காலாண்டுத் தேர்வு

ஆட்சிப் பொறுப்பேற்றதும் அதிமுக தலைவி செய்யும் சமச்சீர் அரசியல், ஓட்டுப் போட்ட மக்களைக் கேணயர்கள் என்று கருதுகின்றாரோ என்று தோன்றுகிறது.

செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடக்கும். உலகமே வியக்கும் அளவுக்கு வெற்றி பெற்ற அதிமுக அரசு, காலாண்டுத்தேர்வினை ரத்துச் செய்து, அனைவரும் பாஸ் என்று அறிவித்தாலும் அறிவிக்கக் கூடும் போல. காலாண்டுத் தேர்வு விடைத்தாளில் “ அம்மா வாழ்க ! அம்மா வாழ்க !! அம்மா வாழ்க !!!” என்று எழுதினாலே போதும் 100% மார்க் கிடைக்கும் என்று சொன்னாலும் சொல்வார்கள் போல. மார்க் போடாத வாத்தியார்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்படும் போல.

ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வியை அமுல்படுத்து என்றுச் சொல்லி விட்டது. அதன்பிறகு 200 கோடி செலவு செய்து பழைய புத்தகங்களை அச்சடிக்கிறது அதிமுக அரசு. ஏதாவது ஒரு 200 கோடி வேஸ்ட் தானே. அதை அதிமுக நிதியில் இருந்து எடுக்க வேண்டுமென்று யாராவது ஒரு புண்ணியவான் கேஸ் ஒன்றினைப் போட்டால் பரவாயில்லை. மக்கள் பணத்தினை வேஸ்ட் செய்யும் அரசியல் கட்சிகள் வரும் தேர்தலில் போட்டியிட தடை செய்யப்பட சட்டம் வேண்டும். இல்லையென்றால் கட்சி நிதியில் இருந்து வேஸ்ட் செய்யப்பட்ட நிதியைப் பெற வழி வகை செய்ய வேண்டும். அப்போது தான் திருந்துவார்கள்.

அன்னா ஹசாரே டீமினர் கவனிக்கவும்.

பள்ளிகளின் வாசல்களில் குழந்தைகளைக் கொண்டு வந்து விட வரும் பெண்கள் திட்டும் திட்டினைக் காது கொடுத்து வாங்க முடியவில்லை என்று பள்ளியின் வாட்ச்மேன்கள் பேசிக் கொள்கிறார்கள் என்றுச் சொன்னார் ஒரு ஆசிரியர். பெண்கள் வாயில் ஏன் விழ வேண்டும்?

இரண்டு மாதம் புத்தகமே இல்லாமல் பள்ளி நடந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சியின் மாபெரும்  புரட்சிதானோ?

சமச்சீர் இந்தாண்டே அமல் படுத்தப்பட்டால் அந்த வரலாற்று நிகழ்வு கொஞ்சம் கூட கருணையே இல்லாத “கருணாநிதிக்கு” போய் விடும் என்ற அற்ப ஆசையின்றி வேறென்ன?

குழந்தைகளின் படிப்பு இருளில் தள்ளப்பட்டிருப்பது அதிமுக ஆட்சியின் பெருமைதானே.

தமிழகம் மீண்டும் இருளில் தள்ளப்பட்டு விட்டது. ஆட்சியாளர்கள் சுய நலமற்றவர்களாய் இருப்பது என்றைக்கும் நடக்காது. தமிழர்கள் மீண்டும் முட்டாளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

– பஞ்சரு பலராமன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: