கல்லூரிப் பெண்களும் கற்பும்

இன்று காலையில் நண்பரொருவரை ஹோட்டலில் எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. சமூக சேவையில் அக்கறையும், பிறருக்கு உதவும் குணமும் கொண்டவர் அவர். பெரும்பாலும் யாருடனாவது சுற்றிக் கொண்டிருப்பார். திடீரென்று ஹோட்டலுக்குள் வந்தவர், என்னைப் பார்த்து விட்டு, அனாதி எப்படியப்பா இருக்கிறாய் என்று குசலம் விசாரித்து, முடித்து சாப்பிட்டு விட்டு, தனி அறையில் அமர்ந்தார் என்னுடன்.

சில பல விஷயங்களைப் பேசி முடித்ததும், அவருக்குப் போன் ஒன்று வந்தது. ”அவ்வளவு காசா, பார்க்கிறேன்” என்றுச் சொல்லி முடித்தார். ”ஏதாவது பணம் வேண்டுமா?” என்று கேட்டேன்.

“ அட இது வேறப்பா” என்றவர் தொடர்ந்து சொல்லியதை அப்படியே கீழே படியுங்கள்.

கிராமப்புறங்களில் இருந்து நகரத்துக்கு வரும் இளம் பெண்கள் பலர், நகரங்களில் இருக்கும் படாடோபங்களைக் கண்டு மயங்கி, அதை அனுபவிக்க விரும்புவார்களாம். அந்த மாதிரிப் பெண்களை இனம் கண்டு, அவர்களை மேட்டர் முடித்து விடுவார்களாம் சில வாலிபப் பசங்கள். இதற்கிடையில் பியூட்டி பார்லர் விபச்சாரங்கள் வேறு. விபரம் தெரியாத கிராமத்துக் குட்டிகள் ஏமாந்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்களாம். கருக்கலைப்பு செய்ய முடியாமல் சிலருக்கு ஆகி விடுமாம். அந்த மாதிரிப் பெண்களை சிலர் தனி வீடு பிடித்து வாடகைக்கு வைத்து, ஹாஸ்பிட்டலில் பிள்ளை பிறக்க வைத்து, அப்பிள்ளையை ஹாஸ்பிட்டலுக்கே கொடுத்து விட்டு, எஸ்கேப் ஆகி விடுவார்களாம்.

அந்த மாதிரிக் குழந்தைகளை ஹாஸ்பிட்டல்கள் சில புரோக்கர்கள் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்கின்றார்களாம். முன்பு சில ஆயிரங்கள் மட்டுமே கேட்ட ஹாஸ்பிட்டல்கள் இன்றைக்கு லட்சக் கணக்கில் கேட்கின்றார்கள் என்றுச் சொன்னார்.

ஒரு நிமிடம் திக்கென்றாகி விட்டது எனக்கு. குழந்தையில்லாதவர்கள் அவ்வளவு எளிதில் இன்றைக்கு ஒரு குழந்தையை தத்து எடுத்து விட முடியாதாம். ஆகவே இது போன்ற புரோக்கர்களை அவர்கள் நாடுகின்றார்களாம்.

பணக்காரக் குட்டிகளுக்கு மேட்டர் செய்து விட்டு, தப்பிப்பது எப்படி என்று தெரிந்து விடும், ஆனால் கிராமத்துக்குட்டிகளுக்கு அவ்வளவு எளிதில் மேட்டர் தெரியாது அல்லவா, அதனால் மாட்டிக் கொள்கிறார்கள் என்றுச் சொன்னார்.

ஒரு முன்னாள் அமைச்சரின் உறவினர் ஒருவர் இது போல ஒரு பிரச்சினையில் மாட்டி, மேற்கண்ட முறையில் தப்பித்தார் என்றும் சொன்னார்.

அதுமட்டுமல்ல, கல்லூரிகளில் நடக்கும் செக்ஸ் விஷயங்கள் என்று மட்டும் இல்லாமல், தற்போது சர்ச்சையில் சிக்கி இருக்கும் எழுத்தாளர் போன்ற பல எழுத்தாளர்கள் வாசகிகள் என்றுச் சொல்லி தன்னிடம் வரும் பெண்களிடம் அதை இதைப் பேசி எளிதில் மயக்கி விடுகின்றார்கள். மயக்கி அவர்கள் மட்டும் அனுபவிக்காமல், அவர்களின் நண்பர்களையும் அனுபவிக்க வைக்கின்றார்களாம். இதற்கு ஒரு நெட்வொர்க்கே தமிழகத்தில் இருப்பதாய் நண்பர்கள் பேசிக் கொண்டார்கள். காவல்துறையினர் இலக்கியவாதிகள் மீது ரகசியமாய் ஒரு கண் வைக்க வேண்டுமென்று சில சமூக சேவர்கர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்களாம்.

ஒரு எழுத்தாளர் விரைவில் மாட்டுவார் என்றுச் சொல்லிச் சிரிக்கின்றார்கள்.

கலாச்சாரம், கற்பு என்று பேசிக் கொண்டிருக்கும் நாம், மேற்கண்ட சம்பவத்தைப் படித்தால் என்ன நினைப்போம் என்பதை உங்கள் மனதிற்கே விட்டு விடுகிறேன்.

– அனாதி

சில சம்பவங்களை ஒன்றாக்கி எழுதி இருக்கிறேன். நண்பர் கற்பனையானவர்.

5 Responses to கல்லூரிப் பெண்களும் கற்பும்

 1. Suganth சொல்கிறார்:

  Hi enna aachu july masam oru pathippum kanum? yezhudhardha paathila niruthittu poiteengala thalaivargale? illa yarna meratti yezhudha koodhunu soltangala?

 2. moti சொல்கிறார்:

  ராஜீவ் காந்தியின் சுவிஸ் வங்கி கணக்கு !!!!!

  மேலே உள்ள படம் சுவிட்சர்லாந்து மாத இதழ் Schweizer Illustriertein இதழின் நவம்பர் 1991 மாத பதிப்பின் ஒரு பக்கம்.

  அப்பக்கத்தில் சுவிஸ் வங்கியில் 1991 – ஆம் ஆண்டு வரை அதிக வைப்பு பணம் வைத்திருப்பவர்களை பட்டியல் இட்டு இருக்கிறது.

  இதில் நம் நாட்டு ராஜீவ் காந்தியும் இடம் பெற்று இருக்கார்.( சதாம் ஹுசைனும் இருக்கிறார் பாருங்கள்).

  ராஜீவ் காந்தியின் படத்தின் கீழ் என்ன எழுதி இருகிறார்கள் தெரியுமா ?

  Rajiv Gandhi, Indian, Holds 2.5 billion Swiss Francs . அதாவது இந்திய மதிப்பில் ருபாய் 13,200 கோடி (1991 ஆண்டு ).

  இன்று வரை , காங்கிரஸ் கட்சியனர் இதை பற்றி மூச்சு விடவில்லை.

  ஆனால் பாருங்கள், அவருடைய இறந்த/பிறந்த

  நாட்களில் இந்திய அரசு நம் வரி பணத்தில் அவர் புகழை பரப்பி கொண்டிருகின்றனர்.

 3. pondumani சொல்கிறார்:

  அவர் எங்கே மாட்டப் போகிறார்? அவருக்குத் தான் மிகப் பெரிய போலீஸ் அதிகாரிகளெல்லாம் தெரியுமே ? அவர் என்ன உங்கள் பக்கத்தை படிக்கிறாரா ? அவருக்கும் publisher-கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்தை எடுத்து விட்டாரே.

  • அனாதி சொல்கிறார்:

   பொந்துமணி ( சூப்பர் பெயர் !!!!!) போலீஸ்காரர்கள் எழுத்தாளர்களுக்கு மாமா வேலையா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்? அவர்கள் வேலை பார்க்கவே முடியாமல் கிடந்து அல்லாடிக் கொண்டிருக்கின்றார்கள். 24 மணி நேரமும் போலீஸ்காரர்கள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல பொந்து. அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்று பந்தா விடுவது சில பல எழுத்தாளர்களின் கிச்சுக்கிச்சு வேலை.

   மறந்து விட்டீர்களா, நாங்கள் எழுதிய ஃபக்கிங் மெஷின் என்ற எந்திரன் திரைப்பட விமர்சனத்தைப் படித்து விட்டு, சாரு அனாதி பிளாக்கை ஒரு பயங்கரமான பிளாக் என்று தனது தளத்தில் வெளியிட்டு இருந்தாரே படிக்கவில்லையா?

   http://charuonline.com/blog/?p=1045

   அவர் எங்கள் பிளாக்கைப் படிக்கவ வேண்டும் என்பதற்காகவா எழுதிக் கொண்டிருக்கிறோம். ஏதோ எங்களின் மனதுக்குள் கிடந்து அரிக்கும் சில விஷயங்களை வெளியில் சொன்னால், மனப் பாரம் குறையும் என்றல்லவா அனாதி பிளாக் எழுதிக்கொண்டிருக்கிறோம். விரைவில் தினமலரைத் தவிர பல பத்திரிக்கைகளில் பாருங்கள். அய்யாவின் லீலைகள் படு விமரிசையாக வெளிவரும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று – பஞ்சு

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: