வடிவேலுக்கு வெடி தயார் !

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்

தி.மு.க. ஆட்சிக்கு கடந்த ஐந்தாண்டுகளாக துதிபாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இப்போது சுவடே இல்லாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  தேர்தல் நேரத்தில் தேவையில்லாமல் தலையை நீட்டிய வடிவேலு, இப்போது எந்த முகவரியில் இருக்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. இந்நிலையில்,  மலேசியாவில் அவர் பணமோசடி செய்துவிட்டார் என்ற பகீர் குற்றச்சாட்டுதான் தலைமறைவுக்குக் காரணம். 

‘பண மோசடியில் வடிவேலுவா?’ என்பது குறித்து விசாரணை நடத்தினோம். மலேசிய தொழிலதிபர் மைக்கேல் கானப்பிரகாசம் வேதனையோடு விவரித்தார். இவர் கடந்த  முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சினிமா கலைஞர்களை மலேசியாவுக்கு வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். இனி மைக்கேல் கானப் பிரகாசமே  பேசுகிறார்.

“கோலாலம்பூரில் வசித்து வந்தாலும் எனக்கு சொந்த ஊர் திருப்பத்தூர்தான். மலேசியத் தமிழர்களுக்குப் பிரியமான தமிழ் நடிகர், நடிகைகள், நகைச்சுவை நடிகர்கள், இசைக்  கலைஞர்களை வரவழைத்து மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சியை நடத்துவதுதான் எனக்குத் தொழில். இந்த நிலையில், என் மலேசிய நண்பர்களின் வேண் டுகோளுக்கிணங்கி 2007-ம் ஆண்டு இறுதியில் வடிவேலு, இசையமைப்பாளர் தேவாவை வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தோம்.

நிகழ்ச்சிக்கு ‘தேவா-வடிவேலு லைவ் இன் கன்சர்ட்’ எனப் பெயர் வைத்தோம். நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வடிவேலுவுக்கு பத்து லட்ச ரூபாய் பேசப்பட்டு நான்கு  லட்ச ரூபாய் பணத்தை முன் பணமாகக் கொடுத்து ஒப்பந்தம் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி முடிவில் மீதம் ஆறு லட்ச ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டேன். பிறகு  இசையமைப்பாளர் தேவா உள்பட துணை நடிகர், நடிகைகளுக்காக முப்பது லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தேன். நிகழ்ச்சிக்காக மலேசியாவில் உள்ள நெகரா  அரங்கமும் தயாரானது.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு மலேசிய துணைப் பிரதமர்,  நெகரா அரங்கத்தில் அரசு விழா நடக்கவிருப்பதால் அரங்கத்தை விட்டுக் கொடுக்குமாறு கே ட்டார். நாங்களும் விட்டுக் கொடுத்தோம். பிறகு, 2008-ம் ஆண்டில் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த தேதி கிடைத்தது. அந்த நேரத்தில் மலேசிய இண்ட்ராப் அமைப்பு  தீவிரமான போராட்டத்தில் இறங்கியது. மலேசியத் தமிழர்கள் பிரச்னை பெரிய அளவில் இருந்தது. அதையும் தாண்டி நிகழ்ச்சி நடத்துவதற்கான 13 லைசென்சுகளை  வாங்கினோம்.

இண்ட்ராப் சண்டை தீவிரமாக வலுத்து வந்ததால், ‘இந்தியர்களால் பிரச்னை தீவிரமாகிறது. எனவே, அனைவரும் கூடும் இடத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம்’  எனத் தடை போட்டது. பின்னர் நிகழ்ச்சி நடத்த தேதி முடிவானது. நான் தேவாவுக்கு போன் போட்டேன். அவரும், ‘ஒன்றும் பிரச்னையில்லை. எப்போது நீங்கள் சொன் னாலும் வந்து நிகழ்ச்சியை நடத்திவிட்டுச் செல்கிறேன்’ என உறுதியளித்தார்.

அடுத்து வடிவேலுவுக்கு போன் போட்டேன். எடுத்த எடுப்பிலேயே, ‘எந்தப் பணம் உனக்குத் தரணும்? உனக்கு ரெண்டு தேதியக் கொடுத்தேன். நீ பயன்படுத்திக்கலை. அ துக்கே உன் பணம் முடிஞ்சு போச்சு…. நீ சொல்ற நேரத்துக்கெல்லாம் வர முடியாது. வேலையைப் பாருடா… போடா டேய்’ என சத்தம் போட்டார். எப்படியாவது வடிவே லுவை அழைத்து வர வேண்டும் என நான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.  குறிப்பிட்ட நேரத்திற்கு வடிவேலுவிடம் இருந்து உறுதியான தகவல்  கிடைக்காததால், விளம்பரம் உள்பட பல்வேறு செலவினங்களால் சுமார் அறுபது  லட்ச ரூபாய்க்கும் மேல் எனக்கு நஷ்டமானது.

இதன்பிறகு, வடிவேலுவுக்கு நான் கொடுத்த பணத்தைத் திரும்பத் தருமாறு தூதரகம் மூலம் கடிதம் எழுதினேன். அதற்கு அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.  ஒருகட்டத் தில் தூதரக அதிகாரிகளே வடிவேலுவிடம் போனில் பேசினர். போனை எடுத்தவர், ‘ஓ…எஸ்…எஸ்… ஓ…நோ…நோ…’ என்று மட்டும் சொல்லிவிட்டு லைனை கட்  பண்ணிட்டார்.
அதன்பிறகு மலேசிய எண் வந்தாலே அவர் எடுப்பதில்லை. ஒரு கட்டத்தில் வடிவேலுவைத் தொடர்பு கொள்ள முடியாததால், முதல்வராக இருந்த கருணாநிதிக்கு என்  நிலையை முழுமையாக விளக்கி கடிதம் எழுதினேன். கருணாநிதியிடம் இருந்தும் எந்தப் பதிலும் வரவில்லை. அந்தளவுக்கு ஆளுங்கட்சியோடு செல்வாக்கில் இருந்தார்  வடிவேலு. இப்போது சென்னை மாநகர கமிஷனர் திரிபாதியைச் சந்தித்து விரைவில் புகார் கொடுக்கவிருக்கிறேன்’’ என்றவர் இறுதியாக,

“கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழகக் கலைஞர்களை மலேசியாவில் மேடையேற்றி பிழைப்பு நடத்தி வருகிறேன். யாரிடமும் எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.  வடிவேலுவால் மட்டுமே அதிகப்படியான மனஉளைச்சலுக்கும், ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகியிருக்கிறேன். மிகுந்த வேதனையாக இருக்கிறது. விரைவில் என் பணம்  எனக்குத் திரும்ப வரும் என்ற நம்பிக்கை மட்டுமே மீதமிருக்கிறது’’ என்றார் வேதனையோடு.

மைக்கேல் கானாவின் புகார்களுக்கு விடை தேடி வடிவேலுவைத் தேடினோம். ‘‘மதுரையில் இருக்கிறார் விரைவில் உங்களிடம் பேசுவார்’’ என்றார் மேலாளர் முத்தையா.  ‘‘மதியம் 2 மணிக்குப் பேசுங்கள். சென்னை அலுவலகத்தில் இருப்பார்’’ என்றார் ஒரு உதவியாளர். ‘‘விஷயத்தைச் சொல்லுங்கள்’’ என்றார் சங்கர் என்பவர். அனைத்தையும்  கேட்டவர், ‘‘அண்ணனே உங்களிடம் பேசுவார்’’ என்றார். நேரில் சென்றால் வடிவேலு வீட்டு கூர்க்காவோ, ‘‘சார் ஊரிலேயே இல்லை’’ என்றார்.

வடிவேலுவுக்கு என்னதான் ஆச்சு?

 ஆ.விஜயானந்த்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: