மருந்துகள் விலை எகிறப் போகிறது

கீரைக்காரரிடம் பேரம் பேசும் மக்கள், காய்கறிக்காரரிடம் பேரம் பேசுபவர்கள் மருத்துவமனைக்குச் சென்றால் வாய் மூடி கேட்கின்ற காசைக் கட்டி விட்டு வருவார்கள்.

இதுவரை உலகச் சந்தைப் பொருளாதாரத்தை அனுபவித்து வந்த இந்திய மக்கள் இனி அதன் பலனை அனுபவிக்க தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் வந்தே விட்டது.

மருத்துவத் துறையில் தமிழகத்தில் காலாவதி மருந்துகள் பிரச்சினை பெரும் அளவில் வெடித்து இன்று காணாமல் போய் விட்டதை நாமெல்லாம் அறிவோம்.  மருத்துவத்துறையில் கோடிக்கணக்கான பணம் மக்களிடம் இருந்து கொள்ளை அடிக்கப்படுவதை சில பத்திரிக்கைகள் எழுதி வந்திருக்கின்றன. பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் கிடந்த ஒரு கட்சியின் ஆள் மத்திய அமைச்சரானவுடன் சேட்டிலைட் சேனல் ஆரம்பிக்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் மேம்பட்டதை நாமெல்லாம் அறிவோம். அந்தளவுக்கு சுகாதாரத்துறையின் அமைச்சரை மருந்துக் கம்பெனிகள் கவனித்தாக செய்திகள் கசிந்தன. அவை உடனே அமுக்கப்பட்டு விட்டன.

மருத்துவத்துறையில் ஏகப்பட்ட உள்ளடிகள், ஊழல்கள் நடந்து வருகின்ற சம்பவங்களை வெளியில் கசிய விடாமல் படுபாதுகாப்பாய் முதலாளிகள் வைத்திருக்கின்றனர். அதற்கு ஊழல்வாதிகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் இந்திய மருந்துக் கம்பெனிகளை பல அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் கபளீகரம் செய்து வருவதுடன், ஜெனடிக்ட் மாற்றப்பட்ட தாவரப் பயிர்களை இந்தியாவில் அனுமதித்திருப்பதும், மிகப் பெரும் சந்தேக விதைகளை மனதில் தூவுகின்றன.

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் மக்கள் பலவித நோய்களுக்கு ஆட்படுவதை செய்திகளாய் அறிந்து வருகிறோம். உங்களுக்குத் தெரியுமா? “ நாட்டு மல்லி” எந்தச் சந்தையிலும் கிடைப்பதே இல்லை. எங்கே என்று தேடினாலும் கிடைப்பதில்லை. மரபணு மாற்றப்பட்ட கொத்தமல்லி தான் பெரும்பாலான சந்தையில் கிடைக்கிறது. இதே போன்றே அனைத்து விதைகளும் மலடாக்கப்பட்டு, பல்வேறு நோய் மூலக்கூறுகளை உள்ளடக்கிய விதைகளிலிருந்து பெறப்படும் காய்கறிகளை மக்கள் உண்ண வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய மக்களை “காங்கிரஸ் அரசு” தள்ளியிருக்கிறது. உலகப் பொருளாதாரச் சந்தை இந்திய மக்களுக்கு நோயினை வழங்கி வருகிறது. ஊழலுக்கு அடுத்த பெரும் போராட்டமாய் உலகச் சந்தைப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போராட மக்கள் தயாராக வேண்டிய தருணம் ஆரம்பித்து விட்டது. இதோ அதைக் கட்டியம் கூறும் செய்தியின் லிங்க் கீழே இருக்கிறது.

http://economictimes.indiatimes.com/news/news-by-industry/healthcare/biotech/pharmaceuticals/govt-alarmed-as-mnc-buyouts-set-to-push-up-drug-prices/articleshow/9854348.cms

இதற்கு மேல் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.  மக்களை அழிக்க வேண்டிய வேலையை மட்டும் இந்திய சர்க்கார் செய்து வருகிறதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. மக்கள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

– பஞ்சரு பலராமன்

One Response to மருந்துகள் விலை எகிறப் போகிறது

  1. AYFA Yusuf சொல்கிறார்:

    மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை முதலில் இந்தியாவிற்குள் நுழைத்து அதன் மூலம் நோய்களை உருவாக்கி மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் நோக்கில் அண்ணன் நாடு முயற்சி்த்து வெற்றியம கண்டு வருகின்றது. நமது அரசியல்வாதிகள் அந்நத நோய்களை பண பலத்தால் சரி செய்து கொள்வார்கள். புழைக்களுக்கு என்ன வழி?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: