(6)செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – லாட்டரிக்கு லாட்டரி

ஒரு சில டெக்னிக்கல் பிரச்சினையின் காரணமாய் பகுதி ஐந்து விரைவில் அப்லோட் செய்யப்படும். இனி தொடர்ந்து அடுத்த பகுதியைப் பார்க்கலாம்.

யாராவது ஒரு பிரபலத்தின் அறிமுகம் கிடைத்தாலே அதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஆட்டயப் போடுவதில் சிலர் கில்லாடிகளாய் இருப்பர். அப்படி ஒரு குடும்பமே இருக்கிறது சினிமா உலகில். இது அந்த மஜா குடும்பத்தைப் பற்றியது அல்ல.

மஜா குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறு தகவல். ஒரு முறை சென்னை ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த போது என்னுடன் அப்பா நடிகர் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தார்.  ரயிலில் இருந்து இறங்கி வந்த தன் மகளை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டு அணைத்து அழைத்துச் சென்றார். அங்கிருந்த அனைவரும் முகச் சுழிப்புடன் அக்காட்சியைப் பார்த்தனர். போகட்டும். நமது சீக்ரெட்ஸுக்கு வரலாம்.

உலக மகா ஊழல்கட்சியின் தலைவரிடம் அதிகம் நெருக்கம் பாராட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். இவரை “கள்ளக்கடத்தல் மன்னன்” என்று சினிமாக்காரர்கள் அழைப்பார்கள். இல்லையென்றால் 3000 கோடி பில்டிங்கை கட்ட முடியுமா?

சினிமாக்காரர்கள் அரசை ஏமாற்றி கோடிகளில் புரள்வதைப் பற்றிய ஒரு கிளைக்கதையை உங்களிடம் சொல்லி ஆக வேண்டும்.

கஸ்டம்ஸில் இருப்பவர் எனது நண்பர். இந்தியாவின் சுமால் சி என்றழைக்கக் கூடிய ஒரு நடிகரைப் பற்றிய விஷயத்தைச் சொன்னார். இந்த சுமால் சி சாதாரண ஆள் இல்லை. படுபயங்கர காரியவாதி. காரியம் ஆக வேண்டுமென்றால் “ஸ்பெஷல் மாமா” வேலை கூட பார்க்க தயங்கமாட்டார். அப்படிப் பட்டவர் “குஷி” மேட்டரில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தார். அதுமட்டுமல்லாமல் அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை வேலை பார்த்து சம்பாதிப்பதில் மன்னர் என்று பாலிவுட்டில் பேசிக் கொள்வார்கள். வெளி நாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் இவர் பல கள்ளக்கடத்தல்களைச் செய்தார் என்றுச் சொன்னார் கஸ்டம்ஸ் அதிகாரி.

”எப்படிப்பா சாத்தியம்?” என்றேன்.

விலை உயர்ந்த மோதிரங்களில் டூப்ளிகேட் கற்களை பதித்து வெளி நாடு செல்வாராம். வரும் போது ஒரிஜினல் கற்களோடு வருவாராம். ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பாராம். ஒரு முறை நண்பரிடம் சிக்கிக் கொள்ள, ஏகப்பட்ட பிரஷர்கள் வந்து தப்பித்தாராம். இது போன்ற கடத்தல் வேலைகளில் பெரும்பாலும் ஈடுபடுவது சினிமாக்காரர்கள் என்பது உண்மையான தகவல். சமீபத்தில் கூட ஒரு நடிகை எங்கோ ஒரு நாட்டில் சிக்கிய கதையை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். கூட்டத்தோடு அழைத்துச் சென்று வெளி நாடுகளில் ஆட்களை தள்ளி விடுவதில் சினிமாக்காரர்களுக்கு நிகர் யாருமில்லை. அது போன்ற சம்பாத்தியத்தில் “ முலையாட” டீமும் இருக்கிறது என்பது உபரித் தகவல்.

சொல்ல வந்த லாட்டரிக்கு லாட்டரி சீக்ரெட் விட்டுப் போய் விட்டது. நீங்கள் நினைப்பது போல் இந்த லாட்டரி கோவை சார்ந்தது அல்ல. இது வேறு லாட்டரி. அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். பத்தி பெரிதாகி விட்டது பாருங்கள். ஆகவே தொடரும்.

– அனாதி

3 Responses to (6)செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – லாட்டரிக்கு லாட்டரி

  1. Kunjumon சொல்கிறார்:

    Anathi,

    Unga blog vara vara romba bore adikuthhu…

    Etuna pannunga

  2. kutty சொல்கிறார்:

    சுமால் சி ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: