கலைஞர் ராஜினாமா செய்வாரா?

தமிழக அரசியலில் இன்றைய சூடான பரபரப்பு செய்தி “ திமுக தலைவரான கலைஞர் தன் பதவியை ராஜினாமா செய்வாரா?” என்பதுதான். ஏன் இந்த நிலை வந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு பிரபலமான இணையதளத்தில் ஸ்டாலின் கலைஞர் மோதல் என்ற செய்தியைப் படித்த போது சிரிப்புத்தான் வந்தது.

நல்ல அரசியல்வாதிக்கு உதாரணம் கம்யூனிஸ்ட் கட்சி திரு நல்லகண்ணு. மிக மோசமான அரசியல்வாதிக்கு உதாரணமாய் உலகமே விரல் நீட்டுவது யாரென்பது உங்களுக்குத் தெரியும்.

திமுகவின் இந்தத் தோல்விக்கு காரணம் கலைஞர் மட்டுமே. ஸ்டாலின் நிச்சயமாய் இல்லை. அழகிரியும் இல்லை. அழகிரி கட்சியில் திணிக்கப்பட்டவர். ஆனால் ஸ்டாலின் தானகவே வளர்ந்தவர். அரசியலில் எவரையும் பகைத்துக் கொள்வதும் இல்லை. கடுமையான விமர்சனமும் செய்வதும் இல்லை. நாகரீகமான அரசியல்வாதியாக தன்னை நிலை நிறுத்திக் கொள்பவர்.

2011இல் அதிமுகவே இருக்காது என்று அரைகூவல் விட்ட அழகிரிக்கு ஸ்டாலினோடு ஒப்பிட எந்த வித அருகதையும் அற்றவர். அரசியல் சாணக்கியத்தனமோ, வேறு எந்த வித விபரங்களும் இல்லாத ஒருவராய் தன்னைக் காட்டிக் கொள்கிறார். திருமங்கலம் பார்முலா திமுகவின் அழிவிற்கு காரணமாய் ஆகி விட்ட கொடுமைக்கும் அழகிரியே காரணம். இதே பார்முலாவை காங்கிரஸ் ஒரு காலத்தில் செய்தது. அன்று ஆணவம் பிடித்தலைந்த காங்கிரஸாரின் இன்றைய நிலைமை என்னவென்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

உங்களுக்குத் தெரியுமா? எத்தனை எத்தனையோ காங்கிரஸ்காரர்கள் திமுகவால் படுபயங்கரமான விதத்தில் பாதிக்கப்பட்டார்கள். ஒரு காலத்தில் காங்கிரஸ்காரன் என்றுச் சொல்லவே அச்சப்பட்டார்கள். திமுக அந்தளவுக்கு காங்கிரஸ்காரர்களை வேட்டையாடியது என்று வயதானவர் ஒருவர் சொன்னார். குஜராத் கலவரங்களை விட கொடுமையான நிகழ்வுகளை திமுகவினர் செய்தனர் என்றும் கூடுதல் தகவல்களைச் சொன்னார். வயதான காங்கிரஸ்காரர்களிடம் மேற்படி விஷயத்தை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள்.

திமுகவின் இந்த தோல்விக்கு கலைஞரே காரணம் என்று ஏன் சொல்கிறேன் என்றால் கனிமொழியைக் கண்டிக்காமல் விட்டதன் பலன், இன்றைய திமுகவின் அழிவிற்கு கனிமொழி மூலம் கலைஞரே காரணமாய் இருக்கிறார். எத்தனை எத்தனையோ லட்சோப லட்ச திமுக தொண்டர்களால் உருவாகிய திமுகவை கனிமொழி தன் பேராசையால் அழித்து விட்டார். ஆவதும் பெண்ணாலே அழிவதும் கனியாலே என்றாகி விட்டது.

இத்தனை ஆண்டுகாலம் தலைவர் பதவியில் அமர்ந்து தன் குடும்பம் மட்டுமே கோடீஸ்வரர்களாய் மாற உழைத்தாகி விட்டது. ஆட்சியில் இருந்து இறங்கும் போது தமிழகத்துக்கு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் கடனையும் வைத்துச் சென்று விட்டார் கலைஞர். அதுமட்டுமா, இந்தியாவிற்கு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் இழப்பையும் ஏற்படுத்தி விட்டுச் சென்றிருக்கிறார் என்று பத்திரிக்கைகள் எழுதி வருகின்றன.

இத்தனையும் செய்து விட்டு, இனிமேலும் கட்சிக்கு தலைவராய் இருப்பதற்கு எப்படி முடிகிறது என்பதுதான் வேடிக்கை. அடுத்த திமுகவின் தலைவர் ஸ்டாலினாக வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும் கூட. அதுவே தர்மமும் கூட. ஏனென்றால் திமுகவை உடையாமல் காக்கும் திறமை ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு.

– பஞ்சரு பலராமன்

6 Responses to கலைஞர் ராஜினாமா செய்வாரா?

 1. sk சொல்கிறார்:

  Innapa ippalam romba saivama marittinga. onum kuchili matteru ila

  ethavathu greena padam podungmaa pls

  • அனாதி சொல்கிறார்:

   எஸ்கே எங்களுக்கே ஒன்னும் கிடைக்கவில்லை. இதில் நீங்க வேற. நாங்க என்ன சாருவா? ரகம் ரகமா கிடைக்க? கிடைக்கும் போது போடுறோம் ஓகே… – குஞ்சு

 2. achandarsingh சொல்கிறார்:

  இந்த அயோக்கியர்களை,கட்சியை கலைத்து விட்டு போகச் சொல்லுங்கள்.பேசிப் பேசியே ஆட்சியை பிடித்தார்கள்.
  நாட்டையும் கெடுத்தார்கள்.தமிழை வளர்க்கிறேனென்று இவர்கள் வயிறை வளர்த்தார்கள்.சினிமா,டிவி மூலம் தமிழர் கலாச்சாரம் கெடுத்தார்கள்.மதுக் கடைகள் திறந்து மனிதனின் மாண்பை கெடுத்தார்கள்.வாரிசுகளை வைத்து அரசியலை கெடுத்தார்கள்.வோட்டுக்கு பணம் கொடுத்து புனிதமான ஜன நாயகத்தை கெடுத்தார்கள்.ஹிந்தி ஒழிக என்று ஒரு தலைமுறையையே அழித்தார்கள்.மக்களை சினிமாவுக்கு அடிமையாக்கி மழுங்கடித்தர்கள்.இப்படி பட்டவர்களை நாட்டை விட்டே ஓட வைக்க வேண்டும்.

 3. Bandhu சொல்கிறார்:

  அது சரி! அப்படியாவது தி மு க வை உடையாமல் காப்பாற்ற வேண்டுமா?

  • அனாதி சொல்கிறார்:

   என்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள் பந்து. திமுக என்ன கலைஞரின் வீட்டின் சொத்தா??? நாளைக்கு நீங்களே திமுகவின் தலைவராகக் கூட வரலாம் இல்லையா? அது ஒரு ஜன நாயகக்கட்சி. அதைக் கபளீகரம் செய்து வைத்திருக்கிறார் கலைஞர். ஹிட்லரே காணாமல் போய் விட்டார். இந்த கபளீகர விஷயமெல்லாம் எத்தனை நாளைக்கு???- பஞ்சு

 4. sara சொல்கிறார்:

  அவர் வந்தாலும் கட்சி உடையும். மாவட்டம் வாரியா இருக்கற குட்டி தலைகள் (வீரபாண்டியார் போல் ) இருக்கும் வரை திமுகவை காப்பாற்ற முடியாது

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: