50 கோடியா 5000 கோடியா?

செப்ரெம்பர் 29, 2011

ஐம்பது கோடி சம்பாதிக்கவா அமைச்சர்கள் ஆக வேண்டும்? குறைந்தது 5000 கோடியாவது சம்பாதித்தால் தானே அமைச்சர்களாய் இருக்க தகுதியாக இருக்க முடியும்? 50 கோடி சொத்துச் சேர்க்க வேண்டுமானால் அதற்கு ஒரு பிச்சைக்காரன் போதும் அல்லது ஒரு ரவுடி போதும். அதற்கு அமைச்சராய் இருக்க வேண்டியது இல்லை.

சாதாரண நிலையில் இருக்கும் ஒருவர், பொருளாதார நிலையில் உச்சக்கட்டத்தினை அடைய வேண்டுமானால் இந்தியாவில் எந்த வித தவறும் செய்யாமல் வளரவே முடியாது.

சன் டிவிக்கு 323 பிஎஸ் என் எல் லைன் திருட்டுத்தனமாக உபயோகிப்பட்டிருக்கிறது என்று செய்தித்தாள்கள் சொல்கின்றன. போனியாகாத டிடிஎச் சர்வீஸ்ஸை அதிக விலை கொடுத்து, மலேஷிய கம்பெனி வாங்கிய கதையைத் தான் நீங்கள் படித்துக் கொண்டிருப்பீர்கள். அதற்கான வழக்கினை சிபிஐ தாக்கல் செய்யபோகிறதாம். நம்புங்கள். காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேசன் உலக மகா கோடீஸ்வர சகோதரர்கள் மீது வழக்குத் தொடுக்கப் போகின்றார்கள். அப்படியே டாடா நிறுவனம் கலைஞரின் மனைவிக்கு லஞ்சம் கொடுத்ததையும் வழக்காக சேர்க்க வேண்டும். இல்லையென்றால் பிரசாந்த் பூஷன் விட மாட்டார்.

சன் டிவியின் வளர்ச்சியை மெச்சியவர்கள், பாராட்டியவர்கள் இவ்வளர்ச்சி உண்மையானதுதானா என்று இப்போது சொல்ல வேண்டும். அதே போல ஒவ்வொரு அரசியல்வாதியும் பெற்றிருக்கும் வளர்ச்சி என்பது அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமாக அன்றி, நேர்மையாக அல்ல என்பதை நீங்கள் நிச்சயம் உணர வேண்டுமென்பதற்காக இப்பதிவினை எழுதுகிறேன்.

 சவுக்கு தளத்தில் ஜாஃபர் சேட்டுக்கு உதவி வருபவர் முன்னாள் அமைச்சர் திரு கே.என். நேருவின் தம்பி திரு ரவி என்று இருக்கிறது. இந்த ரவி நடத்தும் நிறுவனத்தின் பெயர் ட்ரூ வேல்யூ ஹோம்ஸ். 

இந்த ட்ரூ வேல்யூ ஹோம்ஸி இணையதளத்தினை ஒரு பார்வை பாருங்கள். சும்மா அதிரும் ! ஏன் தமிழக காவல்துறை கே. என். நேரு வீட்டில் சோதனை செய்தது என்பது உங்களுக்குப் புரிய வரும். இணையதளத்தினைப் பொறுமையாக வாசித்துப் பாருங்கள் மேட்டர் தெரியும். அப்போது நான் இட்ட தலைப்பின் அர்த்தம் புரியும்?

அந்த இணையதளத்திற்குச் செல்ல இந்த லைனைக் கிளிக் செய்யவும்.

– பஞ்சு


மனுஷ்யபுத்திரனின் பொறியல்

செப்ரெம்பர் 28, 2011

எதேச்சையாக உயிர்மை வெப்சைட் பக்கம் போன போது,அங்கு மனுஷ்யபுத்திரனின் தலையங்கத்தைப் படிக்க நேர்ந்தது.  இதோ நீங்களும் படித்து விடுங்கள். சாருவை ஒரு இடத்தில் வாரி இருந்தார். என்னடா இது பெரிய அக்கிரமாய் இருக்கிறது (சாருவிற்கு எனக்கல்ல) என்று யோசித்தால் ஏதோ பிரச்சினை என்றுச் சொன்னார்கள். இதுவும் ஒரு நாடகமோ என்று நினைக்கத் தோன்றியது. பாம்பின் கால் பாம்பறியும் பாருங்கள். அவரின் அந்தத் தலையங்கத்தைப் படித்து விடுங்கள்.

http://uyirmmai.com/contentdetails.aspx?cid=4757

தமிழத்தில் போனியாகாத மதச் சார்புடைய (அரசியல் எப்படி எழுதுகிறேன் பாருங்கள்) இந்தியா டுடேவில் மனுஷ்யபுத்திரன் தமிழகத்தின் வலிமையான பத்து மனிதர்களில் ஒருவர் என்று லிஸ்ட் போட்டிருந்தார்கள். அதைச் சாரு கூட தன் பிளாக்கில் வெளியிட்டிருந்தார். படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  இதை ஏன் இங்குச் சொல்கிறேன் என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது. அதை விரைவில் சாருவே உடைப்பார் என்று நிச்சயம் நம்புகிறேன்.

பத்திரிக்கைகள் எதுவும் காரணம் இல்லாமல் காரியம் செய்வதில்லை என்பதினை மட்டும் இவ்விடத்தில் நினைவில் கொள்க. அனாதி விரைவில் செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் பதிவில், உங்களுக்குத் தெரிந்திருக்கவே தெரியாத ஒரு உண்மையை வெளிச்சத்தில் கொண்டு வரப் போகிறார். அதுவரை பொறுத்திருங்கள்.

இனி மனுஷ்யபுத்திரனுக்கு வருவோம்.

கருணாநிதியின் அறியாமை பற்றிய ஒரு பொறியலும், ஜெயலலிதாவின் அகம்பாவத்தினையும், கனிமொழியை அவமதிக்க விரும்புவர்களுக்கும் என்றும் பொது வாழ்க்கையில் இருப்போரைப் பற்றிய அவரின் பொறியல் தலையங்கத்தினை முன் வைத்து அவரையும் நாம் விமர்சிக்கலாம்.

1) கனிமொழியை எந்தப் பத்திரிக்கை விடாது இரண்டாம் பக்கத்தில் போட்டோ போட்டு வந்தது என்று மனுஷ்யபுத்திரன் சொல்லுவாரா?

2) கருணாநிதி செய்த தவறுகள், ஊழல்கள் எல்லாம் அறியாமையால் செய்யப்பட்டதா என்பதை மனுஷ்யபுத்திரன் விளக்குவாரா?

3) ஜெயலலிதாவின் அகம்பாவம் யாருக்கும் தெரியாத ரகசியம் என்பதால் தலையங்கம் எழுதினாரா இல்லை வேறு எதற்காகவா?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை வாசகர்கள் யோசித்துக் கொள்ளலாம். ஏனென்றால் பதில்களே கேள்விகளுக்கு விடையாய் இருக்கிறது.

மனுஷ்யபுத்திரனின் சமையல் குறிப்புகள் ஒவ்வொன்றும் படிக்க மொக்கையாய் இருப்பது மொக்கை ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தருகிறது.

ஐயாம் சாரி மிஸ்டர் மனுஷ்யபுத்திரன். கருத்துச் சுதந்திரத்தை முன் வைத்து, இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம்.

– பஞ்சு


சட்டத்தை மீறிய குஞ்சு – ரகசியம் அம்பலம்

செப்ரெம்பர் 28, 2011

குஞ்சு ஒரு குஷி பேர்வழி என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் குஞ்சு சட்டத்தை மீறி சில காரியங்களைச் செய்கிறவன் என்பதை அவன் சொல்லக் கேட்டேன். ஆளில்லா சிக்னலில் குஷியாக ரூல்ஸ் பார்க்காமல் கார் ஓட்டுவது கூட ”சட்டப்படி குற்றம்” தான்.  என்ன சரிதானே?

இந்தக் குஞ்சுப் பயல் இருக்கின்றானே அவன் என்ன செய்தான் தெரியுமா? அவன் ஒரு குஷி மேட்டரில் சட்டத்தை மீறி நடந்து விட்டான். அது என்ன என்று தெரிய வேண்டுமா?

காலையில் போன் போட்டுக் கேட்டபோது, நேத்து இருந்த போதை தெளியாமல் உளறி விட்டான்.

”ஆன் லைனில் இருக்கிறேன் குஞ்சு. உன் ரகசியத்தை உடைக்கப் போகிறேன்” என்றேன்.

”நான் என்னடா தப்பு செய்தேன், என்னவோ பெரிய குற்றத்தை செய்துட்டா மாதிரி ரகசியம் அது இது என்கிறாயே” என்று பதறினான்.

“அதெல்லாம் முடியாதுடா, எழுதியே தீருவேன்” என்றேன்.

 கொஞ்ச நேரம் யோசித்தவன், ”பஞ்சு பஞ்சு நான் பதிவெழுதி ரொம்ப நாள் ஆச்சுடா, நானே எழுதி விடுகிறேன்” என்றான்.

அவன் ஒழுங்காக எழுதவில்லை என்றால் நான் விளக்கமாய் எழுதி விடுகிறேன். அவன் எழுதும் வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். என்ன நீங்களும் பொறுத்திருப்பீர்கள் தானே?

– பஞ்சு


தேசத்துரோகிகள் தலைவர்களானால்

செப்ரெம்பர் 28, 2011

வாழும் வரை பிறருக்கு உபயோகமானவர்களாய் வாழ்தல் வேண்டுமென்பதுதான் இயற்கையின் நியதி. ஏனென்றால் எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு உயிரும் பிறரின் உதவியின்றி இவ்வுலகில் வாழவே முடியாது. சின்னஞ் சிறு கிருமிகளில் ஆரம்பித்து உலகையே அச்சுறுத்தி அழித்துக் கொண்டிருக்கும் அரக்கன் மனிதன் வரை இது தான் உண்மை.

ஆனால் மனித அரக்கர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். வாழும் நாட்கள் 100 ஆண்டுகள் என்றால் அதற்குள் அவன் லட்சம் பேர்களைக் கொன்று குவிக்க ஆசைப்படுகிறான். தான் மட்டுமே வாழ வேண்டுமென நினைக்கிறான். பிறரை வாழ விடாமல் தடுக்கிறான்.

ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். கிரைம் படங்களில் சாதாரண குடிமகனான ஒருவன் ஹீரோ ஆகி விடுவான்.  நாட்டு மக்களுக்குப் பிரச்சினை என்றவுடன் தன் அறிவைப் பயன்படுத்துவான். நாட்டு மக்களுக்காக தன் உயிரையும் விடுவான். சில கிளாசிக்கான ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோவின் மரணம் படம் பார்ப்பவர்களின் மனதை கனக்கச் செய்யும். அப்படிப்பட்ட ஹீரோயிசத்தை மனிதன் தியாக உணர்வின் மேலீட்டால் வெகு சாதாரணமாய் செய்வார்கள். இவர்களைப் போன்ற மனிதர்களை நாம் காவல்துறையிலும், ராணுவத்திலும் மட்டுமே பார்க்கலாம். நடு ரோட்டில் வைத்து வெட்டிக் கொன்றார்களே ஒரு இன்ஸ்பெக்டர் உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? அவர் யாருக்காக இறந்தார்? இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தவரைக் காப்பாற்றாமல் நின்று கொண்டிருந்தனரே திமுக அமைச்சர்கள்? இவர்கள் யார் என்று தெரிகிறதா?

(எனக்குப் பிடித்த ஹாலிவுட் ஹீரோ “சீகெல்”. அலட்டிக் கொள்ளாமல் அடிதடி செய்யும் அற்புதமான பாடி லாங்குவேஜ் மற்றும் கழுகின் கூர்மைப் பார்வை கொண்டவர் இந்த சீகெல்)

இன்றைய இந்திய அரசியல்வியாதிகளைப் போன்ற அரக்க மனம் படைத்த மனிதர்களை நீங்கள் எங்காவது பார்த்திருக்கின்றீர்களா?

அன்பு நண்பர்களே, இந்திய அரசியல்வியாதிகளில் மிகுந்த அரக்க குணமும் தான் மட்டுமே வாழ வேண்டுமென்று நினைக்கும் தலைவர்களை நீங்கள் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

சாலையில் அடிபட்டுக் கிடக்கும் சக மனிதனுக்கும் கூட உதவாதவர்கள் தலைவர்கள் உயர் பொறுப்பில் இருக்கின்ற போது இந்திய மக்கள் உலகத்திலேயே மிக மோசமான ஆட்சியில் இருக்கின்றார்கள் என்பது தானே உண்மை.

ஊழல் என்பது தேசத்துரோகம். ஊழல் செய்யவே இல்லை என்று சொல்லி வரும் தலைவர்கள், பின்னர் கோர்ட் தலையீட்டினால் ஊழல் வழக்குகள் தொடுக்க அனுமதிக்கின்றார்கள். பின்னர் ஊழல்வாதிகள் பற்றி செய்திகள் வெளி வந்தால், அவர் நல்லவர் என்று சர்டிபிகேட் கொடுக்கின்றார்கள். ஊழல் செய்யும் தேசத்துரோகிகள் தலைவரானால் என்ன நடக்கும்?

நமது இந்தியாவைப் பாருங்கள் !

இந்தியத் தாய் துகிலுறிக்கப்பட்டு நட்ட நடு வீதியில் அரசியல்வாதிகளால் கற்பழிக்கப்படுகிறார். ஜன நாயகம் அரசியல்வாதிகளின் துர் நாற்றமெடுக்கும் பேச்சினூடே காணாமல் போய் விட்டது. இந்தியா இன்னும் விடுதலை அடையவே இல்லை.

–  பஞ்சரு பலராமன்


(9) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – குஜய்

செப்ரெம்பர் 27, 2011

”திட்டப்படி குற்றம்” என்ற படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் விற்பனையை பிரபலமான இரண்டு டிவிக்களில் பேசி முடித்து ஒரு கோடி ரூபாய் செட்டில் மெண்ட் ஒரு இடத்திலும், ஒன்னரைக் கோடி செட்டில்மெண்ட் இன்னொரு இடத்திலும் முடிக்கப்பட்ட பிறகு நடந்த கூத்துதான் “ நாளைய தமிழக முதல்வர், கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர்” என்ற கோதாவில் வந்து நின்று கொண்டிருக்கிறது.

டிவிக்களில் காட்டுவது போல, எந்த ரசிகனும் பால், மோர் அபிஷேகம் எல்லாம் தன் காசில் செய்வதில்லை. புரடியூசரிடம் பெறும் கோடிக்கணக்கான காசில், கொஞ்சமே கொஞ்சம் வீசி எறிந்தால், ரசிகர்கள் என்ற போர்வையில் உலாவரும் சில சிங்கிடிக்காக்காய்கள் ( நன்றி ஷாராஜ் : ஆமாம் சாருவிற்கும் உங்களுக்கும் என்ன பிரச்சினை?) வாங்கிய காசில் கொஞ்சமே கொஞ்சம் செல்வழித்து, ஏமாந்த விசிலடித்தான் குஞ்சுகளிடம் ஆட்டயைப் போட்டும் காசு பார்த்துக் கொண்டு பீராபிஷேகம் எல்லாம் செய்வார்கள்.

ஆனானப்பட்ட ரஜினிக்கே குனிய வைத்து குப்புறப் போட்டு, பெரும் ஆப்பாய் சொருகியது தமிழர் சமூகம். ரஜினியைப் பார்த்து, அப்படியே ஈயடிச்சான் காப்பி போல செய்கையிலிருந்து, உடை வரை செய்து வரும் குஜய்க்கு மல்லாக்கத் தள்ளி மார்பில் அடிப்பார்கள் என்பது வரக்கூடிய வரலாறு சொல்லும். சூலாயுதம் டிரைலரைப் பார்த்து விட்டு, ஒரு உதவி இயக்குனர் ”வாந்தி வந்து விட்டது குஜய்யைப் பார்த்து” என்றார்.  இந்த குஜய்யின் அப்பா ஒரு மோடி மஸ்தான் வேலைக்காரர். நான் தான் அடுத்த தமிழக முதலமைச்சரின் நிதியமைச்சர் என்று கோதா தட்டிக் கொண்டிருக்கிறார் என்று கேள்வி. சில படங்களில் பசு நேசன் என்று அழைத்த ஒருவரின் டிரஸ் போலவே குஜய் போட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். சினிமா தியேட்டர்களில் “டேய் நம்மள மாதிரியே டிரஸ் போட்டிருக்காருடா” என்ற குரல்களை கேட்டிருப்பீர்கள். ஒரு சமூக மக்களை தன் பக்கம் திருப்ப, குஜய்யின் குஷ்தி வேலைதான்.

நடந்த விஷயத்துக்கு வருகிறேன்.

சாட்டிலைட் ரைட்ஸுக்காக ஒரு கோடி ரூபாய் செக்கைப் போட்டு வாங்கிக் கொள்ளும்படி சொல்லிய அல்லக்கை, ஆஃபீசுக்கு வந்த மோடியிடம், மீட்டிங்கில் மாட்டிக் கொண்டதால் மறு நாள் காலையில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றுச் சொல்லி விட்டார். உடனே அடுத்த முனைக்குப் போனைப் போட்டவருக்கு, அதான் அந்த டிவியில் விற்று விட்டீர்களே, எங்களுக்கு உங்கள் படம் வேண்டாம் என்றுச் சொல்லி விட, ஒன்றுமே செய்ய இயலாமல் வீட்டுக்குத் திரும்பினார் மோடி.

மறு நாள் காலையில் படம் திரையிடப்படப் போகிறது. அல்லக்கையின் ஆஃபீசுக்குச் சென்ற மோடியிடம், அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்றுச் சொல்லப்பட்டது. படம் திரையிடப்பட்ட அடுத்த அரை மணி நேரத்தில் மொக்கை என்று ரிசல்ட் வர, அல்லக்கை பத்து லட்ச ரூபாய் தான் தர முடியும் என்று அந்தர் பல்டி அடிக்க, வந்ததே கோபம் மோடிக்கு.

அடுத்த நாள் முன்னாள் அரசுக்கு எதிராய் குரல் ஒலித்தது மீடியாவில்.

அரசியல் என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக மிகுந்த பிரயத்தனப்பட்டு சேகரிக்கப்பட்ட உண்மைச் சம்பவம் இது.

அனாதி பிளாக்கின் ஹிட்ஸ் தினம் 15,000 வரை வருகிறது. அனாதி பிளாக்கின் உண்மைப் பெயர் “வெளிச்சத்தில்” என்பது உங்களுக்குத் தெரியும். இனி உங்கள் பாடு.

– அனாதி

குறிப்பு : இது ஒரு நாவல். யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

மேலும் ஒரு அடிஷனல் குறிப்பு : ஒரு அரசியல்வாதி குஜய்க்கு பெரிய ஆப்பினை தயார் செய்து வைத்திருக்கிறார் என்றுப் பேசிக் கொள்கிறார்கள். பசு நேசனுக்கு அடித்த ஆப்பை வேறு பிடுங்கி வைத்திருக்கிறாராம். தோதான இடம் குஜ்ய்தான் என்று முடிவு கட்டி இருப்பதாகவும் தகவல்கள் சொல்கின்றன.


சிஏஜி அறிக்கையும் ஒரு முட்டாளுக்குப் பதிலும்

செப்ரெம்பர் 24, 2011

மிஸ்டர் பிரகாஷ்ஷின் பின்னூட்டம் என்ன சொல்ல வருகிறது என்று பார்த்தால், 2ஜியில் முறைகேடு நடக்கவில்லை என்கிறார் அவர். முந்தைய அதிமுக அரசில் 1100 கோடி ரூபாய் இழப்பு என்று சிஏஜி அறிக்கை கொடுத்ததை மறுத்த இன்றைய முதல்வர், சிஏஜியின் 2ஜி அறிக்கையை மட்டும் வைத்துக் கொண்டு என்னென்ன சொல்கிறார் பாருங்கள் என்கிறார் அவர். அதுமட்டுமா, 2ஜி வெறும் அரசியல் செய்தி என்கிறார்.

முன்னாள் வருபவர்க்கே முன்னுரிமை என்று அறிக்கை கொடுத்ததும், ஒரே நாளில் டிடிக்களை வாங்கியதும், தொலைத்தொடர்புத்துறைக்கு சம்பந்தமே இல்லாத லெட்டர் பேடு கம்பெனிகளுக்கு 2ஜி வழங்கியதும், அதற்கு லஞ்சப் பணத்தை கலைஞர் டிவியில் முதலீடு செய்ததும் ஸ்கேம் இல்லை என்கிறாரா பிரகாஷ்?

அனாதியின் நண்பர் இந்திய அரசாங்கத்தில் மிகப் பெரும் பதவியில் இருப்பவர். அவரைச் சந்தித்த போது சொல்லி வார்த்தைகள் இன்றைக்கும் என் நெஞ்சில் கனலாய் தகிக்கிறது.

“காமராஜால் தியாக உணர்வும், அர்ப்பணிப்பும் கொண்ட தமிழர்கள் தெரிந்தார்கள். கருணா நிதியால், சிதம்பரத்தால் கேடுகெட்ட பேராசை பிடித்தலையும், ஹிட்லரை விட மோசமானவர்கள் தமிழர்கள் என்று வடக்குப் பகுதிஅரசியல்வாதிகள் பேசிக் கொள்கிறார்கள்” என்றார். வட இந்தியாவில் தமிழன் என்றுச் சொல்லிப் பாருங்கள். அப்படி ஒரு படுகேவலமான பார்வையைப் பார்ப்பார்கள் பாமரர்கள் கூட.

இதுவரை வடக்கு அரசியல்வாதி எவரும் இந்தளவுக்கு கேடுகெட்ட ஊழல் செய்யவில்லை மிஸ்டர் பிரகாஷ். இது உலகமே அதிர்ந்த ஊழல். அத்தனையும் செய்தது கலைஞர் குடும்பமும், சிதம்பரமும். ஊழல் நடக்கவே இல்லை என்று கோர்ட்டில் வேண்டுமானால் நிரூபிக்கலாம். ஆனால் உண்மை சம்பந்தப்பட்டவர்களை பழிவாங்காமால் விடாது.

அன்னா ஹசாரே “சிதம்பரத்தின் வீடு ஜெயில்” என்றுச் சொல்லி இருக்கிறார். ஏன் அப்படிச் சொன்னார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சோனியா சிதம்பரத்தைக் காப்பாற்ற தன் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம். காங்கிரஸ் இந்தியாவை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது என்பது புரிகிறதா?

திமுக தலைவர் நில மோசடி வழக்கு திமுகவின் மீது கொண்டுவரப்பட்ட தாக்குதல் என்கிறார். எந்த ஒரு காவல் அலுவலகமாவது சுயசார்பில் இயங்க அனுமதித்தார்களா திமுகவினர். பொன்முடிக்கு கோர்ட் பெயில் வழங்க முடியாது என்றுச் சொல்லி விட்டது. ஏன் என்றுச் சொல்லுவாரா திமுக தலைவர்?

நான் தான் சேலத்தின் முதல்வர் என்றுச் சொன்ன ஆறுமுகம் அடித்த கொள்ளை கொஞ்சமா ? சேலம் பக்கம் போய் விசாரித்துப் பாருங்கள் தெரியும் இவரின் லட்சணத்தை.

கரூர் மணல் மாஃபியா கேசிபி 248 கோடி ரூபாய் மணல் கொள்ளை அடித்தார் என்று செய்தி வெளியாகி இருக்கிறது. அவருக்கு கிட்டத்தட்ட 200 கார்கள் செக்கிங் பர்போஸுக்காக வாடகைக்கு எடுக்கப்பட்டது என்று கரூர் நண்பர் சொல்கிறார். இவ்வளவு கொள்ளைகளும் திமுக தலைமைக்கு தெரியாமல் நடந்தது என்றா நினைக்கின்றீர்கள்?

கோவையில் சென்று கேட்டுப் பாருங்கள். எவருமே வாங்கவே முடியாத பிரதான இடங்கள் எல்லாம் யாருடையது என்று? ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் முன்னாள் மாஜி மந்திரியின் சொத்துக்களை பட்டியலிட்டால் இந்தியாவே அதிர்ந்து போய் விடும் என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.

2ஜி ஊழலை வெளிக் கொணர்ந்தது ஒரு பத்திரிக்கை. பின்னர் அதுபற்றிய ஆதாரங்களை வெளியிட்டனர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியினர். வேறு பல பத்திரிக்கையாளர்கள். 2ஜியில் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார் பிரதமர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டினால் சிபிஐ 30,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என்று ஆதார பூர்வமாய் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதெல்லாம் உண்மை இல்லை என்கின்றீர்களா நீங்கள்?

கொஞ்சமாவது சிந்தித்துப் பாருங்கள்? திருட்டு ரயிலேறி சென்னைக்கு வந்தவரின் குடும்பம் ஆசியப் பணக்கார வரிசையில் வருகிறது. இதெல்லாம் யார் பணம்? யோசித்துப் பாருங்கள். நேர்மையாக ஒருவன் உழைத்துச் சம்பாதிக்க வேண்டுமெனில் அவன் 100 ஜென்மம் மனிதனாய் பிறந்தாலும் 10 கோடி ரூபாய் சேர்க்க முடியாது. உங்கள் வீட்டின் அருகில் சலவைத்துணி தேய்த்துக் கொண்டிருக்கும் சலவைத் தொழிலாளியிடம் கேளுங்கள். அவன் சொல்வான் அந்தக் கணக்கினை.

உங்கள் உடம்பு பயன்படுத்தும் அத்தனை பொருட்களுக்கும் வரி வசூலிக்கிறார்கள் அரசாங்கத்தார். அந்த வரிப்பணத்தினை கொள்ளையடிக்கிறார்கள் அரசியல்வியாதிகள். அடிக்கிற கொள்ளையைக் கொஞ்சமாய் அடி என்கிறது ஜன நாயகம். ஆனால் நான் நாட்டையே கொள்ளை அடிப்பேன் என்கிறான் அரசியல்வாதி. அதை வெளிக் கொணர்ந்தால் உங்களுக்கெல்லாம் தவறாகத் தெரிகிறது.

நீங்கள் என்ன முட்டாளா?

– பஞ்சரு பலராமன்


மோடியும் கருணாநிதியும்

செப்ரெம்பர் 19, 2011
கருணாநிதி மோடியின் உண்ணாவிரதம் பழையதை மறக்கடிக்காது என்கிறாரே?

மோடிக்கு ஒப்பிடுவதை விட தனக்குத் தானே ஒப்பிட்டுக் கொள்வது சாலச் சிறந்தது. அம்மா கருணாநிதியைப் பற்றி அடித்த கமெண்ட் “வாயைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்”. இப்போதெல்லாம் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார் இவர். புலம்பல்களைக் கண்டு கொள்ளக்கூடாது.

பொன்முடியின் மனைவி போலீஸ் அதிகாரியை மிரட்டியதாக வந்துள்ள செய்தி பற்றி?

கணவன் அமைச்சர் என்றவுடன் இருந்த பெருமிதம், அகங்காரம் சிறை வாசலிலும் குறையவில்லை என்று புரிகிறது. பிறர் காசை அபகரித்தால் இப்படித்தான் ஆகும். மோடியின் வழியில் தமிழகத்தை உயர்த்த முயன்று கொண்டிருக்கும் அம்மா இருக்கும் வரை, திமுக ஆட்சிக்கு வருவது எல்லாம் நடக்குமா என்பது சந்தேகம் தான்.

பிரதமர் போட்டியில் அம்மாவின் பெயர் பற்றி?

கருணாநிதியின் பெயர் இல்லாததை கவனித்தேன். சுய நலமே தன் நலமாய் கொண்ட தமிழகத்தின் மிக மோசமான தலைவர் என்று உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மன்மோகன் சிங்கை விட எந்தத் தகுதியும் இல்லாத ராகுல் கான் பெயர் வந்திருப்பது இந்தியாவின் கேவலம்.

மோடியின் உண்ணாவிரதம் பற்றி ?

காலத்தின் அடுத்த நகர்வு.

பரம்பிக்குளம் தமிழகத்தின் கையில் இருந்து போய் விடும் என்கிறார்களே?

இந்தியாவின் ஒருமைப்பாட்டினை சீர்குலைக்கும் வேலைகளைச் செய்து வரும் கேரள அரசின் செயல், எதிர்காலத்தில் மிகப் பெரும் அழிவுக்கு அடிகோலும். இந்திய அரசு விழித்துக் கொண்டு, அடுத்தடுத்த மா நிலங்களின் நீராதாரப் பங்கீடுகளை கண்காணித்து வழிமுறைப்படுத்த வேண்டும்.  கேரளா அரசியல்வாதிகள் செய்யும் செயல்கள் சரியில்லை.

வினையை அறுவடை செய்தாக வேண்டும் என்கிறாரே கருணா நிதி?

அதைத்தான் திமுகவினர் இப்போது அறுவடை செய்து வருகிறார்களே? காவல்துறையினரை மிரட்டும் இவரை எப்போது கைது செய்யப்போகின்றார்களோ தெரியவில்லை.

துரைமுருகனின் மகன் அரசுப் பணத்தில் கல்லூரி கட்டியதாக செய்தி வெளியாகி இருப்பதைப் பற்றி?

இதுமட்டும் தானா? திமுக பெரும் தலைகளின் சொத்துக்கள் எல்லாம் தமிழக மக்களின் பணம். அதிமுக அரசு அதை எப்போது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பிடுங்கப் போகிறது என்று தெரியவில்லை.

– குஞ்சுவின் கேள்விக்கு பஞ்சுவின் பதில்


%d bloggers like this: