மனுஷ்யபுத்திரனின் பொறியல்

எதேச்சையாக உயிர்மை வெப்சைட் பக்கம் போன போது,அங்கு மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தைப் படிக்க நேர்ந்தது.  இதோ நீங்களும் படித்து விடுங்கள். சாருவை ஒரு இடத்தில் வாரி இருந்தார். என்னடா இது பெரிய அக்கிரமாய் இருக்கிறது (சாருவிற்கு எனக்கல்ல) என்று யோசித்தால் ஏதோ பிரச்சினை என்றுச் சொன்னார்கள். இதுவும் ஒரு நாடகமோ என்று நினைக்கத் தோன்றியது. பாம்பின் கால் பாம்பறியும் பாருங்கள். அவரின் அந்தத் தலையங்கத்தைப் படித்து விடுங்கள்.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=4757

தமிழத்தில் போனியாகாத மதச் சார்புடைய (அரசியல் எப்படி எழுதுகிறேன் பாருங்கள்) இந்தியா டுடேவில் மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் வலிமையான பத்து மனிதர்களில் ஒருவர் என்று லிஸ்ட் போட்டிருந்தார்கள். அதைச் சாரு கூட தன் பிளாக்கில் வெளியிட்டிருந்தார். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அதை விரைவில் சாருவே உடைப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன்.

பத்திரிக்கைகள் எதுவும் காரணம் இல்லாமல் காரியம் செய்வதில்லை என்பதினை மட்டும் இவ்விடத்தில் நினைவில் கொள்க. அனாதி விரைவில் செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் பதிவில், உங்களுக்குத் தெரிந்திருக்கவே தெரியாத ஒரு உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வரப் போகிறார். அதுவரை பொறுத்திருங்கள்.

இனி மனுஷ்யபுத்திரனுக்கு வருவோம்.

கருணாநிதியின் அறியாமை பற்றிய ஒரு பொறியலும், ஜெயலலிதாவின் அகம்பாவத்தினையும், கனிமொழியை அவமதிக்க விரும்புவர்களுக்கும் என்றும் பொது வாழ்க்கையில் இருப்போரைப் பற்றிய அவரின் பொறியல் தலையங்கத்தினை முன் வைத்து அவரையும் நாம் விமர்சிக்கலாம்.

1) கனிமொழியை எந்தப் பத்திரிக்கை விடாது இரண்டாம் பக்கத்தில் போட்டோ போட்டு வந்தது என்று மனுஷ்யபுத்திரன் சொல்லுவாரா?

2) கருணாநிதி செய்த தவறுகள், ஊழல்கள் எல்லாம் அறியாமையால் செய்யப்பட்டதா என்பதை மனுஷ்யபுத்திரன் விளக்குவாரா?

3) ஜெயலலிதாவின் அகம்பாவம் யாருக்கும் தெரியாத ரகசியம் என்பதால் தலையங்கம் எழுதினாரா இல்லை வேறு எதற்காகவா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை வாசகர்கள் யோசித்துக் கொள்ளலாம். ஏனென்றால் பதில்களே கேள்விகளுக்கு விடையாய் இருக்கிறது.

மனுஷ்யபுத்திரனின் சமையல் குறிப்புகள் ஒவ்வொன்றும் படிக்க மொக்கையாய் இருப்பது மொக்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தருகிறது.

ஐயாம் சாரி மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கருத்துச் சுதந்திரத்தை முன் வைத்து, இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம்.

– பஞ்சு

2 Responses to மனுஷ்யபுத்திரனின் பொறியல்

  1. அமர் சொல்கிறார்:

    ஒன்னாம் தேதி வந்த தலையங்கத்துக்கு இருபத்து எட்டாம் தேதி விமர்சனம் எழுதுகிற அனாதி வாழ்க.

    • அனாதி சொல்கிறார்:

      அடப் போங்க அமர். பதிவு எழுதியது பஞ்சு. வேலைகளுக்கிடையில் பதிவு எழுதுவது என்பதெல்லாம் நடக்ககூடிய விஷயமா. நாங்களென்ன பத்திரிக்கைக்காரர்களா தினமும் பதிவு எழுத. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறோம். ஓகே – பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: