காங்கிரஸ் கட்சி, அன்னிய முதலீட்டாளர்களுக்கு இந்தியப் பெண்கள் இலவசம் என்று அடுத்த சட்ட முன்வரைவினைக் கொண்டு வந்தாலும் வருவார்கள். இது நிச்சயம் நடக்கத்தான் போகிறது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்தியாவை ஆண்டு வந்தால்.இதற்கொரு உதாரணம் “தாய் லாந்து” என்பதை மறவாதீர்கள்.

அன்னிய முதலீடு பற்றி ஆதரவு தெரிவித்த அருன் நேருவிற்கு கடுமையான கண்டணத்தைப் பதிவு செய்கிறோம்.

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: