மூடப்பட்ட உண்மைகள்

அனைவரும் கீழே இருக்கும் கட்டுரையைப் படித்தே ஆக வேண்டும். வெளிச்சம் என்ற பெயர் கொண்ட அனாதியின் பிளாக்கில் சில கருப்புச் செய்திகளை வெளிச்சத்தில் கொண்டு வந்து ஆக வேண்டுமல்லவா? இக்கட்டுரையினைப் படிக்கச் செல்லுமுன், அக்கட்டுரையில் வெளியான சிறு பத்திகளைக் கீழே படிக்கவும். நமது மூளையை அரசுகள் எவ்வாறு சலவை செய்து, முட்டாளாக்கி வருகின்றன என்பதற்கு கீழே இருக்கும் பத்திகளே சாட்சி. நன்றி கீற்று மற்றும் தமிழ்குமரன் – குஞ்சாமணி ( போதுமாடா பஞ்சு ??)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17405

“மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”.

“இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நான் செயலாற்ற வேண்டுமென்றாள் அவள். முதலாவது, நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு கடன் வழங்கி அந்த பணத்தை பெரும் கட்டுமான திட்டங்கள் மூலம் மெயின் பெக்டெல் ஹாலிபர்டன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும். இரண்டாவது, கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்க்கு நான் வேலை செய்ய வேண்டும் (அதாவது மெயினுக்கும் மற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்த பிறகுதான்) அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கும். ராணுவதளங்களோ, எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ, அய்.நா. சபையில் ஒட்டுக்களோ தேவைப்படும் போது இந்த கடன் வலையில் விழுந்துவிட்ட நாடுகளால் மறுக்க முடியாது”.

“எல்லா புதிய மின் நிலையங்களும், விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும் “.

“சில நேரங்களில் ஒரு நாட்டிற்க்கு நவீன மின் உற்பத்தி கருவிகள் அமைக்க கடன் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் இந்த கடனால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்ப்படும் என்று நிருபித்து காட்டுவது என் பொறுப்பாகும். இதன் பொருள் பொருளாதார வளர்ச்சிக்காகத்தான் கடன் வழங்கப்படுகிறது என்று நம்பச்செய்வதுதான். மொத்த தேசிய உற்பத்தியில் மிக அதிக அளவு வளர்ச்சியை காட்டும் திட்டமே அங்கீகரிக்கப்படும். ஒரு வேலை ஒரே ஒரு திட்டம்தான் பரிசீலனையில் உள்ளது என்றால் அந்த திட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தி உச்சகட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று நான் நிருபித்து காட்ட வேண்டியிருக்கும். .

“இந்தத் திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு மிக அதிகம் லாபம் பெற்றுத் தரக்கூடியவை. கடன் பெறும் நாட்டிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளித் தரக்கூடியவை. அதே நேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடக்கூடியது என்ற விடயம் வெளியே சொல்லப்படுவதே இல்லை. இப்படி நாடுகள் அமெரிக்காவை அண்டியிருக்கச் செய்து அதன் மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதுதான் இத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை. எவ்வள்ளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளக்கவ்வளவு நல்லது. ஆனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்கள்தான் இக்கடன்களை கட்ட பலி கொடுக்கப்படும் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது”.

-ஜான் பெர்கின்ஸ்-ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: