கூடங்குளம் அணு உலை பிரச்சினை

கூடங்குளத்தில் பிரச்சினை என்று பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்தித் தொற்றுக்களை தெளித்த வண்ணம் இருக்கின்றன. மீடியாக்களுக்குத் தேவை செய்திகள். அது எதுவானாலும் பரவாயில்லை, அதன் பின் விளைவுகள் என்னவானாலும் பரவாயில்லை என்கிற போக்குத்தான் மீடியாக்காரர்களுக்கு. இவர்கள் தன் பெண்டாட்டி பிள்ளைகளைக் கூட செய்தியாக்கி விற்று விடுவார்கள். இல்லையென்றால் இவர்களுக்கு பிறரின் பெண்டாட்டிகளின் கள்ளத்தொடர்புச் செய்திகளும், எவனாவது ஏப்ப சாப்பையின் ஊழல்களும் தான் செய்திகளாய் தெரியும். மோதினால் காணாமல் போய் விடுவோம் என்றால் அந்தப் பக்கம் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். மீடியா மாஃபியா என எப்போதே மாறி விட்டது. மீடியாக்காரர்கள் கட்டப்பஞ்சாயத்துக்களிலும், காசு பண்ணுவதிலும் கண்ணும் குறியுமாய் இருக்கின்றார்கள்.அவர்களை விட்டு விடுவோம் செத்த பிணத்தைக் கூட செய்தியாக்கி விற்பனை செய்யும் மரணத்தின் வியாபாரிகள் அவர்கள். பிணங்களின் முன்பு தாரை தப்பட்டையோடு ஆட்டம் ஆடும் காசுக்கு மாரடிக்கும் கூட்டங்கள் அவர்கள். கூடங்குளம் அணு உலைப் பிரச்சினையின் உண்மையை இதுவரை எந்த ஒரு மீடியாவும் மக்களுக்குச் சொல்லவே இல்லை. காரணம் நான் முன்பு சொன்னதுதான்.

கூடங்குளத்தில் அணு உலை தேவையா ? தேவையில்லையா என்று கேட்டால், ”காலம் கடந்து போய் விட்டது” என்பது எங்களது பதில். வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப மின்சக்தி உற்பத்தி பெருகாவிட்டால், இந்தியா ஒரு இருண்ட கண்டமாய் மாறியே விடும் ஆபத்து இருக்கிறது. இருட்டுக்குள் மனித உற்பத்தியை வேண்டுமானால் பெருக்கலாம். ஆனால் பசியும் பஞ்சமும் இலவச இணைப்பாய் வந்தே தீரும். இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு நாளை மிடில் கிளாஸ் மனிதன் வாழ முடியுமா? (ராசா, கனிமொழி போன்றவர்களை விட்டு விடலாம்). மின்சாரத்தேவை அதிகரித்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதற்கு மரண வழியைத் தேர்ந்தெடுக்க அரசாங்கத்தை அனுமதித்தது மக்களின் குற்றம்.

இந்தியாவை ஆட்சி செய்து வந்தவர்களுக்கு தொலை நோக்குப் பார்வை இருந்திருந்தால் மரபுசாரா எரிசக்தி துறையை நன்கு வளம் பெறச் செய்து, அதன் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய முயன்றிருப்பார்கள். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் இன்று காலனை வீட்டுக்குள் விட வேண்டிய சூழ்நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு விட்டது. அல்லது இண்டர் நேஷனல் கார்பொரேட் மாஃபியாக் கும்பல்கள் இந்தியாவை தங்களது அணு விற்பனை சந்தையாக மாற்றி விட்டன என்று நாம் நிச்சயமாக நம்பலாம். அதற்கேற்ப இந்தியாவை ஆண்டு வந்தவர்களும், ஆள்பவர்களும் அவர்களின் கைப்பாவையாக மாறி இருக்கலாம்.

அணு சக்தி ஒப்பந்தம் போடப்பட்ட பிறகாவது, இந்தியர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் நம் நாடு அணு விற்பனை மையமாக மாற்றப்படப் போகிறது என்பது. மின் சக்தி இல்லாமல் வெளி நாட்டு மூலதனங்கள் இந்தியா வந்து, இந்திய மக்களுக்கு சொரிந்து விடும் வேலையா செய்யும்?

மின்சக்திக்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. காலம் கடந்தும் போய் விடவில்லை. ஒரு அரசாங்கம் நினைத்தால் அடுத்த செகண்டில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் அந்தச் செய்கையில் “ஏதாவது” கிடைக்கும் என்று நினைப்பவர்கள் இந்தியாவை ஆட்சி செய்தால், அணு உலை மட்டுமல்ல அதே அணு உலை வெடிக்கவும் வைக்கப்படும். மக்கள் செத்தால் என்ன, அதையும் ஏற்றுமதி செய்து, ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அனுப்பி வைப்பார்கள்.

தலைமை நல்லவராக இருந்து, இந்தியாவின் மீது அக்கறை கொண்டவராக இருந்திருந்தால் இன்று நடந்து கொண்டிருக்கும் அணு உலை பிரச்சினைகளும், ஊழல் பிரச்சினைகளும் வந்திருக்கவே முடியாது. இந்தியாவின் தலைவிதியை “நேரு” என்ற பைசாவுக்கு பிரயோசனமற்ற மாயை ஆட்சி செய்து வந்ததன் பலன் தான் இன்றைய கூடங்குளம் என்ற பிரச்சினை வரக்காரணம். இல்லையென்று எவரும் சொல்லவே முடியாது.

அணு உலை பாதுகாப்பானது என்பதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அணு உலை வெடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளின் சதவீதம் முக்காலே கால் பர்செண்டேஜ்ஜாக இருந்தாலும் கூட, அதன் விளைவுகளை எண்ணிப் பார்த்தால், இந்திய மக்களின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் அணு உலை மின்சாரத்தினை நினைத்துக் கூடப் பார்ப்பார்களா?

கூடங்குளம் அணு உலைப் பிரச்சினை “காலம் கடந்த மக்களின் காற்றுப் போன போராட்டம்” என்பது தான் உண்மை.

சுருக்கமாய் சொல்ல வேண்டுமெனில் “ ஒரு நாடு வாழ வேண்டுமெனில் ஒரு ஊர் சாகலாம்” என்பது தான்.

கூடங்குளம் மக்களின் போராட்டம் வரக்கூடிய “தடையில்லா மின்சாரம்” பெற ஆர்வமாயிருக்கும் மக்களுக்கு எரிச்சலைத் தரும்.  இப் போராட்டம் ஒவ்வொரு இந்தியப் பிரஜையின் முன்பு பெரும் பூதமாய் நிற்கப் போகும் காலம் வரும் வரைக்கும் வெற்றி அடையவே அடையாது. அது நீர்த்துப் போகும். அல்லது நீர்த்துப் போக வைக்கப்படும். கைப்பாவைத் தலைவர்களால் எல்லாம் சரி என்று காட்டப்படும்.

கூடங்குளம் மக்கள் ஆட்சியாளர்களால் பரிதாபப்பட்டு வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இல்லையென்றால் அணு உலை வெடிப்பு நிகழ்த்தப்பட்டு, வேறு வழியே இன்றி தாய் நிலத்தினை விட்டு விரட்டி அடிக்கப்பட்டிருப்பார்கள். அல்லது கொல்லப்பட்டிருப்பார்கள்.

கூடங்குளத்தினைச் சுற்றி இருக்கும் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் “உங்கள் உடம்புகளை வருத்திக் கொள்ளாதீர்கள்”. இடம் பெயர்வதே இம்மக்களுக்கான தீர்வாயிருக்கும். அல்லது அங்கேயே கிடந்து தன் வாரிசுகளை அணு உலைக் கதிர் வீச்சிற்கு பரிசாய் அளிக்கலாம்.

இப்போது உங்களின் மனச்சாட்சியை குத்தும் ஒரு வரி எழுதப் போகின்றேன். எனக்கு இது தான் நேரம் என்று கூடத் தோன்றுகின்றது.

ஒரு முறை எண்ணிப் பாருங்கள் “நிர்க்கதியாய் நின்று பாஸ்பரஸ் குண்டுகளின் அக்கினிக்கு இரையானவர்களின் குரல்களை. அக்குரல்களை விட உங்கள் குரல்களில் வேகம் இல்லை என்பது தானே உண்மை”.

– பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: