கிரிக்கெட் ஒரு சூதாட்டம்

டெண்டுல்கர் பற்றிய ஒரு சுவாரசியமான கட்டுரை ஒன்று தினமணியில் வந்திருக்கிறது. பத்தே பத்து நாடுகளில் விளையாடப்படும் கிரிக்கெட்டை உலகப் கோப்பை என்றுச் சொல்லி, பத்து நாடுகளின் மக்களை ஏமாற்றும் கூட்டத்தின் அட்டகாசங்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். டென்டுல்கருக்கு பேரன் பிறந்த பிறகும் அவர் இந்திய கிரிக்கெட் டீமில் விளையாடுவார் என்பதை இப்போதே உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்.

முதலில் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதன்பிறகு தொடர்ந்தால் நன்றாக இருக்கும்.

டெண்டுல்கரா யார் அவர் – புளியங்குடி பூலியன் – தினமணி

எங்கள் பிளாக்கில் நாங்கள் கிரிக்கெட்டை எதிர்த்தும், முக்கியமாக டெண்டுல்கரை விமர்சித்து எழுதி இருப்போம். கட்டுரைகளைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள். டெண்டுல்கர் தன்னை சட்டத்திற்கும் அப்பாற்பட்ட கடவுள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது சமீபத்திய செய்திகளின் மூலமாக தெரிந்திருக்கும். அப்படியான நிலையை அவர் எடுத்திருக்கக் காரணம் முட்டாள் மக்களாகிய இந்தியர்கள் தான் காரணம்.

பாகிஸ்தான் கிரிக்கெட்டர்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருக்கிறது என்பது சூடான செய்தி அல்ல, மறைக்கப்பட்டிருந்த பெரும் உண்மை, மக்களை ஏமாற்றும் கூட்டத்தாரின் மாபெரும் அயோக்கியத்தனம் வெளி வந்து விட்டது என்பது தான் முக்கியமான செய்தி.

பதினோறு பேர் விளையாடும் கிரிக்கெட்டில் அதுவும் அரசியல்போல வாரிசுகள் களமிறக்கப்படும் விளையாட்டில், விளையாட இந்திய மக்களின் வாரிசுகள் கிரிக்கெட் பேட்டுகளை எடுத்துக் கொண்டு, பந்துகளை வீசிப் பொறுக்கிக் கொண்டு திரிவதைப் பார்க்கும் போது, நம் இந்தியாவில் படிக்காத முட்டாள்களை விட படித்த முட்டாள்கள் அதிகம் என்பது உண்மை என்று அறியலாம்.

கிரிக்கெட்டில் நடந்த சூதாட்டங்களை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள். அதையெல்லாம் விட்டு விட்டு, மீண்டும் கிரிக்கெட் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு காரணம் மீடியாக்களின் மாஃபியா வேலை என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்குத் புரிந்திருந்தால் உங்களை விட படுமுட்டாள் இந்த உலகிலேயே இல்லை என்றுதான் அர்த்தம். எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தால் வாழ்க்கை சீரழிந்து தான் போகும்.

எந்த ஒரு செய்தியிலும் என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படி இல்லாமல் அப்படியே நம்பினீர்கள் என்றால் நம்பிக்கெட்டவர்களில் நீங்களும் ஒருவராய் மாறி விடுவீர்கள்.

கிரிக்கெட் உலகம் உலக மக்களை ஏமாற்றும் மாபெரும் அயோக்கியத்தனமான,பொறுக்கித்தனமான சூதாட்டம் நடத்தும் ஏமாற்றுக் கூட்டம். புரிந்தவர்கள் கிரிக்கெட்டை தவிர்ப்பீர். பிள்ளைகளை கிரிக்கெட் மாயையிலிருந்து காப்பீர்.

சொல்லுவதைச் சொல்லி விட்டோம். இனி உங்கள் பாடு !

– பஞ்சரு பலராமன்.

2 Responses to கிரிக்கெட் ஒரு சூதாட்டம்

 1. thiru சொல்கிறார்:

  //வேறு எல்லா விளையாட்டுகளையும் ஒழிப்பதாலும், ஊடகங்கள் உருவாக்கிய பிம்பங்களாலும் மட்டுமே அவர்களால் இந்திய இளைஞர்களுக்குக் கடவுளராக முடிந்திருக்கிறது. //

  ஊடகம் தன் கோரப் பற்களில் மக்களின் வாழ்வைக் கவ்வி இருக்கிறது. உணர்ச்சிபூர்வமாக மக்களை உசுப்பேற்ற ஊடகம் ஒரு ஊதுகுழலாக இருக்கிறது.
  இதை உடைக்க இணையதளங்களை மக்கள் அதிகம் படிக்க வேண்டும்.
  “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்” மெய்ப்பொருளை அறிய வேண்டும். படித்தவர்கள் எல்லோரும் ஆங்கில செய்தி ஊடகங்களை கண் மூடித்தனமாக நம்புவது வேதனையிலும் வேதனை. அதில் வரும் செய்திகளே வேத வாக்கு என இருப்பது மாற வேண்டும்.

  சினிமா,அரசியல், ஊடகம் – எல்லாம் மக்களை ஏமாளிகளாக்கி விட்டன.
  இணையதளங்களின் மூலம் ஊடகங்களின் மாய பிம்பம் உடைக்கப் பட வேண்டும். அப்போதுதான் உண்மையான ஊடகத்தின் மதிப்பு வெளி வரும்.
  “அனாதி” தளத்தை அத்தகைய புரட்சியின் முன்னோடியாகப் பார்க்கிறேன்.

 2. SHENCOTTAI KAARAN சொல்கிறார்:

  NALLA PATHIVU. MAKKAL KAETKA VAENDUMAE !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: