உலக இரண்டாவது கோடீஸ்வர அமைச்சர்

இது நாள் வரை அடக்கி வைக்கப்பட்ட தினமலர் நிறுவனம் தற்போது மெதுவாக செய்திகளைக் கசிய விட ஆரம்பித்து விட்டிருக்கிறது. அதற்கொரு உதாரணம் இன்றைய தினமலரில் வெளியான டீக்கடை பெஞ்சில் பார்க்கலாம். இதோ அந்தச் செய்தி.

”மாஜி மந்திரிங்க ரெண்டு பேருக்குள்ள, ‘கமிஷன்’ தகராறு நடக்குதுங்க…” என, கடைசி தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.

”பாவம் ரொம்ப வறுமையில இருப்பாங்க போல… நீங்க ஆள் யார் யாருன்னு விவரமா சொல்லு வே…” என்றார் அண்ணாச்சி.

”போன ஆட்சியில, “பவர்புல்’லா இருந்த சீனியர் அமைச்சருக்கும், கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சருக்கும் இடையில தான், “கமிஷன்’ தகராறு நடக்குதுங்க… கோவையில, நகருக்கு வெளியில, 900 ஏக்கர்ல, “கோல்ப் கிரவுண்ட், ஹெலிபேடு’ எல்லாம் வச்சு ஒரு, “மினி சிட்டி’ உருவாக்கற வேலை நடந்துகிட்டு இருக்குதுங்க… ஆந்திராவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான், இந்த சிட்டியை உருவாக்குது…”

”அந்த நிறுவனத்துக்காக, நிலங்களை வாங்கிக்கொடுக்கற பொறுப்பை, மாவட்ட மாஜி மந்திரிகிட்ட, மாஜி சீனியர் மந்திரி கொடுத்திருக்காருங்க… இந்த வேலையில, மாவட்ட மந்திரிக்கு கணிசமா பல கோடி ரூபாய் கிடைச்சிருக்கு… இதுல, சீனியருக்கு 50 கோடி ரூபாய் வரை பங்கு தரணுமாம்…”

“ஆனா, கோவை மாவட்டத்துக்காரர், பணத்தை தராம இழுத்தடிச்சிகிட்டு இருக்கார்… இந்த விஷயத்தை வெளியில சொல்ல முடியாம, மாஜி சீனியர் மந்திரி புழுங்கிகிட்டு இருக்காருங்க…” எனக் கூறிவிட்டு, அந்தோணிசாமி நடையைக்கட்ட, மற்ற பெரியவர்களும் கிளம்பினர்; பெஞ்சில் அமைதி திரும்பியது.

கடந்த வாரம் வெஸ்ட்டில் சந்தித்துக் கொண்ட போது, இதைப் பற்றிய பேச்சு வந்தது.  மேலே கண்ட செய்தி வந்ததும் விசாரித்தால் பெரிய பூதம் கிளம்பும் போல. அதிமுகவினர் இவ்விஷயத்தை ‘அம்மாவின்’ கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம். சொத்துக்களைப் பறிகொடுத்தவர்களுக்கு மீண்டும் அச்சொத்து கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். அதிமுகவினர் செய்வார்களா இல்லை கமிஷனில் பங்கு கேட்பார்களா என்பதெல்லாம் போகப் போகத் தெரியும். அதிமுகவினர் செயல்பாடுகளை வைத்து தான் விஜய காந்த் அடுத்த முதல்வரா இல்லையா என்பதைச் சொல்லலாம்.

அந்த நிறுவனத்திற்கு 1600 ஏக்கர் சொத்துக்கள் உரிமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டன என்று கோவையில் பேசிக் கொள்கிறார்கள். பெரிய கோல்ஃப் மைதானம் ஒன்றினைக் காட்டியே வீடுகளை விற்று வரும் இந்த நிறுவனம், சொல்லியபடி யாருக்கும் இதுவரை வீட்டினை முடித்துக் கொடுக்கவில்லை என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

இந்த சொத்துப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அமைச்சரை அரசியல் குடும்பத்தின் சொத்துக்கு அடுத்தபடியாக சொத்து வைத்திருக்கும் அமைச்சர் இவர்தான் என்று அந்தக் கட்சியினரே சொல்கின்றார்கள். அரசியல் குடும்பம் உலக பணக்கார வரிசையில் வந்தது. அந்தளவுக்கு பெரிய கோடீஸ்வரராக மாறிவிட்டாராம் அந்த அமைச்சர். வந்தவாங்கிக் குவித்திருக்கும் சொத்துக்கள் பற்றிய லிஸ்ட் எடுத்தால் அகில உலகமே மலைத்துப் போய் விடுமாம். அவ்வளவு பெரிய லிஸ்ட்டாம் அது.

அது மட்டுமா, அவரைச் சுற்றி ஏகப்பட்ட மர்மங்கள் வேறு இருக்கின்றன என்று ஏரியாவாசிகள் பேசிக் கொள்கின்றார்கள்.

–  அனாதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: