சாரு நிவேதிதாவின் பச்சை

நவம்பர் 30, 2011

சாருவைப் பற்றி நாங்கள் ஏன் அடிக்கடி எழுதுகிறோம் என்பதற்கு இதோ அவரின் வாசகர் வட்டத்தில் வெளியாகி இருக்கும் ஒரு வீடியோ. இந்த வீடியோவை பாண்டிச்சேரியில் இருக்கும் ஒருவர் இணைத்திருக்கிறார். சாருவின் வாசகர் வட்டம் எக்சைல் நாவலுக்கு பிறகு என்னவாகிறது என்பதை நான் சொல்ல மாட்டேன். நீங்களே பாருங்கள். பைசா பிரயோசனம் இல்லாமல் சாரு எதுவுமே செய்வதில்லை என்கிறார்கள் சாருவின் முன்னாள் நண்பர்கள்.

இதோ அது தொடர்பான சில இணைப்புகள்.

– பஞ்சு


naked lies (1) – தேவடியாப் பயலுக (18+)

நவம்பர் 29, 2011

கோட்டை ஒன்று மிச்சம் உள்ளதே
“நாட்டுச் சொத்தெல்லாம் நமக்கே உரிமை” என்று
வீட்டுக்குள் சுருட்டி விழுங்கி மகிழ்வதா ?

– கலைஞர்

மதிய நேரம் கணவன் வீட்டுக்கு வர, எதிர் கொண்டழைக்க யாருமில்லை. மனைவி எங்கே போனாள் என்று தேடிய முடிச்சவிக்கி, ஏதோ நினைத்தவனாய் “என்னாயா அவளக்காணும்” என்று கேட்கின்றான்.

முடிச்சவிக்கியின் நண்பனும் கார் டிரைவருமான பொன்னு, “அம்மா கோபமா இருப்பாங்க” என்கிறான்.

அலை அலைன்னு அலைஞ்சாளேன்னு தனக்குள்ளே சொல்லிக்கிட்டு, பெட்ரூம் கதவினைத் திறந்த முடிச்சவிக்கிக்கு,

மனைவி கத்திய கத்தல் தான் காதில் கேட்டது.

“தேவடியாப்பயலுவ “

“யாரையடி சொன்னாய் என் கட்டிக்கரும்பே?” என்று அவிழ்த்து விட்ட கவிதை வரியைக் கேட்டவள், வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தாள்.

முடிச்சவிக்கி கதவு நிலையைப் பிடித்துக் கொண்டு, வேஷ்டிக்குள் கை விட்டு என்னவோ செய்து கொண்டிருந்தான்.

”உன்னைத்தாண்டா சொன்னேன்” என்று மனதுக்குள் நினைத்தபடி முடிச்சவிழ்க்கியின் மனைவி அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

முடிச்சவிக்கியின் பின்னே நின்று கொண்டிருந்த பொன்னு, இவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.

– அனாதி

இன்றைக்கு கமா போட்டு விடலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். நாவலின் அடுத்த அடுத்த பகுதிகள் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும். வார்த்தைகள் அப்படியே எழுதப்படும். ஆகவே சிறார்கள் இப்பதிவுகளைப் படிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் கதா பாத்திரங்கள் யாவரும் புனைவுகளில் மட்டுமே இருப்பவர்கள். நாவலுக்கு அவ்வப்போது வெளியாகும் மேற்கோள்களுக்கு யாதொரும் தொடர்புமில்லை.


கலைப்பார்வை வேண்டும்

நவம்பர் 29, 2011

கமலின் இத்தனை ஆண்டுகால கலைச்சேவையை நீங்கள் மேலே இருக்கும் படத்தின் மூலம் கண்டுகளிக்கலாம். ரொம்ப சார்ப்பாக இருக்கிறது அல்லவா கமலின் சேவை ?

– குஷியுடன், குஜாலுடன், கும்மாளத்துடன்

உங்களின் ப்ரிய குஞ்சாமணி

 


Naked Lies ( நிர்வாணப் பொய்கள் )

நவம்பர் 26, 2011

அன்பு நண்பர்களே,

உலகம் இயங்குவதே பொய்யால் தான் என்பதை நிரூபிக்கப் போகும், சாட்சியாய், டிஜிட்டலில் மிளிரப் போகும் நெடும் தொடர் ஒன்றினை எழுத இருக்கிறேன். இனி அரசியல், சினிமா, ஆன்மீகம் மூன்றின் கலவையாய் இந்தத் தொடர் ஒரு நாவலாய் உங்களிடம் வைக்கப்பட போகிறது.  நேரடியாக எழுத முயற்சித்தால் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க நேர்வதால், இது நாவல் கதாபாத்திரங்களின் வடிவில் உண்மை நிகழ்வுகளாய் தொடரப் போகிறது. உங்களின் தூக்கத்தைக் கெடுக்கலாம். அல்லது கிளர்ச்சியைத் தரலாம். அல்லது உங்களைக் “கிண் கிண்” ஆக்கலாம். இப்படியான ஒரு தொடரை நீங்கள் படித்துப் பார்த்திருக்க முடியாது என்பதை மட்டும் இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் தொடர் எழுத நீண்ட பயணங்களையும், ஆராய்ச்சிகளையும், தேடல்களையும் தர வேண்டி இருக்கிறது. ஆகவே தினமும் எழுத முடியாது. ஆனால் வாரமொரு பத்தியாவது நிச்சயம் வரும்.

இடையில் குஞ்சு, பஞ்சு, ஸ்ரீ போன்றோரின் பதிவுகளும் வரலாம். அது அவர்களின் பிரச்சினை.

தொடர்ந்து எங்களுடன் பயணப்படுங்கள். உங்களின் பயணத்தில் சுவாரசியமான விஷயங்கள் நடக்கக்கூடும்.

– அனாதி


எஜமானனிடம் வேலைக்காரன் அடி வாங்குவது சரிதான்

நவம்பர் 26, 2011

மிகச் சிறுபான்மை இனத்தவரான அரசியல்வாதிகளுக்கு “போலீஸ்” மட்டும் இல்லையென்றால் தர்ம அடிகள் மட்டுமல்ல தர்மக் குத்துகள் கூட கிடைக்கும். மக்கள் சேவைக்கு வந்தவர்கள் ஏன் மக்களைப் பார்த்துப் பயப்பட்டு, துப்பாக்கி தூக்கிகளுடன் வலம் வருகிறார்கள்?

மக்கள் சேவை என்பதற்கு அர்த்தமே வேறு என்கிறார் நமது முன்னாள் முதலமைச்சர் கலைஞர். காங்கிரஸ்காரர்களோ நேரு குடும்பத்திற்குச் சொம்பு தூக்குவது ஒன்றே கட்சிப் பணி என்கிறார்கள்.

சரத்பவாரை கன்னத்தில் குத்து விட்ட கைதான் உண்மையான இந்தியனின் கை என்கிறார்கள் வாசகர்கள். இணையத்தில் சென்று தேடிப்பாருங்கள். சரத்பவார் அடிபட்டதை எத்தனை எத்தனை ரீடர்ஸ் சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்பதை. அதுமட்டுமா டிவியில் கூட சரத்பவரை பட்டயக் கிளப்பியதை சரி என்றே குரல் கொடுக்கின்றார்கள் மக்கள்.

உடனே உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்துவதாக அறிக்கைகள் வருகின்றன. உலக மகா ஊழல் குடும்பத்தின் தலைவரோ சரத்பவாரை கன்னத்தில் போட்டவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்கிறார்.  கனிமொழிக்கு ஜாமீன் மட்டும் வேண்டுமாம். இந்திய மக்களின் சொத்தினைக் கொள்ளை அடித்து டிவி நடத்தினால் அது அரசியலாம். ஒழுங்கா வேலை பார்க்கவில்லை என்று அடிபோட்டால் தவறாம்.

அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அரசு அலுவலர்களும் பொதுமக்களின் வேலைக்காரன்கள் என்கிறது அரசியலமைப்புச் சட்டம்.  நீதிபதிகளையும் சேர்த்துத்தான் சொல்லி இருக்கிறது அச்சட்டம்.

வேலைக்காரன்கள் தவறு செய்தால் அடி மட்டுமல்ல, குத்தும் கொடுக்க வேண்டும். அதுதான் மிகச்சரியானதாக இருக்கும் என்கிறது சமூகம். அய்யோ அய்யோ என்று அலறுகின்றார்கள் சிறுபான்மை கொள்ளைக்கூட்ட அரசியல்வாதிகள். காவல்துறையினர் ஒரு நொடி இவர்களை விட்டு விலகினால் தெரியும் இவர்கள் சேதி. வாய்ச்சொல்லில் வீரத்தனம் காட்டும் வேலைக்காரர்களுக்கு இருக்கும் திமிர்த்தனம் அடங்க இத்தகைய சம்பவங்கள் உதவி புரிந்திருக்கின்றன. ஆகையால் பிற வியாதிகள் ஒழுக்கமாய் நடக்க முயல வேண்டும். இல்லையெனில் பட்டை மட்டுமல்ல நடு ரோட்டில் போட்டு கொளுத்துவார்கள் இதுவரை எந்த ஒரு பிரயோசனமும் இன்றி சம்பாதிக்கும் பணத்தில் அரசு நடத்த பணம் கொடுத்துக் கொண்டிருக்கும் “மக்கள் எஜமானர்கள்”.

சரத்பவாருக்கு கன்னத்தில் கொடுத்தது சரியே என்று 123 பேரும், தவறு என்று 14 பேரும், கருத்தில்லை என்று 2 பேரும் ஓட்டளித்திருப்பை முன்வைத்து இப்பதிவு எழுதப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ்காரர் டெலிபோன் பில் பாக்கி 13 லட்சம் என்கிறது தினமணி தலையங்கம். என்ன செய்து கொண்டிருக்கிறது அரசு என்கிறது அது. காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருக்கும் சில்லறை விற்பனையில் அன்னிய முதலீடு என்பது அமெரிக்காவிடம் இந்தியாவை அடிமைப்படுத்தும் திட்டம். காங்கிரஸ் இந்தியாவின் தீமைகளுக்கு முக்கியமான கட்சி. அது விரட்டி அடிக்கப்பட வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம்.

– பஞ்சு


மூடப்பட்ட உண்மைகள்

நவம்பர் 25, 2011

அனைவரும் கீழே இருக்கும் கட்டுரையைப் படித்தே ஆக வேண்டும். வெளிச்சம் என்ற பெயர் கொண்ட அனாதியின் பிளாக்கில் சில கருப்புச் செய்திகளை வெளிச்சத்தில் கொண்டு வந்து ஆக வேண்டுமல்லவா? இக்கட்டுரையினைப் படிக்கச் செல்லுமுன், அக்கட்டுரையில் வெளியான சிறு பத்திகளைக் கீழே படிக்கவும். நமது மூளையை அரசுகள் எவ்வாறு சலவை செய்து, முட்டாளாக்கி வருகின்றன என்பதற்கு கீழே இருக்கும் பத்திகளே சாட்சி. நன்றி கீற்று மற்றும் தமிழ்குமரன் – குஞ்சாமணி ( போதுமாடா பஞ்சு ??)

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17405

“மொத்த தேசிய உற்பத்தி என்பது எப்படி ஏமாற்றும் தன்மை கொண்டது என்பது குறித்து நானும் க்ளேடினும் வெளிப்படையாக பேசிக் கொள்வோம். பெரும்பாலான மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி இருந்தாலும், ஒரே ஒருவர் லாபமடைந்தாலும் கூட நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்சியடையக்கூடும். பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாவார்கள், ஏழைகள் மேலும் எழைகளாவார்கள். ஆனால் புள்ளி விவரங்கள் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக காட்டும்”.

“இரண்டு முக்கியமான நோக்கங்களை அடிப்படையாக கொண்டு நான் செயலாற்ற வேண்டுமென்றாள் அவள். முதலாவது, நாடுகளுக்கு மிகப்பெரிய அளவிற்கு கடன் வழங்கி அந்த பணத்தை பெரும் கட்டுமான திட்டங்கள் மூலம் மெயின் பெக்டெல் ஹாலிபர்டன் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றி திரும்பவும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதை நியாயப்படுத்த வேண்டும். இரண்டாவது, கடன் வாங்கிய நாடுகளை போண்டியாக்குவதற்க்கு நான் வேலை செய்ய வேண்டும் (அதாவது மெயினுக்கும் மற்ற அமெரிக்க நிறுவனங்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொடுத்த பிறகுதான்) அப்படி அவற்றை ஓட்டாண்டி ஆக்கினால்தான் அவை எப்போதும் கடன்காரர்களுக்கு கட்டுப்பட்டு கிடக்கும். ராணுவதளங்களோ, எண்ணெய் போன்ற இயற்கை வளங்களோ, அய்.நா. சபையில் ஒட்டுக்களோ தேவைப்படும் போது இந்த கடன் வலையில் விழுந்துவிட்ட நாடுகளால் மறுக்க முடியாது”.

“எல்லா புதிய மின் நிலையங்களும், விநியோக வசதிகளும் நிர்மாணிக்கப்பட்ட பிறகு இந்த நாட்டின் பொருளாதாரம் காளான் போல திடீரென்று வளர்ந்துவிடும் என்று நம்பச்செய்யும் வகையில் நீ பொருளாதார முன்னறிவிப்புகள் செய்ய வேண்டும் “.

“சில நேரங்களில் ஒரு நாட்டிற்க்கு நவீன மின் உற்பத்தி கருவிகள் அமைக்க கடன் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருக்கும். அந்த நேரங்களில் இந்த கடனால் நல்ல பொருளாதார வளர்ச்சி ஏற்ப்படும் என்று நிருபித்து காட்டுவது என் பொறுப்பாகும். இதன் பொருள் பொருளாதார வளர்ச்சிக்காகத்தான் கடன் வழங்கப்படுகிறது என்று நம்பச்செய்வதுதான். மொத்த தேசிய உற்பத்தியில் மிக அதிக அளவு வளர்ச்சியை காட்டும் திட்டமே அங்கீகரிக்கப்படும். ஒரு வேலை ஒரே ஒரு திட்டம்தான் பரிசீலனையில் உள்ளது என்றால் அந்த திட்டத்தின் காரணமாக நாட்டின் உற்பத்தி உச்சகட்ட வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று நான் நிருபித்து காட்ட வேண்டியிருக்கும். .

“இந்தத் திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களுக்கு மிக அதிகம் லாபம் பெற்றுத் தரக்கூடியவை. கடன் பெறும் நாட்டிலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்கார குடும்பங்களுக்கு மேலும் செல்வத்தை அள்ளித் தரக்கூடியவை. அதே நேரத்தில் அந்த நாடு தற்சார்பை இழந்து நம்மை சார்ந்து இருக்கும்படி செய்துவிடக்கூடியது என்ற விடயம் வெளியே சொல்லப்படுவதே இல்லை. இப்படி நாடுகள் அமெரிக்காவை அண்டியிருக்கச் செய்து அதன் மூலம் அவற்றின் விசுவாசத்தை உறுதிப்படுத்துவதுதான் இத்திட்டங்களின் அடிப்படை நோக்கம் என்ற உண்மை வெளிவருவதே இல்லை. எவ்வள்ளவுக்கெவ்வளவு கடன் அதிகமாக உள்ளதோ அவ்வளக்கவ்வளவு நல்லது. ஆனால் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு அளிக்கப்படும் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்கள்தான் இக்கடன்களை கட்ட பலி கொடுக்கப்படும் என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது”.

-ஜான் பெர்கின்ஸ்-ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்


குஞ்சின் பார்வையில் “கொலவெறி”

நவம்பர் 25, 2011

சேரில் இருந்து எழும்பிய குஞ்சு, எதிரே இருந்த போட்டோவைப் பார்த்ததும் அப்படியே உட்கார்ந்து கொண்டான். எழுந்தவன் வேலை முடிக்காமல் விடமாட்டானே, இது என்னடா கர்மம்? செவத்துல வச்சு தேய்க்கிறாப்பல என்று நினைத்த குஞ்சு அந்தப் போட்டோவை கொலவெறி பார்வையில் பார்த்தான்.

”ஏண்டா குஞ்சு, நல்லாத்தானேடா இருக்கு” என்றால், ”போடா ஒம்போது” என்றான்.  ஏம்பா வாசகா, உனக்கு அப்படியா இருக்கு?

தனுஷ் ஏன் கொலவெறி கொலவெறின்னுப் பாடினாருன்னு கேட்டா, பக்கத்துல்ல ஐஸ்வர்யாவை வச்சுக்கிட்டு வேறென்ன கான கீதமா பாடுவாருன்னு கேக்குறான் குஞ்சு.

அவனவனுக்குத்தானே தெரியும் காதல், கலைப்பு, குத்து, படுக்கையெல்லாம்னு சொம்பு தூக்கி தலைகீழா நின்னு பேசினான். யார்ரா இவன்னு கேட்டா, நாந்தாண்டா உங்கப்பன், ஊருக்கெல்லாம் சித்தன் என்கிறான் அந்தச் சொம்பு தூக்கி.

காசைப் பாத்தா, கஞ்சியைப் பத்திய கவலை என்னடான்னு கேட்கிறான் பினுஷ்சூ. காசேதான் சாமாண்டா என்கிறான் கூடச் சேர்ந்து.

கொலவெறி எதுக்கு வரனும்? அதான் வந்துடுச்சே பின்னே என்னாங்கிறானுவ மார்கெட்டுல. பினுஷ் பாடுன பாட்டைக் கேட்டா, சிரி சிரின்னு சிரிக்கிறானுவ.

வறட்டுப் பிரதேசத்துல புல்லு மொளச்சா எப்படி இருக்கும்னு கேட்டா, அதுக்கு ஏழாம் அறிவுப் பார்க்கனும்டாங்கிறானுவ. ஏழாம் அறிவு ஏதோ ஒரு கேம் அதான் வீடியோ கேம் அதைப் பார்த்து அப்படியே டப்பா அடித்தானாம் அந்த முள்ளா. பேப்பரில கூட வந்துச்சே படிக்கலையான்னு கேட்டா, நானென்ன எப்போ பார்த்தாலும் கவுச்சி வாடையடிக்கும் பேப்பரையே உத்து உத்தா பாப்பேன்னு கேட்கிறான் முள்ளா.

பயபுள்ளே, கொலவெறி கொலவெறின்னு பாடி, அனாதி பிளாக்குல கொலவெறி ஏற்படுத்தும் பதிவ எழுத வச்சுட்டானேன்னு நினைக்கிற குஞ்சின் ரசிக மகாப் பெருமக்களே, இது குஞ்சு எழுதியது. வாக்கியங்களை மாற்றி மாற்றிப் போட்டுப் படித்துப் பாருங்கள். புரியும்.

இது ஒரு அட்சரசுத்தமான இலக்கியப் பதிவு.

– குஞ்சு


%d bloggers like this: