மனிதனின் அழிவிற்கு அவனே காரணம்

திசெம்பர் 31, 2011

தான் வாழ பிறரை ஏமாற்றும் பேர்வழிகள் மனிதர்களில் 100க்கு 99 பேர் இருக்கின்றார்கள். எங்கு நோக்கினும் சுய நலம். தன் சக மனிதனைக் கொன்று விட்டு, பதவி அதிகாரத்தில் இருக்கத் துடிக்கும் அழியப் போகும்  மானிடர்கள் இவ்வுலகிலே கோடானு கோடி பேர் இருக்கின்றார்கள். எத்தனை எத்தனை மதங்கள் இருக்கின்றன. இருந்தும் என்ன பயன்? கோவிலுக்கு போவோர் தான் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள். படிக்காதவனை விட படித்தவன் தான் தன் சக மனிதனை அழிக்கின்றான். சர்ச்சுக்குப் போகும் அமெரிக்கர்கள் தான் உலகின் பெரும்பான்மையான மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இயேசுபிரான் என்ன சொல்லி என்ன புண்ணியம்? கம்யூனிசம் பேசும் சீனாவில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கின்றார்கள்.  கம்யூனிச தத்துவத்தை விட மனிதன் மேலானவன் இல்லையா? தத்துவமும், கொள்கையும் மனிதனின் நல் வாழ்வுக்குதானே ஒழிய, மனிதனை அழிக்கவா இருக்கின்றன?

அன்பார்ந்த அனாதியின் வாசகர்களே, இதோ ஒரு பாடல் உங்களுக்காக. கேட்டு விட்டு மனதுக்குள் என்ன தோன்றுகிறதோ அதன்படி செய்யுங்கள்.

– பஞ்சு.


இசையமைப்பாளர்களின் அரசியல்

திசெம்பர் 31, 2011

சினிமா உலகில் நடக்கும் அயோக்கியத்தனங்களுக்கு எல்லை என்பது இல்லவே இல்லை. அதில் முதல் உதாரணம் “பிளாக் மணி”. ரஜினி காந்த் பிளாக் மணி வாங்கவே இல்லை என்று எந்த ரசிகனுக்காவது தெரியுமா? குதி குதியென்று குதிக்கின்றார்கள்.

சினிமாவில் கருப்புப் பணம் இல்லாமல் படமெடுக்க முடியுமா? இந்த விஷயம் எவருக்குத் தெரியாது? சிபிஐலிருந்து எல்லாத் துறையினருக்கும் தெரியும். ஆனால் யார் என்ன செய்தார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம் ?ரஜினி பிளாக் மணியில் தான் கல்யாண மணடபம் கட்டினார் என்கிறார் இளங்கோவன்.இல்லையென்று ரஜினியால் மறுக்க முடியவில்லையே ஏன்?ரசிகர்களை விட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்றார்.

ரஜினி ரசிகர்கள் “கருப்புப் பணத்தினை” ஆதரிக்கின்றார்களா என்றுச் சொல்ல வேண்டும். சும்மா குதிக்கக் கூடாது.

இந்தியாவின் பெரும்பகுதி கருப்புப் பணம் வைத்திருப்போர் சினிமா நடிகனும், நடிகைகளும் தான். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தது சில சினிமா நடிகர்கள் என்பதை மும்பை குண்டு வெடிப்பின் போது நாமெல்லாம் பார்த்தோம். ஏழை எளியோருக்கு கடுமையான சட்டவிதிகள், குண்டு வெடிப்பில் ஈடுபட்ட நடிகருக்கு ஜாமீன் வழங்கியது இந்திய நீதித்துறையின் கோரமுகத்தை வெளிச்சம் போடுகிறது. இன்னும் என்னென்ன அயோக்கியத்தனங்களை இந்தியா தன் மக்களுக்குச் செய்து வருகிறது தெரியுமா? அதை ஒவ்வொன்றாய் பார்ப்போம் வரும் காலங்களில்.  உண்மையைத்  தெரிந்து கொண்டீர்கள் என்றால் ஜன நாயகம் என்றால் இவ்வளவு கொடுமையா என்று நீங்கள் நிச்சயம் நினைப்பீர்கள். இதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பற்றி எழுதவே முடியாது. அப்படி ஒரு கொடுமையைச் செய்கிறது இந்தியா. இனி மேட்டருக்கு வருவோம்.

சினிமாவில் இசையமைக்கும் சில புத்திசாலி ஆட்களின் அரசியல் வேலைகளை வெளிச்சத்தில் பார்ப்போம்.

 எஃப் எம் என்று ஒன்று இருக்கிறதே அதில் சில டிஜேக்களுக்கு இந்த சினிமா இசையமைப்பாளர்கள் “காசு கொடுத்து” தன் பாடல்களை அடிக்கடி ஒளிபரப்பும் படி செய்கின்றார்கள். டிவிக்களிலும் இதே போலத்தான் நடக்கிறது. அடுத்த சினிமாவைப் பிடிக்க இவர்களே இப்படி திகிடி வேலைகளைச் செய்து,  தயாரிப்பாளர்களை ஏமாற்றுகின்றார்கள். அதுமட்டுமா கவர் வாங்கும் நிரூபர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, தன் பாடல்களைப் பற்றி அடிக்கடி செய்திகளில் வரும்படி செய்கின்றார்கள். இதுமட்டுமா, சில அடிப்பொடிகளை வைத்துக் கொண்டு அடிக்கடி போன் போடச் செய்து தான் இசையமைத்த பாடல்களைக் கேட்கச் செய்கின்றார்கள்.

ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் ஒவ்வொன்றும் திருடப்பட்ட டியூன்கள் என்று பல பதிவர்கள் எழுதி இருக்கின்றார்கள்.  இணையதள உதவியால் பல இசை வடிவங்களை கேட்கும் இந்த இசையமைப்பாளர்கள் ஏதோ ஒரு கோர்ப்பை எடுத்து சினிமா பாடலகளாய் உருவாக்குகின்றார்கள். இன்று வரும் பாடல்கள் ஒரு நிமிடம் கேட்க முடியுமா? எத்தனை பாடல்கள் வருகின்றன. எந்த பாடலாவது தொடர்ந்து கேட்க முடியும் வகையில் இருக்கின்றதா?

அடிக்கடி எஃப் எம் மற்றும் டிவிக்களில் ஒரு பாடல் ஒளிபரப்பாகின்றது என்றால் “காசு வாங்கப்பட்டிருக்கிறது” என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இப்பதிவு எழுதப்பட்டிருக்கிறது.

– பஞ்சு

 


லோக்பாலும் ஒரு செக்ஸ் கதையும்

திசெம்பர் 28, 2011

இந்தியாவின் இன்றைய ஹாட் “லோக்பால்”. இதுபற்றி உங்களுக்கு ஒரு கதையை அதுவும் செக்ஸ் கதையை எழுதித்தான் ஆக வேண்டி இருக்கிறது. ஏனென்றால் அந்தக் கதைதான் உங்களுக்கு “லோக்பால்” என்பதில் அரசியல்வாதிகளின் நிலை என்ன என்பதை தெளிவாகச் சொல்லும். நேற்று ஷஸ்வந்த் சின்கா பிரதமரை “ஊழல்வாதிகளின் பிரதமர்” என்கிறார். வாயில்லா ஜீவன்களின் உணவில் ஊழல் செய்த உலக மஹா ஊழல் மன்னன் லல்லு லோக்பால் வேண்டாமென்கிறார்.  அன்னா பார்லிமெண்டேரியன்களில் பலர் “குண்டர்கள்” என்கிறார். ஷரத்பவார் மினிஸ்டரி 1000 கோடி நஷ்டத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தி இருக்கிறது என்கிறது சிஏஜி. இந்த ஆயிரம் கோடி மட்டுமல்லாமல் 2006 – 11 ஆண்டுகளில் உணவுப்பொருட்கள் திடீர் விலையேற்றத்திற்கு இந்த மினிஸ்ட்ரியே காரணம் என்கிறது சிஏஜி. சரத்பவார் பெரிய டிரேடர்ஸ்க்க்கு உதவி செய்திருக்கிறார் என்கிறது அது.

ஊழல்வாதிகளுக்கு சாமரம் வீசிக் கொண்டிருக்கிறார் பிரதமர். 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என்று நாட்டு மக்களுக்கு தவறான தகவல் தந்த பிரதமர் உலகிலேயே நம் பிரதமர் தான். இப்போது ராஜா ஜெயிலில் கிடக்கிறார். பிரதமர் சொல்லிய ஊழலே நடக்கவில்லை என்பது என்னவாயிற்று. தன்மீதான நம்பிக்கையின்மையை பிரதமர் மீண்டும் மீண்டும் இந்திய மக்களிடம் நிரூபித்துக் கொண்டே வருகிறார்.

இனி அந்த செக்ஸ் கதைக்குச் செல்வோம்.

அது ஒரு அழகான கிராமம். கிராமத்தில் விவசாயம் தான் முக்கியத்தொழில். விளைபொருட்களை அருகில் இருக்கும் சந்தையில் விற்பனை செய்வார்கள். இக்கிராமத்தில் இரண்டு தோழியர்கள் வசிக்கின்றார்கள். இருவரும் யவன பருவத்தில், அழகே உருவான அற்புதமான் பேரழகிகள். ஒருத்தியின் பெயர் காவிரி, இன்னொருத்தியின் பெயர் முல்லை. தினம் தோறும் இருவரும் விளைபொருட்களை சந்தைக்குச் சென்று விற்று வருவர்.

இந்தக் கிராமத்தினருக்கு இருக்கும் ஒரே பிரச்சினை என்னவென்றால் சந்தைக்குச் செல்லும் வழியில் இருக்கும் “ஜன நாயக அரசியல்வாதிகள்” என்ற காடு. இக்காட்டில் பலவகையான திருடர்களும், கொலைகார மிருகங்களும் இருக்கின்றன. ஆனால் பகலில் வெகு அருமையான அழகு தவழும் காடாய் ஜன நாயக அரசியல்வாதி காடு திகழும். வேறு வழி இன்றி அந்தக் கிராமத்தார் இருட்டும் நேரத்திற்குள் அக்காட்டு வழியைப் பயன்படுத்துவதை தவிர்த்து வந்தனர்.

இப்படியான நாட்களில் ஒரு நாள் சந்தையில் இருந்து திரும்பி வரும் போது முல்லையும், காவிரியும் மசண்டை நேரத்தில் காட்டுக்குள் நுழைந்து விட்டனர். இருவருக்கும் சரியான பயம். எங்கே ஏதாவது பிரச்சினை ஆகிவிடுமோ என்று பயந்து கொண்டே நடையை எட்டிப் போட்டனர்.

இந்தக் காட்டில் இரண்டு திருடர்கள் உண்டு. இவர்கள் இருவரும் சரியான லொள்ளுத் திருடர்கள். முதலாமவன் பெயர் பிரதமன். இரண்டாவது திருடனின் பெயர் முதலமைச்சன். எவராவது சிக்குகின்றார்களா என்று பார்த்துக் கொண்டிருந்த இருவரின் கண்களில் காவிரியும் முல்லையும் தென்படுகின்றனர். காவிரி மற்றும் முல்லையின் காதுகளிலும் கழுத்திலும் தென்படும் தங்கச் செயின்களும், தோடுகளும் இரண்டு திருட்டுப் பயல்களை கவர்கின்றனது.  திடீரென்று இருவரின் எதிரில் குதித்து கத்தியைக் காட்டி எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு ஓடுங்கள் என்று மிரட்டுகின்றனர்.

காவிரிக்கும் முல்லைக்கும் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பயத்தில் அலறியபடியே “எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள், நீங்கள் கேட்டபடியே எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விடுகிறோம் “ என்றுச் சொல்லியபடியே காதில் இருந்த தோடு, கையில் போட்டிருந்த வளையல், செயின்களையும், சந்தையில் பொருள் விற்ற பணத்தினையும் கொடுத்து விட்டனர். எல்லாவற்றையும் வாங்கிக் கொண்ட இருவரின் கண்களில் காவிரி, முல்லையின் அழகு பட அவர்களை அனுபவிக்க முடிவு கட்டிக் கொண்டனர்.

திருடர்கள் இருவரையும் நெருங்க, மேட்டரை மோப்பம் பிடித்த இருவரும் இரண்டு பேரின் கால்களில் விழுந்து “அண்ணே நாங்கள் உங்க தங்கச்சி மாதிரின்னே, எங்களை ஒன்றும் செய்து விடாதீர்கள்” என்று கதறிக் கொண்டு விழுந்தனர். இரண்டு திருடர்களுக்கும் கொஞ்சம் செண்டிமெண்ட் உண்டு. அடடே என்னடா இது இவளுக இரண்டு பேரும் நம்மை அண்ணேன்னு சொல்லிட்டாங்களேன்னு நினைச்ச அடுத்த செகண்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

கண்களில் விஷமம் துள்ளியது. பிரதமன் முதலமைச்சனைப் பார்த்து ”மச்சான் நீ என் தங்கச்சியப் போடு, நான் உன் தங்கச்சியைப் போடுறேன்”னு சொல்லிக்கிட்டே பாஞ்சுட்டானுவ.

கதை முடிஞ்சிடுச்சு. பிற சமாச்சாரங்களை நீங்களே முடிவு கட்டிக் கொள்ளுங்கள். இது தான் லோக்பால் மசோதா பற்றிய பதிவு.

– பஞ்சு


சிபிஐ ஏன் லோக்பாலில் வரவில்லை?

திசெம்பர் 21, 2011

சிபிஐ – லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வர இன்றைய அரசியல்வியாதிகள் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். மக்கள் என்ன கேட்கின்றார்கள்? ஊழலை ஒழி அதற்குத் தேவை கடுமையான சட்ட விதிகள் என்பதான சட்டம். ஆனால் ஏன் காங்கிரஸ் அரசு இதற்கு இத்தனை  களேபரங்களை நடத்துகிறது?

ஊழல் என்றாலே காங்கிரஸ் என்றாகி விட்டது. ஊழலை ஒழிக்க லோக்பாலைக் கொண்டு வர விடவே மாட்டேன் என்கிறார்கள் இவர்கள். இவர்களை தலைவர்கள் என்று அழைக்கின்றார்கள். காங்கிரஸ் அமைச்சர்களில் பலர் ஊழல்வாதிகளாய் கைதாகின்ற போது, லோக்பாலைக் கொண்டு வர காங்கிரஸ் எதிர்ப்பது என்பது “காங்கிரஸ்” இந்தியாவை விட்டு விரட்டப்பட வேண்டிய கட்சி என்று நினைக்கத் தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாமல் சிபிஐ எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை தெஹல்ஹா லிஸ்ட் போட்டிருக்கிறது. கீழே படியுங்கள்.

http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne040910Coverstory.asp

சிபிஐ லோக்பால் வரம்பிற்குள் வராவிட்டால் அது லோக்பால் அல்ல ! அதன் பெயர் ஜோக் பால். காங்கிரஸ்ஸின் ஜோக்பால் அது ! மக்களை ஏமாற்றும் செயலில் காங்கிரஸ் ஈடுபட்டால், மக்கள் காங்கிரஸ்ஸை ஆட்சியில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் நிரந்தரமாக.

– பஞ்சு


அதிகாரிகளுக்கு சாதகமான சசிப் பெயர்ச்சி

திசெம்பர் 21, 2011

தமிழக அரசியல் களம் படு சூடாக இருக்கிறது. சனிப் பெயர்ச்சி என்பது சசி பெயர்ச்சியாய் மாறி நிற்கிறது. யாருக்குப் பெயர்ச்சியோ தெரியவில்லை ஆனால் அதிகாரிகளுக்கு நல்ல பெயர்ச்சி என்றே கொள்ள வேண்டும் இந்த நிகழ்வை வைத்து.

இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகாலமாய் இந்திய மக்களில் முக்கால் வாசிப் பேர் ஏழ்மையில் வாழக் காரணமே “அரசு அதிகாரிகளும், அரசுப் பணியாளர்களும்” தான் என்பேன் நான். அரசியல்வாதி தவறு செய்யப் பணித்தால் முடியாது என்று சொல்ல வராமல் அடிக்கும் கொள்ளையில் பங்கு கிடைக்குமா என்றல்லவா இவர்கள் இதுகாறும் நடந்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவர்களால் இன்று அண்ணா ஹசாரேக்கள் லோக்பால் வேண்டுமென்று உண்ணாவிரதம் இருக்க வேண்டி இருக்கிறது.

அதிகாரம் இருக்கும் இடத்தில் சில பல அதிகார மையங்களும் இருக்கும். அதில் முதலமைச்சரின் சமையல்காரனும் அடக்கம்.

முன்னாள் முதல்வரை எடுத்துக் கொண்டால், இவருக்கு இவரது குடும்பம் இல்லையென்றால் இந்த நேரம் “திமுக தொண்டர்களே” இவரைப் பரலோகம் அனுப்பி வைத்திருப்பார்கள். பணம், பதவி கிடைக்கவில்லை என்றவுடன் அடுத்த கட்சி தாவி, போட்டுக் கொடுப்போர் இரண்டு பக்கமும் இருந்து கொண்டுதானே இருக்கின்றார்கள் இதுவரையிலும்.

இன்றைய முதல்வர் அவர்களுக்கு சசி இல்லையென்றால் இந்த நேரம் என்ன ஆகி இருப்பாரோ தெரியாது. ஏனென்றால் ஏதேதோ இக்கட்டான பிரச்சினைகளில் எல்லாம் இவர்கள் தான் அவருக்குத் துணை நின்றார்கள். இன்று முதலமைச்சரைச் சுற்றி நிற்கும் எவராவது பைசா பிரயோசனம் இல்லாமல் அவருக்கு உள்ள சுத்தியுடன், உண்மை அன்புடன் தொண்டு செய்ய முனைவார்களா என்று கேட்டால், அப்படி எந்த ஒரு கேனயனும் இதுவரை பிறக்கவில்லை என்பார்கள்.

காவல்துறையினரை நம்பி ஒரு அரசியல்தலைவர் இருக்கலாமா என்றால் அதை விட நூறு விஷப் பாம்புகளுடன் குடித்தனம் நடத்துவது பெஸ்ட் என்பார்கள் விபரம் தெரிந்தவர்கள்.  இன்றைய காவல்துறையினர் நாளைய ஏவல்துறையினராய் மாறி விடுவார்கள் என்பதை இன்றைய முதலமைச்சர் நன்கு அறிவார்.

அரசியல்தலைவர்களுக்கு அவர்களைச் சுற்றிய உறவு வளையமோ அல்லது நட்பு வளையமோ மிக்க அவசியம். அப்படியான வளையம் இல்லையென்றால் எதிர்காலம் சூன்யத்தின் பிடியில் சிக்கி விடும்.

இனி தமிழக அதிகாரிகள் தங்கள் மனைவிகளுக்கு ஒட்டியாணங்களை வரிசையாய் வாங்குக் குவிப்பார்கள். காவல்துறையினர் பெரும் பேரங்களைப் பேசுவார்கள். உதாரணம் வேண்டுமென்றால் சவுக்கு இணையத்தைப் படித்துக் கொள்ளுங்கள். இனி தமிழகத்தின் பிசினஸ் செண்டர் “அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும்” தான். இதைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள். இதற்கு ஒரு பெயரும் உண்டு. அது தான் “ நேர்மையான நிர்வாகம்”. காமராஜர் காலத்தில் கூட நேர்மையான நிர்வாகத்தைக் கொடுத்து விடாத அரசு அலுவலர்கள், இந்தக் காலத்திலா கொடுத்து விடப் போகின்றார்கள்?  மக்களின் பணத்தை இனிப் பலரும் ருசிப்பார்கள். மக்கள் பட்டினியில் கிடந்து தவிப்பார்கள். தமிழகத்தின் நல்லாட்சி இன்று அரசாட்சியாய் மாறி நிற்கிறது.

இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம் “சில பல பாப்பான்கள்” என்கிறது ஒரு உளவுத்துறைக் குருவி. பாப்பான்கள் எதுவுமே தெரியாது போல காட்டிக் கொள்வதில் மன்னர்கள். அவர்களுக்குத் தேவை “காரியம்” அன்றி “வீரியம்” இல்லை. தமிழகம் பாப்பான்களின் பிடியில் என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.

– பஞ்சு


தமிழின துரோகி யார்?

திசெம்பர் 19, 2011

உலகத்தின் அத்தனை இன்பங்களும் கிடைத்தாலும் போதாது, போதாது இன்னும் எனக்கு வேண்டும் வேண்டும் என்று துரோக சிந்தையிலே நாள் பொழுதும் சிந்திக்கும் ஒருவரைப் பற்றிய தகவலைக் கீழே படியுங்கள்.

– பஞ்சு

மு.கந்தப்பன், நாமக்கல்

‘முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர்களின் செங்குருதி தெருவில் சிந்தாமல் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கருணாநிதி எச்சரிக்கை செய்துள்ளாரே?

கருணாநிதியின் எத்தனையோ எச்சரிக்கைகளைப் பார்த்ததுதானே இன்றைய மத்திய அரசு. இதுபோன்ற வெற்று எச்சரிக்கைகளை விடுத்து, உருப்படியாய் ஏதாவது செய்யலாம். மனிதச் சங்கிலி போன்றவை, ஒரு விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லி விழிப்புஉணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுபவை. மொத்த மக்களும் ஆவேசமாக குமுளியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கும்போது இவர் இன்னமும் மனிதச்சங்கிலி நடத்துகிறார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மத்திய அமைச்சரவையைத் தாங்கிப் பிடிக்கக்கூடிய கருணாநிதி, இதைவிட கூடுதலாக பல விஷயங்களைச் செய்ய வேண்டும். இந்த ஒரு நாள் பேச்சு எதற்கும் பயன்படாது!

– கழுகார் பதில்களில் – நன்றி ஜூனியர் விகடன்


ராகுல்கான் என்ற அதிபுத்திசாலி

திசெம்பர் 17, 2011

டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் திறந்ததும் ஒரு செய்தி கண்ணில் பட்டது. நாளைய பிரதமர் என்று அழைக்கப்படும் ( இது ஒரு கேடு) ராகுல் கான் (காந்தி என்ன இவர் குடும்பப் பெயரா?) அவர்களின் செய்தி ஒன்றினைப் படித்த போது, இவரெல்லாம் பிரதமரானால் இந்தியாவை இத்தாலி வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து விடுவார் என்று தோன்றியது.

ஏன் என்றுச் சொல்கிறேன் கேளுங்கள். அதுமட்டுமா இவரை ஏன் அதிபுத்திசாலி என்றழைக்கிறேன் என்றும் தெரிந்து கொள்ளலாம்.

கிலோ இரண்டு ரூபாய்க்கு உருளைக்கிழங்கு விற்கப்படுகிறதாம். ஆனால் ஒரு பாக்கெட் சிப்ஸ் பத்து ரூபாய்க்கு விற்கின்றார்களாம். அந்த சிப்ஸ் பாக்கெட்டிற்கு அரை உருளைக்கிழங்குதான் தேவைப்படுமாம். அன்னிய முதலீடு வந்தால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும் என்று திருவாய் மொழிந்திருக்கிறார். அதாவது மீண்டும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு வரும் என்கிறார் ராகுல் கான். அதாவது இந்தியாவை வால்மார்ட்டிடம் விற்கப் போகிறோம் என்கிறார் ராகுல் கான்.

இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும் உருளை, சிப்ஸ்ஸாய் பத்து ரூபாய்க்கு விற்று, லாபத்தை யார் வெளி நாட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள் என்று ராகுல் கான் விவசாயிகளிடம் சொல்லுவாரா? பத்து ரூபாய் கொடுத்து வாங்கும் மக்கள், இந்தியர்கள் இல்லை என்றுச் சொல்கின்றாரா ராகுல் கான்? அதிக விலை கொடுத்து வாங்கினால் சிப்ஸ் பாக்கெட்டை அதே பத்து ரூபாய்க்குத்தான் விற்பார்களா? கிலோ பத்து ரூபாய்க்கு உருளையை வாங்கினால், சிப்ஸ் பாக்கெட் 40 ரூபாய் ஆகுமே? இந்த 40 ரூபாய் கொடுத்து வாங்குபவர்களும் இந்தியர்கள் தானே?

அதுமட்டுமா, குளிர்பானத்தில் கோக், பெப்சி போன்ற பிராண்டுகளினால் உள்ளூர் குளிர்பானங்கள் ஒழிக்கப்பட்டனவே அதைப் பற்றி இவர் ஏன் பேசவில்லை. இன்றைக்கு உருளை என்றால் “லேய்ஸ்” என்றாகி விட்டதே. கோக், பெப்ஸி, லேய்ஸ் எல்லாம் இந்தியர்களின் கம்பெனியா?

இன்னும் சில்லறை வர்த்தகத்தில் உள்ளூர் மக்கள் சம்பாதிக்கின்றார்களே, அவர்களை கொன்று புதைக்க வேண்டுமென்பதற்காக அல்லவா மன்மோகனும், ராகுல் கானும் அன்னிய முதலீட்டை இந்தியாவிற்கு கொண்டு வர துடிக்கின்றார்கள்.

கிராமங்களில் சென்று தங்கும் ராகுல் கான், இவர்கள் எல்லாம் உயிரோடு இருந்து என்ன பிரயோசனம் என்றல்லவா, அவர்களை உயிரோடு புதைக்க முனைகிறார். விவசாயிகளுக்கு அதிக விலை கொடுத்தால், அந்தப் பொருளின் விலை உயர்ந்து அதையும் இந்திய மக்கள் தான் வாங்குவார்கள். இப்படி அதிக விலை கொடுக்கப்படும் பொருட்களின் லாபம் அனைத்தையும் வெளி நாட்டுக்காரன் அல்லவா அள்ளிச் செல்வான் என்ற சின்ன விஷயம் கூட தெரியாதவரா ராகுல் கான்? கிராமங்களில் ராகுல் கான் தங்கியதன் பின் விளைவைப் பார்த்தீர்களா?

இதைப் பற்றிய சிறிய விபரம் கூடத் தெரியாமல் நாளைய பிரதமர் என்றழைக்கப்படும் ராகுல் கான் அவர்களின் பேச்சுதான் அவரை அதிபுத்திசாலியாகக் காட்டுகிறது.

கேரள காங்கிரஸ்காரன் தமிழர்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறான். தமிழ் நாட்டின் தமிழர்கள், இந்தியாவிற்குள்ளே அகதிகளாய் நிற்கின்றார்கள். இதைப் போன்றதொரு அவல ஆட்சி நடத்தும் காங்கிரஸ் கட்சி, இந்தியாவின் அழிவு சக்தியாய் மாறி வருகிறது. மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஊழல் பணத்தில் கும்மாளமடிக்கின்றார்கள். ஹோம் மினிஸ்டர் சிதம்பரத்தின் ஊழல் சிரிப்பாய் சிரிக்கிறது. காங்கிரஸ் என்பது இந்தியாவின் அழிவுக்கு காரணமாய் இருக்கிறது என்பதை அவர்களே தங்களின் செயல்களின் மூலமாய் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.

இந்தியர்கள் இந்தியாவைக் காக்க வேண்டுமெனில் “காங்கிரஸ்” தேர்தலில் ஒழிக்கப்பட வேண்டும்.

– பஞ்சு

http://timesofindia.indiatimes.com/india/Rahul-Gandhi-comes-out-in-strong-support-of-FDI-in-retail/articleshow/11139586.cms


%d bloggers like this: