ஏமாற்றும் அதிமுக அரசும் ஏமாளியான மக்களும்

ஜெயா டிவியில் நேற்று முதலமைச்சர் பேசியதைக் கேட்ட போது எனக்கு ஒன்று தான் தோன்றியது. நம்பிக்கை வைத்தால் அது நாசமாய்ப் போகும் என்பதுதான். ஓட்டுப் போடவே போகாத என் நண்பர் அவரது குடும்பத்தோடு ஓட்டுச்சாவடிக்குச் செல்கையில் “ நான் திமுகவை சாவடிக்கச் சென்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

இன்று முதலமைச்சர் செய்திருப்பது “ நம்பிக்கைத் துரோகம்”. ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் முடிந்த தருவாயில் நஷ்ட கணக்குகள் காட்டி பொதுமக்கள் தலையில் அந்த நஷ்டத்தைச் சுமத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்ன தர்மம் இருக்கிறது?

பட்டி தொட்டி எங்கும் கோடிக் கணக்கில் கொள்ளையடித்த குடும்பக்கும்பல் ஆட்சியை ஒழித்துக் கட்ட பொங்கி எழுந்து ஓட்டுச் சாவடிக்கு வந்த மக்களுக்கு இப்படியா ஒரு பரிசை வழங்கலாமா முதலமைச்சர்?

நஷ்டத்தில் இயங்குகிறதே தமிழகம், நிதி நிலைமை சரியில்லையே என்கிற விஷயம் உண்மையானால் அதற்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

இந்த நிலைக்குக் காரணம் ஆசியாவிலேயே பெரிய கோடீஸ்வரரான கலைஞர் என்று அல்லவா சொல்கின்றீர்கள்? அவரிடமிருக்கும் சொத்தைப் பறிமுதல் செய்து கஜானாவில் சேர்க்க முடியாமல், ஏழைகள் வயிற்றில் அடிப்பது நியாயமா? இதுதான் தர்மமா?

எங்கே கடந்த பத்து வருடம் தமிழகத்தில் இருந்து கொள்ளை அடித்த பணத்தை திமுகவினரிடமிருந்து பறித்து கஜானாவில் சேருங்கள் பார்ப்போம்?

நீங்கள் செய்ய மாட்டீர்கள்? நீங்கள் அவரைக் குற்றம் சொல்வீர்கள். அவர்கள் உங்களைக் குற்றம் சொல்வீர்கள். இறுதியில் ஏமாந்த சோனகிரிகள் “மக்களா?”.

ஆட்சி செய்தவர்களின் தவறான நிர்வாகத்தால் பொதுமக்களின் சொத்து நஷ்டமடைந்தால், ஆட்சி செய்தவர்களிடம் இருக்கும் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல நஷ்டமடைய வைத்த அரசு அலுவலர்களின் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு ஒரே ஒரு தண்டனை “ஆட்சி மாற்றம்” அல்லது பணி இடமாற்றம் என்றால் அந்த ஜன நாயகம் மக்களுக்குத் தேவையே இல்லையே. அந்த ஆட்சி முறையும் தேவையே இல்லை.

இன்றைக்கு சட்டமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கும் அதிமுக அரசு, பொதுமக்களின் நிறுவனங்கள் நஷ்டமடைந்தால் அதற்கு ஆட்சி செய்தவர்களே காரணம் எனவும், அக்கட்சியின் தலைவர், தொண்டர்களின் சொத்துக்களையும், நஷ்டமடைந்த நிறுவனங்களில் வேலை செய்த அரசு அலுவலர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்ய சட்டமியற்ற வேண்டும்.

செய்வார்களா அதிமுகவினர்? இப்படி ஒரு சட்டத்தினைக் கொண்டு வாருங்கள் எவன் ஊழல் பண்ணுகிறான் என்று பார்ப்போம்?

இன்னும் எத்தனை நாட்கள் மக்களை கேனயர்களாக்கிக் கொண்டிருப்பீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்.

என் அன்பார்ந்த சமூக ஆர்வலர்களே, இந்திய தேசத்தின் மீது மாறாப் பற்றும், மாண்பும் கொண்டவர்களே, இளைஞர்களே ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் முடிவு நான் மேலே எழுதிய சட்டம் தான். ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் போட்டால் எல்லாம் சரிப்பட்டு வராது. சட்டத்தின் ஓட்டைகளைச் சுட்டிக் காட்ட காசுக்காய் மாரடிப்போர் பலபேர் இருக்கின்றார்கள். ஊழல்வாதிகள் தப்பித்து விடுவார்கள். மக்களின் சொத்து நஷ்டமடைந்தால் அதற்கு ஆட்சி செய்பவர்களும், அரசு அலுவலர்களுமே காரணம் என்றும், நஷ்டத்திற்கு அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் சட்டமியற்றுங்கள். நீங்கள் விரும்பும் “ இந்திய நல்லரசு” நிச்சயம் உருவாகும்.

– பஞ்சு

4 Responses to ஏமாற்றும் அதிமுக அரசும் ஏமாளியான மக்களும்

 1. gunasekaran சொல்கிறார்:

  ஜயவோ கலைஞரோ யார் ஆட்சியை அமைத்தாலும் மக்கள் நல அரசா (அ) செல்வந்தர் நல அரசா என்று பாருங்கள்.செல்வந்தர்கள் ஒன்றுகூடி அமைக்கும் அரசுசெல்வந்தர்களின் நலனுக்குதான் பாடுபடும்.செல்வந்தர்கள் லஞ்சம,உழலை வளர்த்து ஆட்சியாளர்களையும்,அதிகாரிகளையும் கெடுத்து விடுகிறார்கள்.எனவே மக்கள்தான் அரசியல்வாதிகள் கொடுக்கும் பணத்தை வாங்காமல்,மக்கள் நேயமுடைய,அரசியல் உறுதியுடைய நேர்மையானஅரசியல் கட்சிகளை தேர்ந்து எடுக்க வேண்டும்.ஏழைகளுக்கு பாடுபடும் அரசியல்கட்சிகளை

 2. Shiva சொல்கிறார்:

  Who asked you to believe Jayalalitha man? it is all your fault.
  you guys went behind her thinking that she will do good things for you but she will never do that…. the only reason she came to power is to fight against DMK.
  YOU ALL SUPPORTED HER with BLIND EYE
  understand and wake up guys…. way to go…
  stay away from both DMK & ADMK
  form some political force with educated people or support educated or good people in election…. don’t just go with DMK or ADMK
  Disc: i am not a supporter of DMK / ADMK
  -Shiva

 3. கிருஷ்ணா சொல்கிறார்:

  அவர்கள் எப்படி அதை செய்வார்கள். அப்படி செய்தால் அவர்களுடய சொத்தும் அல்லவா போகும் அதனால் அது நடக்காது. வாக்களித்தற்கு அனுபவித்தே ஆக வேண்டும்.

 4. lcnathan சொல்கிறார்:

  nadai muraikku intha maathiri sattangkal thevaithaan!! aanaal avaikalai niraivaerra mudiyaathu !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: