தேசத்துரோகிகள் தலைவர்களானால்

வாழும் வரை பிறருக்கு உபயோகமானவர்களாய் வாழ்தல் வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி. ஏனென்றால் எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு உயிரும் பிறரின் உதவியின்றி இவ்வுலகில் வாழவே முடியாது. சின்னஞ் சிறு கிருமிகளில் ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தி அழித்துக் கொண்டிருக்கும் அரக்கன் மனிதன் வரை இது தான் உண்மை.

ஆனால் மனித அரக்கர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். வாழும் நாட்கள் 100 ஆண்டுகள் என்றால் அதற்குள் அவன் லட்சம் பேர்களைக் கொன்று குவிக்க ஆசைப்படுகிறான். தான் மட்டுமே வாழ வேண்டுமென நினைக்கிறான். பிறரை வாழ விடாமல் தடுக்கிறான்.

ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். கிரைம் படங்களில் சாதாரண குடிமகனான ஒருவன் ஹீரோ ஆகி விடுவான்.  நாட்டு மக்களுக்குப் பிரச்சினை என்றவுடன் தன் அறிவைப் பயன்படுத்துவான். நாட்டு மக்களுக்காக தன் உயிரையும் விடுவான். சில கிளாசிக்கான ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோவின் மரணம் படம் பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஹீரோயிசத்தை மனிதன் தியாக உணர்வின் மேலீட்டால் வெகு சாதாரணமாய் செய்வார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களை நாம் காவல்துறையிலும், ராணுவத்திலும் மட்டுமே பார்க்கலாம். நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொன்றார்களே ஒரு இன்ஸ்பெக்டர் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அவர் யாருக்காக இறந்தார்? இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவரைக் காப்பாற்றாமல் நின்று கொண்டிருந்தனரே திமுக அமைச்சர்கள்? இவர்கள் யார் என்று தெரிகிறதா?

(எனக்குப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ “சீகெல்”. அலட்டிக் கொள்ளாமல் அடிதடி செய்யும் அற்புதமான பாடி லாங்குவேஜ் மற்றும் கழுகின் கூர்மைப் பார்வை கொண்டவர் இந்த சீகெல்)

இன்றைய இந்திய அரசியல்வியாதிகளைப் போன்ற அரக்க மனம் படைத்த மனிதர்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அன்பு நண்பர்களே, இந்திய அரசியல்வியாதிகளில் மிகுந்த அரக்க குணமும் தான் மட்டுமே வாழ வேண்டுமென்று நினைக்கும் தலைவர்களை நீங்கள் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

சாலையில் அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனுக்கும் கூட உதவாதவர்கள் தலைவர்கள் உயர் பொறுப்பில் இருக்கின்ற போது இந்திய மக்கள் உலகத்திலேயே மிக மோசமான ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தானே உண்மை.

ஊழல் என்பது தேசத்துரோகம். ஊழல் செய்யவே இல்லை என்று சொல்லி வரும் தலைவர்கள், பின்னர் கோர்ட் தலையீட்டினால் ஊழல் வழக்குகள் தொடுக்க அனுமதிக்கின்றார்கள். பின்னர் ஊழல்வாதிகள் பற்றி செய்திகள் வெளி வந்தால், அவர் நல்லவர் என்று சர்டிபிகேட் கொடுக்கின்றார்கள். ஊழல் செய்யும் தேசத்துரோகிகள் தலைவரானால் என்ன நடக்கும்?

நமது இந்தியாவைப் பாருங்கள் !

இந்தியத் தாய் துகிலுறிக்கப்பட்டு நட்ட நடு வீதியில் அரசியல்வாதிகளால் கற்பழிக்கப்படுகிறார். ஜன நாயகம் அரசியல்வாதிகளின் துர் நாற்றமெடுக்கும் பேச்சினூடே காணாமல் போய் விட்டது. இந்தியா இன்னும் விடுதலை அடையவே இல்லை.

–  பஞ்சரு பலராமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: