உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் பெயில் மறுத்த போது, பேட்டி எடுக்க முற்பட்ட மீடியாவைப் பார்த்து, கனிமொழியின் கேள்வி “உங்களுக்கு மனசாட்சி இல்லையா?”

எந்தத் தேர்தலிலும் நிற்கவில்லை. எந்த வித தகுதியும்,முற்போக்கான சிந்தனையும் இல்லை. ஒரே ஒரு தகுதி தந்தை ஒரு கட்சியின் தலைவர். ராஜ்ய சபா எம்பி ஆனதற்கு இதைத் தவிர கனிமொழிக்கு என்ன தகுதி இருந்தது? எத்தனையோ லட்சோப லட்ச திமுக தொண்டனுக்குக் கிடைக்காத பதவி, தனக்கு கிடைத்த போது கனிமொழிக்குள் இருந்த அவரின் மனசாட்சி எங்கே போனது?

தினமலத்தில் சங்கமம் பற்றிய செய்திகள் வந்ததே ஏன் என்றுச் சொல்லுவாரா கனிமொழி? பார்க் ஷெரட்டனில் அடிக்கடி மீட்டிங் போட்ட விளைவு, தினமலத்தின் இரண்டாவது பக்கத்தில் தினம் தோறும் படத்துடன் செய்திகள் வெளிவந்தனவே அப்போதெல்லாம் இவருக்குத் தெரியாதா தன்னுள்ளே மனச்சாட்சி என்ற ஒன்று இருப்பது?

200 கோடி ரூபாயை கள்ளத்தனமாக வரவு வைத்தபோது மனச்சாட்சி எங்கே போனது? ஊரெங்கும் சொத்துக்களாய் வாங்கிக் குவித்த போது, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணமா இது என்று அவரின் மனச்சாட்சி அவரைக் கேள்வி கேட்கவில்லையா?

கனிமொழி செய்த ஒவ்வொரு செயலையும் பத்திரிக்கைகள் வரி வரியாய் எழுதிக் குவித்திருக்கின்றன. பொது வாழ்க்கைக்கு வந்த போது, மீடியாவில் தன் முகம் தெரிய எத்தனை எத்தனை காரியங்களைச் செய்திருப்பார் இவர். அப்போதெல்லாம் இனித்த மீடியா, கோர்ட்டில் ஜாமீன் கிடைக்கவில்லை என்கிற போது, “உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?” என்று கேட்கும் அளவுக்குக் கசக்கிறதோ?

எங்கு போனாலும் ஐந்து நட்சத்திர ஹோட்டல், விலை உயர்ந்த் கார், பணம், பதவி, பவுசு, நினைத்ததைச் செய்யும் வல்லமை என்றெல்லாம் ஆடிய போது மனச்சாட்சி உறுத்தவில்லையா?

செய்த செயலுக்கான தண்டனையை அறுவடை செய்து தான் ஆக வேண்டும். அதைத் தான் கனிமொழி பெற்றுக் கொண்டிருக்கிறார். இத் தண்டனை கனிமொழிக்கல்ல. இது கலைஞருக்கான தண்டனை. அதிகாரமும், பணமும், பதவியும் இருந்து என்ன பயன்? என்ன செய்ய முடிந்தது கலைஞரால்? இப்படிப்பட்ட நிலைக்கு யார் காரணம் தெரியுமா?

அவர் போர்த்தியிருக்கும் மஞ்சள் துண்டுதான் இவற்றுக்கெல்லாம் காரணம்.

– பஞ்சரு பலராமன்

7 Responses to உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

 1. thendral சொல்கிறார்:

  ஹஹஹா…. மனசாட்சியை பற்றி கனி பேசுவதுதான் இந்த வருடத்தின் ஆகச் சிறந்த நகைச்சுவை…வெட்கம் கெட்டவர்கள் …

 2. Prakash சொல்கிறார்:

  அவர்கிட்ட இல்லாதை தான் நம்ம கிட்ட இருக்கிறதானு கேக்கறாங்க, இதுக்கு போயி அநாதி கோவ பட்டா எப்படி??

 3. Shiva சொல்கிறார்:

  Why you are so much angry about DMK and its family members?
  I agree that they did all illegal things, etc., etc., etc.,
  Why you are not raising your voice against anything about ADMK?
  are you afraid of Jaya? or neeyum oru somba?
  if you want to be a judge, you should write good/bad things about both people… if you cannot do that, then just write some GOSIPS and get lost….

  Shiva

  • அனாதி சொல்கிறார்:

   இப்படி பின்னூட்டம் போட்டா, அதிமுகவை விமர்சிக்க மாட்டோம் என்ற நினைப்பா உங்களுக்கு சிவா? அதெல்லாம் நம்மகிட்டே முடியாது. உடனே அடுத்த கட்டுரை வருகிறது பாருங்கள்.

   – பஞ்சு

   • Shiva சொல்கிறார்:

    hahaha…. i want you to write more about ADMK too….
    Most of the people thinks, DMK is the only culprit but that is not true…. ADMK also the same…
    the only difference between DMK and ADMK is, DMK – family oriented and ADMK is Sasikala oriented….
    thank you for considering my points….
    keep writing….
    waiting for more ‘hidden truths’….

 4. shiva சொல்கிறார்:

  Why you are so much angry about DMK and its family members?
  I agree that they did all illegal things, etc., etc., etc.,
  Why you are not raising your voice against anything about ADMK?
  are you afraid of Jaya? or neeyum oru somba?
  if you want to be a judge, you should write good/bad things about both people… if you cannot do that, then just write some GOSIPS and get lost….

 5. senkottai kaaran சொல்கிறார்:

  mana saatsi konjamum illaatha kaniyidam ethirpaarkalaamaa, manasaatsiyai ???

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: