ராகுலும் எதிர்கால இந்தியாவும்

ஊழலை ஒழிக்க முற்படுவோர் ஜன நாயக வழியில் அரசியலுக்கு வந்து போராட வேண்டுமென்று மொழிந்திருக்கிறார் ராகுல் கான். ராஜீவ்விற்கு மகனாய் பிறந்த ஒரு காரணத்தால் மட்டுமே அகில இந்திய காங்கிரஸ்ஸின் செயலாளர் பதவிக்கு வந்த ராகுலுக்கு, அரசியல் பற்றிப் பேச வேறு என்ன தகுதி இருக்கிறது என்றுப் புரியவில்லை.

என்ன பேசினாலும் சரிதான் என்ற மன நிலைக்கு ராகுல் கான் வந்திருப்பது காலத்தின் கட்டாயம் போலும். இத்தனை ஆண்டுகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் இந்தியாவில் ஏழைகள் குறைந்திருக்கிறார்களா? விலைவாசி குறைந்திருக்கிறதா? ஊழலற்ற ஆட்சி கொடுக்க முடிந்ததா? எதுவும் செய்ய முடியவில்லை.

ஒரே ஒரு முறை ஆட்சிக்கு வந்த பாஜகாவால் மட்டும்தான் “அணுகுண்டு” போடப்பட்டது. இந்தியாவை உலக அரங்கில் வல்லரசாக அறிவித்தது பாஜக. காங்கிரஸ் அல்ல.

எந்த உலகிலும் இல்லாத மனித உழைப்பாளர்கள் அதிகமுள்ள இந்தியாவில், பன்னாட்டுக் கம்பெனிகளிடம் அடிமை வேலை பார்க்க, இந்தியர்களின் உழைப்பை உறிஞ்ச பன்னாட்டு வர்த்தக நடவடிக்கையை ஏற்படுத்தியது காங்கிரஸ் கட்சி. எதற்குமே கலங்காத திரு மன்மோகன் சிங்கின் ஆட்சியில் இந்திய மக்களின் உழைப்பினை உறிஞ்சும் வெளி நாட்டு முதலீட்டு அனுமதி கொடுக்கப்பட்டது. சம்பளங்கள் ஏற்றப்பட்டன. ஆனால் பொருட்களின் விலையோ விண்ணில் பறந்தது. அதிகம் சம்பளம் வாங்குகிறோம் என்று அலப்பறையும் செருப்பு நக்கிகளுக்கு(சம்பளக்காரர்கள்) இதுவரை தெரியவில்லை தாங்கள் ஏமாற்றுப்படுவது.

மீடியாவைப் பற்றிய ஒரு வார்த்தை உங்களுக்கு. சமீபகாலங்களில் மீடியாக்களின் தேர்தல் கணிப்புகள் அனைத்தும் தவறானவை என்பதை நீங்கள் புரிந்திருக்கலாம். ஏன் என்று ஒரு கேள்வி கேட்டிருக்கின்றீர்களா? அப்படிக் கேட்டிருந்தால்தான் இந்தியா எங்கோ சென்றிருக்குமே?

மீடியாக் கணிப்புகள் தவறானவை என்பதற்கு ஒரு உதாரணம் ” கடந்த தமிழக தேர்தல் முடிவுகள்”.

ஏன் மீடியாக்கணிப்புகள் தவறானது? ஒரே காரணம் “கம்பெனிகளின் விளம்பர அடிமைத்தனத்தினை முன்னெடுத்து செல்பவை மீடியாக்கள் தான்”.

மும்பைத் தேர்தலில் பணம் கொடுத்து ஒரு பிரபல பத்திரிக்கையில் “ஆட்சியாளர்களின் மேன்மை” எழுதப்பட்டது. பத்திரிக்கைகளைப் படிப்போரின் மூளையின் மீது வெள்ளை அடிக்கப்பட்டது. அதுமட்டுமா பிரபல கம்பெனிகள் கொடுக்கும் கோடிக்கணக்கான பணம் மீடியா மாஃபியாக்களுக்கு போதுமானதாக இருந்தது.

டெய்லி பயனியர் வெளியிட்ட 2ஜி ஊழல், இன்றைக்கு அப்பத்திரிக்கையில் 2ஜி பற்றிய தொடர் செய்தி வெளிவரவே இல்லை. மீடியா மாஃபியா என்று ஏன் சொல்கிறேன் என்றால், 2ஜி ஊழலில் ஒரு பிரபல பத்திரிக்கைக்காரனும் இருப்பதை சில பத்திரிக்கைகள் வெளியிட்டதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

சமீப காலங்களில் மீடியாக்களில் மோடியா ராகுலா என்று கணிப்புகள் வெளி வ்ந்த வண்ணமிருக்கின்றன. எந்த ஒரு தகுதியும் இல்லாத ராகுல் இந்திய பிரதமராக வருவதை மீடியாக்கள் வரவேற்பது மிகப் பெரிய ஜன நாயக ஏமாற்று வேலை.

ராகுலை மோடியுடன் ஒப்பிடுவது என்பதே தேசத்துரோகம். ஏனென்றால் மோடியின் குஜராத் இந்திய மாநிலங்களில் முன்மாதிரியானது. உலக அரங்கில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி “உலக மகா ஊழலில் நம்பர் ஒன் நாடு இந்தியா” என்பதில் முன்மாதிரியானது.

ராகுல் எதிர்கால இந்தியாவின் பிரதமரானால் அது இந்தியாவின் கருப்பு சரித்திரம் என்றே சொல்ல வேண்டும்.

– Panchu

One Response to ராகுலும் எதிர்கால இந்தியாவும்

  1. Thiru சொல்கிறார்:

    //ராகுலை மோடியுடன் ஒப்பிடுவது என்பதே தேசத்துரோகம்.//

    நெத்தியடி.

    மோடிக்கு இது ஒரு பெருத்த அவமானம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: