(7) செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – ஏமாந்த சோனகிரி

ஓகஸ்ட் 31, 2011

உலக மகா உத்தம கட்சித்தலைவரிடம் விண்ணப்பம் என்ற கோதாவில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய ஸ்மக்ளர்,  படமெடுக்க ஆர்வமாய் இருப்பதாகவும், அதற்கொரு திரைக்கதை வேண்டுமென்றும் கேட்க, ஆகா ஏமாந்தாண்டா ஒரு லூசுப்பயல் என்று நினைத்து குஷியோடு கதை ஒன்றினைக் கொடுத்தார் அந்தத் தலைவர்.

இதில் ஏமாந்தது தலைவர்தான். ஸ்மக்ளர் அல்ல. எப்படி என்றுச் சொல்கிறேன் கேளுங்கள். ஸ்மக்ளரின் சித்து விளையாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்று சினிமா உலகில் பேசிக் கொள்வார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.

அந்தக் காலத்தில் லாட்டரியில் கொடிகட்டிப் பறந்த ஒரு பிரபலம் ஒருவர் தலைவரிடம் நெருங்க முயன்று கொண்டிருந்தார். அதைக் கேள்விப்பட்ட ஸ்மகளர் அவரைத் தன்னிடம் வரவழைத்தார். தலைவரின் அபிமானம் பெற வேண்டுமானால் அவரின் திரைக்கதையைப் படமாக்கினால் போதும். விரைவில் தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று ஐடியா கொடுக்க, லாட்டரி அதிபரும் பல்லை இளித்துக் கொண்டு 50 கோடி ரூபாயைதூக்கிக் கொடுத்தார்.

திரைப்படமும் உருவாகியது பிரமாண்ட சைசில். தயாரிப்பாளர் யாரென்று பார்த்த லாட்டரி அதிபருக்கு சகலமும் அப்போதுதான் புரிந்தது. ஆப்பை அடித்த ஸ்மக்ளர் கடைசி வரையில் லாட்டரி அதிபரை தலைவரின் அருகிலேயே விடவில்லை. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு “அய்யோ அம்மா, ஆத்தா” என்று அரற்றிக் கொண்டிருக்கிறார் லாட்டரி அதிபர்.

விதி வலியது லாட்டரி அதிபரே. செய்யும் தொழில் பிறரைக் கெடுக்காத வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பலரின் உழைப்பை உறிஞ்சியவரல்லவா? இன்று அனுபவிக்கின்றீர்கள். எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் பாபக் கணக்கிற்கு விடை இருக்கிறது அதிபரே.

இந்த ஸ்மக்ளர் தற்போது அப்பணத்தினை வைத்து பலப்பல வேலைகளைச் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.

விரைவில் குஜய் பற்றிய அதிமுக்கிய சீக்ரெட்ஸ் ஒன்றினை எழுதப் போகிறேன். இந்தச் சம்பவம் அதிர்ச்சியாய் இருக்காது. மக்கள் எப்படி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாய் சொல்லும். அதுவரை இந்த நாவலுக்கு சற்று இடைவேளை.

– அனாதி

குறிப்பு : இது ஒரு நாவல் யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.


(6)செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – லாட்டரிக்கு லாட்டரி

ஓகஸ்ட் 28, 2011

ஒரு சில டெக்னிக்கல் பிரச்சினையின் காரணமாய் பகுதி ஐந்து விரைவில் அப்லோட் செய்யப்படும். இனி தொடர்ந்து அடுத்த பகுதியைப் பார்க்கலாம்.

யாராவது ஒரு பிரபலத்தின் அறிமுகம் கிடைத்தாலே அதை வைத்துக் கொண்டு கோடிகளில் ஆட்டயப் போடுவதில் சிலர் கில்லாடிகளாய் இருப்பர். அப்படி ஒரு குடும்பமே இருக்கிறது சினிமா உலகில். இது அந்த மஜா குடும்பத்தைப் பற்றியது அல்ல.

மஜா குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறு தகவல். ஒரு முறை சென்னை ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்த போது என்னுடன் அப்பா நடிகர் பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்தார்.  ரயிலில் இருந்து இறங்கி வந்த தன் மகளை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தமிட்டு அணைத்து அழைத்துச் சென்றார். அங்கிருந்த அனைவரும் முகச் சுழிப்புடன் அக்காட்சியைப் பார்த்தனர். போகட்டும். நமது சீக்ரெட்ஸுக்கு வரலாம்.

உலக மகா ஊழல்கட்சியின் தலைவரிடம் அதிகம் நெருக்கம் பாராட்டிக் கொண்டிருந்தார் ஒருவர். இவரை “கள்ளக்கடத்தல் மன்னன்” என்று சினிமாக்காரர்கள் அழைப்பார்கள். இல்லையென்றால் 3000 கோடி பில்டிங்கை கட்ட முடியுமா?

சினிமாக்காரர்கள் அரசை ஏமாற்றி கோடிகளில் புரள்வதைப் பற்றிய ஒரு கிளைக்கதையை உங்களிடம் சொல்லி ஆக வேண்டும்.

கஸ்டம்ஸில் இருப்பவர் எனது நண்பர். இந்தியாவின் சுமால் சி என்றழைக்கக் கூடிய ஒரு நடிகரைப் பற்றிய விஷயத்தைச் சொன்னார். இந்த சுமால் சி சாதாரண ஆள் இல்லை. படுபயங்கர காரியவாதி. காரியம் ஆக வேண்டுமென்றால் “ஸ்பெஷல் மாமா” வேலை கூட பார்க்க தயங்கமாட்டார். அப்படிப் பட்டவர் “குஷி” மேட்டரில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்தார். அதுமட்டுமல்லாமல் அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை வேலை பார்த்து சம்பாதிப்பதில் மன்னர் என்று பாலிவுட்டில் பேசிக் கொள்வார்கள். வெளி நாடுகளுக்கு அடிக்கடி சென்று வரும் இவர் பல கள்ளக்கடத்தல்களைச் செய்தார் என்றுச் சொன்னார் கஸ்டம்ஸ் அதிகாரி.

”எப்படிப்பா சாத்தியம்?” என்றேன்.

விலை உயர்ந்த மோதிரங்களில் டூப்ளிகேட் கற்களை பதித்து வெளி நாடு செல்வாராம். வரும் போது ஒரிஜினல் கற்களோடு வருவாராம். ஒவ்வொரு முறை சென்று வரும் போதும் கோடிக்கணக்கில் சம்பாதிப்பாராம். ஒரு முறை நண்பரிடம் சிக்கிக் கொள்ள, ஏகப்பட்ட பிரஷர்கள் வந்து தப்பித்தாராம். இது போன்ற கடத்தல் வேலைகளில் பெரும்பாலும் ஈடுபடுவது சினிமாக்காரர்கள் என்பது உண்மையான தகவல். சமீபத்தில் கூட ஒரு நடிகை எங்கோ ஒரு நாட்டில் சிக்கிய கதையை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். கூட்டத்தோடு அழைத்துச் சென்று வெளி நாடுகளில் ஆட்களை தள்ளி விடுவதில் சினிமாக்காரர்களுக்கு நிகர் யாருமில்லை. அது போன்ற சம்பாத்தியத்தில் “ முலையாட” டீமும் இருக்கிறது என்பது உபரித் தகவல்.

சொல்ல வந்த லாட்டரிக்கு லாட்டரி சீக்ரெட் விட்டுப் போய் விட்டது. நீங்கள் நினைப்பது போல் இந்த லாட்டரி கோவை சார்ந்தது அல்ல. இது வேறு லாட்டரி. அது என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம். பத்தி பெரிதாகி விட்டது பாருங்கள். ஆகவே தொடரும்.

– அனாதி


நீரில்லா மேடையில் நீந்தும் மீன்கள்

ஓகஸ்ட் 27, 2011

இது குஞ்சு ஸ்பெஷல் பதிவு. ஆகவே வாசகர்களே மாறல் எதிக்ஸ் எல்லாம் பார்க்க வேண்டாம் ஓகே. பெண் பதிவர்களுக்கு உங்களின் மனம் கவர் குஞ்சு சொல்வது என்றால், எனது பதிவுகளை படித்து ரசிக்க மட்டும் செய்யுங்கள். ஓகே.

ஆண்களுக்கு ஏன் பெண்களின் மீது மோகம் ஏற்படுகிறது என்று கிட்டத்தட்ட மனிதர்கள் உருவான காலத்திலிருந்தே ஆராய்ச்சிகள் நடந்து வருவதை நீங்கள் எல்லாம் அறிந்திருப்பீர்கள். இந்த ஆராய்ச்சியை குஞ்சு வேறு செய்தான் என்பதை நீங்கள் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். ஆராய்ச்சி முடிவுகளை தெரிவிக்கும் முன்பாய் ஒரு மேட்டர்.

ராகுல் காந்தி என்ற மாபெரும் அரசியல்வாதி “ஊழலை ஒழிக்க லோக்பால் மட்டும் போதாது” என்று கருத்து உளறியிருக்கிறார். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நேரு குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினால் போதும் என்று அவருக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி என்ன நேரு குடும்பத்தாரின் குடும்பச் சொத்தா என்ன? ராகுல் காந்தியின் உளறல்கள் வடிவேலுக்கு நிகராய் இருப்பதை வாசகர்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது ஆராய்ச்சி மேட்டருக்கு வருவோம்.

”காந்தம் அந்த மேட்டருக்காய் ஜொலிக்க ஆரம்பித்தாள் ரோட்டில் போகிறவன் கூட இழுக்கப்படுவான்”. இதுதான் ரிசல்ட்…

இனி நீரில்லா மேடையில் நீந்தும் மீனி படம்.

– குஷியுடன் குஜாலுடன் கும்மாளத்துடன் உங்களின் குஞ்சு.


ஊழல் அரசு அலுவலர்கள் மர்ம மரணம்

ஓகஸ்ட் 25, 2011

தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். அது உண்மைதானோ என்று நினைக்கத் தோன்றுகிறது. அரசியல்வாதிகள் பலருக்கு எந்தப் பிரிவின் படி தான் பதவியேற்றிருக்கிறோம் என்பது கூடத் தெரியாது. ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றால் கூட என்னவென்று தெரியாது. ரவுடியாய் திரிந்தவர்களுக்கு வேண்டுமானால் கிரிமினல் சட்டங்கள் பற்றிய சில விபரங்கள் தெரியும். இந்திய அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வக்கீல்களாய் இருப்பதை இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.

இந்த வக்கீல்கள் தான் பெரும் பெரும் பதவிகளுக்கு வருகின்றார்கள். அதற்கு ஒரு உதாரணம் உலகத்தில் இதுவரை எவருமே செய்யாத ஊழல் புகழ் மன்னன் திரு ராஜா. அதை மூடி மறைத்துக் கொண்டிருக்கும் திரு ப.சிதம்பரம் போன்றோர்கள். மக்கள் கவனிக்க வேண்டிய அம்சம் இது. வக்கீல்கள் சரியில்லை என்றால் இந்தியாவை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்று விடுவார்கள். இப்போதைய மன்மோகன் சிங் அரசு அதைத்தானே செய்து கொண்டிருக்கின்றது என்கின்றீர்களா?

ஒன்றுமே தெரியாமல் வரும் அரசியல்வாதிகளை ஊழல்வாதியாய் மாற்றுவதே “அரசு அதிகாரிகள்” தான் என்பதை நாமெல்லாம் அறிவோம். அப்படிச் செய்யும் அரசு அதிகாரிகளின் நிலையோ எதிர்காலத்தில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகிறது. இப்படி ஊழலுக்குத் துணை போன ஒரு அரசு அதிகாரியை எதிர்கட்சி அமைச்சர் ஒருவர், அதிகாரிக்குத் தெரியாமலே அவரின் மனைவியை ஆட்டயப் போட்டு விட்டார்.  இப்போது அதிகாரி “தற்கொலை” செய்து கொள்ளும் மன நிலையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.

சண்டைக்காரனை நம்புவதை விட சாட்சிக்காரனை நம்பலாம் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் சண்டைக்காரர்களுக்கு ஒன்றுமே ஆவதில்லை. சாட்சிக்காரர்கள் தான் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள். வம்பு என்றால் சாதாரண வம்பு இல்லை. செத்துப் போகின்றார்கள். அரசியல்வாதிகள் ஊழல் செய்தால் அவர்களுக்கு துணை போனவர்களின் பரிதாபக் கதையை ஒரு பத்திரிக்கை விரிவாய் எழுதி இருக்கிறது. அதை இந்த இணைப்பில் படித்துக் கொள்ளுங்கள்.

”அரசியல்வாதிகள் தொடர்புடைய ஊழல் வழக்குகளில் முக்கியமான சாட்சிகள் மர்மமான முறையில் இறந்துவிடுகிறார்கள். லக்னோவில் இருந்து பூஜா அவஸ்தி, பாட்னாவில் இருந்து சஞ்சய் உபாத்யா, சென்னையிலிருந்து என்.அசோகன் எழுதும் கட்டுரை

இறந்து போனவர்கள் கதைகள் சொல்வதில்லை. ஆனால் அவர்கள் பாடுகிறார்கள். எலும்பை ஊடுருவிச் செல்லும் உரத்தக் குரலில் அவர்களுடைய மரணங்களைப் பற்றிய சதிகளை, பின்னணி சக்திகளை, மூடி மறைக்கப்பட்ட உண்மைகளைப் பற்றி. லக்னோவின் மாவட்டச் சிறைச்சாலை ஒன்றில் இந்த ஆண்டு ஜூன் 22 அன்று துணை தலைமை மருத்துவ அதிகாரி யோகேந்திர சிங் சாசன், தோல் பெல்ட்டில் தூக்கில் தொங்கி மரணமடைந்தார். அவருடைய மரணமும் மர்மங்கள் அடங்கியது. அக்டோபர் 2010, ஏப்ரல் 2011 இல் கொல்லப்பட்ட அவருடைய இரண்டு தலைமை அதிகாரிகளான வினோத் ஆர்யா, பி.பி. சிங் ஆகியோருடைய மரணத்தில் அவர் முக்கிய குற்றவாளி. சாசன் இறந்த சம்பவம் ஊழல் வழக்குகளில் அரசியல்வாதிகள் ஈடுபடுகையில் முக்கியமான சாட்சிகள் மர்மமான முறையில் கொல்லப்படும் சம்பவங்களுக்கு  சரியான  உதாரண மாக இருக்கிறது. தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் கடந்த ஆண்டு உத்தரப்பிரதேசம் 1808.76 கோடி ரூபாய் நிதியைப் பெற்றது. இத்திட்டம் தொடர்பான ஊழலில் சாசனும் மற்றவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். மருத்துவக் கருவிகள் வாங்கியதாகவும், வாகனங்கள் வாங்கியதாகவும் சொல்லப்பட்டு பெருமளவுக்கு பணம் சுருட்டப்பட்டதாக குற்றச்சாட்டு. பட்டப் பகலில் கொள்ளை அடித்ததாக உ.பி.யில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பின. சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது. இதில் மாயாவதி அரசின் சக்திவாய்ந்த முன்னாள் அமைச்சர் புபுசிங் குஷ்வாஹா விசாரிக்கப் பட்டார். “

ஊழலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகள் இனி கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருந்தாக வேண்டும் போலிருக்கிறது. அதிகாரிகள் மட்டுமல்ல தனி மனிதர்களும் கூடத்தான். இல்லையென்றால் “சாதிக் பாட்சா” போல அனாதையாய் தூக்கில் தொங்க நேரிடும்.

இது கல்கி காலம் போலும். பழிக்குப் பழி வாங்க முனைகிறார் கடவுள். ஒழுங்கற்றவர்களுக்கு “மரணம்” பரிசாய் கிடைக்கும் போல.

– பஞ்சர் பலராமன்

பட இணைப்பு உதவி : தி சண்டே இந்தியன் பத்திரிக்கை


Who is our PM?

ஓகஸ்ட் 17, 2011

இரண்டு நாட்களாக காங்கிரஸ் கொடுங்கோலர்கள் இந்திய ஜன நாயகத்தை படுகுழிக்குள் தள்ளி புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கிடையில் காமடி பீஸ் கட்சியான திமுக “ஜனநாயகம் படும்பாடு” என்ற போர்வையில் மக்களைச் சந்திக்கப் போகின்றார்களாம். இந்திய மக்களின் உழைப்பினை உறிஞ்சிய ஊழல்வாதிகளான திமுகவினர் செய்யும் அக்கிரமம், அழிச்சாட்டியத்திற்கெல்லாம் ஒரு நாள் விடிவுகாலம் வராமலா போகப் போகிறது?

ஊழலை ஒழிக்க ஸ்ட்ராங்கான சட்டம் கொண்டு வாருங்கள் என்றுச் சொன்னால், சொல்பவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை நல்லவர், வல்லவர், புத்திசாலியான நம் பாரதப் பிரதமரின் திருவாய் திறந்து அருளிய கருத்துக்களை கீழே இருக்கும் படத்தினைப் பார்த்துப் புளகாங்கிதப்படுங்கள்.

– பஞ்சரு பலராமன்.


நரிகள் ஊளையிடும் இந்திய தேசம்

ஓகஸ்ட் 16, 2011

இந்தியா சுதந்திர தினம் கொண்டாடுகிறது. அரசியல்வாதிகளைப் பாருங்கள். அதிகாரவர்க்கத்தினரைப் பாருங்கள். முதலாளிகளைப் பாருங்கள். ஏழைகளைப் பாருங்கள். ஒருவேளைக்கு உணவில்லாத கொடுமையான பசி வயிற்றினைப் பாருங்கள். யாருக்கும் இங்கே வெட்கம் இல்லை. யாருக்கும் இங்கே மானமில்லை. ஊழல்வாதியை வாழ்த்தி உரக்கக் கோஷமிடும் மூளையில்லாக் கூட்டத்தினர்,  நரிகளின் நாட்டியத்தில் மதி மயங்கிக் கிடக்கின்றார்கள்.

இந்தியாவில் எவரும் சந்தோஷமாய் இல்லை. எங்கு நோக்கினும் ஊழல். பெருச்சாளிகள் புரளும் சாக்கடையாக அரசின் அலுவலகங்கள் கிடக்கின்றன. காசு பணம் ஒன்றே குறிக்கோளாய் கொண்டிருப்போரும், கொலைகள் புரிந்தோரும், கொள்ளை அடித்தோரும் தலைவர்களாய் வலம் வரும் அவலட்சனத்தைப் பாருங்கள்.

கட்சிகளின் கீழ் நயவஞ்சக நரிகள் ஊளையிட்டுக் கொண்டிருப்பதைப் பாருங்கள். பிணம் விழக் காத்திருக்கும் நரிகளைப் போல ஊழலை எதிர்க்கும் நல்லவர்களை குழிக்குள் தள்ளிப் புதைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் பெருச்சாளிகள் உலாவரும் இந்திய தேசம், மீள இளைஞர்கள் முன்வர வேண்டும்.

எவரும் சுத்தமில்லை. எதுவும் சுத்தமில்லை. இந்தியா கங்கையைப் போல அசுத்தமாகிக் கிடக்கின்றது. சுத்தப்படுத்த யாருமில்லை. அசுத்த வாழ்வினையே “உயர்வான” வாழ்வு என வாழ்ந்து கொண்டிருக்கும் மதி கெட்ட மக்கள் இந்தியாவில் உழல்கின்றனர்.

சுயநலமே பொதுநலம் என்றாகி விட்டது.  நாசகார தலைவர்களினால் இந்தியா கற்பழிக்கப்படுகிறது. கதறுகின்றது இந்தியா. காப்பாற்றுவார் யாருமில்லை

– இந்திய மக்களுக்கு சுதந்திர தினத்தில் அனாதி குரூப்பின் உரை


திரும்பிய அஸ்திரம்

ஓகஸ்ட் 14, 2011

எழுத்து ஒரு தவம் என்பார்கள். அவ்வளவு எளிதில் எவருக்கும் எழுத்து கைவராது. அதற்கென்று சில பல கவனங்கள் வேண்டும். பொதுவெளியில் பிழைப்பிற்காக எழுதுபவர்களுக்கு அந்த எழுத்துக்களே மாபெரும் ஆபத்தாய் வந்து விடும். அறச்சீற்றமும், அகச்சீற்றமும் இல்லாத எழுத்துக்களின் சாயம் வெளுத்து விடும். ஊழலே ஒரு கட்சிக்கு முடிவு கதை எழுதுவதை நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்றைக்கு.

டெக்னிக்கல் எழுத்து என்பது வேறு. பத்திரிக்கை எழுத்து என்பது வேறு. அவர்களை வெறும் ரிப்போர்ட்டர்கள் அல்லது பத்தி எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தி விடலாம். அப்படி ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர்தான் தான் எனக்குப் பிடித்த ராஜ நாயஹம். பாருவை விட 1000000000000000 மடங்கு அதிக தகுதியும், எழுத்து வன்மையும் கொண்டவர் அவர்.

சமூக தளத்தில் எழுத வருபவர்கள் எவராயினும் “சமூகத்தின் மீதான பிடிப்பும், சீர்கேடுகளுக்கு எதிரான உணர்வும்” இருந்தால் தான் எழுதவே வரும். எழுத்தாளன் என்பவனுக்கு மேற்படி உணர்வு நிச்சயம் இருக்கும். அப்படி இருந்தால் தான் அவன் எழுத்தாளன். வேஷம் போடுபவர்கள் யாராயினும் அவர்களின் ‘பொய் முகம்’ வெட்டவெளியில் அவிழ்த்து நிர்வாணப்படுத்தி விடும் அந்த எழுத்துக்கள்.

எழுத்துக்கள் என்றால் சும்மா அல்ல. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அஸ்திரம் போன்றவை. வார்த்தைகளை மிக மிகக் கவனமாய் கோர்க்க வேண்டும். இல்லையென்றால் “காமகிறுக்கன்” என்று அழைக்கும்படி ஆகிவிடும். யார் யாரையோ நோக்கியெல்லாம் வீசப்பட்ட வார்த்தைகள் “சாரு நிவேதிதாவிற்கு” எதிராய் களம் காண வந்திருக்கின்றன.

அஸ்திரம் திரும்பி விட்டது.

அஸ்திரத்தைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

இன்றைய “தினமலரில் சாரு நிவேதிதாவின்” மரம் பற்றிய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. “சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன” என்பதற்கு இதை விட ஆதாரம் என்ன இருக்கிறது சொல்லுங்கள் பார்க்கலாம்.

– அனாதி


%d bloggers like this: