ராதாரவியின் அலப்பறை

ஒக்ரோபர் 30, 2011

அதிமுக தலைமைக் கழகப் பேச்சாளர் திரு ராதாரவி பற்றிய ஒரு பத்தியை ஜூவியில் படித்தேன். ராதாரவியின் அரசியல் தாவல்களைப் பற்றி நமக்கெல்லாம் நன்றாகவே தெரியும். கடைந்தெடுத்த அரசியல் பச்சோந்தி. ராமதாசை விட ஒரு படி மேல். திரு ராதாவின் மகன் என்பதால் இப்படிச் சொல்ல வேண்டி இருக்கிறது. ராமதாசுக்கு முன் வரலாறு இல்லை. ஆனால் ராதாரவியின் தந்தை எப்படிப்பட்ட தன்மானச் சிங்கம். பிளைமவுத் காரில் வைக்கோல் கட்டுகளை வைத்து அனுப்பி புரட்சி சிந்தனையாளர். அவருக்கு மகனாகப் பிறந்து விட்டு, கட்சிக்கு கட்சி தாவிக் கொண்டு பேட்டி கொடுத்துக் கொண்டிருப்பதை நினைத்தால் என்ன தோன்றுகிறது தெரியுமா? வேண்டாம் விட்டு விடுவோம்.

ராதாரவியுடன் போட்டோ எடுத்துக் கொண்டதைக் காட்டினாலே ஃபைனான்சியர்ஸ் கடன் கொடுத்து விடுவதால் தினசரிகளில் அறிக்கை கொடுத்தாராம். எந்த ஃபைனான்சியர் போட்டோவைப் பார்த்து விட்டு, கடன் கொடுக்கின்றான் என்று தெரியவில்லை. அவர்கள் எல்லாம் என்ன முட்டாளா? அறிக்கை விடும் போது யோசிக்க வேண்டாம். கேட்கின்றவர்கள் எல்லாம் என்ன கேனயர்களா? இன்றைக்கு கிராபிக்ஸில் போட்டோ என்ன வீடியோவே எடுக்கலாம். அதையெல்லாம் பார்த்து விட்டு பணம் கொடுக்க ஃபைனான்சியர் என்ன பைத்தியக்காரனா? வேடிக்கையாக இல்லை. ராதாரவிக்கு வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருக்கிறது. மீடியாவில் வரும் ஒரு சில தகவல்கள் முரண்களை ஏற்படுத்தும்.  நாங்கள் அடிக்கடி மீடியா மாஃபியா என்றுச் சொல்வோம் அல்லவா? அதற்கொரு எடுத்துக்காட்டுத்தான் இது. இனி ராதாரவியின் அறிக்கையை கீழே படியுங்கள். செய்திகளை வெளியிடும் முன்பு யோசிக்க வேண்டாமா பத்திரிக்கைகள்? – பஞ்சு

என் பெயரையோ அல்லது சொத்தையோ காரணம் காட்டி, அதை என் உறவினர் களோ நண்பர்களோ எதற்காவது பயன் படுத்தினால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாதீர்கள்…’ என்று தீபாவளி அன்று செய்தித்தாளில் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார், ராதாரவி.

என்ன விஷயமாம்?

”நான் நடிகர் சங்கச் செயலாளரா இருக்கேன். அதனால், நிறைய நிகழ்ச்சிகளுக்குப் போறேன். விதவிதமான மனிதர்களைச் சந்திக்கிறேன். நாகரிகம் கருதி அந்தச் சபையில் எல்லாம் சிரிக்கிறேன், அவங்ககிட்ட அன்பாப் பேசறேன். அந்த மாதிரி நேரத்தில், சிலர் ஆர்வமா அதை போட்டோவா எடுத்துக்கிறாங்க.  எனக்கு அதிகப் பழக்கமே இல்லாத அந்த மாதிரி ஆட்கள்தான், ‘எனக்கு ராதாரவி நல்ல பழக்கம்’னு சொல்லிக்கிட்டு, ஒரு சில ஃபைனான்ஸியர்களிடம் பணம் வாங்கிடுறாங்க. பணம் தந்தவங்க எனக்கு போன் செய்து, ‘உங்களோட ஃப்ரெண்ட்னு சொன்னார். அதான் சார் பணம் கொடுத்தேன்’கிறாங்க. ‘ஏம்பா, இப்போ போன் செய்ற நீங்க, பணம் கொடுக்கிறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு போன் பண்ணி விசாரிச்சு இருக்கலாமே..?’னு ஆதங்கப்படுறதைத் தவிர, நான் அதுக்காக என்ன பண்ண முடியும்? தொடர்ந்து இதுபோல சில சம்பவங்கள் நடக்கவே… மனசுக்கு உறுத்தலாகித்தான் என் வக்கீலிடம் என்ன செய்யலாம்னு கேட்டேன். அவர்தான் இங்கிலீஷ்-தமிழ் தினசரிகளில் விளம்பரம் கொடுக்கச் சொன்னார். நான் இப்ப ஆளும் கட்சியில் தலைமைக் கழகப் பேச்சாளரா இருக்கேன். தமிழ்நாட்ல அம்மா அப்பழுக்கு இல்லாத ஒரு ஆட்சியை நடத்திட்டு வர்ற இந்தச் சூழல்ல, இதுமாதிரி ஆட்களால என்னோட பேருக்கும் கட்சிக்கும் இழுக்கு வரக் கூடாதுன்னு தெளிவுபடுத்தத்தான் இந்த அறிக்கை!” என்று விளக்கினார் ராதாரவி.


கொலை செய்யும் சினிமாக்காரர்கள்

ஒக்ரோபர் 28, 2011

http://indiatoday.intoday.in/story/ronit-roy-was-not-drunk-at-time-of-accident/1/157656.html

ஹிந்தி சினிமாவில் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் ரோனிட்ராய் என்ற பிரகஸ்பதி பென்ஸ் காரை தண்ணியடித்து விட்டு ஓட்டி பலரின் மீது மோதி, அதில் இருவர் கவலைக்கிடம் என்று செய்தி வந்திருக்கிறது.

சல்மான் கான் என்ன செய்தார்? ஐஸ்வர்யாவும் இவரும் காதலித்துத் திரிந்தனர். அதன் பின் என்ன நடந்ததோ, ஐஸ்வர்யா விவேக் ஓபராயுடன் சுற்றினார். இப்போது ஐஸ்வர்யா எங்கே இருக்கிறார் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்த ஒன்று. சல்மானின் காதல் தோல்வி அடைந்ததற்காக இருவர் உயிர் விட்டனர். இந்த பிரகஸ்பதி தண்ணி அடித்து விட்டு, சாலையோரமாய் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்தான். அதுமட்டுமா, காட்டிற்குள் சிவனேன்னு சுற்றிக் கொண்டிருந்த மான்களை வேறு கொன்றான். இந்திய அரசியல் சட்டம் இவர்களை என்ன செய்தது? என்னதான் செய்து விடும்?

அதுமட்டுமல்ல, மும்பையில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த ஒரு பிரகஸ்பதி (பெயர் மறந்து விட்டது) இன்றைக்கு ஜாலியாய் படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மக்கள் டீவியில் காம்பயரிங் செய்து கொண்டிருந்த ஒரு இளிச்சான்வாய் காம்பியரர், சென்னைப் போலீஸ்காரரை மிரட்டிய சம்பவம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னும் இதைப் போல எத்தனையோ இருக்கின்றது.

சினிமாக்காரர்களுக்கு பெரும்பகுதி கருப்பு பணமாகத்தான் கிடைக்கும். கருப்புப் பணத்தினை ஒழிக்க வேண்டுமானால் சினிமாக்காரர்களின் வீடுகளில் தினமும் ரெய்டு விட வேண்டும். அதை விடுத்து, எங்கெங்கு ரெய்டுகள் நடத்துவது எல்லாம் மக்களை ஏமாற்றும் வித்தை.

ஒரு ஹீரோ, தன் ரசிகர்கள் என்றுச் சொல்லும் ரவுடிகளுக்கு பணம் கொடுத்து, தியேட்டர்களில் ரகளைகளை உருவாக்கி வருகிறார். அதன் மூலம் செய்திகளில் தன் பெயர் இடம்பெறச் செய்கிறார். எவருக்குத் தெரியும் இவர்களின் அட்டூழியம்.

இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல், தான் கொடுக்கும் பணத்தில் பிறரைக் கொல்லவும் துணியும் சினிமாக்காரர்களுக்கு கொட்டிக் கொண்டிருக்கும் ரசிகக் கண்மணிகளை நாம் என்னவென்றுச் சொல்வது? மனிதர்களில் முட்டாள்கள் என்று ஒருவகையினர் உண்டு. ஆனால் இவர்களை என்னவென்று அழைக்கலாம் என்று நீங்களே சொல்லுங்கள் பார்ப்போம்.

எவ்வளவுதான் நடந்தாலும் தொப்புள் அழகைப்பார், தொடை அழகைப்பார், உதட்டழகைப்பார் என்றுச் சொல்லும் மீடியாக்களும், டிவிக்களும் இருக்கும் வரையில் எவரும் கவுச்சி வாடையடிக்கும், மூத்திர வாடையடிக்கும் நடிகைகளின் அங்கங்களை தன் கவனத்திலேற்றி சினிமா பார்க்கச் செல்வதை நிறுத்தி விடப் போவதில்லை.

– பஞ்சு

குறிப்பு : குஞ்சு உனக்கு எரியுமே?????


ஸ்ருதிஹாசனின் இடுப்பும் ஏழாம் அறிவும்

ஒக்ரோபர் 27, 2011

கமல்ஹாசனின் அருமை மகள் இடுப்பை ஆட்டும் விதம் இருக்கிறதே, அட அட என்ன ஒரு ஆட்டம். சும்மா நெளிந்து நெளிந்து குலுங்கி குலுங்கி, கமல்ஹாசனின் சினிமாச் சேவையின் தரம் அறிந்து சும்மா பொல் அரிக்கிறது.இந்த ஆட்டத்தை இங்கேயே நீங்கள் பார்த்து விடலாம். எவனோ ஒரு புண்ணியவான் கர்ம சிரத்தை எடுத்து அப்லோட் செய்திருக்கிறான். ஆண்பிள்ளைத் தனமாக முக அழகு கொண்ட ஸ்ருதியை படத்தில் ஹீரோயினாக போட ஒரே காரணம் “ஃபேஸ் வேல்யூ” என்றுச் சொன்னார் ஒரு உதவி இயக்குனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் பிழைத்துக் கொண்டார். உதய நிதி ஸ்டாலின் பிழைத்துக் கொண்டார்(எவன் வீட்டுக் காசு? இன்னும் அடங்க மாட்டேன் என்கிறார்கள் இந்த திமுகவினர்). சூர்யா பிழைத்துக் கொண்டார். ஆனால் பாவப்பட்ட ஜென்மங்கள் தமிழர்கள் தங்கள் பணத்தை இழப்பர். ஒவ்வொரு திரைப்படத்திலும் மீடியா மாஃபியா மட்டுமல்லாமல் பிளாக்கர் மாஃபியா மூலமாகவும் தமிழர்கள் தங்கள் உழைப்பை சினிமாக்காரன் மெத்தையில் படுத்துக் குசு விட கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களின் தியாகம் பற்றி எழுத வேண்டுமெனில் அதற்கு ஆகும் காலம் கொஞ்சம் நஞ்சமல்ல. அதைப் பற்றித்தானே அனாதியில் தொடர்ந்து எழுதி வருகிறோம்.

ஆகத் தீபாவளிக்கு திரைப்படங்கள் பார்க்கிறேன் பேர்வழி என்று உழைப்பை இழக்கப்போகும் அபாக்கியவான்களுக்கு “ஸ்ருதிஹாசனின் இடுப்பு வழியாக தீப ஒளி வாழ்த்துக்கள்”.

– பஞ்சு


சுயநலமே பொதுவாழ்க்கையின் தத்துவம்

ஒக்ரோபர் 24, 2011

மேற்கண்ட தலைப்பைப் படித்தவுடனே உங்களுக்கு நிச்சயம் புரிந்து இருக்கும் நான் யாரைச் சொல்கிறேன் என்று. அதற்கு ஒரு உதாரணத்தை இப்போது பார்க்கலாம்.

தமிழக அரசு கேபிள் டிவி மூலமாக மாதம் 100 கோடி வருமானம் வரும்படி செய்திருக்கிறது. அதாவது கேபிள் இணைப்பிற்கு 20 ரூபாயும், லோக்கல் சானல்களுக்கு மாதம் 2 லட்சம் முதல் 2.5 லட்சம் கட்டணம் வசூல் செய்கின்ற வகையிலும் மேற்படி வருமானம் வருகிறது என்றுச் சொல்கின்றார்கள்.

20 ரூபாய்க்கு 100 கோடி என்றால் மாதம் 500 கோடி ரூபாய் பணத்தை வாரிச் சுருட்டி வந்திருக்கின்றனர் தமிழர்களின் தலைவரின் குடும்பத்தார். அது மட்டுமல்லாமல் சினிமாத்துறை மூலமாக அடைந்த பலன் கொஞ்சமல்ல.

அம்மாவின் ஆகச் சிறந்த சாதனை இது என்று சொல்லி ஆக வேண்டியிருக்கிறது. தமிழர்களுக்காக உழைக்கின்றேன் பேர்வழி என்றுச் சொல்லி இத்தனை காலம் தமிழர்களின் தலைவர் குடும்பம்(த.த.கு) அடித்த கொள்ளையை தடுத்த பெருமை அம்மாவிற்கு சாரும். கொள்ளை அடி, அதை கொஞ்சமாக அடி என்கிறது ஜன நாயகம். ஆனால் த.த.குவினரோ கொள்ளைதான் எங்கள் குலத்தொழில், ஊழல் தான் எங்கள் கொள்கை என்று ஆடியிருப்பதற்கு இது ஒன்றே சான்று. மக்களுக்கு சென்று சேர வேண்டிய பணம், தனிப்பட்ட ஒரு குடும்பத்திற்கு மட்டும் சென்று கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாமல் உலகத் தமிழர்களின் ஒரே தலைவர் என்று மனம் கூசாமல் பேசுவதையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.

இனி அம்மா செய்ய வேண்டியது தமிழக மக்களிடமிருந்து திருடிய பணத்தை மீட்க வேண்டும். அதை கஜானாவில் சேர்க்க வேண்டும். இது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. திருடியே பழக்கப்பட்டவர்கள் ஜெகஜ்ஜால கில்லாடிகளாய் இருப்பார்கள். அவர்களிமிருந்து சொத்துக்களை எடுப்பதற்கு பெரிய போராட்டமே நடத்த வேண்டும். தமிழக மக்கள் அம்மாவிற்கு துணை இருப்பார்கள். இருக்க வேண்டும். இல்லையெனில் திருடப்பட்ட மக்களின் சொத்துக்களினால் சுக போகங்களில் திளைப்பார்கள்.

பொதுவாழ்க்கையில் தன் குடும்ப நலனே முக்கியம் என்று நினைத்து வாழ்ந்தவர்களின் கடைசிக் காலங்கள் என்ன் ஆனது என்பதை நாமெல்லாம் அறிவோம்.

தமிழக மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும். மக்களுக்கு மறதி இருக்கும் வரை, தீயசக்திகள் மக்களை ஏமாற்ற முற்படும். திருட்டுக்கூட்டத்தாரின் வாய்ச்சாலங்களில் மயங்காமல் வெகு ஜாக்கிரதையாக தமிழ் நாடு இருக்க வேண்டியது அவசியம்.

– பஞ்சு


காலம் சொல்லும் கேள்விகளுக்கான பதில்கள்

ஒக்ரோபர் 22, 2011

காலம் எல்லாவற்றுக்குமான பதில்களை வைத்திருக்கும். எந்த ஒரு புரியாத, விளங்கிக் கொள்ளாத விஷயங்களுக்கும் காலம் தான் பதில் சொல்லும். அப்படியான சில பதில்களை நாம் இங்கே பார்க்கலாம். ஹிட்லர்  நாஜிப்படைகளை வைத்து யூதர்களைக் கொன்று குவித்தபோது நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார் தன் முடிவு தற்கொலையாக மாறிவிடும் என்று. ஈராக்கை ஆட்டிப்படைத்த சதாம் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார் தான் தூக்குக் கயிற்றில் தொங்குவோம் என்று. இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘டிக்டேட்டர்ஸ் முடிவு’ என்ற ஒரு கட்டுரை வெளிவந்திருப்பதைப் படித்த போது, கனிமொழியின் இன்றைய நிலை பற்றி ஜூனியர் விகடனில் வெளிவந்திருக்கும் ஒரு பத்தியைப் படித்தது உடனடியாக நினைவுக்கு வந்தது.

பாபம், புண்ணியம், தர்மம் இவற்றிலெல்லாம் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை தரக்கூடிய சம்பவத்தை தான் ஒரு நாத்திகர் என்று வாய்ச்சாலமடிக்கும் கலைஞர் உருவாக்கி இருப்பதை விதியின் வேடிக்கை விளையாட்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

திகார் சிறையில் கனிமொழி அனுபவிக்கும் இன்பங்களைப் பற்றிய அந்தப் பத்தியில் ஒரு பகுதியைப் படித்துப் பாருங்கள்.

‘சிறையில் கனிமொழி படித்து உறங்க, சிமென்ட் பெஞ்ச் போடப்பட்டு இருப்பதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதுகின்றன. அது தவறு.  அறையில் பெஞ்ச்சே கிடையாது. வெறும் தரை மட்டும்தான். உட்காருவதற்கான திண்டுகூட கிடையாது. உறங்குவது, உட்காருவது எல்லாமே தரையில்தான். ஆரம்பத்தில் தரையில் உட்கார்ந்து பழக்கம் இல்லாத காரணத்தால், மிகவும் தடுமாறினார், சிரமப்பட்டார் கனிமொழி. தரையில் அமரத் தயங்கி, அறைக்குள் பெரும்பாலான நேரம் நடந்தபடியே இருப்பார்.

அவர் கைதாகி உள்ளே சென்ற நேரம், கடுமையான புழுக்கம் நிலவி​யது. வியர்த்துக் கொட்டிய நிலையில் கனிமொழியைப் பார்க்க பரிதாபமாக இருக்கும். தரை முழுக்கத் தண்ணீரைத் தெளித்து அறையின் புழுக்கத்தைக் குறைக்கப் போராடு வார். சில நேரங்களில் பெட்ஷீட்டை நனைத்து விரித்துக்கொள்வார். இப்போது, மழை பெய்யும்போது இன்னமும் சிரமப்படுகிறார். பூச்சிகள் நிறையவே வந்துவிடும். அதனை அத்தனை எளிதில் விரட்டிவிட முடியாது, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். அவர் இப்போது எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார்.

சாப்பாடு விஷயத்தில் பெரிதாக அக்கறை காட்ட மாட்டார். சில நேரங்களில் வீட்டுச் சாப்பாடு, சிறை சாப்பாடு இரண்டையுமே தவிர்த்துவிடுவார். சிறையில் அவருக்கான ஒரே பொழுதுபோக்கு புத்தகங்கள்தான். எழுதுவதில் அவருக்கு ஆர்வம் இருந்தாலும், வைத்து எழுதுவதற்கான வசதி உள்ளே இல்லாததால் அவரால் எழுத முடிவது இல்லை. காலையில் 5.30 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்துவிடுவார், பகல் நேரத்தில் உறங்கவே மாட்டார்.

கொசுக்கடி, பூச்சி தொல்லையைக்கூட சமாளித்துக் கொள்ளும் கனிமொழியால் தண்ணீர்ப் பிரச்னை​யைத்தான் சகிக்க முடியவில்லை. ஏனென்றால் ஸ்கின் அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு, உள்ளே தண்ணீர் மோசமாக இருக்கிறது.

மொழிப் பிரச்னையால் பிற கைதிகளுடன் பேசுவது அவருக்குச் சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. உள்ளே இருக்கும் ஒரு சில தமிழ்க் கைதிகளுடன் அடிக்கடி உரையாடுவார். பெண் கைதிகளுடன் சேர்ந்து கைத்தொழில் சம்பந்தமான பயிற்சிகளை மேற்கொள்கிறார்.

சந்திக்க வருபவர்கள், பழங்கள், பலகாரங்கள் வாங்கி வந்தால், கனிவோடு தவிர்த்துவிடுவார். காரணம் பழங்களோ சாப்பாடோ வீணாகி விட்டால் அவற்றை அப்புறப்படுத்தக்கூட நாள் கணக்கில் காத்திருக்க வேண்டும். அதுவே கொசுப் பிரச்​னையைப் பெரிதாக்கி விடும் என்பதால்தான் அந்த எச்சரிக்கை!” என்றார்கள். 

ஏன் கனிமொழிக்கு இந்த நிலை வந்தது என்று யோசித்துப் பாருங்கள். முன்னோர்களின் பாபம், புண்ணியம் இவற்றில் இப்போது உங்களுக்கு நிச்சயம் நம்பிக்கை பிறந்திருக்கும். ஆம் ! கலைஞர் செய்த பாபங்கள் அவரின் மகளுக்கு வந்து விடிந்திருக்கிறது.

பிசினஸ் செய்பவர்களில் பெரும்பாலானோர் பெண்களின் பெயரில் செய்ய மாட்டார்கள். காரணம் என்னவென்றால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் தன் மனைவியோ, மகளோ காவல் நிலையத்திற்கோ அல்லது கோர்ட் படியேறவோ நேரிடும் என்பதால் தான்.  பெண்கள் கோர்ட்டு படியேறுவதையும், சிறைச்சாலைக்கு செல்வதையும் மரணத்தை விட கொடுமையானது என்று கருதினார்கள். மரணம் என்பது ஒரு முறைதான் வரும். ஆனால் அவமானம் ஏற்பட்டால் சாகும் வரை நினைவுகளூடே வந்து கொன்று கொண்டே இருக்கும் அல்லவா?

உலகத்தின் பெரும் வலிமை கொண்ட சோனியா காந்தியுடன் பேசக்கூடிய வல்லமை, கட்டுப்பாடான இயக்கத்தின் தலைவர், இந்தியாவின் பிரதமருடன் நேரடியாகப்  பேசும் வல்லமை, சாணக்கியத்தனம்,  அனேக களம் கண்ட அனுபவம், பெரும் புலமை எல்லாம் இருந்தும் தன் மகள் சிறைச்சாலைக்குச் செல்வதை தடுக்க முடியவில்லையே ஏன்?

என்னை எதுவும் செய்யவே முடியாது என்று கொக்கரித்த அமர்சிங் கோர்ட்டில் எனக்கு உடம்பு சரியில்லை என்று கதறுகிறார். செய்த பலன் கோர்ட்டில் நீதிபதியின் வடிவில் வந்து உட்கார்ந்திருக்கிறது.

எல்லாம் அவன் செயல் என்பதல்ல இங்குப் பதில். எல்லாம் செய்த வினை என்பதுதான் உண்மை. நாத்திகம் பேசிக் கொண்டிருப்பவரின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் ஆத்திகத்தின் மீதான் நம்பிக்கையை அதிகரிக்க வைப்பது என்பது ‘அந்தக் கடவுளின் கைங்கரியம்’ அன்றி வேறென்ன?

– அன்புடன் அனாதி

குறிப்பு : தேர்தல் வேலைகளால் தொடர்பதிவுகளை நண்பர்கள் எழுதவில்லை என்றுச் சொன்னார்கள். இதுவரையிலும் தொடர்ந்து தளத்துக்கு வருகை தந்தவர்களுக்கு நன்றிகள். எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். நண்பர்கள் சூடான பதிவுகளைக் கொட்டுவார்கள்.

நன்றி : ஜூனியர் விகடன்


நக்கிப் பிழைக்கும் கேடுகெட்ட ஜென்மங்கள்

ஒக்ரோபர் 12, 2011

விரைவில் சூடான, உங்களையே கேள்வி கேட்கப் போகும் பதிவு பதிக்கப்பட இருக்கிறது. இப்பதிவு உங்களின் எண்ணத்தைக் கேள்வி கேட்கும். உங்களின் சில பல தீர்மானங்களைத் தகர்த்து எறியும். படிக்க காத்திருங்கள் – பஞ்சு


மூப்பனாரிடம் 4100 ஏக்கர் நிலம் வந்த கதை

ஒக்ரோபர் 9, 2011

ஒரு காலத்தில் தமிழ் மா நில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த திரு மூப்பனார் அவர்களுக்கு 4100 ஏக்கர் நிலம் எப்படி வந்தது என்ற கட்டுரை முரசொலி பத்திரிக்கையில் வெளிவந்தது. அதை இப்போது படித்துப் பாருங்கள். யாராவது ஆர் டி ஐ ஆக்டிவிட்டி பெர்சன் விபரம் கேட்டால் 4100 ஏக்கர் நிலத்தினை மூப்பனாரின் குடும்பத்தின் பிடியில் இருந்து மீட்கலாம் அல்லவா? இப்போது நில அபகரிப்பு புகாருக்கென தனி காவல்துறை அலுவலகமே இருக்கிறது. யாராவது செய்வார்களா?

– பஞ்சு

நன்றி : முரசொலி


%d bloggers like this: