கோவிலையும் விட்டு வைக்காத ஊழல்

2ஜியில் அடித்த கொள்ளை போதாது என்று கோவில்களையும் விடாது கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இதோ குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியான கட்டுரை. – நன்றி குமுதம் ரிப்போர்ட்டர். 

– பஞ்சரு பலராமன்

எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் கோயில்கள் அதிக அளவில் சீரமைக்கப்பட்டது. தங்கக்  கோபுரம், தங்கக் கலசம் என பல கோயில்களின் மாற்றங்களை பக்தர்களே ஆச்சரியத்தோடு கவனித் தார்கள். மாற்றத்திற்குப் பின்னால் இருந்தது பக்தி அல்ல… பணம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந் துள்ளது.

இந்து அறநிலையத்துறையின் கீழ்வரும் கோயில்கள், தங்க விக்கிரகம், தங்கக் கலசம், தங்கக் கோபுரம் என  எல்லாமே தங்கத்தால் மின்ன ஆரம்பித்தது. பொதுவாகவே, பக்தர்களின் நன்கொடை, காணிக்கைப் பணத் தை வைத்து அறநிலையத்துறை இந்தப் பணிகளை நிறைவேற்றுவது வழக்கம். இந்த வேலைகளில்தான்  பெருமளவு முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.

கோயிலில் தங்கத்தாலான பணிகள் எது செய்வதாக இருந்தாலும் அறநிலையத்துறை, தமிழக அரசின்  பூம்புகார் நிறுவனம் மூலம் நிறைவேற்றுவதுதான் வழக்கம். எந்த வேலைக்கு எவ்வளவு செலவாகும் என் பதை வரையறுத்து தரும் பூம்புகார். அவர்களே அந்தப் பணிகளை தனியார் காண்ட்ராக்டர்கள் மூலம்  நிறைவேற்றிக் கொடுப்பார்கள். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நடைமுறையில் பெரிய மாற்றம்  வந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள் நேரடியாக காண்ட்ராக்டர்கள் மூலம் வேலைகளைச் செய்துள்ளனர். இங்குதான் முறைகேடு தொடங்கியிருக்கிறது.

இதுதொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘கோயில்களுக்கு தங்க முலாம் பூசும்  வேலைகளில் முறைகேடு நடந்துள்ளது.பொதுவாக கோபுர வேலைகளுக்கு கோபுரத்தின் அடிப்பாகத்தை  அளந்து விட்டு, அதன் மேல் நுனியில் இருந்து பக்கவாட்டில் சரித்து அளப்பதுதான் வழக்கம். கூடவே  இடைவெளிகள், சிலைகள் ஆகியவற்றைக் கணக்கிட்டு தனியாகப் பணம் கொடுக்கப்படும்.
ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் வரும் காண்ட்ராக்டர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தையும்  பக்கவாட்டையும் அப்படியே அளந்து மதிப்பிடுகிறார்கள். அதாவது, கோபுரம் கீழிருந்து மேல்வரை  பக்கவாட்டில் ஒரே அளவில் (செவ்வக வடிவில்) இருப்பதாகக் காண்பித்து அதற்கும் தங்கம் வாங்கிக்  கொள்கிறார்கள். சிலைகள், இடைவெளிகள் ஆகியவற்றிற்கான தங்கத்தை தனியாக வாங்கிக் கொள்கிறார்கள்.

1000 சதுர அடியில் வேலை செய்வதற்கு, 1500 சதுர அடி என கணக்கிடுவார்கள். இதனால் பத்து கிலோ  தங்கத்தில் முடிய வேண்டிய வேலைக்கு 15 கிலோ தங்கத்தை வாங்கிக் கொள்கிறார்கள். . இதற்காக பெரு மளவில் லஞ்சம் கொடுக்கப்படுகிறது.  கூடுதலாக வாங்கப்படும் ஒவ்வொரு கிலோ தங்கத்துக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு காண்ட்ராக்ட் எடுத்தவர்கள் கொடுப்பார்களாம். இந் தப் பணம் முந்தைய ஆட்சியில் அமைச்சர்கள் வரையில் கொடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.

இதையெல்லாம் விட இன்னொரு விஷயமும் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எந்தக் கோயிலாக  இருந்தாலும் தங்கத் தேர் ஒரு குறிப்பிட்ட உயரம்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் உயரமோ, எடையோ அதிகமாகாத நிலையில் தங்கத்தின் அளவு மட்டும் உயர்த்திக் கொடுக்கப்ப ட்டுள்ளது. அதாவது,தங்கத் தேர் செய்ய இதுவரையில் 9 கிலோ தங்கம் கொடுக்கப்பட்டு வந்தது. அது  கடந்த மூன்று ஆண்டுகளாக 12 கிலோவாக உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஏன் என்பது பற்றி  இப்போது விசாரணை நடந்து வருகிறது’’ என்று சொல்லி அதிர்ச்சி அளித்தார்.

பூம்புகார் அதிகாரிகளிடம் பேசியபோது,‘‘கோயில் வேலைகள் எங்கள் மூலமாக காண்ட்ராக்ட் கொடுக்கப்ப ட்ட போது நேர்மையாகத்தான் நடந்தது. கோபுரங்கள், சிலைகளுக்கு தங்கம் பூசும்போது ஒன்பது லேயர்கள்  பூசவேண்டும் என்பதுதான் விதி. ஆனால், இப்போது இரண்டு அல்லது மூன்று லேயர்கள்தான் பூசப்படு கிறது. இதன் மூலம் மிச்சமாகும் தங்கத்தை காண்ட்ராக்டர்கள் எடுத்துச் சென்றுவிடுகிறார்கள். கடந்த மூன் றாண்டுகளில் இது போல சுமார் 200 கிலோ தங்கம் வரையில் சுரண்டப்பட்டிருக்கலாம் என்று தெரிய  வந்துள்ளது’’ என்றார்.

‘எப்படி இந்த தங்கத்தை எடுத்துச் செல்கிறார்கள்?’ என்று கேட்டபோது, அவர் சொன்னது அத்தனையும்  அதிர்ச்சி ரகம்.

‘‘கோயில்களில் பயன்படுத்துவது அனைத்தும் 24 காரட் தங்கம். தங்கக் கட்டிகளை வாங்கிய பின்னர் சின் னச் சின்ன தகடுகளாக ஆக்குவார்கள். குறிப்பிட்ட வடிவத்தில் செப்புத் தகடுகளுடன் அவற்றைச்  சேர்ப்பார்கள். இதற்காக பாதரசத்துடன் சேர்த்து செப்புத் தகடையும், தங்கத் தகடையும் அடிப்பார்கள். பி ன்னர் அதை தீயில் வைத்து பாதரசத்தைப் பிரிப்பார்கள். இதற்கு ‘ரசப்புட்டு’ என்று பெயர். இதில் பாதரச த்தோடு தங்கமும் சேர்ந்து இருக்கும்.அதை தனியாக எடுத்துச் சென்று தங்கத்தைப் பிரித்து எடுத்துக்  கொள்வார்கள். இப்படி தங்கம் பூசுவதற்கு முன் ஒவ்வொரு நிலையிலும் காண்ட்ராக்டர்கள் லாபம் பார்த்து  விடுகிறார்கள்.

இதே போல தங்கக் கட்டிகளை தகடுகளாக்கும் போது சின்னச் சின்ன துண்டுகளாக தங்கம் கீழே விழும். அதை நகக்கண்களில் வைத்து எடுத்துக் கொள்வார்கள். இப்படி பல வழிகளில் காண்ட்ராக்டர்கள் தங்கத் தைச் சுரண்டியிருக்கிறார்கள்’’ என்றார்.

இந்த வேலைகள் அனைத்துமே வெளிப்படையாக நடக்குமாம். ஆனால் இது குறித்த போதிய அறிவு  அதிகாரிகளுக்கு இல்லாததால், அவர்கள் கண்முன்பே இது நடந்துள்ளது. அதே போல அளவு எடுப்பது,  எஸ்டிமேட் போடுவது என்ற பணிக்காக கோயில்களில் தனியாக சிலரை நியமித்துள்ளார்கள்.அவர்களும் காண்ட்ராக்டர்களுக்கு துணை போயிருக்கிறார்கள்.

‘‘சமீபத்தில் ஒரு கோயிலில் 90 கிலோ தங்கத்தில்  விமானம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள்.  கோயில் அதிகாரி கண்டிப்பாக இருந்து, காண்ட்ராக்டரின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துள்ளார்.தங்க  விமானம் செய்து முடித்த போது 62 கிலோ தங்கம்தான் செலவாகி யிருந்ததாம். இப்படித்தானே மற்ற  கோயில்களிலும் தங்கம் கொள்ளை போயிருக்கும்.

அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் கோயில்களில் நடந்த இந்த முறைகேடுகள் வெளியே வரத்  தொடங்கி இருக்கிறது. திருச்சி அருகிலுள்ள அம்மன் கோயிலில் ஆறு கிலோ தங்கத்தில் தங்கத்தேர்  செய்ய ஒரு செயல் அலுவலர் எஸ்டிமேட் தயாரித்துள்ளார். அவர் மாறியதும், புதிதாக வந்த இன்னொரு  அதிகாரி தங்கத்தேர் செய்வதற்கு 11 கிலோ தங்கம் தேவைப்படும் என்று எஸ்டிமேட்டையே மாற்றியி ருக்கிறார். இதையெல்லாம் தீவிரமாக விசாரித்தால் இன்னும், பல அதிர்ச்சிகள் வெளியே வரும்’’ என் கிறார்கள் கோயில் ஊழியர்கள்.

இந்த விவரங்களை கொஞ்சம் தோண்டியபோதுதான் தமிழகம் முழுவதும் கோயில்களில் இதுபோல் பெரு மளவு பணம் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்துள்ளதாம்.

இதுதொடர்பாகப் பேசிய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர்,‘‘கடந்த ஆட்சியில் நடந்த கோயில்  புனரமைப்புப் பணிகள் அனைத்தையும் விசாரணை செய்வார்கள் எனத் தெரிகிறது. வேலைகள் நடந்துள்ள  கோயில்களில் வாங்கிய செப்புத்தகடுகளையும்,பயன்படுத்திய செப்புத்தகடுகளையும் கணக்கெடுத்து வரு கிறார்கள்.இந்த செப்புத் தகடுகளுக்கு எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்பதை தோராயமாக கணக்கிட் டுப் பார்த்தபோது 200 கிலோவுக்கு மேல் தங்கம் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இ ன்றைக்கு ஒரு கிலோ தங்கத்தின் விலை ரூ. 22 லட்சம். அப்படியானால் எத்தனை கோடி ரூபாய்க்கு  ஊழல் நடந்திருக்கிறது என்பது தெரிந்து அதிர்ந்து போய்விட்டோம்’’ என்றார் ஆச்சரியம் விலகாமல்.

மேலும், ‘‘ஒரு கிராமுக்கு 7ரூபாய் என்கிற அளவில் காண்ட்ராக்டர்களுக்கு அறநிலையத்துறை பணம் த ருகிறது. ஆனால் வெளியில் அவர்கள் 14 முதல் 15 ரூபாய் வரை வாங்குகிறார்கள்.பெருமளவு லாபம்  இல்லையெனில் இப்படி குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொள்வார்களா?’’ என்றும் கேள்வி எழுப்புகிறார்.

கோபுரம், கலசம் ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசுவது, தங்க விக்கிரகங்கள் செய்வது, தங்கத்தேர் செய்வது  ஆகிய பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இந்த தங்கம் முழுவதும் பக்தர்களுடையது. உண்டியல் பணம்  தவிர, பக்தர்கள் காணிக்கையாகத் தரும் நகைகளை உருக்கித்தான் இந்த வேலைகள் செய்யப்படுகிறது. இதிலும் ஊழல் நடந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இது குறித்து பக்தை ஒருவரிடம் கேட்டபோது, ‘‘என் கணவரது உடல்நலம் சரியானால், தாலியை  காணிக்கையாகத் தருவதாக வேண்டியிருந்தேன். அதன்படி தாலியை உண்டியலில் போட்டேன். என் னைப்போல் பலரும் தாலி, மோதிரம், குழந்தைகளின் நகைகள் என வேண்டுதலுக்காக கோயிலுக்குச் செலுத்துகிறார்கள்.அந்த நகை சாமி காரியத்துக்கு செலவாகிறது என நினைத்தோம்.அதையும் விட்டு வைக்காமல் கொள்ளை அடிக்கிறார்கள் என்றால் எங்கே சென்று முறையிடுவது? அப்படிப்பட்டவர்களை  கடவுளே தண்டிப்பார்’’ என்றார் வேதனையுடன்.

இந்த ஊழல் தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நான்கு பேர் மீது குற்றச்சாட்டு எழுந்து ள்ளது. அவர்களுக்கு இதுவரையில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. ஒரு அதிகாரியைப் பற்றி  விசாரித்த போது,மூன்று கோடி வரையில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளதாம். விசாரணை  தீவிரமாகும் போது, யாரெல்லாம் மாட்டிக் கொள்ளப் போகிறோமோ என பயத்தில் உறைந்து போயுள்ளனர்  அறநிலையத்துறை அதிகாரிகள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: