காலம் சொல்லும் கேள்விகளுக்கான பதில்கள்

காலம் எல்லாவற்றுக்குமான பதில்களை வைத்திருக்கும். எந்த ஒரு புரியாத, விளங்கிக் கொள்ளாத விஷயங்களுக்கும் காலம் தான் பதில் சொல்லும். அப்படியான சில பதில்களை நாம் இங்கே பார்க்கலாம். ஹிட்லர்  நாஜிப்படைகளை வைத்து யூதர்களைக் கொன்று குவித்தபோது நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார் தன் முடிவு தற்கொலையாக மாறிவிடும் என்று. ஈராக்கை ஆட்டிப்படைத்த சதாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் தான் தூக்குக் கயிற்றில் தொங்குவோம் என்று. இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘டிக்டேட்டர்ஸ் முடிவு’ என்ற ஒரு கட்டுரை வெளிவந்திருப்பதைப் படித்த போது, கனிமொழியின் இன்றைய நிலை பற்றி ஜூனியர் விகடனில் வெளிவந்திருக்கும் ஒரு பத்தியைப் படித்தது உடனடியாக நினைவுக்கு வந்தது.

பாபம், புண்ணியம், தர்மம் இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை தரக்கூடிய சம்பவத்தை தான் ஒரு நாத்திகர் என்று வாய்ச்சாலமடிக்கும் கலைஞர் உருவாக்கி இருப்பதை விதியின் வேடிக்கை விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

திகார் சிறையில் கனிமொழி அனுபவிக்கும் இன்பங்களைப் பற்றிய அந்தப் பத்தியில் ஒரு பகுதியைப் படித்துப் பாருங்கள்.

‘சிறையில் கனிமொழி படித்து உறங்க, சிமென்ட் பெஞ்ச் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதுகின்றன. அது தவறு.  அறையில் பெஞ்ச்சே கிடையாது. வெறும் தரை மட்டும்தான். உட்காருவதற்கான திண்டுகூட கிடையாது. உறங்குவது, உட்காருவது எல்லாமே தரையில்தான். ஆரம்பத்தில் தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாத காரணத்தால், மிகவும் தடுமாறினார், சிரமப்பட்டார் கனிமொழி. தரையில் அமரத் தயங்கி, அறைக்குள் பெரும்பாலான நேரம் நடந்தபடியே இருப்பார்.

அவர் கைதாகி உள்ளே சென்ற நேரம், கடுமையான புழுக்கம் நிலவி​யது. வியர்த்துக் கொட்டிய நிலையில் கனிமொழியைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தரை முழுக்கத் தண்ணீரைத் தெளித்து அறையின் புழுக்கத்தைக் குறைக்கப் போராடு வார். சில நேரங்களில் பெட்ஷீட்டை நனைத்து விரித்துக்கொள்வார். இப்போது, மழை பெய்யும்போது இன்னமும் சிரமப்படுகிறார். பூச்சிகள் நிறையவே வந்துவிடும். அதனை அத்தனை எளிதில் விரட்டிவிட முடியாது, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இப்போது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார்.

சாப்பாடு விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டார். சில நேரங்களில் வீட்டுச் சாப்பாடு, சிறை சாப்பாடு இரண்டையுமே தவிர்த்துவிடுவார். சிறையில் அவருக்கான ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள்தான். எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தாலும், வைத்து எழுதுவதற்கான வசதி உள்ளே இல்லாததால் அவரால் எழுத முடிவது இல்லை. காலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்துவிடுவார், பகல் நேரத்தில் உறங்கவே மாட்டார்.

கொசுக்கடி, பூச்சி தொல்லையைக்கூட சமாளித்துக் கொள்ளும் கனிமொழியால் தண்ணீர்ப் பிரச்னை​யைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனென்றால் ஸ்கின் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு, உள்ளே தண்ணீர் மோசமாக இருக்கிறது.

மொழிப் பிரச்னையால் பிற கைதிகளுடன் பேசுவது அவருக்குச் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உள்ளே இருக்கும் ஒரு சில தமிழ்க் கைதிகளுடன் அடிக்கடி உரையாடுவார். பெண் கைதிகளுடன் சேர்ந்து கைத்தொழில் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

சந்திக்க வருபவர்கள், பழங்கள், பலகாரங்கள் வாங்கி வந்தால், கனிவோடு தவிர்த்துவிடுவார். காரணம் பழங்களோ சாப்பாடோ வீணாகி விட்டால் அவற்றை அப்புறப்படுத்தக்கூட நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அதுவே கொசுப் பிரச்​னையைப் பெரிதாக்கி விடும் என்பதால்தான் அந்த எச்சரிக்கை!” என்றார்கள். 

ஏன் கனிமொழிக்கு இந்த நிலை வந்தது என்று யோசித்துப் பாருங்கள். முன்னோர்களின் பாபம், புண்ணியம் இவற்றில் இப்போது உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை பிறந்திருக்கும். ஆம் ! கலைஞர் செய்த பாபங்கள் அவரின் மகளுக்கு வந்து விடிந்திருக்கிறது.

பிசினஸ் செய்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களின் பெயரில் செய்ய மாட்டார்கள். காரணம் என்னவென்றால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தன் மனைவியோ, மகளோ காவல் நிலையத்திற்கோ அல்லது கோர்ட் படியேறவோ நேரிடும் என்பதால் தான்.  பெண்கள் கோர்ட்டு படியேறுவதையும், சிறைச்சாலைக்கு செல்வதையும் மரணத்தை விட கொடுமையானது என்று கருதினார்கள். மரணம் என்பது ஒரு முறைதான் வரும். ஆனால் அவமானம் ஏற்பட்டால் சாகும் வரை நினைவுகளூடே வந்து கொன்று கொண்டே இருக்கும் அல்லவா?

உலகத்தின் பெரும் வலிமை கொண்ட சோனியா காந்தியுடன் பேசக்கூடிய வல்லமை, கட்டுப்பாடான இயக்கத்தின் தலைவர், இந்தியாவின் பிரதமருடன் நேரடியாகப்  பேசும் வல்லமை, சாணக்கியத்தனம்,  அனேக களம் கண்ட அனுபவம், பெரும் புலமை எல்லாம் இருந்தும் தன் மகள் சிறைச்சாலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லையே ஏன்?

என்னை எதுவும் செய்யவே முடியாது என்று கொக்கரித்த அமர்சிங் கோர்ட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்று கதறுகிறார். செய்த பலன் கோர்ட்டில் நீதிபதியின் வடிவில் வந்து உட்கார்ந்திருக்கிறது.

எல்லாம் அவன் செயல் என்பதல்ல இங்குப் பதில். எல்லாம் செய்த வினை என்பதுதான் உண்மை. நாத்திகம் பேசிக் கொண்டிருப்பவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஆத்திகத்தின் மீதான் நம்பிக்கையை அதிகரிக்க வைப்பது என்பது ‘அந்தக் கடவுளின் கைங்கரியம்’ அன்றி வேறென்ன?

– அன்புடன் அனாதி

குறிப்பு : தேர்தல் வேலைகளால் தொடர்பதிவுகளை நண்பர்கள் எழுதவில்லை என்றுச் சொன்னார்கள். இதுவரையிலும் தொடர்ந்து தளத்துக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றிகள். எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நண்பர்கள் சூடான பதிவுகளைக் கொட்டுவார்கள்.

நன்றி : ஜூனியர் விகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: