டிடிஎச் சர்வீஸும் முட்டாள் மக்களும்

டைரக்டு ஹோம் என்றால் என்ன? ஒரு டிவி சானல் நேரடியாக தன் ஒளிபரப்பை வீட்டுக்கு கொடுத்தல் என்பதாகும். ஆனால் இந்தியாவில் என்ன நடக்கிறது? யாரோ ஒரு சர்வீஸ் புரவைடர் சேனல்களை ஒன்றினைத்து, அதிக  கட்டணம் வசூலித்து சானலுக்கு கொஞ்சமும், தனக்காய் கொஞ்சமும் வசூலித்துக் கொள்கின்றார்கள். இதன் வருமானம் மாதம் 400 கோடியைத் தாண்டும் என்கிறது ஒரு மீடியா குருவி. டிடிஎச் சர்வீஸ் கொடுப்பவர்கள் ஒவ்வொருவரும் சாமானியர்கள் இல்லை. இந்தியாவில் மிகப் பெரும் கார்ப்பொரேட் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் மட்டுமே இந்த சர்வீஸ் கொடுக்க முடியும்.சாமானியப்பட்டவன் எவரும் இந்தத் தொழிலில் இறங்கமுடியாது.

பெரிய பெரிய முதலைகளும், ஊழல்வாதிகளும் ஒன்றுச் சேர்ந்து இந்த ஒளிபரப்புச் சேவையை தன் கையில் வைத்துக் கொள்கிறார்கள். கலா நிதிமாறன் வெளி நாடு போன செய்தியை எத்தனை செய்தித்தாள்கள் வெளியிட்டன? எத்தனை மீடியாக்கள் வெளியிட்டன? என்று பார்த்தால், மீடியாவை தன் கையில் வைத்துக் கொண்டு எந்தச் செய்தியை வெளியிடனும், எதை வெளியிடக்கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரப் போக்கின் விளைவு என்ன ஆகும் என்பதை கடந்து போன வரலாற்றுப் பக்கங்கள் நமக்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.  இருப்பினும் பேராசையும், பொறாமையும், சூதும் நிரம்பி வழியும் “கோடீஸ்வரக் கோமான்களின்” கொட்டம் அடங்குவதுமில்லை. அந்தக் கோமான்களுக்குச் சாமரம் வீசும் “அல்லக்கை அரசியல்வியாதிகள்” பொய் அறிக்கைகளை விடுவதை நிறுத்தப் போவதுமில்லை.

டிடிஎச் சர்வீஸ் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் இடையிடையே விளம்பரங்கள் வரவே கூடாது என்கிறதாம் சட்டம். ஆனால் எந்த டிடிஎச் அப்படி இருக்கிறது? யாரேனும் பொது நலவாதிகள் இதற்கொரு பொது நல வழக்கினைப் போட்டால் தான் இவர்கள் எல்லாம் வழிக்கு வருவார்கள். யார் செய்வார்கள்? ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாந்துகொண்டே போக வேண்டியதுதான்.

– பஞ்சு

One Response to டிடிஎச் சர்வீஸும் முட்டாள் மக்களும்

  1. Ashok சொல்கிறார்:

    என்று விடியும் நம் மக்களின் நிலைமை..

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: