கொலை செய்யும் சினிமாக்காரர்கள்

http://indiatoday.intoday.in/story/ronit-roy-was-not-drunk-at-time-of-accident/1/157656.html

ஹிந்தி சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் ரோனிட்ராய் என்ற பிரகஸ்பதி பென்ஸ் காரை தண்ணியடித்து விட்டு ஓட்டி பலரின் மீது மோதி, அதில் இருவர் கவலைக்கிடம் என்று செய்தி வந்திருக்கிறது.

சல்மான் கான் என்ன செய்தார்? ஐஸ்வர்யாவும் இவரும் காதலித்துத் திரிந்தனர். அதன் பின் என்ன நடந்ததோ, ஐஸ்வர்யா விவேக் ஓபராயுடன் சுற்றினார். இப்போது ஐஸ்வர்யா எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்த ஒன்று. சல்மானின் காதல் தோல்வி அடைந்ததற்காக இருவர் உயிர் விட்டனர். இந்த பிரகஸ்பதி தண்ணி அடித்து விட்டு, சாலையோரமாய் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்தான். அதுமட்டுமா, காட்டிற்குள் சிவனேன்னு சுற்றிக் கொண்டிருந்த மான்களை வேறு கொன்றான். இந்திய அரசியல் சட்டம் இவர்களை என்ன செய்தது? என்னதான் செய்து விடும்?

அதுமட்டுமல்ல, மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த ஒரு பிரகஸ்பதி (பெயர் மறந்து விட்டது) இன்றைக்கு ஜாலியாய் படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் டீவியில் காம்பயரிங் செய்து கொண்டிருந்த ஒரு இளிச்சான்வாய் காம்பியரர், சென்னைப் போலீஸ்காரரை மிரட்டிய சம்பவம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னும் இதைப் போல எத்தனையோ இருக்கின்றது.

சினிமாக்காரர்களுக்கு பெரும்பகுதி கருப்பு பணமாகத்தான் கிடைக்கும். கருப்புப் பணத்தினை ஒழிக்க வேண்டுமானால் சினிமாக்காரர்களின் வீடுகளில் தினமும் ரெய்டு விட வேண்டும். அதை விடுத்து, எங்கெங்கு ரெய்டுகள் நடத்துவது எல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தை.

ஒரு ஹீரோ, தன் ரசிகர்கள் என்றுச் சொல்லும் ரவுடிகளுக்கு பணம் கொடுத்து, தியேட்டர்களில் ரகளைகளை உருவாக்கி வருகிறார். அதன் மூலம் செய்திகளில் தன் பெயர் இடம்பெறச் செய்கிறார். எவருக்குத் தெரியும் இவர்களின் அட்டூழியம்.

இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல், தான் கொடுக்கும் பணத்தில் பிறரைக் கொல்லவும் துணியும் சினிமாக்காரர்களுக்கு கொட்டிக் கொண்டிருக்கும் ரசிகக் கண்மணிகளை நாம் என்னவென்றுச் சொல்வது? மனிதர்களில் முட்டாள்கள் என்று ஒருவகையினர் உண்டு. ஆனால் இவர்களை என்னவென்று அழைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்.

எவ்வளவுதான் நடந்தாலும் தொப்புள் அழகைப்பார், தொடை அழகைப்பார், உதட்டழகைப்பார் என்றுச் சொல்லும் மீடியாக்களும், டிவிக்களும் இருக்கும் வரையில் எவரும் கவுச்சி வாடையடிக்கும், மூத்திர வாடையடிக்கும் நடிகைகளின் அங்கங்களை தன் கவனத்திலேற்றி சினிமா பார்க்கச் செல்வதை நிறுத்தி விடப் போவதில்லை.

– பஞ்சு

குறிப்பு : குஞ்சு உனக்கு எரியுமே?????

2 Responses to கொலை செய்யும் சினிமாக்காரர்கள்

  1. muru2005 சொல்கிறார்:

    தான் கொடுக்கும் பணத்தில் பிறரைக் கொல்லவும் துணியும் சினிமாக்காரர்களுக்கு கொட்டிக் கொண்டிருக்கும் ரசிகக் கண்மணிகளை நாம் என்னவென்றுச் சொல்வது? மனிதர்களில் முட்டாள்கள் என்று ஒருவகையினர் உண்டு. ஆனால் இவர்களை என்னவென்று அழைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்.

  2. Thiru சொல்கிறார்:

    //எவ்வளவுதான் நடந்தாலும் தொப்புள் அழகைப்பார், தொடை அழகைப்பார், உதட்டழகைப்பார் என்றுச் சொல்லும் மீடியாக்களும், டிவிக்களும் இருக்கும் வரையில் எவரும் கவுச்சி வாடையடிக்கும், மூத்திர வாடையடிக்கும் நடிகைகளின் அங்கங்களை தன் கவனத்திலேற்றி சினிமா பார்க்கச் செல்வதை நிறுத்தி விடப் போவதில்லை.//

    Super !!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: