கனிமொழிக்கு பெயில்

தலை நகரத்தில் நேற்று சந்தித்த சில நண்பர்கள், வக்கீல்கள் பேசிக் கொண்ட போது கேள்விப்பட்ட விஷயம் – ”கனிமொழிக்கு விரைவில் பெயில் கிடைத்து விடும்”. ஏனென்றால் அவர் குற்றமே செய்யவில்லை என்று அடுத்தகட்ட மூவ் இருக்குமாம். அதற்கான சாட்சியங்களும் இருக்கின்றனவாம்.

இப்படித்தான் மூன்றாம் தேதி கனிமொழிக்குப் பெயில் கிடைத்து விடும் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆனால் கிடைக்கவில்லையே என்று கேட்டால், அது சும்மாச்சுக்கும் என்கிறார்கள்.

அரசியலில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஆனாலும் இந்திய நீதித்துறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே தற்போது இருக்கிறது. அதற்குள் 5000 கோடி ஊழல் மன்னன் சத்யம் ராஜூவிற்குப் 36 மாதங்களுக்குப் பிறகு பெயில் கிடைத்திருக்கிறது என்ற செய்தி கிடைத்திருக்கிறது.

கலா நிதி மாறன், தயா நிதி மாறன் இருவரையும் சிபிஐ கைது செய்யாமல் இருப்பதன் மர்மம் விரைவில் விலகப் போவதாகவும், அது பற்றி நடந்த டீல்களை சில பத்திரிக்கைக்காரர்கள் மோப்பம் பிடித்து, தக்க நேரத்தில் வெளியிடப் போகின்றார்கள் என்றும் பேசிக் கொள்கிறார்கள். அது என்ன டீல் என்று இனிமேல் தெரியவரும் என்றும் சிலர் பேசிக் கொள்கிறார்கள்.

ஆக, வரக்கூடிய காலங்கள் எதுவும் திமுகவிற்கு நல்லவையாக இருக்காது என்பது மட்டும் தெரியவருகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதை.

– அனாதி

கனிமொழிக்கு பெயில் க்கு ஒரு பதில்

  1. Somu சொல்லுகின்றார்:

    அனாதி கூடங்குளம் தொடர்பாக உங்கள் கருத்துக்கள் அடங்கிய கட்டுரையை எதிர்பார்க்கிறேன் ….

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: