நரிகள் ஊளையிடும் இந்திய தேசம்

இந்தியா சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அரசியல்வாதிகளைப் பாருங்கள். அதிகாரவர்க்கத்தினரைப் பாருங்கள். முதலாளிகளைப் பாருங்கள். ஏழைகளைப் பாருங்கள். ஒருவேளைக்கு உணவில்லாத கொடுமையான பசி வயிற்றினைப் பாருங்கள். யாருக்கும் இங்கே வெட்கம் இல்லை. யாருக்கும் இங்கே மானமில்லை. ஊழல்வாதியை வாழ்த்தி உரக்கக் கோஷமிடும் மூளையில்லாக் கூட்டத்தினர்,  நரிகளின் நாட்டியத்தில் மதி மயங்கிக் கிடக்கின்றார்கள்.

இந்தியாவில் எவரும் சந்தோஷமாய் இல்லை. எங்கு நோக்கினும் ஊழல். பெருச்சாளிகள் புரளும் சாக்கடையாக அரசின் அலுவலகங்கள் கிடக்கின்றன. காசு பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டிருப்போரும், கொலைகள் புரிந்தோரும், கொள்ளை அடித்தோரும் தலைவர்களாய் வலம் வரும் அவலட்சனத்தைப் பாருங்கள்.

கட்சிகளின் கீழ் நயவஞ்சக நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருப்பதைப் பாருங்கள். பிணம் விழக் காத்திருக்கும் நரிகளைப் போல ஊழலை எதிர்க்கும் நல்லவர்களை குழிக்குள் தள்ளிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பெருச்சாளிகள் உலாவரும் இந்திய தேசம், மீள இளைஞர்கள் முன்வர வேண்டும்.

எவரும் சுத்தமில்லை. எதுவும் சுத்தமில்லை. இந்தியா கங்கையைப் போல அசுத்தமாகிக் கிடக்கின்றது. சுத்தப்படுத்த யாருமில்லை. அசுத்த வாழ்வினையே “உயர்வான” வாழ்வு என வாழ்ந்து கொண்டிருக்கும் மதி கெட்ட மக்கள் இந்தியாவில் உழல்கின்றனர்.

சுயநலமே பொதுநலம் என்றாகி விட்டது.  நாசகார தலைவர்களினால் இந்தியா கற்பழிக்கப்படுகிறது. கதறுகின்றது இந்தியா. காப்பாற்றுவார் யாருமில்லை

– இந்திய மக்களுக்கு சுதந்திர தினத்தில் அனாதி குரூப்பின் உரை

2 Responses to நரிகள் ஊளையிடும் இந்திய தேசம்

  1. pathmanathan.v சொல்கிறார்:

    நரிகள் ஊளையிடும் இந்திய தேசம்.

    சுயநலமே பொதுநலம் என்றாகி விட்டது. நாசகார தலைவர்களினால் இந்தியா கற்பழிக்கப்படுகிறது. கதறுகின்றது இந்தியா. காப்பாற்றுவார் யாருமில்லை

    உங்கள் கருத்துக்களுக்கு உடன்படுகிறேன்.

  2. thendral சொல்கிறார்:

    ஒவ்வொரு வார்த்தையும் சாட்டையடிகளை விழுகிறது… இருந்தும் நம் மக்கள் சொரணை இழந்து நாட்கள் பல ஆகிவிட்டது…. எப்போது விழிப்பார்களோ….கடவுளுக்கே வெளிச்சம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: