நீதிதேவன் விழித்திருக்கிறான்

தேசத்துரோகிகளுக்கு பெயில் கொடுத்திருந்தால், இந்திய நீதித் துறையின் மீது தீராத அவப் பெயர் வந்திருக்கும்.  இந்தியக் கொள்ளைக் கூட்டத்தினர் உறவினர் அனைவரும் டெல்லியில் குவிந்திருந்ததைப் பார்த்த போது, எங்கே இவர்கள் நீதியை விலைக்கு வாங்கி விடுவார்களோ என்று அற நெஞ்சத்தாரின் எண்ணங்கள் கதறின. அப்படி இந்தியத் தேசத்தின் சொத்தினை, இந்திய மக்களின் வளத்தை தனி ஒரு கூட்டமாய், ஒன்று சேர்ந்து கொண்டு கொள்ளையடித்தவர்களுக்கு பெயில் வழங்கப்பட்டிருந்தால், அது மிகப் பெரும் பிரச்சினைகளுக்கு வழி வகுத்திருக்கும்.

அப்சல் குருவிற்கு பெயில் கொடுக்க வேண்டி வந்திருக்கலாம். கசாப்பிற்கு பெயில் கொடுக்க வேண்டியிருந்திருக்கலாம். அதுமட்டுமா எண்ணற்ற கொலைகாரர்களுக்கு பெயில் கொடுக்க வேண்டியிருந்திருக்கலாம். கொடுக்க முடியாது மனச்சாட்சி இருக்கும் எவரால் மறுக்க முடியும்?

நீதிபதி அவர்கள் சட்டத்தின்படி நின்று பெயில் மறுத்தது கண்டு, இந்திய நீதித்துறையினர் தலை நிமிர்ந்து நிற்கலாம்.உண்மையில் பாட்டியாலா 2ஜி நீதிபதி அவர்கள் நீதிதேவனாய், சட்டத்தைக் காக்கும் தலையாய கடமையில் இருந்து துளி அளவும் விலகவில்லை என்பதை அறிய நேரிடுகிற போது, அவரைப் பெற்ற அன்னையை வணங்காமல் இருக்க முடியவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூர்ந்த கவனிப்பில் நடக்கும் இவ்வழக்கினை, எல்லா வித தில்லாலங்கடி வேலைகளிலும் சிறந்த உலக மகா கொள்ளைக் கூட்டத்தாரின் மாய வேலைகளிலிருந்து காத்து மிகச் சரியாக நடத்தி, கொள்ளைக்கூட்டத்தினை ஜெயிலில் நிரந்தரமாய் அடைக்கவும், கொள்ளை அடித்த பணத்தை திரும்பப் பெற்று இந்தியாவின் கஜானாவில் சேர்க்கவும் நீதிமன்றத்திற்கும், நீதிபதிகளுக்கும் எல்லா வல்ல இறைவன் துணை நிற்பான்.

நீதி தேவன் விழித்திருக்கிறான். அவன் செங்கோல் நிமிர்த்தப்பட்டிருக்கிறது.

வாழ்க இந்திய தாய் ! வாழ்க இந்தியா !!

– பஞ்சு

3 Responses to நீதிதேவன் விழித்திருக்கிறான்

 1. Prakash சொல்கிறார்:

  Mega tirudarkal anaivarum court ullae pokum pothu nakkai thonga pottu kondu ponathai partha pothu romba santhosamaka irunthathu, athayum thandi avarkal veliyae varuvathai partha pozhuluthu, ada da antha oru nimida santhosam solli aakaathu!!!

 2. thendral சொல்கிறார்:

  இன்னும் நமது நாட்டில் உண்மைக்கும் நேர்மைக்கும் மதிப்பு இருக்கிறது என்று இதன் மூலம் அறியப்படும்போது மனதில் நம்பிக்கை பிறக்கிறது..எனது நாடும் வீடும் காப்பற்றப்படும் என்று…ஆனால் குற்றமே நடக்காமல் தடுக்க வழி உண்டா???

  • அனாதி சொல்கிறார்:

   சின்ன மேட்டர் ஒன்றினைச் செய்தால் போதும் தென்றல். குற்றம் 95 சதவீதம் குறைந்து விடும். மிகக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இதைத் தவிர வேறொன்றினையும் செய்ய இயலாது. ஒரு முறை முதலமைச்சரானவர் அல்லது பிரதமரானவர், கட்சித் தலைமைப் பொறுப்பினை வகித்தோர் மீண்டும் வரக்கூடாது என்று சட்டம் இயற்றினால் பெரும்பாலான பிரச்சினைகளி 50 சதவீதம் குறையும். அரசுப் பணியாளர்களுக்கும், அரசியல்வாதிகளும் குற்றச் செயலில் ஈடுபட்டால் மிக மிகக் கடுமையான தண்டனை வழங்கினால் குற்றம் குறைந்தே போய் விடும். – பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: