ஸ்ரீலஸ்ரீ சாரு நிவேதிதா சுவாமிகள்

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டின்னு ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டிருப்பீர்களே, அதேதான் சாரு செய்திருக்கிறார். ஏதோ எக்சைல் விற்பனைப் பற்றி பேசினோமா, எழுதினோமா என்று இல்லாமல் பூஜை செய்கிறேன் பேர்வழி என்று ஒரு பதிவைப் போட்டார் சாரு. தமிழ் உலகில் வடிவேலு இல்லாத குறையை சாரு போக்கி வருவது கண்டு சீரியஸ் இலக்கியவாதிகள் “ரகசிய சிரிப்புகள் சிரித்து வருகின்றார்கள்”. அதான்யா நமுட்டுச் சிரிப்பு. இதுகூட தெரியாமல் நீங்கள் எல்லாம் என்ன தான் படிக்கின்றீர்களோ தெரியவில்லை.

http://charuonline.com/blog/?p=2620

குமுதம் ஜோதிடம் மற்றும் இன்ன பிற ஆன்மீக பத்திரிக்கைகள் தான் எந்திரம், தந்திரம் எல்லாம் இலவசமாய் கொடுப்பார்கள். சாருவின் எந்திரம் எந்தளவுக்கு வேலை செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏற்கனவே நித்தியானந்தா ரேஞ்சுக்கு ஆடிப் பார்த்து, பாயிடம் வயாக்கரா மருந்தெல்லாம் வாங்கி பின்பு இருட்டில் என்னென்னவோ நடந்து இப்போது வேறு பப்ளிஷரைத் தேடி ஓட வேண்டிய பிரச்சினை வந்து விட்டது. ராயல்டி கொடுக்கவில்லை என்பதெல்லாம் சும்மா, ஏதாவது பொண்ணு பிரச்சினையாக இருக்கும் என்று பார்க் ஷெரட்டன் கோழி ஒன்று கூவியது. அந்தப் பொண்ணு “மேற்படி” சமாச்சாரத்தைத் தட்டி விட்டால் போட்டு விடுவோம் அனாதியில் பதிவாய்.

சாருவின் “எக்ஸைல்” நாவல் விற்க போட்டிருக்கும் திட்டமெல்லாம் ஓகே. சாருவின் நண்பரொருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னது “ உலகத்தில் ஏமாளிகளுக்குப் பஞ்சமில்லை”.

ஏண்டா இப்படித் திட்டுகிறாய் அவரை, உனக்கு வம்பிழுக்கு ஆளே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அவர் எல்லோரையும் வம்பிற்கு இழுப்பதை நிறுத்தட்டும், நாங்கள் நிறுத்துகிறோம் என்கிறான் குஞ்சு. அதுமட்டுமா, அவரை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் திட்டலாம் என்று அனுமதி கொடுத்து விட்டதால், இனி அவரைத் திட்டிக் கொண்டே இருப்போம். எங்களுக்கும் தினமலர் அந்துமணிக்கு சாரு இருக்கிற மாதிரி ஒரு காமெடி பீஸ் வேண்டுமல்லவா?

– பஞ்சு

6 Responses to ஸ்ரீலஸ்ரீ சாரு நிவேதிதா சுவாமிகள்

 1. அனாதி சொல்கிறார்:

  வார்த்தைப் பிரயோகிக்க ஜாக்கிரதை உணர்வு அவசியம் மிஸ்டர். பிரயோகிக்கப்பட்ட அம்பும், வார்த்தையும் திரும்பி வரவே வராது. இதெல்லாம் ஒரு பிரச்சினையா? விட்டு விடுங்கள். – பஞ்சு

 2. ramanans சொல்கிறார்:

  // பிச்சை என்பது ஆணவம், அகம்பாவம் போன்ற அசுர குணங்கள் ஒழிந்து, மனிதன் என்பவன் ஒன்றுமில்லை என்ற நிலையில் எடுக்கப்படும் உயிர் ஜீவிதத்திற்காக எடுக்கப்படுவது. பிச்சை என்பது மனிதன் கடவுளாகும் தன்மையைப் பிரதிபலிப்பது.//

  அற்புதமான உண்மை சார். இது எல்லோருக்கும் எங்கே புரிகிறது. பெரிய பெரிய மகான்கள், ஞானிகள் எல்லாம் (ரமணர், பட்டினத்தார் மற்றும் பலர்) பிச்சை எடுத்தது பின் எதனால்? பிச்சை போடுபவர்களுக்கு புண்ணியம் சேர வேண்டும் என்பதற்காகத்தான். நல்ல கருத்தைச் சொன்னதற்கு நன்றி!

  சாருவிடம் விஷயம் இருக்கிறது. ஆனால் அதை சரிவரப் பலரால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அவராலும் சமயங்களில் அதை சரிவர வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் தான் கிண்டலுக்கு ஆளாகிறார்.

  • அனாதி சொல்கிறார்:

   நன்றி ரமனா சார் ! இப்படிப் பல தத்துவங்கள் நம்மிடையே உண்டு. எழுத ஆரம்பித்தால் ஒருத்தர் நம் பிளாக் பக்கம் வரமாட்டார்கள். நம்ம பிளாக்கின் இந்தியா ரேங்க் என்னவென்று செக்கிங் செய்து பாருங்கள் புரியும்.
   – பஞ்சு

 3. anadhi rasigan சொல்கிறார்:

  avarai vittu vindungal. pavam, pichai eduthuthan novelai release seigirar. seithuvitu pogattum.

  upma vadai koduka 20000 thevai padugiratham, panam anupa account no pottu irukar….

  tabel chair selavuku kaasu pathalai polum, yendram virka plan pottu irukar

  • அனாதி சொல்கிறார்:

   ரசிகன், பிச்சை என்பது கேவலமானது என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? பிச்சை என்பது ஆணவம், அகம்பாவம் போன்ற அசுர குணங்கள் ஒழிந்து, மனிதன் என்பவன் ஒன்றுமில்லை என்ற நிலையில் எடுக்கப்படும் உயிர் ஜீவிதத்திற்காக எடுக்கப்படுவது. பிச்சை என்பது மனிதன் கடவுளாகும் தன்மையைப் பிரதிபலிப்பது.

   ஆகவே பிச்சை என்ற வார்த்தையை சாருவுடன் தொடர்பு படுத்த வேண்டாம்.

   சாரு செய்வது ஆளுமைத்தனம். நான் எழுதுகிறேன். நீ படிக்கிறாய் அல்லவா? அதற்கு காசு கொடு என்கிறார். இது ஒருவிதமான கர்வம் சார்ந்தது. எழுத்தாளன் என்பவனுக்கு எல்லைகளே இல்லை என்று யார் வரையறுத்தது என்று கேட்டுப் பாருங்கள். அவர் சொல்வார் “ழார் பத்தாய்” கதைகளை. சாலையில் இடது பக்கம் போகும் விதிகளை உடையது நம் நாடு. எழுத்தாளன் என்பவன் வலது பக்கம் தான் போவான் என்று போனால் என்ன ஆகும்? அதைத்தான் சாரு செய்து கொண்டிருக்கிறார். அது “காமெடி”களாய் நமக்குத் தெரியும்.

   அதைத் தான் எழுதுகிறோம்.

   சாருவின் “எக்ஸைல்” நாவல் லட்சம் பிரதி விற்க இப்போதே “அனாதி நண்பர்கள் குழாம்” வாழ்த்துகிறது.

   – பஞ்சு

   சாருவின் அடுத்த காமெடிக்காக காத்துக் கொண்டிருக்கிறான் குஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: