அரசு கேபிள் – ஒழிக்க சிலர் சதி

அரசு கேபிள் இணையதள முகவரி : http://210.212.62.58/

அரசு கேபிள் அலுவலக முகவரி :

Administration
The Corporate Office of ACTCL is functioning at “Raag Dubbar”, Flat No. 1-A, First Floor, No.45, Sterling Road, Nungambakkam, Chennai – 34.

The Administration of the Corporation is managed by:
The Chairman : Udumalai Thiru. K. Radhakrishnan
Phone (Off.) 2825 3020
The Managing Director : Dr.M.Jayaraman, I.A.S., and
Phone (Off.) 2825 3021
The General Manager

Arasu Cable TV Corporation Limited,
“Raag Durbar”, Flat No.1-A, First Floor,
No.45, Sterling Road, Nungambakkam,
Chennai – 600 034.
Phone and Fax : 2822 1233
e.mail : arasucabletvcorp@gmail.com

அரசு கேபிள் டிவி என்று கூகிளில் தட்டினால் விபரம் வரவில்லை. வேறு எங்குதான் இருக்கிறது அந்த இணையதளம் என்று தேடிப்பார்த்தாலும் அவ்வளவு எளிதில் கிடைக்க வில்லை. ஏதாவது டகால்டி வேலையாக இருக்குமோ என்று தெரியவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் வரி விலக்கின் மூலமே 1000 கோடியைக் கொள்ளை அடித்திருக்கிறார்கள் என்று குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால் அதை விட பல கோடி ரூபாயை வெள்ளையாக்கி இருக்கின்றார்கள் திருட்டுக் கூட்டத்தினர். அரசு ஒவ்வொரு தியேட்டரையும் செக்கிங் செய்தால் ஏகப்பட்ட திருட்டுக்களை கண்டுபிடிக்கலாம். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதைப் பற்றிய விரிவான கட்டுரை விரைவில் எழுதுகிறேன்.

சமீபத்தில் பல ரெய்டுகளை லோக்கல் டிவிக்கள் வைத்திருக்கும் அலுவலகங்களில் நடத்தப்பட்டது. ஒரு எம் எஸ் ஓவிற்கு மாதம் இரண்டு லட்ச ரூபாய் கட்டணம் செலுத்தினால் தான் லோக்கல் கேபிள் டிவி நடத்த முடியும் என்கிற போது, விளம்பரங்களுக்கான பில்கள் போடப்படும் போது ஏகப்பட்ட தில்லுமுல்லுகளை அந்தக் கேபிள் டிவிக்கள் செய்து வந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஒரு சில முக்கிய திமுக தலைகள் கோடி கோடியாய் கொட்டி அரசு கேபிள் வர விடாமல் செய்ய முனைந்திருக்கிறார்கள் என்று பேசிக் கொள்கிறார்கள். அரசு இவ்விஷயத்தில் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

டாஸ்மாக்கைப் போலவே கேபிளும் அரசுக்கு நல்ல வருமானத்தை அளிக்கும் என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அரசே கேபிள் நடத்தினால் சில பாதகமான சம்பவங்களும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆளும் அரசுக்கு எதிரான செய்திகள் வெளிவருவதை அரசு தடுத்தால், அதற்கு என்ன செய்வது என்பது தான் அது? இதற்கு அரசாங்கம் வழி சொல்ல வேண்டும்.  இருப்பினும் அரசின் செயலைக்கூட தடுத்து விடலாம் என்கிற போது, லோக்கல் தாதாக்களால் அரசு கேபிள் டிவிக்கு பிரச்சினை வரவிடாமல் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம்.

திமுக தலைவரின் குடும்பம் அனுபவித்து வரும் ஏக போகத்தினை அம்மா ஒழித்தாலே போதும். அதுவே ஓட்டுப் போட்டு தன்னை ஜெயிக்க வைத்த மக்களுக்குச் செய்யும் மிகப் பெரும் கைமாறு.

அம்மா செய்வார் என்று சில சம்பவங்கள் சொல்லுகின்றன. அதே போல பல கொலை வழக்குகளும் தீர்ப்பு கிடைக்கவிடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. அதையும் அம்மா கவனத்தில் கொள்வது சாலச் சிறந்தது.

– பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: