முதலைகளை விட்டு விட்டு !

அம்மா ஆட்சி வந்த பிறகு திமுகவினர் பலருக்கு பாத்ரூமே கதியாக இருந்தது. பலர் பெங்களூர் ஹோட்டல்கள், ஹைதராபாத் ஹோட்டல்களில் நிரந்தரமாய் அறைகளை புக்கிங்க் செய்து தங்கி இருக்கின்றனர்.  ஒரு ஹோட்டல் முழுக்க தமிழ் பேசுபவர்களாய் இருக்கின்றார்கள். யாரென்று விசாரித்தேன். அனைவரும் ரியல் எஸ்டேட்காரர்களாம்.

கோவையில் கைது, திருச்சியில் கைது என்கிறார்கள். கோவையில் கால்வாசிப் பங்கினை வைத்திருக்கும் முன்னாள் ஒருவரைப் பற்றி யாரும் எவரும் ஒரு கம்ப்ளைண்ட் கூட குடுக்கவில்லையே ஏன்??? அம்மா ஆட்சியில் சுதந்திரம் இன்னும் நிறைவேற்றப்படவில்லையா? குஞ்சு குலுவான்களைக் கைது செய்யும் காவல்துறை ஏன் இந்த முன்னாள்களைக் கைது செய்யவில்லை என்பது இதுவரை புரியாத மர்மம் என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

திருச்சியில் காணும் பக்கமெல்லாம் ஒருவரே வளைத்துப் போட்டிருக்கின்றாரே அதெல்லாம் அரசு கண்ணுக்குத் தெரியாதா? காவல்துறையினருக்குத்தான் தெரியாதா? முன்னாள் அமைச்சர்கள் பல பேர் தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியா முழுதும் சொத்துக்களாய் வாங்கிக் குவித்து வைத்திருக்கின்றார்களே அவர்களை என்ன செய்ய போகிறது இந்த அரசு?

முதலில் முதலைகளைப் பிடியுங்கள். பின்னர் குஞ்சு குலுவான்கள் தானாக மாட்டிக் கொள்ளும். அதை விடுத்து, நில மோசடி என்ற பெயரில் அல்லக்கைகளை கைது செய்வது இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையைக் காட்டி விடும்.

அனைவரும் வெளியூர் சென்றிருந்த காரணத்தாலும், நாங்கள் சென்றிருந்த இடத்தில் இணைய இணைப்பு கிடைக்காத காரணத்தாலும் தொடர்ந்து பதிவுகள் எழுத முடியவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில்… படு ரகளையான பதிவுகள் ஒவ்வொன்றாய் வரும்.

– பஞ்சரு பலராமன்

One Response to முதலைகளை விட்டு விட்டு !

  1. thiru சொல்கிறார்:

    kalaingar matter super kunju… keep it up

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: