(1) சின்னஞ்சிறு கிளியே – செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ்

சுமாராக ஓடிய இரண்டு படங்களை இயக்கியவர், அடுத்த படத்திற்கு தோதான தயாரிப்பாளர் கிடைத்து விட அதற்கான வேலைகளில் இறங்கினார். இந்தப் படத்தோடு வாழ்வில் நூக் அண்ட் கார்னரையும் பார்த்து விட வேண்டுமென்ற திட்டமிடலில், அலுவலகத்தை தனிமையான இடத்தில் அமைத்துக் கொண்டார். தன்னோடு உதவி இயக்குனர்களைக் கூட தங்க வைத்துக் கொள்ளவில்லை.

தயாரிப்பாளரும் இவரின் மீதுள்ள நம்பிக்கையால், இயக்குனர் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடினார். இயக்குனரும் தயாரிப்பாளருக்கு பெரிய பிரச்சினைகளைக் கொடுக்கவில்லை. அது அவரின் நோக்கமும் அல்ல. இயக்குனரின் நோக்கமே வேறு.

தன் எண்ணம் நிறைவேறுமா என்பதை நினைத்து நினைத்து, அதைச் செயல்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து திட்டமிட்டார். அதற்கான வலையினை தன் படத்தின் மூலம் விரிக்க ஆரம்பித்தார். கிட்டத்தட்ட ஆறு மாதம் காலம் ஆயிற்று. இதுவரையிலும் அவரின் திட்டத்திற்கும், எண்ணத்திற்கும் ஏற்றவாறு சம்பவம் நடப்பது போல அவருக்குத் தெரியவே இல்லை.

ஆனால் மனம் தளராமல் கதை பண்ணிக் கொண்டிருந்தார். அப்போது சிக்கியது ஒரு பெண். அந்தப் பெண் யார்? இந்த இயக்குனர் அந்தப் பெண்ணை என்ன செய்தார்? ஏன் இந்தப் பெண்ணுக்காக இத்தனை நாள் ஏங்கினார் என்பதினை விரைவில் எழுதுகிறேன்.

இச்சம்பவத்தை எழுத ஆரம்பிக்கும் போது, கைகள் நடுக்கம் எடுக்க ஆரம்பித்து விட்டன. மனதுக்கு வேறு சரியில்லை. வேறு வழியில்லை. எழுதித்தான் ஆக வேண்டுமென்பதால் ஒரு சிறிய பிரேக்.

டேக் கேர்…

– அன்புடன் அனாதி

9 Responses to (1) சின்னஞ்சிறு கிளியே – செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ்

 1. asmi சொல்கிறார்:

  ஐயா பஞ்சு, நீங்க எழுதுற விசயம் எல்லாம் உண்மைதான், ஆனா எழுதுறேன் னு சொல்லிட்டு எதுவும் எழுத மாட்டிங்க னு சொன்னேன், புரியுதா.

 2. சீனிவாசன் சொல்கிறார்:

  சாரு நிவேதிதாவை பற்றி நீங்கள் போட்ட கட்டுரை எங்கே? எடுத்துவிட்டீர்களா?

  • அனாதி சொல்கிறார்:

   ஆமாம் சீனிவாசன், வருகின்ற கமெண்டுகள் படு பயங்கரமாய் இருக்கிறது. அவரவர் வினையை அவரவர் அனுபவித்துக் கொள்கிறார்கள் என்று எடுத்து விட்டேன். சாரு நிவேதிதா மட்டுமல்ல ஒரு குழுவே இருக்கிறது என்கிறார் அனாதி. – பஞ்சு.

   • சீனிவாசன் சொல்கிறார்:

    என்னங்க இப்படி பேசுறது நல்லாவா இருக்கு? மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையாவுல்ல இருக்கு! ஏற்கனெவே அவரை பத்தி ஒரு கட்டுரை போடறென்னு சொல்லி பல நாளாகுது இன்னும் போடலை, இதுல வேற ஒரு ஆள் போடற கட்டுரையயும் பகிர்ந்துக்க உங்களுக்கு பயமாஇருக்குன்னு, சொல்றீங்களே. இது சரியா நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க. பேச வேண்டிய நேரத்துல பேசாம இருக்கிறதால யாருக்குமே பிரயோஜனம் கிடையாது.

    • அனாதி சொல்கிறார்:

     பயமெல்லாம் ஒன்றுமில்லை சீனிவாசன். அவரைப் பற்றிய மேலதிகத் தகவல்களை நம் குழுவின் நண்பரொருவர் எழுதிக் கொண்டிருக்கிறார். அவர் தான் அதை வெளியிட வேண்டும். விரைவில் என்று தான் சொல்ல இயலும். எப்போது என்று நாள் குறிப்பிட முடியாது. – அனாதி.

 3. asmi சொல்கிறார்:

  எல்லாம் பொய், எழுதுறேன் எழுதுறேன்னு ஒன்னும் எழுத மாட்டான்

  • அனாதி சொல்கிறார்:

   ஆஸ்மி, எல்லாமே பொய் தான் ஆஸ்மி. யாரு இல்லையென்று சொன்னது? நீங்கள் ஏன் உண்மை என்று நம்புகின்றீர்கள்?? நேரம் குறைவு மற்றும் அனாதிக்கு ஹோட்டல் வேலை பார்க்கவே நேரம் பத்தவில்லை என்று உங்கள் கமெண்டைச் சொல்லி கேட்ட போது சொன்னார். கோபப்படாதீர்கள் ப்ளீஸ் ! உங்கள் உடம்பிற்கு ஆகாது – பஞ்சு

   • anvarsha சொல்கிறார்:

    அஸ்மி கோவப்பட்டாலும் அது உண்மை தானே! எவ்வளவோ விஷயங்களை எழுதுகிறேன், எழுதுகிறேன்னு சொல்லிட்டு அப்படியே விட்டுடறீங்க! அந்த கடுப்பு தான்!

    • அனாதி சொல்கிறார்:

     நேரமில்லாத காரணத்தாலும், வேலைப்பளுவாலும் சில நேரங்கள் அப்படி ஆகி விடுகின்றன அன்வர்- பஞ்சு. அனாதிக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லையாம். ஆனால் செலிபிரட்டி சீக்ரெட்ஸ் தொடர்ந்து வரும். – பஞ்சு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: