(10) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – எட்டாம் அறிவு திரை விமர்சனம்

சினிமா உலகம் துரோகமும், துரோகிகளும் நிறைந்த உலகம் என்றுச் சொல்லுவார் நண்பர். ஏன் என்பதற்கு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது சில சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் தெரியும். சினிமாவில் பெரிதும் நசுக்கி, அழிக்கப்படுபவர்கள் பெண்களும், உதவி இயக்குனர்களும் தான். சில பல பெரிய இயக்குனர்களிடம் சரக்கே இருக்காது. அவர்களின் படங்கள் புதுமையாக இருக்கும். சினிமாக் கனவில் வரும் இயக்குனர்களிடமிருந்து உருவப்படும் கதைகளை அப்பிரபல இயக்குனர்கள் உருவி விடுவார்கள்.

குமணா என்ற படம் அமோக வெற்றி அடைந்த கதை உங்களுக்குத் தெரியும். இப்படத்தின் இயக்குனர் பற்றி பரபரப்பாக இப்போது பேசிக் கொள்கிறார்கள். இவர் ஒரு அறிவுத் திருடன் என்று பிரபல இயக்குனர்கள் முதற்கொண்டு, இன்றைக்கு சினிமாவில் குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் பலருக்கும் தெரியும். இதைப் பற்றி வெளியில் பேசினால் ” அவர் எவ்ளோ பெரிய டைரடக்கரு, அவராவது அப்படியாவது” என்பார்கள். இதுதான் சினிமா.

நண்பனின் கதையைத் திருடி, படம் எடுத்துக் கொண்டிருந்த போது, தன் கதைதான் இது என்று தெரிந்தகொண்டவர் பிரச்சினையைக் கிளப்ப, பஞ்சாயத்து நடிகரிடம் சென்றது. அவர் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் விட, பஞ்சாயத்து நடந்து, நடிகரின் அடுத்த கால்சீட்டினை நண்பருக்கு பெற்றுத்தர ஒரு வழியாக படம் வெளிவந்து வெற்றி வாகை சூட, இயக்குனர் லைம்லைட்டுக்கு வந்தார். அந்த நண்பரோ பெரிய நடிகரை வைத்து படமெடுத்து, காணாமலோ போய் விட்டார்.

இந்த இயக்குனரின் குமணா படத்திற்கு அடுத்த படம் குஜினி. இப்படம் ஒரு ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காப்பி என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

சொந்தமாக யோசித்து ஒரு படத்தை எடுக்க இயலாதவர்கள் எல்லாம் பெரிய இயக்குனர்கள் என்ற போர்வையில் சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது எடுத்து வரும் எட்டாம் அறிவு படம் எவனிடம் இருந்து திருடியதோ தெரியவில்லை.

சினிமா உலகில் பிழைக்கத் தெரிந்த குடும்பம் எது தெரியுமா? அது மார்க்கண்டேயரின் மன்மத குடும்பம் தான். எங்கு பசை இருக்கிறதோ அங்கு ஒட்டிக் கொள்வர் இக்குடும்பத்தினர். சமீர் படத்தில் தன் பையனை நடிக்க வைக்க லட்சக்கணக்கில் பணம் கொடுத்து, இன்று பையனை பெரிய நடிகராக்கி வைத்திருக்கிறார் மார்க்கண்டேயன். எட்டாம் அறிவு தயாரிப்பாளர் யாரென்று பார்த்தால், ஊழல் பணத்திலே பிறந்து வளர்ந்த ஒரு மகான். தமிழகத்தின் மிக சிறந்த தயாரிப்பாளராம் அவர். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலா படம் எடுக்கின்றார்கள் ? ஊழல்வாதிகளை மேடையில் ஏற்றி வைத்துக் கொண்டாடும் அயோக்கியத்தனமான செயலை வேறு எங்காவது நீங்கள் பார்த்திருப்பீர்களா?

ஆன்மீகம் பற்றிப் பேசும் மார்க்கண்டேயருக்கு, பிறருக்கு அறிவு சொல்ல என்ன தகுதி இருக்கிறது? யோசித்துப் பாருங்கள் நண்பர்களே?

பிறர் கதையைத் திருடிய இயக்குனர் ஒரு பெரிய இயக்குனர். ஊழல்வாதியிடம் சம்பளம் பெறுபவர் ஆன்மீக பேச்சாளர். இவர்களெல்லாம் பெரிய மனிதர்களாம்? வேடிக்கையாக இல்லை உங்களுக்கு ?

– அனாதி

குறிப்பு : இது ஒரு நாவல். யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல. சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் எவருடனவாது ஒத்துப் போனால், அதற்கு நான் பொறுப்பல்ல.

7 Responses to (10) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – எட்டாம் அறிவு திரை விமர்சனம்

 1. prakash சொல்கிறார்:

  Assissin creed game than 7am arivu….

 2. mohna சொல்கிறார்:

  நானும் என் நண்பனின் மூலம் கேள்வி பட்டு இருக்கேன், மார்கண்டேய நடிகர் silver sands hotel- இல் அக்காலத்திலேயே சிறுசுகளை தள்ளிக்கொண்டு செல்வாராம் அந்த யோக்கிய, ஒழுக்க சீலர்…..

  • அனாதி சொல்கிறார்:

   இவரைப் பற்றி என்றோ ஒரு நாள் தனிப் பதிவே எழுதியிருந்தோம். தள்ளிக் கொண்டு போவது பிரச்சினை இல்லை. அதை வலுக்கட்டாயமாகச் செய்ய வைக்கின்றார்கள் பாருங்கள் அதுதான் பிரச்சினை. பாலியல் வன் கொடுமைக்குள் தள்ளுவது என்று பெயர். – குஞ்சு

 3. nivisugi சொல்கிறார்:

  குறை கண்டுபிடித்தே வாழ்பவர் பலர் . யார் எதை செய்தாலும் குறை கண்டால் , குறை காண்பவர் எதையும் செய்யத் தெரியாதவர் என்று அர்த்தம். கோப்பி அடித்தாலும் எல்லோரும் ரசிக்கும்படி எடுப்பது மிகப் பெரிய கலை . எதையாவது எழுத வேண்டும் என்பதுவே உங்கள் நோக்கம் என புரிகிறது

 4. மீனாட்சி நாச்சியார் சொல்கிறார்:

  இதையே தான் நேற்று குன் டிவியில் எட்டாம் அறிவு பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நான் நினைத்து கொண்டிருந்தேன். மலத்தில் பிரட்டி எடுத்த காசென்றாலும் இவர்கள் தயங்காமல் வாங்கி பைகளை நிரப்பக் கூடியர்வர்கள் தான் இவர்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: