மோடியும் கருணாநிதியும்

கருணாநிதி மோடியின் உண்ணாவிரதம் பழையதை மறக்கடிக்காது என்கிறாரே?

மோடிக்கு ஒப்பிடுவதை விட தனக்குத் தானே ஒப்பிட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. அம்மா கருணாநிதியைப் பற்றி அடித்த கமெண்ட் “வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்”. இப்போதெல்லாம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் இவர். புலம்பல்களைக் கண்டு கொள்ளக்கூடாது.

பொன்முடியின் மனைவி போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக வந்துள்ள செய்தி பற்றி?

கணவன் அமைச்சர் என்றவுடன் இருந்த பெருமிதம், அகங்காரம் சிறை வாசலிலும் குறையவில்லை என்று புரிகிறது. பிறர் காசை அபகரித்தால் இப்படித்தான் ஆகும். மோடியின் வழியில் தமிழகத்தை உயர்த்த முயன்று கொண்டிருக்கும் அம்மா இருக்கும் வரை, திமுக ஆட்சிக்கு வருவது எல்லாம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

பிரதமர் போட்டியில் அம்மாவின் பெயர் பற்றி?

கருணாநிதியின் பெயர் இல்லாததை கவனித்தேன். சுய நலமே தன் நலமாய் கொண்ட தமிழகத்தின் மிக மோசமான தலைவர் என்று உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங்கை விட எந்தத் தகுதியும் இல்லாத ராகுல் கான் பெயர் வந்திருப்பது இந்தியாவின் கேவலம்.

மோடியின் உண்ணாவிரதம் பற்றி ?

காலத்தின் அடுத்த நகர்வு.

பரம்பிக்குளம் தமிழகத்தின் கையில் இருந்து போய் விடும் என்கிறார்களே?

இந்தியாவின் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் வேலைகளைச் செய்து வரும் கேரள அரசின் செயல், எதிர்காலத்தில் மிகப் பெரும் அழிவுக்கு அடிகோலும். இந்திய அரசு விழித்துக் கொண்டு, அடுத்தடுத்த மா நிலங்களின் நீராதாரப் பங்கீடுகளை கண்காணித்து வழிமுறைப்படுத்த வேண்டும்.  கேரளா அரசியல்வாதிகள் செய்யும் செயல்கள் சரியில்லை.

வினையை அறுவடை செய்தாக வேண்டும் என்கிறாரே கருணா நிதி?

அதைத்தான் திமுகவினர் இப்போது அறுவடை செய்து வருகிறார்களே? காவல்துறையினரை மிரட்டும் இவரை எப்போது கைது செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.

துரைமுருகனின் மகன் அரசுப் பணத்தில் கல்லூரி கட்டியதாக செய்தி வெளியாகி இருப்பதைப் பற்றி?

இதுமட்டும் தானா? திமுக பெரும் தலைகளின் சொத்துக்கள் எல்லாம் தமிழக மக்களின் பணம். அதிமுக அரசு அதை எப்போது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பிடுங்கப் போகிறது என்று தெரியவில்லை.

– குஞ்சுவின் கேள்விக்கு பஞ்சுவின் பதில்

One Response to மோடியும் கருணாநிதியும்

  1. Thiru சொல்கிறார்:

    //வினையை அறுவடை செய்தாக வேண்டும் என்கிறாரே கருணா நிதி?

    அதைத்தான் திமுகவினர் இப்போது அறுவடை செய்து வருகிறார்களே? காவல்துறையினரை மிரட்டும் இவரை எப்போது கைது செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.//

    இந்த செய்தியைப் படித்த அனைவருக்கும் சட்டென்று தோன்றும் பதில் .. நச்சென்று தந்திருக்கிறீர்கள் !!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: